இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து சரியல்ல என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யுத்த சூழல் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் தாய்நாடு திரும்பும் ஒரு சூழலை இலங்கையில் உருவாக்குவதே முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என அண்மையில் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறிய கருத்து தமக்கு ஏற்புடையது அல்ல என்று மனோ குறிப்பிட்டுள்ளார்.
20 வருடங்களுக்கு மேலாக இந்திய மற்றும் தமிழ் நாட்டு அரசுகளால் அடிப்படை மனித உரிமைகளைக்கூட மீறும் வகையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் புதிய சந்ததி தமிழ் நாட்டின் கலாச்சர வரம்புகளுக்குள் வளர்ந்தவர்கள். அவர்கள் தமிழ் நாட்டு உழைக்கும் மக்களின் ஒரு பகுதி. மேலும் அவர்கள் எங்கு வாழ்வது என்பதை அவர்களே முடிவெடுக்க வேண்டும். எவ்வாறு மலையகத் தமிழர்களும் ஈழத் தமிழர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோமோ அதே போன்றே அகதிகளின் புதிய அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முப்பது வருடங்களுக்கு மேலாக இந்தியாவிலேயே வாழ்ந்து கல்விகற்று மணமுடித்து இலங்கையையே கண்டறியாத தமிழர்களை எல்லாம் இந்தியக் குடியுரிமை பெறக் கூடாது என மனோ கணேசன் எப்படிக் கூறலாம். 90 களிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிப் புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் அந்த நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். அவர்களை நோக்கி மனோ கணேசன் இதுவரை இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லையே. இந்து சாமியாரும் பாசிச ஜெயலலிதாவின் அடியாளுமான சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்ற ஆசாமிக்கோ மனோ கணேசனுக்கோ இடம் பெயர்ந்த தமிழர்கள் குறித்து முடிவெடுக்க எந்த உரிமையும் கிடையாது.
யுத்த சூழல் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் தாய்நாடு திரும்பும் ஒரு சூழலை இலங்கையில் உருவாக்குவதே முக்கியம் என்று மனோ கணேசன் கூறுவதில் என்ன தவறு என்று எனக்கு விளங்கவில்லை.
இலங்கையில் வசிக்கும் இலங்கை வம்சாவழித்தமிழர்களை விட புலம்பெயர்ந்து வாழும் இலங்கை வம்சாவழித்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் இந்த காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் பேசும் தமிழ் இன மக்களின் இனப்பரம்பல் மிகவும் குறைந்து வரும் நிலைமையில் இந்தியஅரசு இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முன்வருவதில் காணப்படும் அரசியல் சூட்சுமத்தை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
புலம்பெயர்ந்தவர்கள் எந்த நாட்டின் குடியுரிமைப் பெறவிரும்புகிறார்கள் என்பது அவர்களது தனிப்பட்ட, குடும்ப சூழலைக் கருத்தில் கொண்ட விடயமாக இருப்பினும் இந்த முடிவுகள் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பான போராட்டத்தில் கணிசமான பங்கை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிறநாட்டின் குடியுரிமைப் பெற்றுக் கொண்டு இங்கே குந்தியிருக்கும் எனக்கும் சேர்த்தே இந்த விமர்சனம்.
Mano Ganesan is NOT denying any rights for any refugees in India or anywhere else. He is in fact identifying with frontline struggle against demographical change that has contributed effectively to the genocide of the Tamils in their homeland. Even when TNA has been pussyfooting in the Vanni, he comes from outside to show his solidarity with Sinhala progressive leaders like Dr. Bahu, Kajans and most deprived people – The Vanni IDPs. He can call out to their kiths and kins how this people have to be defended here as he risks his life everyday like no other. If he prioritise his support for the IDPs in the Vanni against evictions and uproots where is he going wrong?
For those who identify themselves with Jews, be informed that their struggle started with people RETURNING TO PALESTINE. All intelligence agencies and military outfits were all about people being smuggled BACK TO PALESTINE. Unless you change your attitude about Nationhood to remain in the Homeland and build homeland, you will stand in the wrong side in the oppression of Genocide. Tamils are also becoming insensitive about dormant genocide that violently taking place without any justice available to our people. We need all people to take it to the next stage. We need all the people strong and self-reliant to overcome abject poverty. Those who do not want to come back, please help the IDPs who have become destitutes. Every delay can drive the people out for survival.
Mano Ganeshan is doing something good wit his Western Province Peoples Front.
இந்தியாவிற்கு மாத்திரம் அல்ல, உலகம் முழுவதும் அகதிகளாக புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர் தொடர்புகளில், புலம் பெயர்வது தொடர்பிலும், புலம் பெயர்ந்த நாடுகளில் குடியுரிமை பெறுவது தொடர்பிலும், புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்புவது தொடர்பிலும், ஒரு மனம் திறந்த விவாதம் நடைபெற வேண்டும் என்று சொன்னால், இது சம்பந்தமாக ஒரு பொதுவான கொள்கை உருவாகவேண்டும் என்று சொன்னால் சிலருக்கு புரியவில்லை.
எந்த வித விதிமுறைகளும் இல்லாமல் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது இன்று இங்கே தமிழ் எதிர்ப்பு இனவாதிகளுக்கு ஏன் மகிழ்ச்சியளிக்கிறது என்று சிந்தித்து பார்க்கவேண்டும். எல்லா விடயங்களை பற்றியும் பேசும் நமது தலைவர்கள் உட்பட பலர் வெட்கப்பட்டு பேச தயங்கும் விடயம் இது. பேசி விவாதித்து கருத்து பரிமாறினால், இதில் மறைந்துள்ள அபாயம் விளங்கும்.
