அரசியல் தீர்வையும் அபிவிருத்தியையும் அடைவதற்குத் தமிழ் மக்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டுமென்று புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதியான திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளுக்காகப் போராடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஓர் அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதுடன் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுப்பார் என திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியே தமிழர்களை முதன் முதலில் அகதியாக்கியது. தமிழ் மக்களுக்குத் தீர்வுகள் கிடைத்த போது அதனைச் சீர்குலைத்தது. தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதை இனவாதத்துடன் நோக்கிவரும் ஜே. வி. பி. யும் இம்முறை கூட்டணி சேர்ந்துள்ளது. எனவே, தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவையே ஆதரிக்க வேண்டும். மானமுள்ள எந்தத் தமிழனும் இதனை மறந்து செயற்பட மாட்டான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களின் தலைவிதியை பார்த்ததீர்களா? இராஜேஸ்வரி போன்ற இலங்கை அரசு எடுபிடிகள் தமிழ் மக்களுக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு தமிழ் மக்களின் அரசியல் சீரழிந்துவிட்டது இந்த சீரழிந்த அரசியலை சாக்கடையாக்க இராஜேஸ்வரி போன்ற ஒருசிலர் இனி காணும்.
புலிகல் இல்லாதநாட்டில் எலிகலின் ராஜ்யம்
அக்கோய் என்ன குசும்பு காணும் இது….. கிட்லர் அண்ணாச்சியும் மனித உரிமை வாதியோ?
பரிதாபாத்துக்குரிய நண்பர்களே!.. புலிக்கொரு காலம் வந்தால் எலிக்கும் ஒருகாலம் வலுமில்லே.. புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்து தப்பிய எலி சந்ரதர்ப்பம் பார்த்து பேசுது நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமுங்கோ… சொல்லுங்கடா டோய்!!…
She was leading a miserable existence and She had few memories of her childhood.I don’t wounder that she failed her politic exam.
The old women was deaf;She will become deaf with all that noise.
Rajeesh Bala,Wash your dirty hands.
This is a despicable personal attack. Denounce someone’s politics and stop disgusting personal abuse.
Such language says more about the abuser than the abused.
தமிழர்களின் அவலங்களுக்காக மட்டுமே குரல் கொடுப்பதாகவும் அரசியல் நோக்கம் எதுவுமில்லை எனக்கூறிக்கொண்ட 21 பேர் கொண்ட புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரதி நிதிகளென தங்களை தாங்களே கூறிக்கொண்ட அமைப்பின் பிரதி நிதியான ராஜேஸ்வரி முன்னர் கருணா பிள்ளையான் கூட்டை ஆதரித்தவர். பின்னர் பிளையானை ஆதரித்தவர். அம்பாறையில் அரசபடையின் பாலியல் வல்லுறவை நடக்கவில்லை என உறுதிப்படுத்த முனைத்த பெண் இனத்துக்கு இழுக்கான இந்த பெண்மணி பெண்ணியவாதியாம்.
இப்போது பல்லாயிரம் மக்களின் படுகொலைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜோசெப்பராராஜசிங்கம், அரியசந்திரனேரு, சிவனேசன், ரவிராஜ், விக்கினேஸ்வரன், மற்றும் மனித உரிமைவாதி கிளிபாதர், பத்தியாளர் லசந்த உட்பட உலகத்தால் அறியப்பட்ட பலரின் கொலைகளுக்கு பொறுப்பானவரை மனித உரிமையின் காவலர் என சொல்லும் இந்த அம்மணி பற்றிய பல்வேறு கதைகளை இப்போது நம்பத்தான் வேண்டியுள்ளது.
அம்மணி ஜேவிபியின் கூட்டில் தான் மகிந்த சிந்தனையும் மகிந்தவும் ஆரம்பத்தில் தேனிலவு கொண்டாடியவர்கள் என்பதை மறந்துவிட்டார். இப்போது ஜேவிபி கூட்டு பற்றி கதையளக்கிறார்.
