காஸாவில் குண்டுமழை பொழிந்து பலஸ்தீனியர்கள் அழிக்க்ப்பட்ட போது வெந்து வெதும்பியிருக்கிறோம். ஈராக்கில் ஓடிய இரத்தத்தைக் கண்டு அமரிக்கவைத் திட்டித்தீர்த்திருகிறோம். சூடன், கொங்கோ என்று நீழும் பட்டியலைக் கேள்வியுற்ற போதெல்லாம், வேதனை எம்மை வருடிச் சென்றிருக்கிறது. இலங்கைத் தீவில், வேப்பம் காற்று விஷக்கிருமிகளை நாசப்படுத்தும் எமது சொந்த மண்ணில் கொசுக்கள் போல எமது இரத்த உறவுகள் கொல்லப்படும் போது மட்டும் புலியெதிர்பு என்ற சாக்கடைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு, சிறீ லங்கா அரச பயங்கர வாதத்தை நியாயப்படுத்தும் தமிழ் மக்களின் “மாற்று” அரசியல் வேடதாரிகளை எப்படி நியாயப் படுத்துவத?. இதற்கு வேறு, மார்க்சியம், ஜனநாயகம், மாற்று என்று அழகிய சொல்லாடல்கள்! புலியெதிர்ப்பின் பேரால் மனிதாபிமானத்தின் குரல்வளையைத் திருகி, நா நீள, விழிபிதுங்க, துடிக்கத்துடிக்கக் கொன்று புதைத்துவிட்டு, புலிகளை வெற்றி கொள்வதாக எக்காள்மிடும் தமிழ் அரசியல் வாதிகள் கொல்லப்படுவது தமிழர்களல்ல, மனிதர்கள் என்றாவது சிந்திப்பதில்லை. மனிதத்தை முற்றாகவே துடைத்து துவம்சம் செய்துவிட்ட மிருகங்கள் போலக் காட்சிதரும் இந்த வேடதாரிகள், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவதை, தென்னிந்திய சினிமாக்களின் வன்முறைக் காட்சிகளை ரசிப்பதைப் போல ரசித்துக் கொள்கிறார்கள்.
கொலைகளை நியாயம் கற்பிக்கும் குரூரமான வன்முறைக் கலாசாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்தக் ‘மனிதம் செத்துப் போன ‘ கூட்டங்கள், மக்களின் பிணங்களின் மேல் ஜனநாயக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப குருதி தோய்ந்த கரங்களோடு காத்திருக்கிறார்கள். குண்டடிபட்டுச் செத்துப் போன தாயைத் தேடியலையும் காயம் பட்ட பச்சைக் குழந்தை பேரின வாதப் பசியோடலையும் இராணுவத்திற்கு இன்னொரு எதிர்காலத் தமிழன்! அரச பாசிசத்தோடு கை கோர்த்துக் கொண்ட புலியெதிர்ப்பு ஜனநாயக வாதிக்கு புலியழிப்பில் தவிர்க்கமுடியாமல் பாதிக்கப்பட்ட இன்னொரு குழந்தை!! புலிகளிற்கு, தம்மைக் காப்பற்றிக்கொள்ள ஆயுதமாகப் பயன்ப்டும் ஒரு ஜடப்பொருள்!!! எரிகாயங்களுடன் அவலக் குரல்களோடு அனாதரவாக விடப்பட்ட இந்தக் குழந்தைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காத இந்த மனித விரோதிகள் தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்ற அவதாரம்மெடுத்திருக்கும் அவமானம்!!
மகிந்த சிந்தனை தான், பிரித்தானிய ஆட்சிக்குப் பின்னர் உருவான அனைத்து அரசாங்கங்களின் சிந்தனையும். பேரினவாதம், பௌத்த மேலாதிக்கம், சிங்கள நாடு .. இப்படித்தான் பண்டாரநாயக்க விலிருந்து ஆரம்பித்த பாசிசக் கூறுகள் அதன் மொத்த வடிவமாக, இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு மகிந்த சிந்தனையாக இலங்கை மக்களின் மீது வாந்தியெடுக்கப்பட்டிருக்கிறது. இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. “தோழர்” டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா படித்திருக்காமல் இருக்க முடியாது. இந்த கீழ்த்தரமான சிந்தனையால் விதைக்கப்பட்ட இனவாதம், பிரிந்து வாழ்வதற்கான உணர்வை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இன்னுமின்னும் ஆழ விதைக்கும் என்பதை அமைச்சர் தோழர் “டக்ளஸ்” சிந்திக்காமல் “மாண்புமிகு” அமைச்சராகியிருக்க முடியாது. இந்த மகிந்த சிந்தனையை மாவோ சிந்தனைக்குப் பதிலாக ஏற்றுக்கொண்டு அதற்காகப் பிரச்சாரம் வேறு மேற்கொள்ளும் மாண்புமிகு, “முன்நாள் இடதுசாரி” அமைச்சர் தேவானந்தா, இந்தச் சிந்தனையில் மக்கள் மயங்கி, அரச குடியேற்றத்திட்டத்திற்கு மகிந்த புரம் என்று திரு நாமம் சூட்ட “தோழரை” கேட்டுக் கொண்டார்களாம்.??!!
இப்படித்தான் 14.02.09 அன்று டான் வானொலியில் உறயுப் பாலம் நிகழ்ச்சியூடாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த “தோழரின்” பதில்கள் மகிந்த பாசிசத்தின் இன அழிப்பின் நியாயப்படுத்தலாக நகர்ந்து சென்றது.
லசந்த விக்கிரமதுங்க என்ற ஜனநாயக வாதி, 90 களிலிருந்து தமழர்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் குரல் கொடுத்த ஊடகவியலாளன், அரசுக்கு எதிராக மட்டுமல்ல புலிகளின் கொடூரத்திற்கும் எதிர்வினையாற்றிய மனிதாபிமானி, இவர் கொல்லப்பட்டதும், ஏனைய துணிச்சல் மிக்க ஊடகவியலாளர்கள் இலங்கையை விட்டுத் தப்பியோடுவது பற்றி ஒருவர் கேள்வியெழுப்பிய போது, மகிந்த பயங்கரவாதம் கக்கிய நஞ்சையே “தோழரும்” கக்கிச் சென்றார். இந்த ஊடகவியளாளர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகளின் சார்பானவர்களாகவே உள்ளனர்; எனவே அவர்களின் வெளியேற்றம் ஒரு விடயமே அல்ல என எந்தச் சலனமும் இன்றி தனது “ஜனநாயகக் குரலை” வான் அலைகளில் தவழவிட்டார்.
இந்தியாவின் துணையோடு கட்டியமைக்கப்படும் பாசிச இரும்புத்திரை உலகிலிருந்து ஒரு மக்கள் கூட்டத்தையே தனிமைப்படுத்துகிறது
– புலிகளின் நிலைகளிலிருந்து தப்பிவரும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுச் சிறை வைக்கப்படுகிறார்கள்.
– மருத்துவ மனைகளில் உறவினர்களைக் கூட அனுமதிக்காமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் காயப்பட்ட அப்பவிகள்.
– நாட்டைவிட்டு விரட்டப்படும் ஊடகங்களும் மனிதாபிமான அமைப்புக்களும்.
