ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை வந்துள்ளார். இன்று கண்டியில் அதிபர் ராஜபக்ச அவர் சந்தித்துப் பேசுகிறார். இன்று மனிக் பாம் முகாமிற்கு ஐ. நா செயலாளர் விஜயம் செய்கிறார்.
சிறப்பு விமானம் மூலம் நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்னதாக கொழும்பு வந்தடைந்தார் பான் கி மூன். பின்னர் இன்று காலை அவர் கண்டி புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் ராஜபக்சவை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தப் பேச்சைத் தொடர்ந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களைப் பார்வையிட அவர் வவுனியா அழைத்துச் செல்லப்படுகிறார். அங்குள்ள சில முகாம்களைப் பார்வையிடுகிறார்.
மேலும், வடக்கில் போர் நடந்த பகுதிகளையும் அவர் ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிடுவார் எனத் தெரிகிறது.








vanakkam nanbargale thalaivar prabhakaranukku endrum save kidaiyathu enbathai innerathil pathivuseigiren tamizh eelam kanamal entamizh makkalukku thukam enbathu kidayathu.