இந்த புலம்பெயர் அமைப்பு தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட அமைப்பாக தெரியவில்லை. தமது சுயலாபங்களுக்காக சிங்களத்தின் ஏவல் கூலிகளே என்பதை இந்த மகிந்தவுக்கு வாக்களிக்க சொன்னதன் மூலம் உணரமுடிகிறது. உங்கள் அமைப்பு மக்கள் நலன் சார்ந்ததாக இருந்தால் இந்த அறிக்கையை வாபஸ் பெறவேண்டும்.
>> இந்த புலம்பெயர் அமைப்பின் ” புலம்பலைக்“ கேட்டிங்களோ ! அக்கா.. போன வருசம் இதே நாட்கழில் உண்மையான புலம் பெயர் தமிழர்கள் வீதி எல்லாம் படுத்துக் கிடந்து போராடும் போது………… நீங்கள் வீட்டில் படுத்துக் கிடந்தீர்களாமே….அன்று படுத்த நீங்கள்…..இப்ப தான் எழும்பினீர்களோ.?……..சோத்தில இனியாவது ”’ உப்பு ”’ போட்டு சாப்பிடுங்கோ அக்கா…….அப்டியே நம்ம “ புறோபசர்“ சொன்னதய்யும் படியுங்கோ …..( அக்கா கழுத்தில என்ன தாலியோ மின்னுதக்கா….40 பவுன் இருக்கும் போல கிடக்கு. உங்கழிற்கும் சூட்கேஸ் வந்து சேந்துட்டோ……..மகீந்தக்கு மனிதாபிமானம் இருக்கும் எண்டு சொல்லும் நீங்கள்….அதில்ல கொஞ்சம் உங்களிற்கும் இருந்தால்?அதை வித்து வன்னி மக்களிற்கு ஒரு வாய் சோறாவது போட முயற்சி செய்ங்கோ……….
கண்கலங்கி கவலைப்படுவதா? இவர்கள் இலங்கை தமிழ்பேசும் மக்களின் துரோகி என்று முத்திரை குத்தலாம். ராஜபக்ஷே போன்ற சிங்கள மக்களின் துரோகிகளிடம் சோரம் போனவர்கள். அகதிகளின் முகமூடியை அணிந்துகொண்டு தமிழ் அகதிகளை அசிங்கப்படுத்தும் அநாகரிகமற்றவர்கள் என்று எல்லோரும் திட்டுவார்கள் என்று அவர்களுக்கும் தெரியும். திட்டி பேசிவிட்டு விமர்சனம் செய்பவர்கள் போய்விடுவார்கள் என்பதும் தெரியும். இலங்கை பேரினவாத அரசின் பின்புலத்தில் இயங்கும் இவர்கள் போன்றவர்களை ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்துவதோடு அந்நியப்படுத்தவும் வேண்டிய தேவை தமிழ்மக்களின் விடுதலையில் அக்கறை கொண்டவர்களின் வேலைத்திட்டங்களில் ஒன்றாக உள்ளது. அகதிகளின் பிரஜைகள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.
இந்த மாதிரிப் பரிதாபமான கதைகளை மீளப் பிரசுரித்து பொய்யைக் கூடப் பொருந்தச் சொல்ல இயலாத கூலிப்படைகளுக்கு ஏன் விளம்பரம் வழங்குகிறீர்கள்?
படிப்பின் அறீவ்வொடு மட்டும் சிந்தியாது அறம் வழிநின்ரும் சிந்திப்பதெ தமிழ் மரபு.பெண்னென்ரதும் பெய்தனமாய் சிந்தியாது எங்கே மனித உரிமை காப்பாட்ரப்பட்டது என்ரு கேலுங்கோ அது சரி அதை விட்டு அதி உத்தமராய் பேச எத்தனிப்பது மோட்டுத்தன்ம்.ஆதிக்கம் இருக்கும் மனம் அதிகாரம் செய்ய எத்தனிக்கும்.முதலில் சனனாயகம் காப்பொம் பின் சன்னாயகம் பெசுவொம்.