பேரின வாத அரசு மட்டுமே உட்புகவல்ல நவ-பாசிசச் சிறைச்சாலையைக் கட்டமைக்கும் சிறீ-லங்கா அரசை நியாயப்படுத்த வரிக்கு வரி பொய் பேசும் தேவானந்தா, வெஸ்ட் பாங்கையும், காஸாவையும் துண்டாடிய திட்டத்தைப் போன்று வட-கிழக்கைப் பிரிக்கும் குடியேற்றத் திட்டங்களை தெரிந்து கொள்ளாதது போல நிராகரிக்கிறார்.
வன்னி மக்களின் பிணங்களில் இடறி விழுந்து யாழ்ப்பணம் சென்று முதலமைச்சராகும் கனவை நாசூக்காக வெளிப்படுத்திய “மாண்புமிகு அமைச்சர்” தேவானந்தா அவர்கள், தான் வெளிநாட்டுத்தமிழர்களிடம் யுத்த மீள்கட்டமைப்புக்ககென முதலமைச்சர் நிதியோன்றையும் மகேஸ்வரி அறக்கட்டளை ஒன்றையும் நிறுவ ஒழுங்குகள் செய்ததாக சொன்னார்.இந்த மகேஸ்வரி அறக்கட்டளைக்காக பாராளுமன்றத்தில் மிக சிரமப்பட்டு அனுமதி வாங்கியதையும் குறிப்பிட்டார். மொத்தத்தில் வெளிநாட்டிலுள்ள எல்லாத்தமிழரிடமும் பணம் சேர்த்தால் 378 கோடியை இருமாதத்தில் சேர்தஇது விடலாம் என்ற தனது கணக்குக் கணிப்பையும் குறிப்பிட்டார்.
அப்பவி மக்களின் சாம்பல் மேட்டில் உருவாகும் தமிழீழ ஜனாதிபதிக் கனவில், அழிந்து போகும் மக்கள் தொகையைக் கணக்குப் போட்டுக்கொண்டு வாழ்வாங்கு வாழும் “தேசியத் தலைவர்” பிரபாகரனுக்கும், “ஜனநாயகவாதி” டக்ளசிற்கும் ஆறு வித்தியாசங்கள் காண முற்பட்டால் தோல்விதான் எஞ்சும்.
இட்வர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு கணித ஒப்பீடுதான். 1500 புலிகளைத் துவம்சம் செய்ய எத்தனை குழந்தைகளையும் அப்பாவிகளையும் கொல்ல வேண்டும் என்று மகிந்தவிற்கும், தோழரிற்கும் ஒரு கணிப்பீடிருக்கும்.
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனை குழந்தைகளும் அப்பாவிகளும் கொலைசெய்யப்பட வேண்டும் என்று பிரபாகனிற்கும் ஒரு கணிப்பிருக்கும். இவர்களைப் பொறுத்தவரை இது ஒரு கணித ஒப்பீட்டியல்.
மகிந்த, பிரபாகரன், தேவானந்தா போன்ற எல்லோருமே அப்பவிகளைக் கொன்று குவித்து அவர்கள் சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டாலும், எஞ்சியிருக்கும் சொற்பமக்களுக்கு மத்தியில் இவர்கள் யுத்தக்குற்றவாளிகளே! சொந்த மக்களையே கொன்று குவித்த சமூக விரோதிகளே!!
இலங்கை அரசு அப்பவிகளைத் தமிழ் பேசுபவர்கள் என்ற காரணத்திற்காகவே கொன்றொழித்த போது, புலிகள் தமது சர்வாதிகாரத்தை நிறுவிக்கொண்டனர். புலிகள் அப்பாவிகளை அழித்தபோது, அரசு தனது சர்வாதிகாரத்தை நிறுவிக்கொண்டது. இன்று அரசும் அதன் பரிவாரங்களின் பயங்கரவாதமும் மக்களை அழித்துக்கொண்டிருக்கிறது. இந்த அழிவிலிருந்து இன்னுமொரு சர்வாதிகாரம் நிறுவப்படாமல் சமூக உணர்வுள்ள அனைத்து சக்திகளும் இணைந்துகொள்ளவேண்டும்.
திரு சபாநாவலன் அவர்களே !
நாங்களும் தான் வானொலியை கேட்டோம்.குடியேறிய மக்களின் விருப்பத்தின்
பெயரிலேயே “மகிந்த புரம்” பெயர் வழங்கப்பட்டதாக கூறினார்.
நான்கு நாள்முன்பு கேட்டதிற்கு இந்த திரிப்பு என்றால் தாங்கள் படித்து அறிந்ததுக்கு
எந்த திரிப்பு திரிப்பீர்கள் ?.
சந்திரா ராஜா அந்த குடியேறிய
மக்கள் யார் என்பதையும் அலுப்பை
பாராமல் சொல்லுங்கோ. இதை விட
எத்தனையோ வழிகளில் .டக்க் மகிந்தா
குடும்பத்துக்கு கை மாறு செய்யலாம்.
அதை விட்டு இந்த தமிழரை கூட்டி
கொடுக்கும் தொழில் இவரது வயதுக்கு
தேவையா???
இனி ஒருவிற்கு இத்தோடு தண்ணீர் தெளித்து விட வேண்டியதுதான். அதுவும் தற்கொலை செய்து கொண்டு விட்டது!
இனியொரு ஆசிரியர் குழுவிற்கு!
உங்களுடைய இணைய தளத்தில் மட்டும் தான் உச்சியில் அடித்தது போல் பல உண்மைகள் வெளியே வருகின்றன.
பாசிசப்புலிகளாயிருந்தாலென்ன> கிழக்கின் போலி ஜனநாயகத் தேர்தலின் பிரசவ தலைமைகளாயிருந்தாலென்ன> ஜனநாயகவாதிகள் என்ற முகமூடி போட்ட வடக்கில் தேர்தல் வேட்டைக்குத் தம்மை தயார்படுத்தும் டக்லஸ்>சங்காp போன்றவர்களாயிருந்தாலென்ன>ஒவ்வொருவரினதும் முகமூடியை கிழித்தெறிகின்றீர்கள்.
சிலவருடங்களாக>பல நபர்கள் சொன்னமாதிரியே பாசிச பிரபாகரனின் வெற்றிடத்தை ஜனநாயக முக்காடு போட்டபாசிச டக்லஸ் தான் நிரப்புவார் என்று எதிர்பார்த்ததுதான் நடக்கின்றது.ஏனெனில் இவையெல்லாம் “மகிந்த சிந்தனையின்”
அட்டவணைதான்.இதில் கிழக்கு புலி என்ன?வடக்கு டக்லஸ் என்ன?
எல்லோரையும் அவர் அவர்களுக்கேற்ற விதத்தில் தீனி >போட்டு ஆட்டிவிப்பவர்கள்-மகிந்த சிந்தனை ராஜபக்சே குடும்பம்தானே.
இதற்கு விலைபோன இந்த தமிழ் குழுக்கள்>புலிகளின் அரசியல் இல்லாத ராணுவ அராஜகத்தால் தமிழ் மக்களின் விடுதலையை தொலைத்தது போல்>இலங்கை பேரினவாத அரசிற்கு துணைபோய் எம் தமிழ் பேசும் மக்களின் அனைத்து உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக விற்றுவிட்டார்கள்.மகிந்த சிந்தனையின் பிரித்தாளும் தந்திரத்தை கூட இத்தமிழ் குழுக்களே செயற்படுத்துகின்றனர்.