இலங்கையில் இனப்பிரச்சினை தீருவதற்கு ஒரு சுலபமான வலிக்காத வழி இருக்கிறது. அதைதான் எல்லோருமாக சேர்ந்து கடைபிடிக்கிறார்களோ?
அந்த வழி இதுதான். எல்லோரும் குடும்பம், குடும்பமாக, கூண்டோடு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் குடியேறி, அவ்வந்த நாடுகளில் குடியுரிமை பெற்று வாழத்தொடங்கினால், இங்கே தமிழர்கள் இல்லை என்ற நிலைமை மெல்ல, மெல்ல உருவாகும். பிறகென்ன, தமிழர் இருந்தால் தானே, தமிழர் பிரச்சினை?
இப்போதே சுமார் ஒரு பத்து லட்சம் போய்விட்டது. இன்னொரு பத்து லட்சம் போனால், நமது ஜனத்தொகை கணிசமாக குறைந்துவிடும். தமிழ் கிராமங்களும், நிலங்களும் காலியாகிவிடும். இனி, காலியான இடத்தில் அவனவன் கூடாரம் அடித்துகொள்வதை தொடர்ந்து தடுக்கவும் முடியாது. இப்போதும், நமது மக்கள் தடுத்து வைக்கப்படிருந்த மெனிக்பாம் என்ற இடம் காலியானதும், அந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை பங்கு போட்டுக்கொள்ள இராணுவமும், ஆளுவோரின் ஆசீர்வாதம் பெற்ற கம்பனிகளும் சுறுசுறுப்பு காட்டுகிறார்கள்.
வெளிநாட்டுக்கு வெளியேற முடியாமல், இங்கு மிஞ்சும் தமிழர்களும் அரசியல் பலமிழந்து போய்விடுவார்கள். மிஞ்சும் தமிழர்களும் சிங்களம் படித்து, (சிலாபம் முதல் புத்தளம் வரை ஒரு காலத்தில் வாழ்ந்த தமிழர்களை போல்) சிங்களவர்களாக மாறி விடுவார்கள்.
வட-கிழக்கில் தமிழ் எம்பீக்களின் தொகையை விரைவில் பத்துக்குள் கொண்டுவந்து விடுவார்கள். அதாவது ஜனத்தொகை குறைய, வாக்காளர் குறைய, தெரிவு செய்யப்படும் எம்பீக்கள் தொகை குறையும். அதுமட்டும் அல்லாமல், மாற்று இனத்தவர் குடியேறி வாக்களித்தால் தெரிவு செய்யப்படக்கூடிய தமிழரும் தெரிவாக மாட்டார். ஏற்கனவே தமிழ் எம்பீக்கள் தொகை வட-கிழக்கில் 24 இலிருந்து குறைந்து இன்று 17 இல் நிற்கிறது என நினைக்கிறேன்.
கடைசியில் நாட்டில், தமிழர் இல்லை என்ற நிலைமை உருவாகும். பிறகென்ன, தமிழர் இருந்தால் தானே, தமிழர் பிரச்சினை? அதனால்தான் தமிழர் கட்டுப்பாடுகள் இல்லாமல் நாட்டை விட்டு படிப்படியாக, வெளியேறுவது தமிழ் எதிர்ப்பு இனவாதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ஊருக்கு போகலாதான்… ஆனா…புள்ளைகளிண்ட..படிப்புபுபூ……
இந்த வார்த்தைகள்தான் புலம்பெயா்ந்தவா்களின் நியாயப்படுத்தலாக உள்ளதென்பதே யதார்த்தம்.
அப்படியானால் ஆளில்லாத இடங்களை அரசு அபகரித்து பன்னாட்டு நிறுவனக்களுக்கு தாரைவார்ப்பதாக யாரும் இங்கே குற்றப்படக்கூடாது…
பல்வேறு காரணங்களால் குடிப்பெயர்வு அகல்வு நடைபெறுவது உலக நியதி. குடிபெயர்வதற்கு காரணமான அரசுகளை எதிர்த்துப் போராடுவது அவசியமானதே. அதற்காக குடிபெயர்ந்தவர்களின் குடிபெயர்ந்த நாட்டில் வாழும் உரிமையை நிராகரிக்க முடியாது. அது அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டது.
புலம் பெயர்ந்து இரண்டாவது, மூன்றாவது சந்ததிகளும் உருவாகியுள்ளன. அவர்களை எல்லாம் இலங்கைக்கு வரச் சொல்லி கேட்க முடியாது. இதேநிலை வேறு நாடுகளிலும் இருந்திருக்கிறது. குண்டு சட்டிக்குள் குதிரை ஓடாதீர்கள்.
முட்டாள்தனமான தலைப்பு.
மனோ கணேசன் கூறுவதில் எந்தத்தவறும் கிடையாது.அடிப்படை வசதிகளையே ஏற்படுத்திக்கொடுக்க வக்கற்றவா்கள் குடியியல் உரிமையை மட்டும் வழங்க முன்மொழிவதன் நோக்கமென்ன??? இங்கு சிலா் கூறுவதுபோல் முடிவெடுப்பது அங்கு வாழும் இலங்கைத்தமிழா்களின் சொந்தவிடயம் ஆனால் இந்த விடயங்கள் இலங்கையில் இனச்சுத்திகரிப்பு செய்யும் பேரினவாதிகளுக்கு உதவுவதாகவே எண்ணத்தோன்றுகிறது.இருந்தாலும் ஒரு குடியியல் உரிமையை தூக்கி எறிவது ஒன்றும் பாரதூரமான விடயம் கிடையாது மேற்கில் வாழ்பவா்களும் சில வேளை வெகுவிரைவில் இதைச்செய்யும் நிலைதோன்றலாம்,என்னையும் உள்ளடக்கி.