அக்கா முந்தி நல்ல,நல்ல கதையெல்லாம் எழுதினவ!இப்ப அமைப்பு நடத்திறாவோ?கேள்விப்படவே இல்ல. காத்து இருக்கைக்க தான் தூற்ற வேணும்!!
சரி, உங்கட வாக்கை வேதவாக்காய் எடுத்து மகிந்தாவுக்கு வாக்கை போடுவோம். தமிழர்களே சிலிர்த்தெழுங்கள். ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும். அக்கா அல்லது அண்டி சொல்லிட்டார். இனி யாரும் மறுக்கக்கூடாது. மறுப்பவன் எல்லாம் துரோகி.
புலம்பெயர் ஜான்சி ராணி வாழ்க வாழ்க.
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே
கெட்டா னெனப்படுத னன்று.
திருக்குறள் 967
செய்தி:
அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் மஹிந்தவை ஆதரிக்க வேண்டும்
– புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
“அரசியல் தீர்வையும் அபிவிருத்தியையும் அடைவதற்குத் தமிழ் மக்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டுமென்று புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதியான எழுத்தாளர் திருமதி ரஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.மனித உரிமைகளுக்காகப் போராடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஓர் அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதுடன் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுப்பார் என திருமதி பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியே தமிழர்களை முதன் முதலில் அகதியாக்கியது. தமிழ் மக்களுக்குத் தீர்வுகள் கிடைத்த போது அதனைச் சீர்குலைத்தது. தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதை இனவாதத்துடன் நோக்கிவரும் ஜே. வி. பி. யும் இம்முறை கூட்டணி சேர்ந்துள்ளது. எனவே, தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவையே ஆதரிக்க வேண்டும். மானமுள்ள எந்தத் தமிழனும் இதனை மறந்து செயற்பட மாட்டான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்”.
இலங்கையின் இனக்கலவரத்தின் பின் 1983 முதல் இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்து, 1987ம் ஆண்டு தொடக்கம் இந்தியாவிலுள்ள இலங்கைத்தமிழ் அகதிகளைச் சந்திப்பவரும், தற்போது எங்கள் தாய் நாட்டில் தவிக்கும் மக்களுக்காகப் தொடர்ந்து தனது சேவையை தொடர்ந்து செய்து வருபவரும், தன் எழுத்துக்களால் தனக்கென ஓர் வாசகர் வட்டத்தையும், தன் எழுத்துக்களால் பாதிக்கப்படும் பெண் இனத்திற்காகவும் குரல் கொடுத்து வரும் பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்துக்கும் இந்த நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை.
பணமும், விளம்பரங்களும், வசதிகளும், ஆசைகளும் யாரைத்தான் விட்டு வைத்தன……..
அதி உயர் பாதுகாப்பு வலயம் என்பது அரசியல் பிரச்சினையல்ல; அது மானிடரின் அடிப்படை உரிமை வாழ்வாராத பிரச்சினை!
ஓர் மானிடனின் அடிப்படை தேவை, உண்ண உணவும், உறங்க உறைவிடமும், உடுக்க உடையும்…………இங்கோ தாம் உறங்கிய இடைத்தில் உறங்க, தாம் உணவுப்பயிர்செய்த இடத்தில் உணவு பயிர் செய்ய, பிச்சை எடுப்பவர்கள் போல் கையேந்த வேண்டிய நில்லை……மற்றவர்களும் எதோ தம் சொந்த இரக்க குணத்தில் பிச்சை போடுபவர்கள் போலும், தாம் சொல்லித்தான் அரசாங்கமும் இறங்குகிற/ இரங்குகிற மாதிரியும்………
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: இலங்கைத் தமிழர் வரலாற்றில் கறை படிந்த இன்னுமொரு அத்தியாயம் என்ற தலைப்பில், “கொலை செய்யப்படும் ஒவ்வொருவரின் பின்னணியிலும் ஒரு குடும்பம் உறவு கிராமம் என ஒரு பரந்த சமூகமே உள்ளது. ஒரு மனிதக் கொலையினால் ஒரு உயிர் மட்டும் அழிக்கப்படுவதில்லை, அவரைச் சார்ந்த சமூகத்தின் ஒரு பகுதியும் சிதைக்கப்பட்டு அதனின் எதிர்காலம் எதிர்பார்ப்பு கனவுகள் அனைத்துமே கரைக்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறு தொடரும் கொலைகளினால் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முற்றாக ஒதுங்கி நிற்க மக்கள் முற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும். இறுதியில் தமிழ் மக்களின் நீதிக்கும் சமத்துவத்துக்குமான போராட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை” எழுதிய இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்…….
“மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் கொடூரமான கொலை தமிழ் தகவல் நடுவத்தைப் பேரதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இவர் 1985ம் ஆண்டிலிருந்து நடுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஆவணப்படுத்துதல் மனித உரிமைகள் பேணுதல் போன்றவற்றில் அவர் எம்முடன் செயற்பட்டவர். தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகத் தீவிரமாகப் போராடிய ஒருவரை நாம் இன்று இழந்து நிற்கிறோம். தமிழ் தகவல் நடுவம் மட்டுமன்றி மனித உரிமைச் சமூகமும் அவரின் இழப்பால் பாதிக்கப்படுவது நிச்சயம்”.
“பொதுமக்கள் மீது அண்மைக்காலமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கண்டிக்கப்பட வேண்டிய வன்முறை, அச்சுறுத்தல், அர்த்தமற்ற கொலைகள் தொடர்பாக தமிழ் தகவல் நடுவம் ஆழ்ந்த கவலையை அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் சகல தரப்பினராலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதையிட்டுக் கவலையுறும் அதேவேளை இத்தகைய சம்பவங்கள் சாதாரணமானவை, தவிர்க்க முடியாதவை எனக் கருதப்படும் நிலை காணப்படுவது எமக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பொதுமக்களைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவதாலும் அவர்களைக் கொலை செய்வதன் மூலமாகவும் சமூகத்தைச் சீர்திருத்தலாம் எனவோ நமது இலக்குகளை அடையாலாம் எனவோ அல்லது சமூக மேம்பாட்டுக்கு வழிகோலலாம் எனவோ எண்ணுவது அறிவற்ற தன்மையாகும். எவராலும் ஒரு பொழுதும் இத்தகைய கொடூரச் செயல்கள் அங்கீகரிக்கப்பட மாட்டாதென்பது மட்டுமன்றி நீதிக்கான போராட்டங்களில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதற்கு எந்தவித நியாயமும் இல்லை என்பது அனைவர் மனதிலும் பதிய வேண்டும்”.
“சகிப்புத் தன்மையற்று தப்பெண்ணம் கொண்டு பிற அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிக்காது நீதிக்குக் கட்டுப்படாமல் வன்முறையை ஊக்குவிக்கச் செயற்படும் தன்மையையும் மனித உரிமைகள், நியாயம், எமது எதிர்காலம் ஆகியவற்றைச் சீரழிக்கும் கொடூரச் செயல்களையும், தமிழ் சிங்கள முஸ்லீம் என்ற பேதங்களுக்கு அப்பால் கால தாமதமின்றி ஒரு குரலாக எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவற்றை மேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாதென உறுதி கூறுமாறு அனைவரையும் தமிழ் தகவல் நடுவம் வேண்டி நிற்கிறது. வீணான கொலைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் இதற்காக அனைத்துச் சமூகங்களும் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டுமெனவும் தமிழ் தகவல் நடுவம் மேலும் கேட்டுக்கொள்கிறது”.
“மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கும் வகையிலும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைப் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உறுதி கூற வேண்டுமெனவும் இதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி வெளிப்டையாகக் கூற வேண்டுமெனவும் தமிழ் தகவல் நடுவம் வேண்டுகோள் விடுக்கிறது”.