டக்லஸின் ஈ.பி.டி.பி கட்சிக்கு ஒரு ஒட்டுக்கட்சி புதிய டெலோ. .ஈ.பி.டி.பி தன்னால் செய்ய முடியாத அலுவல்களை செய்து முடிக்க அதற்கு கையசைக்க- அதனை செய்து முடிக்க இந்த புதிய டொலோ.உதாரணத்திற்கு புலிகளை அழிப்பதாக சொல்லிக் கொண்டு அதனுடன் சேர்த்து எம் மக்களையும் அழித்தொழிக்க சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட இதே டக்லஸ் புதிய டெலோவை ஆள்பிடித்துக் கொடுத்தது.
நீண்ட காலமாக வவுனியா- மன்னாரில் குட்டி மன்னர்களாக அனைத்தையும் அரசு ஆதரவுடன்>அரசு சலுகைகளுடன் செய்து வந்த புளொட் கும்பலுக்கு டக்லஸ் நீண்ட காலமாக பல்லுப்புடுங்க நினைத்த கனவை நவைாக்க புதிய டெலோவிற்கு தட்டிக்கொடுத்து வளர்ப்பது.சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஈ.பி.ஆர்.எல்.எப் ஐ ஒரு கைபார்க்க தீட்டிய இடத்திலே?ய கூடர் பார்க்க காத்திருப்பது.எல்லாவற்றிற்கும் மேலாக மகிந்தாவிற்கு தமிழ் மக்களை அடிமை சாசனம் எழுதிக்கொடுத்ததற்கு பதிலாக மகிந்தாவின் இன்னொரு எடுபிடியான சங்காpயாரின் பதவிக்கே உலைவைத்து அதனைத் தட்டிக்கொண்டதுஇப்படி பலஆயிரம் புதைந்த உண்மைகள் இவருக்கு உண்டு.
பிரபாகரனின் வெற்றிடத்தை நிரப்ப புறப்பட்ட இவரின் மறுபக்கம் இனி அம்பலமாகும்.
ஏனெனில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய பிரபாவிற்கே திருவோடு என்றால>; தோழாpன் கதை எங்கு போய் நிற்குமோ?காத்திருப்போம்.
“நாடு தீப்பற்றி எரிகையில் நீரோமன்னன் பிடில் வாசித்துக்கொண்டு இருந்தானாம்” > இந்நிலையில்தான் டக்ளசு யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்! ஒட்டுமொத்த தமிழினமும் கொலைகாரன் மகிநதாவின் இனஅழிப்பால்> சோகத்தில் மூழ்கியுள்ளது. வன்னியில் நாளாந்தம் நாற்பது ஐம்பது என மக்களைச் கொல்கின்றான்! தமிழ்மக்களின் இறந்த உடல்கள் தகனம்கூட செய்யப்படாமல் வீதிகளில் வீசப்பட்டுக்கிடக்கின்றது! புலிகளினதும்-மகிந்தாவினதும் பாசிசப்பிடியில் சிக்கி மக்கள் மரணத்துள் வாழ்கின்றனர்! “இநதச் சந்தோசத்தில்” யாழ்மக்கள் மூழ்கி> புளகாங்கிதம் அடைந்து ஏகோபித்த விருப்பத்தோடு அரச குடியேற்றத்திட்டத்திற்கு “மகிந்தபுரம்” பெயர் சூட்ட டக்கிளசைக் கேட்டார்களாம்! டக்கிளசு மகிந்தாவிற்கு காதிலை பூ வைக்கலாம்! தமிழ்மக்ளுக்கு லைக்கமுடியாது! இன்றைய நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏதாவது ஒரு சுடலைக்கு கூட “மகிந்தா மயானம்” எனப் பெயர் வைக்க யாழ்மக்கள் விரும்பவே மாட்டார்கள்!இதுநிற்க டக்கிளசின் யாழ்-ஐனநாயக நீரோட்டத்தைப் பார்ப்போம்> துரையப்பா விளையாட்டரங்கிற்கு நீர் பாய்ச்சுகின்றார். புல்லுச் செருக்க உழவாரம்> நிலம்பண்பட மண்வெட்டி கொடுத்துள்ளார்! அத்தோடு யாழ்ப்பாணத்தில் சில்லில்லாத சைக்கில்களுக்கு சில்லு > ஊசியில்லாத தையல்மெசின்களுக்கு ஊசி> பனம்பாத்தி போட பனங்கொட்டை >இப்படி எக்கச்சக்கம்! இதை நான் சொல்லவில்லை! அவற்றை இணையதளத்திலேயே பார்வையிடலாம்! அடுத்து அரசியல் ரீதியாக அவருடைய கட்சிக்காரியாலயம் ராணுவப் பாதுகாப்புடன் பக்கத்திலேயே உள்ளது! அவருடைய தத்துவப்பத்திரிகை அவரது தோழர்களால் (ராணுவத்தால்) பலாத்காரமாக அமோகமாக விறபனையாகின்றது! பொது நிகழ்வுகளுக்கு ராணுவத் தோழர்கள் புடைசூழ போய் வருகின்றார்! சிலநிகழ்வுகளுக்கு தெரலைபேசியில் வாழ்த்து! அது ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு! இப்படி அவருடைய “யாழ் ஐனநாயக நீரோட்டம்” பற்றி பக்கம் பக்கமாகவே எழுதலாம்!
நல்லது. சும்மா இருந்து கட்டுரைய எழுதுட:நாவலன்மீதே உவ்வளவு குற்றசாசட்டு இருக்கும்போது டக்ளசு மீது இருக்காதா என்ன?
ரத்தம் குழந்தையள் எண்டு அழுது வெறுமனே அழுது வடிக்கிறதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நடுநிலையாளன் சுத்தமானமானவன் என்று காட்டிக்கொள்ளலாம்.
லசந்த பற்றி பத்திரிக்கை சுதந்:திரம்பற்றி கேட்கீர்கள். அவு ஞாயம். மகிந்த புரம் எல்லாம் ஒரு கேள்வியா?
ஆற வித்தியாசம் எல்லாம் என்ன அடுக்கு மொழியா? டக்கி யும் பிராபா மாதிரி பணயக்கைதியளா வைச்சிருக்கானா? அல:லஇhட்டி அதுக்கத்தான் டக்கியஙால் முடியுமா?
இண்று உள்ள நிலையில் மகிந்த ரர்ணவம் என்ன எந்தப்பிசாசு வந்து பிச்சைபோட்hலும் வாங்கவேண்டிய நிலையில் தமிழ்மக்கள். புலம்பெயா;நத தமிழருக்கோ அல்லது கருத்துவிடுகிறஆக்களுக்கோ அல்ல.
நீங்கள் விமா;சியுங்கோ. ஆனா உந்த பிச்சையையும் தட்டிப்பறியாதையுங்கோ. பிச்சை எடுக்கறதை வட சாகலாம் என்ற நீங்கள் எழுதலாம். அது கஸ்டமுங்கோ. எதையும் அந்நத அந்த இடத்தில இருந்து பாக்?
கோணும்
//நல்லது. சும்மா இருந்து கட்டுரைய எழுதுட:நாவலன்மீதே உவ்வளவு குற்றசாசட்டு இருக்கும்போது டக்ளசு மீது இருக்காதா என்ன?//
இதைத் தானே புலிகளும் சொன்னது?
