இந்திய பிரதமர் மன்மோகன் சிங், நாளை(டிசம்பர் 25) இரவு தமிழகம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கணித மேதை ஸ்ரீ நிவாச ராமானுஜனின் 125-வது பிறந்த திகதி விழா, சென்னை பல்கலைக்கழகத்தில் வருகிற(26.12.2011) திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் மாபெரும் வியாபார நிறுவனங்களின் குடியேற்ற நாடாக உருவாகியுள்ளது. அவர்களின் நலன்களின் அடிப்படையிலேயே ஈழத்தில் இனப்படுகொலை முதல் கூடங்குளம் அணுமின் நிலயம் வரை இந்திய அரசு முடிவெடுக்கின்றது. அண்மையில் ஜீ- 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் உரையாற்றிய மன்மோகன் சிங், கீன்ஸ் பொருளாதரக் கொள்கையையே தான் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்திய பெரு முதலாளிகளின் நலன்களின் அடிப்படையில் மனிதப்படுகொலைகளின் நிறைவேற்றும் பிரதிநிதியாகச் செயற்படும் மன்மோகன் சிங் இற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள தமிழகத்தில் பல அமைப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.