மத முரண்பாடுகள் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் சூழ்நிலைமைகள் அபாயகரமானவை என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரச அமைப்புக்கள் மௌனம் காத்து வருவதாகவும், இந்த நிலைமை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மத முரண்பாடுகளையும் தேசிய இன முரண்பாடுகளையும் தோற்றுவிப்பது இலங்கைப் பேரினவாத அரசுகளே. முஸ்லிம் மக்கள் மீதான இனப்படுகொலை ஒன்றை மகிந்த ராஜபக்ச அரசு திட்டமிட்டு வருகின்றது. ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடு இணைந்த தமிழ் முஸ்லிம்களின் போராட்டமே இலங்கையில் இஸ்லாமியத் தமிழர்களின் பலம்.