திரும்பத் திரும்ப நீங்கள் எல்லாரும் இன்னுமொரு புலிகள் என்பதையும் புலிகளின் பாசிசத்திற்கு உட்பட்டுப் போனவர்களாகவுமே காணப்படுகிறீர்கள்.
சும்மா இருந்து நீங்கள் புலிகளை விமர்சிக்கக் கூடாது!
சும்மா இருந்து நீங்கள் அரசாங்கத்தை பவிமர்சீக்கக் குடாது!!
சும்மா இருந்து நீங்கள் தேவாவை விமர்சிக்கக் கூடாது!!!
சும்மா இருந்து நீங்கள் அமரிக்காவைக் குற்றம் சொல்லக்கூடாது!!!!
தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இவர்கள் செய்யும் கருத்துக் கொலைகள் தான் இவை.
இதைத் தான் லசங்கவைக் கொன்றபோது ராஜபக்சக்கள் சொன்னது..
இதைத்தான் சபாலிங்கம் உட்பட நூற்றுக்கணக்கானோரைக் கொன்ற போது புலிகள் சொன்னது…
இதைத்தான் இன்று தேவாக்களும் சொல்கிறார்கள்….
அடுத்தகட்டம் கொலைதான்!!!!
புலியீலிருந்து காப்பாற்றிக் கொண்டவர்கள் இனி இவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும்!!!!
தோழர் சபா நாவலன் அவர்களே!
சும்மா இருந்து கொண்டு இணையத்தளம் நடத்துவது சுலபம்.
எதையும் செய்து பாரப்பது கடினம். தேவாவிடம் நீங’கள் கேட்ட கேள்விகளை
நானும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் உங்கள’ கேள்விகளிலேயே தெளிவில்லை.
அதற்கு அவர் கொடுத்த பதில் தெளிவாகவே இருந்துது. தயவு செய்து ஒன்றை மட்டும் செய்யுங்கள் தேவாவை யுத்த குற்றவாளியாக நிறத்து வதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருநடதால்
அமை மனித உரிமை அமைப்பகள் மத்தியில் அம்hலப்படுத்தி உங்கள் முயற்சியை தொடரலாம். அதை விடுத்து ஒரு அமைப்பின் மீது சேறடிப்பு நடத்தத முயற்சிப்பது போல் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டிருப்பதில் நியாயமில்லை. நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களை தாயகத்தில் வலப்படும் அக்கள் மக்களோடு நீங்கள் ஒரு முறை இங்கிருந்தே தொலை பேசி மூலமாவது கதைத்து பாருங்கள். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று மக்களின் கருத்துக்களை சரி வர அறிந்து விட்டு தேவாவையே அல்லது ஈ.பி.டி.பி யையோ நீங்கள் குறித்த விமர்சனங்களுக்குள் தாராளமாக உட்படுத்தலாம். அது சரி உங்களிடம் ஒரு கேள்வி…. புலிகள் யுத்தத்தை தொடங்கிய போது புலிகளை நோக்கி யுத்தம் வேண்டாம் என்று நீங்கள் எப்போதாவவது கூறியிருக்கிறீர்களா?….அரை குறை தீர்வுகள் வேண்டாம் என்றுதானே கூறி வருகின்றீர்கள். ஆகவே முழமையான தீர்விற்கான யுத்தம் நடப்பதை நீங்கள் ஆதரரிக்கின்றீர்கள் என்று அர்த்தம். ஒரு யத்த சூழலில் எடு நடக்குமோ அது நடந்து கொண்டிருக்கின்றது. யுத்தத்தை ஆதரிக்கும் நீங்கள் யுத்தத்தின் விளைவுகளை எதிர்க்க திராணியற்றவர் என்பதை தெரிந்து கொண்டு கருத்துக்களை முன்வைப்பது நல்லது.
நாவல்க்குழி வீடுமைப்புத்திட்டத்தில் யார் குடியிருஐக்கின்றார்களோ அவர்களுடன் ஒரு முறை பேசிப்பார்க்கலாமே……
நன்றி
//யார் குடியிருஐக்கின்றார்களோ அவர்களுடன் ஒரு முறை பேசிப்பார்க்கலாமே…… //
அதைதான் நானும் கேக்கிறேன் யார் அவர்கள்.மகிந்த புரத்தை வழிமொழிந்த
அந்த திரு முகங்கள் யார்????
டக்ளசு உட்பட ஐனநாயக நீரோட்டக் கும்பல் எல்லாம் யுத்தக் குற்றவாளிகளல்ல> பேரினவாத அரசுடன் சேர்ந்து தமிழ்மக்களை படுகொலை செய்யும் கொலைக் குற்றவாளிகளே! புலிகளுக்கும் மக்களுக்கும் வித்தியாசம் தெரியாத “விசர் வீணர் கூட்டம்” இது நிற்க டக்களசு யாழ் சென்றவுடன் யாழ்ப்பாணம் ஏதோ காவிரிப்பூம்பட்டினம் ஆகிவிட்டது போல ஈ.பி.டி.பி; “தோழர்கள்” கதைகள் சொல்கின்றார்கள்! யாழ்மக்களிடம் கதைச்சுப்பார்க்கவும சொல்கின்றார்கள்! யாழ்மக்கள் சுயமாக கதைப்பதை எப்போதோ நிறுத்திவிட்டார்கள்!> முன்பு புலிகளால்>இப்போது உங்களால்!
// குடியேறிய மக்கள் யார்என்பதை அலுப்பை பாராமல் சொல்லுங்கோ // சாமி
குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கே வீடு வழங்கப் பட்டது. இதற்கு பிறகு என்ன சொல்லப் போகிறீர்கள் ?.
அது டக்கிளஸ்சின் சொந்தகாரர். மகிந்தாவுக்கு வேண்டியவர் என்பதையா ?
அப்படியிருந்தாலும் பரவாய்யில்லையே ! உங்கள் கருத்துப்படி
அவர்கள் ஏழைகளின் தலைவர்ராகவே இருந்துவிட்டு போகட்டுமே!
பிறகு என்ன ? குத்துது….குடையுது.
//மகிந்தபுரத்தை வழிமொழிந்த அந்த திருமுகங்கள் யார் ? // சாமி
ஏன் போட்டுதள்ளப்போகிறீர்களா ?.
Please read this interview with Chomsky relative to the sri lankan affairs. You will, may have to response to his opinions.
http://www.zmag.org/znet/viewArticle/20582
response2chomsky@gmail.com
//அது டக்கிளஸ்சின் சொந்தகாரர். மகிந்தாவுக்கு வேண்டியவர் என்பதையா //
திருத்தி கொள்ளவும் விசுவாசிகள். இப்போ உங்களுக்கு குடையுமே??
:://ஏன் போட்டுதள்ளப்போகிறீர்களா ?.//
இல்லைங்கோ அது புலி இல்லாத இடங்களில் தோழரின் வேலை.
நம்பாவிட்டால் ஆனந்த சங்கரி ஜயாவிடம் கேட்டு பாருங்கோவன்.
இப்போது உமக்கு குத்துடன் குடையுமே.
