வடக்கு மாகாண ஆளுநரிடம் நேற்றுக் காலை தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அங்கிருந்து நேரடியாக சுழிபுரம் வழக்கம்பரையில் அமைந்துள்ள சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்றார்.
அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தார்.
அவருடன் பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழர்களின் உரிமைக்காக தனது வாக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்து அதன் வெற்றிக்கு உதவி புரிந்த அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
-இது விக்னேஸ்வரனை எதிர்ப்பவர்கள் ‘தமிழ்த் தேசியத்தின் துரோகிகள்’ என்று கூறும் இணையங்களில் வந்த செய்தி.
தவிர, விக்னேஸ்வரனை விமர்சிப்பவர்கள் புலிகளின் பினாமிகள் என்று கூறும் அரச ஆதரவு இணையங்களிலும் ஒரு செய்தி பரவலாகப் பேசப்படாமல் பதியப்பட்டிருந்தது:
இலங்கை அரசின் தயவு தாட்சண்யமற்ற ஊதுகுழலாகச் செயற்படும் ஏசியன் டிரீபூயும் என்ற இணையத்தளத்தின் ஆசிரியரும் உரிமையாளருமான கே.ரி.ராஜசிங்கம் என்பவருடன் விக்னேஸ்வரன் கைகுலுக்கி எடுத்துக்கொண்ட படம் வெளியாகியது. நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விக்னேஸ்வரன் மறு கணமே தன்னுடன் கைகுலுக்கியதாக ராஜசிங்கமே தனது ஆங்கில இணையத் தளத்தில் எழுதியுள்ளார்.
விக்னேஸ்வரன் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ளும் போதும் கே.ரி.ராஜசிங்கம் பின்னால் நிற்கும் படமும் வெளியாகியிருந்தது.
இலங்கைப் பாசிச அரச கட்டமைப்பின் கூறான வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒடுக்குமுறைக்கு எதிரன உணர்வுகளை வெளிப்படுத்தவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தனர்.
இதனைத் தெரிந்திருந்தும் விக்கியை ஊதிப் பெருப்பித்து விகாரப்படுத்தி இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர் பினாமிகள். விக்கியோ நீலன் திருச்செல்வம் போன்ற வடக்கில் தேசியமும் தெற்கில் அரசாங்கமும் என்று கூறும் விசித்திரக் கலவையாகவே தென்படுகிறார்.
Shaking hands is a Western tradition and they do that even with their enemies. I do not see what the issue here. I know all too well who this KTR is.
எப்படி சார் இதக் கவனிச்சீங்க.! நம்ம ஜால்ராக் கோஷ்டியின் கண்களில் இது படவில்லையா?