இப்படி தமிழ் தகவல் நடுவத்திற்காக 04-01-௨௦௦௬ அன்று எழுதியவர் தான் இந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள்…..
மேலும் தங்கள் எழுத்துக்கள் மூலம் “மக்கள் வேண்டுவது இலங்கையில் நிரந்தர சமாதானம்” என்ற தலைப்பில் எழுதும்போது, “இலங்கை அரசாங்கம் தமிழர்களில் வன்முறையைக் கொடூரமாக அவிழ்த்து விட்டபோது இலங்கையிலுள்ள எங்கள் சொந்தக்காரர்களுக்கு இலங்கை அரசாங்கம் என்ன துன்பங்களைச் செய்வார்களோ என்ற பயமிருந்தாலும் தமிழரின் மனித உரிமைக்காகத் தைரியத்துடன் உரிமைப் போராட்டங்களை லண்டனில் முனனெடுத்தவர்கள் நாங்கள்.- தமிழ்ப் பெண்கள்”
“அன்று சிங்கள அரசாங்கத்திற்கெதிராக. தமிழரின் மனித உரிமைகளை வேண்டிப் போட்ட கோஷம் இன்று ஆயதங்கள் மூலம் சாதாரண தமிழ் மக்களின் வாழ்க்கையை இன்னலுக்குள்ளாக்கும் அத்தனை சக்திகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்கிறோம்”. என்று எழுதிய இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள்…..
“மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் நிம்மதியாக வாழும் உரிமையைத் தடுக்காதீர்கள். தமிழ் மக்கள் அகதிகளாக உலகெங்கும் ஓடும் துயர் இனியும் வேண்டாம்”.
“மனித உயிர்கள் அற்புதமானவை, அவற்றை அழிப்பதை உடனடியாக நிறுத்தவும். கொலைகளையும் ஆள்க்கடத்தல்களையும் உடனடியாக நிறுத்துங்கள்”
“.அடிக்கமேல் அடித்தால் அம்மியும் நகரும்”.
“மக்கள் சக்தி மாகாசக்தி!”.
“தமிழர்கள் போர் வெறி படித்த கொலைக் கூட்டமல்ல. பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கத் தெரிந்த புத்திஜீவிகள் என்பதை நிருபியுங்கள்”.
“இலங்கையிலுள்ள இளம் தமிழரின் உணர்வில் உண்டாகும் புதிய கருத்துக்களுக்கு உலகம் பரந்த தமிழர்கள் இணையக் காத்திருக்கிறார்கள். புதிய வெளிச்சங்களில் உங்கள் சமுதாயத்தை வழி நடத்துங்கள். இலங்கைத் தமிழருக்கு விடிவு தரும் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை உணர்ந்து செயற்படுங்கள். இமயத்தில் ஏறவும் பள்ளத்தில் விழவும் எங்கள் கால்களதான் காரணம். உங்களை நம்பும் தமிழருக்கு இமயத்தைக் காட்டுவது உங்கள் பொறுப்பு”.
என்ற மக்களின் கோஷங்களிற்கு எழுத்துவடிவம், உயிர்வடிவடிவம் கொடுத்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள்……
“இலங்கையில் தங்கள் குழந்தைகளைப்போர்க் களத்தில் பலி கொடுக்கும் தாய்களின் துயர் எப்போது தீரும்?”
“இவர்களுக்கான உண்மையான அன்னையர் தினம் என்று வரும்?”
“குடும்பங்கள் பயமின்றித் தங்கள் குழந்தைகளைப் பாடசாலைக்களுப்பும் நாள் என்று வரும்?” இப்படியெல்லாம் எழுதிய இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள்…..
இன்று எப்படி ஓர் அரசியல் கட்சி சார்ந்து வாக்கு கேட்கும் நிலை வந்தது?
தரமான கொலிவூட், தமிழ் படங்களிற்கு தரமான நடுநிலையான, அறிவுசார்ந்த நல் விமர்சனங்கள் தந்த தங்களிற்கு இந்த நிலையா?