நண்பர்கள் அனைவருக்கும்
இத்துடன் இணைக்கப்பட்ட கோப்புகளை படிக்கவும். ஈழம் குறித்து நமக்குள் பல்வேறு அரசியல் மாறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கலாம். அவைகள் அப்படியே இருக்கட்டும். ஆனால் ஈழம் பற்றி உருவாக்கப்படும் கருத்துப் பரவலில். அதன் உண்மை நிலையை கொண்டு செல்வதில் நமக்கு அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்புணர்ச்சியின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை உங்களுக்கு அனுப்பப்படுகிறது.
உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞரான நோம்சாம்ஸ்கி (Noam Chomsky) (விக்கியில் இவரைப்பற்றி ) இலங்கையிலிருந்து வெளிவரும் லங்கா கார்டியன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி பற்றிய ஒரு விமர்சனமும், அந்த பேட்டியில் சாம்ஸ்கியை சாதுர்யமாக தனது இனவாதத்திற்கு பயன்படுத்த முனையும் பேட்டியாளரின் நோக்கத்தையும் சாம்ஸ்கிக்கு அறிவுறுத்தவும், அம்பலப்படுத்தவும் ஈழத்தில் நடக்கும் உண்மை நிலைகளை அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவும் எழுதப்பட்ட அறிக்கையே இது.
சாம்ஸ்கி தொடர்ந்து உலகின் பல்வேறு மக்கள் போராட்டங்களுக்கு அதரவு அளிப்பதுடன் அமேரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை தொடர்ந்து விமரிச்சித்து வருபவர். ஏற்கனவே சென்னையில் வளைகுடா யுத்தம் பற்றிய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர். உலகளவில் நன்கு அறியப்பட்ட ஒரு செயல்பாடுமிக்க அறிவுஜீவி. மொழியியல் குறித்து உலக அளவில் வளமிக்க புதிய கண்டுபிடிப்புகளையும், பங்களிப்புகளையும் செய்தவர். கிழக்குத் திமூர் துவங்கி காஸாவரை தொடர்ந்து போராட்டங்களை கவனித்து தனது கருத்தக்களை உலக அறிவஜீவிகள், அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்பவர். அவரது கவனத்திற்கு ஈழப்பிரச்சனையை கொண்டு செல்வதற்கான ஒரு சிறு முயற்சியாக உருவானதே இந்த அறிக்கை.
இந்த அறிக்கையை நம்மால் முடிந்த இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பிளாக்கில் எழுதும் நண்பர்கள் என அனைவரிடமும் கையெழுத்து பெற்று இதனை சாம்ஸ்கி கவனத்திற்கு ஒரு கூட்டுக் குரலாfக் கொண்டு செல்வதே நமது நோக்கம். இந்த நோக்கத்திற்காகவே இந்த அறிக்கை உங்களுக்கு அனுப்பப்படுகிறது. தனியாக அவருக்கு எழுதுவதையும்விட கூட்டுக்Fரலாக இவை தெரிவிக்கப்படும்போது அது ஒரு நுட்பமான போராட்டவடிவை எடுக்கிறது என்பதால்தான் இந்த முயற்சி.
நீங்கள் செய்யவேண்டியது
1. இந்த பீடீஎப்பை ‘I AGREED” என்று உங்கள் சம்மதத்தை அறிவித்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். response2chomsky@gmail.com
2. வாய்ப்புள்ள நண்பர்கள் தங்களுக்கு அறிமுகமான நண்பர்கள் மற்றும் ஈழப்பிரச்சனையில் அக்கறை உள்ளவர்களிடம் இந்த நிலைபாட்டை விளக்கி ஒரே அச்சுப்பிரதியில் கையெழுத்து பெற்று அதனை ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கவும். கையெழுத்துடன், இடுபவரின் சிறு குறிப்பும் எழுதுங்கள். அவரது துறை பணியாற்றும் களம். இது அதிகம் கவனம் உள்ளதாக இதனை மாற்றும்.
இவற்றை தொகுத்து நாங்கள் சாஸ்கியின் முகவரிக்கு அனுப்பிவிட்டு உங்களுக்கும் அதை தெரியப்படுத்துகிறோம்.
அன்புடன்
ஜமாலன்.
–
http://jamalantamil.blogspot.com/
http://tamilbodypolitics.blogspot.com/
http://kalakuri.blogspot.com/
அன்புடன் வானவனுக்கு,
முதலில் நீங்கள் வெளிப்படையாக உங்கள் கருத்துக்களை முன்வைத்ததற்கு எனது நன்றிகள்.
//சும்மா இருந்து கொண்டு இணையத்தளம் நடத்துவது சுலபம்.
எதையும் செய்து பாரப்பது கடினம்.//- வானவன்
உங்களின் இந்தக் கருத்திற்கு சிவகுமாரன் முன்னமே பதில் கூறியிக்கிறார்.
//இதைத் தானே புலிகளும் சொன்னது?//- சிவகுமரன்.
சில நாட்களுக்கு முன்னர் புலிகளின் அதிகாராம் புலம்பெயர் நாடுகள் வரை வேர்விட்டிருந்தபோது, இதையே தான் அவர்கள் உங்களை நோக்கியும் என்னை நோக்கியும் சொன்னார்கள். இப்போது நீங்களும் சொல்கிறீர்கள். புலிகள் என்ற பெயரோ பிரபாகரன் என்ற என்பவரோ இங்கு முக்கியமானவையாக நான் கருதவில்லை. அவர்கள் உருவாக்கிய சிந்தனை முறை தான் இங்கு பிரதானமானது. (இங்கு புலிகள் என்ற பெயர் அழிவதல்ல முக்கியமானது. புலிகளால் செய்யப்பட்டவை மறுபடி செய்யப்படக் கூடாது என்பதே முக்கியம்.)தமது கருத்தும் அதை அடைவதற்கான வழிமுறையும் சரியென்று அவர்கள் எண்ணும் போது அதற்கு எதிரானவர்களை அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு நிர்மூலமாக்குவது என்பது தான் இச்சிந்தனை முறையின் ஆரம்பமே.
84ம் ஆண்டு நான் ரெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற சில நாட்களின் பின்னதாக, செம்மணிச் சுடலைக்குள் TELo என்னைக் கொலைசெய்வதாக மிரட்டிய போது கேட்ட அதே வசனங்களை மறுபடி மறுபடி பல தடவைகள் கேட்டிருக்கிறேன். இங்கெல்லாம் ஒரே வகையான சிந்தனை முறைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இவற்றிலிருந்து நாம் விடுபட்டாகவேண்டும் அதுதான் ஜனநாயகத்தின் முதற்படியே!
சிவகுமாரன் கூறியபடியே லசந்தவின் கொலை தொடர்பாக கோதபாய சொன்னதும் இதைத்தான். லசந்த என்ற பத்திரிகையாளன், வியாபாரத்திற்காகப் பரபப்புப் பத்திரிகை நடாத்தியிருக்கவில்லை. அனைத்து அரசாங்கங்களையும் விமர்சித்திருக்கிறார். புலிகளையும் கூடத்தான். தான் கொல்லப்படலாம் என்று தெரிந்தபோதும் கூட! இந்தக் கொலை தொடர்பாக தேவாவின் கருத்து கோதபாயவின் கருத்தை ஒத்திருந்ததை நீங்கள் மறுக்க முடியுமா?
சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இவ்வாறான சமூகவிரோதக் கருத்துக்கள் பேரினவாதத்தை அடிப்படையாகக்கொண்டு புற்று நோய் போல வளர்ச்சியடைந்துள்ளது. ஜனநாயககொலைகள் புலிகளைக் காட்டியே நியாயப்படுத்தப்படுகின்றன. தம்ழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களின் எதிர்கால்த்திற்குமே எதிராக இந்தப் பாசிசத்தை தேவா நியாயப்படுத்தும் போது சுட்டிக்காட்டினால், சும்மாயிருந்து பேசுவதாகப் புலிகள் பேசியது போல பேசுவது முறையாகிம் என எண்ணுகிறீர்களா?
தேவாவின் தனிநபர் வாழ்நிலை தொடர்பான எந்த விமர்சனத்தையும் நான் முன்வைக்கவில்லை. அவரின் அரசியல் தொடர்பான விமர்சனமே இங்கு முன்வைக்கப்பட்டது. தேவாவின் அரசியல் மட்டுமல்ல நடந்துகொண்டிருக்கும் திட்டமிட்ட இனப்படுகொலையை ஆதரிப்பவர்களையும், கொல்லும் அரச பயங்கரவாதத்தின் பக்கத்திலோ புலிகளின் பக்கத்திலோ நின்று நியாயப்படுத்தும் அனைவரையும் நான் யுத்தக்குற்றவாளிகளாகவே கருதுகிறேன். இது எனது கருத்தும் அதை முன்வைப்பதற்கான உரிமையுமாகும். நீங்கள் இதற்காக என்னைச் சமூகவிரோதியாகக் கருதுவதும் கூட உங்கள் உரிமையே.
தவிர, இலங்கையிலிருக்கும் பலருடன் நான் தொடர்புகொண்டிருக்கிறேன். இதுவரையில் தேவாவுடன் தொடர்புகொள்ள முயற்சிக்கவிட்டாலும், தோழர்.கி.பி யுடன் பல தடவைகள் பேசியிருக்கிறேன். நாவற்குழி குடியேற்றத்திட்டதில் முக்கியமான ஒருவர் தோழர் கி.பி. உலகம் முழுவதும் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். ஈராக், ஆப்கனிஸ்தான், கொங்கோ என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆனல் இங்கெல்லம் ஒரு பொதுமைப்பாடு காணப்படுகிறது. இரண்டு பாசிசங்களிடையேயன யுத்தம்! இதற்கு நடுவில் யார் பேசினாலும் அவர்கள் இரண்டில் எதாவதொன்றால் அழிக்கப்படுகிறார்கள்.
//புலிகள் யுத்தத்தை தொடங்கிய போது புலிகளை நோக்கி யுத்தம் வேண்டாம் என்று நீங்கள் எப்போதாவவது கூறியிருக்கிறீர்களா?….அரை குறை தீர்வுகள் வேண்டாம் என்றுதானே கூறி வருகின்றீர்கள். ஆகவே முழமையான தீர்விற்கான யுத்தம் நடப்பதை நீங்கள் ஆதரரிக்கின்றீர்கள் என்று அர்த்தம்//
பாசிசத்திற்கு எதிராக 83 இலிருந்தே போராடியிருக்கிறேன். ரெலோவினால் தேடப்பட்ட காலத்திலேயே புலிகள் ரெலோவை அழித்தபோது அதற்கெதிராகப் போராடப்பின்னிற்கவில்லை.
தேசிய இன ஒடுக்குமுறைகெதிரான போராட்டம் புலிகளால் சிதைக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது அதற்கெதிரான போராட்டமும் சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 85ம் ஆண்டில் கூறியபோதும் பல்கலைக்கழகக் கலாச்சாரக் குழுவின் கூட்டத்தில் கூறிய போதும் கூட நீங்கள் சொன்னதைத்தான் சொன்னார்கள். இதைத் தான் இப்போதும் சொல்ல முனைகிறேன்.
இன்றைக்கு, லசந்த போன்ற ஆயிரக்கணக்கன சமூக உணர்வுள்ளவர்கள் மாற்ற முனைந்த சிந்தனை முறை மாற்றப்பட வேண்டும். அவர்களின் பணி தொடர வேண்டும். நீங்களும் சமூகத்தின் மீதுள்ள பற்றின்பாலே உங்களைச் சுற்றி நடப்பவை தொடர்பாகக் கோபம் கொள்கிறீர்கள். கோஷ்டிவாதம், குழுவாதம் என்பவற்றிற்கப்பல, மக்களின் நலன் குறித்து ஆழமாகச் சிந்திக்கும் போது நீங்களும் அனைத்து அதிகார சக்திகளுக்கு எதிராகவும் போராட முன்வருவீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லலை. -நாவலன்
சபாநாவலன் உண்மையில் உஙகள் துணிவு பாராட்டப்பட வேண்டியது
தோழர் சபா நாவலனுக்கு!….
விமர்சிப்பவன் எப்போதும் நண்பன்!
உங்கள் விமர்சனங்களை தாராளமா முன்வைக்கலாம்.
அதற்கு கருத்துக்களால் பதில் வரும்>
ஆனால் உங்கள் மீது மிரட்டல் என செய்தி வந்திருக்கிறது.
அது யார் செய்தார்களோ தெரியாது!
அர்த்தமற்ற வகையில் அவதூறு பொழியாமல்
நடை முறை யதார்த்தங்களில் இருந்து பார்க்கவும்.
ஆனால் ஈ.பி.டி.பி மீது பழி சுமத்தியிருப்தாக தேசம் நெற்
செய்தி வெளியிட்டிருக்கிறது. இது குறித்து நீங்கள்
கவனம் செலுத்த வேண்டும்.
அவதூறுகளுக்கு பெயர் கருத்து சுதந்திரமல்ல…
வானவன்
வானவன்,
//ஈ.பி.டி.பி மீது பழி சுமத்தியிருப்தாக தேசம் நெற்
செய்தி வெளியிட்டிருக்கிறது.//-வானவன்
ஈ.பி.டி.பி மீது பழி சுமத்தியிருப்பதாக தேசம்நெற் ஒரு போதும் பழி சுமத்தவில்லை. ஆனால் மேற்குறித்த கட்டுரை எழுதியத்தற்கான தொலைபேசி மிரட்டல் என்பது உண்மையானதே.
புலிகளுக்கு எதிர் என்பது அரச ஆதரவு என்ற நிலை ஏற்படுத்தப்படுவதனூடாக அரச பாசிசதிற்கு எதிரான ஒரே சக்தி புலிகள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசின் அடக்கு முறைகளுக்கெதிரான போராட்டம் என்பதன் மொத்த வாரிசாக புலிகளை முந்னிறுத்தியவர்கள் இந்த அரச ஆதரவு சக்திகளே. புலம் பெயர் நாடுகளில் புலிகள் மட்டுமே அரசை எதிர்க்கும் ஏகப்பிரதி னிதிகளாக இவர்கள் வளர்த்தெடுத்துள்ளார்கள். இதைப் புலிகளும் ஒரு வகையில் விரும்புகிறார்கள். புலிகளால் மிரட்டப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் அரச எதிப்பாளாரகளே தவிர அரச ஆதரவாளர்கள் அல்ல! இதுதான் புலிகளுக்கு ஏகப் பிரதிநிதி அந்தஸ்தை வழங்குகிறது. இது தான் நடைமுறை. இந்த வகையில் புலிகளும் இம்மிரட்டலை திட்டமிட்டுச் செய்திருக்கலாம். மிரட்டலுக்குப் பின்னதாக என்மீதான, அரச ஆதரவாளார்களின் அவதூறுகளைப் பார்க்கும் போது, இது அவர்களாலும் கூட மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் ஈ.பி.டி.பி என்ற அமைப்பின் மீது தேசம்நெற்றோ நானோ குற்றம் சுமத்தவில்லை.இணையச் செய்திகளை ஆதாரமாக முன்வைத்து ஐரோப்பாவிலுள்ள சில தனிநபர்கள் மீது ஈலிங் பொலிஸ் பிரிவில் புகார் வழங்கப்பட்டுள்ள போதும், ஈ.பி.டிபி தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
//அவதூறுகளுக்கு பெயர் கருத்து சுதந்திரமல்ல…// இது வேடிக்கையான கோசம். அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட பெரும்பாலான விமர்சனங்கள் அரச ஆதரவாளர்களால் இதுவரை அரசியல் ரீதியாகக் கையாளப்படவில்லை. அவதூறுகளால்தான் கையாளப்பட்டிருக்கிறது. இது அவர்களின் பலவீனம். அவதூறுகளுக்கு பெயர் கருத்து சுதந்திரமல்ல…..
