Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மனித உரிமை தினத்திலேயே ஆள் கடத்தி இலங்கையில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது- மனோ கணேசன்

இனியொரு... by இனியொரு...
12/17/2011
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு எதிராக போராடிய சாத்வீக போராளிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளர்கள். அந்த இருவரும் முன்னமே நடந்துள்ள கடத்தல்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள். அதுவும் சர்வதேச மனித உரிமை தினத்திலேயே அவர்கள் கடத்தப்பட்டுள்ளர்கள். இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்யும் ராணுவம் சொல்கிறது. கடத்தப்பட்டவர்கள் எங்கேயாவது தடுத்து வைக்கபற்றிருக்கலாம் என அரசாங்க ஊடக பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெல்ல சொல்கிறார். உண்மையில் இது இவ்வருட இறுதியில் இந்நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள மாபெரும் அரசாங்க சாதனை.

இலங்கையில் நிலைமை வழமைக்கு திருப்பிவிட்டது என சொல்பவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இரு வார கால இந்திய விஜயத்தை முடித்து நாடு திரும்பிய மனோ கணேசன் தமது அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில் மேலும் தெரிவித்ததாவது,

நாளை என் பிறந்த தினம். பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் நான் இல்லை. கொழும்பில் ஏழை மக்கள் வாழும் ஊரில் போய் சிரமதானம் செய்வோம். அத்துடன் மக்களுக்கு உண்மையை எடுத்து கூறுவோம்.

அரசாங்கம் எதுவும் சொல்லலாம். ஆனால் உண்மைகளை உலகிற்கு எடுத்து சொல்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ் ஊடகங்களும் பின்னிற்க முடியாது. நெருக்கடிமிக்க வேளையில், உண்மையை பேசுபவன் தான் உண்மை தலைவன். உண்மையை துணிந்து எழுதுபவன்தான் உண்மை ஊடகவியலாளன்.

நாளைய வரலாறு இதை பதிவு செய்யும்.

கடந்த கால வெள்ளை வேன் கடத்தல்கள் மீண்டும் ஆரம்பித்து விட்டன. அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் குறி வைக்கப்பட்டு கடத்தப்படுவது நாடு முழுக்க நடை பெறுகிறது.

இன்று பெருந்தொகையான பெரும்பான்மை இனத்தவர்களும் கடத்தப்படுகின்றார்கள். கடந்த காலங்களில் கொழும்பில் தமிழர்கள் கடத்தப்பட்டபோது அவற்றிற்கு எதிராக நாம் போராடினோம்.

எமது உறவுகள் கடத்தப்பட்ட போது அது எமக்குத்தான்வலித்தது. அன்று நாம் தனித்து நின்று போராடினோம். நாங்கள் பார்க்காத கடத்தல்கள், கைதுகள், கற்பழிப்புகள், படுகொலைகளா?

அன்று எம்மை எதிரிகளாய் பார்த்து தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த கடத்தல்களை ஆதரித்தவர்கள் கொழும்பில் இருந்தார்கள். அவர்களும் இன்று எம்முடன் கை கோர்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இதைதான் காலத்தின் கோலம் என நம் முன்னோர்கள் சொல்வார்கள்.

இந்நிலையில் அரசாங்கம் மனித உரிமை தொடர்பில் புதிய நிறுவனம் ஒன்றை அமைக்க போவதாக இன்று அறிவித்துள்ளது. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமனான வேடிக்கை ஆகும்.

இந்த மாதிரி எத்தனையோ அரசாங்க மனித உரிமை நிறுவனங்களை நாம் பார்த்துகளைத்துவிட்டோம்.

இன்று எல்லா மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் நாம் எவருடனும் இணைந்து போராட தயார். ஆனால் எம்மவர் பிரச்சனைகளையும் சேர்த்து போராட பெரும்பான்மை கட்சிகள் தயாராக வேண்டும். இது எமது நிபந்தனை. தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் இனி சும்மா கூலிக்கு மாரடிக்க கூடாது.

எமது வலியை புரிந்துகொள்ள முடியாதவர்களுடன் கைகுலுக்க நாம் தயாரில்லை. புதிய வருடத்தில் இந்த புதிய அடிப்படைகளில் ஒரு புதிய தேசிய அரசியல் கூட்டணியை நாம் உருவாக்குவோம்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மக்கள் போராட்ட இயக்கத்தின் வாகனத்தின் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...