போர்ச் சூழ்நிலையில் வாழும் தமிழ் மக்களின் நிலை பற்றி வெளிநாடுகளில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பலதரப்பட்ட, உண்மையற்றதும், அவதூறுத்தனமுமான பல பிரச்சாரங்களைச் செய்து வந்த நிலையிலும், இதனாற் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்கள் தாய் நாட்டில் தங்கள் உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமற் தவித்த நிலையிலும், வெளிநாடுகளில் கட்டவிழ்த்து விடப்படும் பொய்ப்பிசாரங்களின் உண்மையைக் கண்டறிய ஒன்பது நாடுகளிலிருந்து இலங்கைக்குச் சென்ற இருபதுக்கும் மேலானவர்களில் தாங்களும் ஒருவராக இருந்தீர்கள் (உங்களுடன் உடன் வந்த சிலரின் வண்டவாளங்கள் ஏற்கனவே அறிந்தது). தாங்கள் ஒவ்வொரு முறை சென்று வந்து விடும் அறிக்கைகளை நம்பினோம். ஆனால் தற்போது தாங்கள் ஓர் அரசியல் கட்சி சார்பாக வேண்டுகோள் விடுப்பது, ஆச்சரியங்ககளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பல கேள்விகளை தொடுக்கிறது……
அகதிகளுக்கு உதவி செய்யும் பொருட்டு கொழும்பில் ஒரு அறக்கட்டளையை உண்டாக்கும் முயற்சியில் இலங்கைக்கு சென்றிருந்த
புலம் பெயர் குழு சார்பில் தாங்கள் பலரைச் சந்தித்ததாக எழுதியிருந்த்தீர்கள்……..
ஆனால் அன்று
எழுதியவற்றை “பெண்ணியம் பேசியவர்கள் கிழக்கு பாசிட்டாகியவுடன் இதையெல்லாம் கண்டுகொள்வது கிடையாது. வடக்கு பாசிட்டுகள் பற்றி மட்டும் பேசுவதும், கிழக்கு பாசிசத்தை நியாயப்படுத்துவமே இவர்களின் அரசியலாகின்றது. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் மகிந்தவை சந்தித்த கணத்தில், அவரின் அருட்பார்வையை பெற்றவுடன், கிழக்கு பாசிசம் தலைக்கேறியது. காத்தான்குடி சம்பவத்தை வைத்து, மக்களை எச்சரிக்கின்றார். மக்கள் தான் இதை செய்யப் போவதாக புலம்புகின்றார்”, இன்று தாங்கள் நிரூபிப்பதாக உள்ளது.
இரு மாதங்களின் முன் இதே இணையதளத்தில் ஓர் அன்பர் கருத்து எழுதியிருந்தார், “இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் சிறீலங்கா அரசசார்பு இணையமான தேனீயில் அகதி முகாம்களில் எல்லா வசதிகளும் இருப்பதாக சிறீலங்கா அரசுக்கு துதிபாடியுள்ளா. இந்த முகாம்களைப்பார்த்த திவீர புலியெதிர்பாளர்களே முகாம்களின் அவல நிலை கண்டு கொதித்துப்போயுள்ளதாக அறியப்படுகிறது. வவுனியாவில் இருக்கும் புளொட் அமைப்பு ஆட்களிடம் கேட்டுப்பாருங்கோ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உங்களுடைய அரச துதிபாடல் எவ்வளவு கேவலமாதென்று உங்களுக்கு தெரியவரும். உங்களைப்போன்றவர்கள் எப்போது திருந்துவீர்கள்.?” என்று.