தேழமையுடன் நாவலனுக்கு….
அவதூறுகளுக்கு பெயர் கருத்து சுதந்திரமல்ல….
இந்த கோசத்தை நான் முன்வைக்கவில்லை.
முன்வைத்தவர்களில் சிலரே இதை கையாளும் போது
எனக்குள் அந்த வரிகள் ஞாபகத்திற்கு வந்திருந்தன.
உங்களது அரசியல் நண்பர் Nஐயபாலன் அவர்களின் பதிவை பாருங்கள்.
சபா நாவலனின் இவ்விமர்சனத்திற்காக அவருக்கு இன்று தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மிரட்டல் உதயகுமாருக்கு மிரட்டல் வந்த பக்கத்தில் இருந்து வரவில்லை. சபா நாவலனுக்கு வந்த மிரட்டல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது வைத்த விமர்சனத்திற்காக வந்த மிரட்டல் என்கிறார் சபா நாவலன்.
இது எதை குறிக்கிறது என்பதை நீங்களாகவே தீர்மானித்து
கொள்ளுங்கள். இதுதான் அவதூறு! இதற்கு பெயர் கருத்து சுதந்திரமல்ல.
இவ்வாறு புரியப்படாத ஒரு செயலை புரிந்தாக கூறும் போது
ஏனையவர்களுக்கும் கொலை மிரட்டல் வந்தருப்தாக கூறப்படும்
செய்திகள் குறித்து பல பார்வைகளில் சிந்திக்க வேண்டியுள்ளது.
நீங்கள் விரும்பினால் புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு
புலிகளையும்> அரசையும் ஒரே நேரத்தில் எதிராளிகளாக பாரக்கலாம்.
ஆனால் தாயகத்தில் அவ்வாறான ஒரு சூழல் இல்லை.
அது தவிர அரச ஆதரவு என்பது தமிழ் மக்களுக்கு விரோதமான
நிலைப்பாட்டில் இருந்து கொண்டும் புரியப்பட்ட வரலாறகள் உண்டு.
அதை ஏற்கத்தான் வேண்டும். ஆனாலும் அவரவர் செயற்பாடுகளை
வைத்து தமிழ் மக்களுக்கு எது விரோதம் என்பதை தீர்மானிக்கவும் முடியும்.
அரசை எதிர்த்து கொண்டு அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருக்கலாம்
ஆனால் எமது மக்களின் வாழ்நிலை மிக மோசமாகி விடும். அரசோடு
பொது உடன் பாட்டிற்கு போவது அவலப்படுகின்ற மக்களின் வாழ்நிலையை
உயர்த்தி விடுவதற்கும்> அரசோடு பேசி அரசியல் தீர்வை ஏற்படுத்தவும்தான்.
அரசை எதிர்த்துவிட்டு இவைகளை சாதிப்பதற்கு அரசை நெருங்கிச்செல்ல முடியாது.
மக்கள் கொல்லப்படுவதற்கு நாங்களும் வருத்தப்படுகின்றோம். முடிவற்ற யுத்தம்
அழிவுககளைத்தான் கொடுக்கும். ஆக்கத்தை கொடுக்காது என்றும்> மக்களை நடுத்தெருவிற்கு
கொண்டு வந்து நிறுத்தும் என்றும் ஈ.பி.டி.பி போன்ற கட்சிகள் கடந்த இருபது வருடயங்களாக
கூறி வருகின்றது. ஆனால் புலிகள் இதை பொருட்படுத்தியிருக்வில்லை.
நல்ல சந்திர்பங்கள் கிடைத்தன. புலிகளே தட்டிக்கழித்து விட்டார்கள்.
இதனால் மக்கள் அழிவுகளை சந்தித்து வருகின்றார்கள். ஒரு யுத்த சூழலில் இது குறித்து
பேச வேண்டிய முறையில் பேசப்பட்டு வருகின்றது. அரசுக்கோ அல்லது புலிகளுக்கோ
தனிப்பட்ட நலன்களும் உண்டு. அதில் நின்று கொண்டுதான் எதையும் பார்ப்பார்கள்.
யுத்தத்தில் புலிகள் வெற்றிகளை குவித்து முன்னேறிச்செலு;லும் போது அவர்களிடம்
யுத்த நிறுத்தம் குறித்து பேச முடியுமா?… அது போல இன்று அரசு முன்னெறுகின்றது
யார் கூறியும் அவர்கள் கேட்கப்போவதில்லை.
மகிந்த ராஐபக்ச நல்லவரா என்ற கேள்வியை எழுப்பம் போது
தமிழர் தரப்பினர் நம்பிக்கையான கசூழலை நோக்கி அரசையே
அல்லது ஐனாதிபதியையோ அழைத்து வருவதற்கு என்ன செய்திருக்கிறார்கள்
என்பதுதான் பிரதானம்.
உங்களுடைய பார்வையில் இருந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது.
உங்களது விமர்சனப்பார்வை பின்நவீனத்துவ பார்வையோடு அனைத்தையும்
உடைத்து பார்க்க விழைகிறது. அது தவறல்ல. ஆனால் வேறெதையே நினைத்து
கொண்டு விமர்சனத்தை முன்வைக்கிறீர்கள். பார்வையோடு
முதலில் சமகால சூழலுக்குள் இருந்து வெளியே வருவது எப்படி என்று பாரக்க வேண்டும்.
எதை நோக்கி வரவேண்டும்?… எது சாத்தியம்?… இவைகளே பிரதானம். உலகம் பிழை>
அரசு பிழை> இந்தியா பிழை. இவ்வாறு சொல்லிக்கொண்டு முயற்சிகைளை கைவிட்டு
விட முடியாது.
அவ்வாறு எல்லாம் பிழை என்றால் எது சரி?…. எங்கிருந்து தொடங்குவது?… என்ன செய்வது?…
தீர்வை முன்வையுங்கள். இன்று தாயகத்தில் இருப்பது இரண்டே வழிமுறைகள்தான்.
ஒன்று புலிசார்பு> இன்னொன்று அரசோடு பொது உடன்பாடு. இதை தவிர வேறொன்றும் இல்லை.
