இலங்கையில் பேரினவாதத் தீயை பற்றவைத்த முதல் நபர் என்றால் அந்தப் ‘பெருமை’ அனகாரிக தர்மபாலவையே சாரும். இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு, அங்கி ஏனைய இனத்தவர்கள் சிங்கள பௌத்தர்களுக்குச் சேவை செய்வதற்காகவே வாழ வேண்டும் என்று கூச்சமின்றிக் கூறி சிங்கள பௌத்தப் பெருந்தேசிய நச்சை இலங்கையில் செலுத்தியவர். இஸ்லாமியத் தமிழர்களைக் கடலில் மூழ்கடித்துக் கொலை செய்ய வேண்டும் என்று சூழுரைத்தவர்.
வன்னியில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழனுக்கு எதிரான கொலை வெறியை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தவர் இவ்வாறான ஒரு மனிதகுல விரோதிக்கு இந்தியா தபால் தலை வெளியிட்டுக் மரியதை வழங்கியது.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ தபால் தலையை வெளியிட்டு உரையாற்றுகையில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இவ்வாறான நிகழ்வுகள் வழிவகுக்கும் என்றார்.
சமூகக் கலாச்சாரப் பரிமாற்றங்களை இந்த இரண்டு நாடுகளும் வரலாற்று ரீதியாகப் பரிமாறிக்கொள்கின்றன என்றார். அதிகாரவர்க்கங்கள் தமது அழுக்குகளைப் பரிமாறிக் கொள்வதை கலாச்சாரப் பரிமாற்றம் என்று முகர்ஜி கூறியிருக்கிறார்.
கடந்த மாதம் 25ம் திகதி இனக்கொலைத் தத்துவத்தோடு இந்திய அரசு தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இந்த நிகழ்வை தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை.
இயங்க ஏன் ஶ்ரீலங்கா பார்த்து எப்படி பயப்படுறங்க தெரியவில்லை