உலகம் முழுவதும் மன்மோகன் சிங்கை இலங்கைக்கைக்குப் போக வேண்டாம் எனப் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் அவரை யாழ்ப்பாணத்திற்கே அழைத்துவர ஆசைபடுகிறார் சி.வி.விக்னேஸ்வரன்.
இலங்கை வடக்கு பகுதியில் தேர்தல் நடப்பதற்கு வற்புறுத்தியதற்காக பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், இந்தியாவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இலங்கை போரில் தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் நான் பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றிருக்கிறேன்.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கு, இந்தியா அழுத்தம் பிரயோகித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவத்துள்ளார். கொழும்பைப் போன்றே யாழ்ப்பாணத்துடனும் இந்தியா உறவுகளைப் பேண வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் (மன்மோகன்சிங்) இலங்கைக்கு வர வேண்டும். கொழும்பு மற்றும் யாழ்பாணத்துக்கு வரவேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். இதன் மூலம் தமிழர்கள் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும் என நான் கருதுகிறேன். தங்கள் வருகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக இருக்கும்.
he is not inviting… in te big picture… as he programmed inviting him… (pre organaized/ programmed invitation)
13ம் திருத்த சட்டம் 1987ம் ஆண்டிலிருந்து இன்று வரை 25 வருடங்கள் ஆகியும் பலமுறை இந்திய தலைவர்கள் இலங்கை வந்தும் அமுல்படுத்த முடியாததை மன்மோகன் சிங்க் இம்முறை வந்து அமுல்படுத்தினாலும் இலங்கை அரசின் அரை குறை மனத்தினால் இது நிலைக்குமா.ஒருவேளை பொதுநலவாய நாடுகளின் தலைவராக ராஜபக்ச தெரியபட்டால்அத்தலைமை நிலைக்க தற்காலிகமாக சில காலம் நிலைத்தாலும் மீண்டும் நிராகரிக்கப்படலாம்.
யாழ்பாணம் வந்து சிங்க் என்ன செய்வார்.
மறைமுகமாக இந்திய வர்த்தகத்தை,முதலீட்டை விரிவு படுத்தி அங்கும் இங்கும் சில உதவிளை கொடுத்து நல்ல பெயரும் வாங்கி செல்வார்.
ஒருவேளை மன்னார் எண்ணையும்,இந்தியாவுக்கு ஒரு பாலமும் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை.
ரட்ணம் கணேஷ்
சி.வி.விக்னேஸ்வரன் சொல்வது சரியே. இதில் நம்மவர்கள் சும்மா இருப்பதே எல்லோருக்கும் நல்லது.
வடமாகாண கல்வி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமையால் திரும்பிச் செல்லவுள்ளது: தடுப்பாரா வடமாகாண கல்வி அமைச்சர்!!
http://www.athirady.com/tamil-news/news/282022.html