புலி சார்பு என்று இருக்கும் கூட்டைமைப்பு கூட அரசோடு பின்கதவால் உறவு>
இதில் இருந்துதான் நகர முடியும். புலி சார்ந்திருந்தால்
நல்ல அறிக்கைகள் விடலாம். பாராட்டுகளைப்பெறலாம்.
ஆனால் எதையும் சாதித்து விட முடியாது.
மீண்டும் சந்திப்போம்……
வானவன்
பின்னினைப்பு
ஈ பி.டி.பி குறித்து விமர்சனம் எழுதும் போது
விரல்கள் வலித்தால் சொல்லி அனுப்பவும்.
நீங்கள் நினைக்கும் ஈ.பி.டி.பி குறித்த விமர்சனங’களை
நானே எழுதி அனுப்புகின்றேன். இந்த விமர்சனங்கள்
சிறு தூறல் ம்ட்டும்தான்! பெருமழை> அடை மழை> சூறாவளி
இவைகளையும் சந்தித்த்துத்தான் வந்திருக்கின்றோம்.
வானவன்.
வானவன்,
விமர்சனங்கள் ஒரு முதல்தடவையாக ஆரோக்கியமான நிலையை நோக்கி வளர்ந்துள்ளமை தொடர்பாக மகிழ்ச்சி!
மேற்குறித்த கட்டுரை எழுதப்பட்டது தொடர்பாகவே மிரட்டல் அழைப்பு வந்தது என்பது உண்மை. இதைத்தான் ஜெயபாலன் குறிப்பிடுகிறார். ஈ.பி.டி.பி சார்ந்த உறுப்பினர்களிடமிருந்து இந்த மிரட்டல் வெளியாகியிருகும் என்பதற்கான சாத்தியம் அதிகமில்லை என்பதில் தேசம்நெற்றும் உடன்படும் என்றுதான் நானும்நம்புகிறேன். ஆனால் இந்தக் கட்டுரை எழுதப்பட்ட பின்னரே இவ்வாறான மிரட்டல் எழுந்தது என்பதைக் குறிப்பிடும் பதிவே தேசம்நெற்றின் பதிவு.
சிறீலங்கா அரச பாசிச ஒடுக்குமுறைகெதிரான போராட்டம் அவசியமான ஒன்றென்பதும் அதைப் புலிககள் தமது கையிலெடுத்துச் சீரழித்துச் சிதைத்து விட்டனர் என்பது தான் எனது நிலைப்பாடு. இதை 80 களின் இறுதியில், நான் மட்டுமல்ல பலர் சொன்ன போது, இரண்டு விதமான கருத்துக்கள் எழுந்தன.
1. புலிகள் போராடும் சக்தி அதை எதிர்க்கக் கூடாது.அரசை அழித்துவிட்டுப் புலிகளுக்கு எதிராகப் போராடலாம் என்பது.
2. புலிகளை அழித்துவிட்டு அரசிற்கெதிராகப் போராடலாம் என்பது.
இதே போக்குத் தான் ஈராக்கில் சதாம் குசைன் அதிகாரம் அழிக்கப்பட்ட போதும் எழுந்தது. இறுதியில் ஈராக் இன்னும் சூறையாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆப்கனிஸ்தானைப் பாருங்கள் இதேநிலைதான்.
ஒரு பாசிசத்திற்காக் இன்னொரு பாசிசத்தை ஆதரிக்க முடியாது. ஆக, பாசிசம் என்பட்குதான் இங்கு பிரச்சனை.
இன்றைய நிலையில் புலிகள் தவறிழைத்திருக்கிறார்கள் என்றும் ஆனால் அரசின் அடக்குமுறைகளுக்கெதிராகப் போராட வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் வலுவடைந்து வருகிறது.
இந்தச் சிந்தனை மாற்றத்தைப் புலம்பெயர் நாடுகளிலிருக்கும் குறைந்த பட்ச ஜனநாயக வெளியைப் பாவித்து வளர்த்தெடுக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் தமக்காக, அரச ஒடுக்குமுறைக்கெதிராகப் போராட வேறு சக்திகள் இல்லையெனக் கருதும் நிலை ஏற்படுமாயின், புலிகளின் மீட்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.ஆக, இந்த சிந்தனை மாற்றத்தைப் பயன்படுத்திக்கொண்டு புதிய சக்திகளை வளர்த்தெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் அரச ஒடுக்குமுறைக்செதிரான போராட்டம் சிங்கள-தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுவதற்கான ஆரம்பம் இதுவாகத்தான் அமையும் என்பதே எனது கருத்து.
அவதூறுகள், தாக்குதல் ஆகியவற்றின் மத்தியில் இதற்கான போராட்டத்தை நிங்களும் இணைந்து முன்னெடுபீர்கள் என்பது எனது அவா!
“முதலில் சமகால சூழலுக்குள் இருந்து வெளியே வருவது எப்படி என்று பாரக்க வேண்டும்.
எதை நோக்கி வரவேண்டும்?… எது சாத்தியம்?… இவைகளே பிரதானம். உலகம் பிழை>
அரசு பிழை> இந்தியா பிழை. இவ்வாறு சொல்லிக்கொண்டு முயற்சிகைளை கைவிட்டு
விட முடியாது.
அவ்வாறு எல்லாம் பிழை என்றால் எது சரி?…. எங்கிருந்து தொடங்குவது?… என்ன செய்வது?…”
வானவனின் நியாயமான கேள்வி.
புலிகள் சுயவிமா;சனம் செய்தால் எல்லாம் சரி – ரயாகரன்
சமாதானமே இன்றைய தேவை – சோபாசக்தி
புலிகளை அழித்து முடித்தபினதான் எல்லாம் – அசுரா
அரசு எதிர்ப்பு என்ற வடிவத்துள் புலிகள் நிற்கிறார்கள் – ரவி
தேவாவில் தனிப்பட்ட விமா;சனம் எனக்கில்லை – சபா நாவலன்..
ம்..ம்…மேல… மேல….-வடிவேலு
புலிகள் சுயவிமர்சனம் செய்வார்களா ?
விமர்சனம் சுயவிமர்சனத்தையிட்டு போராடுவதே அவர்கள் போராட்டம்
வன்முறையே அவர்களது மூலதனம். இந்த வன்முறை சிங்களஅரசுக்கெதிராக
மட்டுமே பாவிக்கப்பட்டதல்ல தமிழ்மக்களுகெதிராக மட்டும் பாவிக்கப்பட்டது தல்ல
வேறு இனமத ஏழைகள் பாளைகள் மீதும் தொடுக்கப்பட்ட போர்.
வணக்கம்.
நாங்கள் எப்போவோ சுய விமர்சனம் செய்துவிட்டோம்.
தங்கள் இணையத்தில் பின்னூட்டம் செய்பவர்கள் அதை அறிந்திருக்கவில்லை.
நன்றி
எது…? ராஜீவ்காந்தியின் கொலை அது ஒரு துன்பியல் நிகழ்வு எண்டுச் சொன்னனீங்களே அதைச் சொல்லுறியளோ…? ஆமாமா அந்த (கோமாளித்தனமான) சுயவிமர்சனத்தை உலகமே பார்த்து மூக்கில கை வைத்து முக்கி முனகியது மறக்கக்கூடிய வரலாறா…?
சுரேஸ் டபுள் எம்.ஏ
டபுள் எம் ஏ வா?
பொருத்தமாத்தான் இருக்கு