“திருகோணமலையில் நடந்த அதர்ம கொலைகள்” என்ற தலைப்பில் அன்று எழுதினிர்கள், இன்று?……
“வெளிநாடுகளிலிருந்து கொண்டு அறிக்கைவிடும் போலிப் புரட்சிவாதிகள், கிழக்கு மக்களில் எந்தக் கரிசனமும் அற்றவர்கள். தங்கள் அமைப்புக்களில் கிழக்கு மக்களைத் ‘தீண்டாச்சாதியாக’ நடத்துபவர்கள். இவர்கள் பார்வையில் கிழக்கு மக்கள் ‘மோர்தின்னி முட்டாள்க’ளாகும். இந்தக் கேவலங்களின் குரலைக் கேட்காமல் கிழக்கிலங்கை மக்கள் தங்கள் பிரச்சினையைத் தங்கள் கையில் எடுத்துத் தங்கள் தலைமையைத் தேடவேண்டும்”, என்று அன்று ஒன்றரை வருடங்கள் முன் எழுதியிருந்தீர்கள். இன்று என்ன நடந்தது?
தற்போது எந்த கேவலங்களின் குரல்களை கேட்கச் சொல்கிறீர்கள்?
தாங்கள் கனிமொழியை சந்தித்தது எல்லாம் விளம்பரத்திர்க்காகவா?
அல்லது யாருடையாவது தூதுவராகவா?
யார் யார் யாருக்கேன்ற நிலையில்லாமல் போய்விட்டது…..
புலிகளின் பிரச்சனை வேறு, தமிழரின் பிரச்சனை வேறு என்ற நிலையில், இன்று புலியும் இல்லாத நிலையில்….
புலிகள் இல்லாதநாட்டில் எலிகளின் இராஜ்யம் என்ற மாதிரி; இவ் புலம்/ புலன் பெயர் பிரதிநிதிகள், யாரைப் பிரதிநிதிப் படுத்துகிறார்கள்? இவர்களை யார் தெரிவு செய்தது? இவர்களின் பின் புலம் என்ன? கடந்த காலத்தில் தாங்கள் புலம்/ புலன் பெயர்ந்த நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக என்னென்ன முன்னெடுத்தார்கள்?
தற்போதைய ஜனாதிபதி புலிகளிடமிருந்து நாட்டை மக்களை மீட்டெடுத்து அபிவிருத்தி பணிகளில் இட்டுச் செல்கிறார், நாட்டில் இருக்கும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அவர்களை விடுங்கள்.
இதில் டாக்டர் நொயல் நடேசன், நரேந்திரன், நோர்வே ராஜன் போன்ற சிலரின் பங்களிப்புகளை மதிக்கிறேன், ஆனால் சிலர்………..இப்படியும் ஒரு பிழைப்பு தேவைதானா?
பணமும், விளம்பரங்களும், வசதிகளும், ஆசைகளும் யாரைத்தான் விட்டு வைத்தன……..
எல்லாவற்றிற்கும் மனித நேயம் வேண்டும்!
ஆதாரங்களில் சில:
http:/
இனியொரு இணையத்தளத்தினை நடாத்துவபர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றால் அது தொடர்பான செய்திகளை பதிவு செய்யாமல் விடுவது ஆரோக்கியமானது, அதைவிடுத்து முன்னுக்குப் பின் முரணான செய்திகளை பதிவு செய்வது அரசியல் நாகரீகம் அல்ல. இந்த நபர் இணைந்துள்ள குழு தொடர்பாகவும், இவர்களது நடவடிக்கைகள் தொடர்பாகவும் பெருமளவு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட பின்பும் நீங்கள் இவருடைய கோரிக்கையை பிரசுரிப்பது என்ன உங்களது தளம்பல்நிலையைத்தான் வெளிக்காட்டும்.
மகிந்தயை தோற்கடித்து யுகோஸ்லாவியா ஸ்லோபோடன்மிலோசெவிக்கை தனிமைச் சிறையில் அடைத்துக் கொன்றதுபோல கொல்லவேன்டும்,பரமேஸ் அக்காவ விடுங்கோ,நக்குண்டார் …………
செருப்பால் அடியுங்கள்.
அக்கோய் இது சோக்கான பகிடி என்ன?
அப்ப சரத் பொன்சேகாவை என்ன செய்கிறது?
ரண்டும் யம தூதர் கூட்டம்.