அதிகரித்து வரும் மத அடிப்படைவாதத்தை தடுக்க அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவர் இந் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இலங்கையில் வாழும், சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலே உள்ளிட்ட அனைத்து இன மக்களும் தற்போது மிகவும் பாரதூரமான சமூக பொருளாதார, அரசியல் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். தினம் அதிகரித்து வரும் இந்த பிரச்சினையில் பொதுமக்களே துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
நாடு என்ற வகையில் மக்கள் எதிர்நோக்கியுள்ள உண்மையான பிரச்சினை, சவால்களுக்கு தீர்வை வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் ஐக்கியமாக செயற்பட வேண்டிய சந்தர்ப்பததில், ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் மக்கள் மத்தியல் பேதங்களை ஏற்படுத்த ஏதோ ஒரு தரப்பு முயற்சித்தால், அது சமூகத்திற்கும் மிகவும் பாதிப்பாக அமையும்.
நாட்டில் பல தசாப்தங்களாக அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவும் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் அதிகார தரப்பினர் தமிழ், சிங்கள இனவாத்தை துண்டியது, இனவாத வன்முறைகளையும், வன்செயல்களையும் ஏற்படுத்தியதன் காரணமாக நாடு இறுதியில் இனவாத மற்றும் பிரிவினைவாத போர் ஒன்றை எதிர்நோக்க நேரிட்டது.
பிரிவிவினைவாத போரை பயன்படுத்தி இந்தியாவும் வல்லாதிக்க வெளிநாட்டு சக்திகளும், நாடுகளும் இலங்கையில் உள்விவகாரத்தில் தலையிட்டது ரகசியமான ஒன்றல்ல. ஒரு கட்டத்தில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பும் ஏற்பட காரணமாக அமைந்தது. தற்போதும், அந்த பிரிவினைவாத போரில் ஏற்பட்ட சம்பவங்களை பயன்படுத்தி வல்லாதிக்க சக்திகள் இலங்கைக்கு எதிரான தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்றவை இனவாதம் குறித்துப் பேசும் அதேவேளை பேரினவாதம் குறித்து அக்கறை கொண்டதில்லை. பேரினவாதத்தை இனவாதமாகக் குறுக்க முயலும் இவர்கள் அதன் மறுபக்கத்தில் ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் சுய நிர்ணய உரிமையையும் மறுக்கின்றனர். இதனாலேயே இவர்களும் ஜே.வி.பி யும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இனவதக் கட்சிகளாகவே தம்மை ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு தம்மை இனம் காட்டிக்கொள்கின்றனர்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் புரட்சிகரக் கட்சிகள் உருவாகும் போது மட்டுமே பேரினவாதத்திற்கு எதிரான குறுகிய இனவாத சக்திகளின் தலைமையைப் புரட்சிகரச் சக்திகள் கையகப்படுத்த முடியும். மதவாதம் கூட இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிடும். காலனியத்தின் பின்னான காலம் முழுவதும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் புரட்சிகர சக்திகளை புதிய மாயைகளால் மழுங்கடிக்கும் துரோகத்தைச் சிங்கள இடதுசாரிகள் மேற்கொண்டனர், இன்றைய பாசிச சூழலில் கூட ஜே.வி.பி யும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இதனைப் புரிந்துகொள்வதாக இல்லை
முற்றிலும் தவரறன புரிதல் இதுவும் பிற்கோகுவாதத்திற்கே சேவை செய்கிறது. ஜே.வி.பி யை புரிந்துக் கொள்ள இன்னும் ஆழமானதும் விரிவானதும் ஆய்வுகள் தேவை. இன்று இலங்கையில் இருக்கும் ஒரே ஒரு இடதுசாரி முற்போக்கு அரசியல் கட்சி ஜே.வி.பி.யே.
முற்றிலும் தவறான புரிதல் ஜே.வி.பியை பற்றி விமர்சிப்பதற்கு இன்னும் ஆழமான விரிவான ஆய்வுகள் தேவை . ஜே.வி.பி இனவாதம் என்றால் நீங்கள் யார்?உங்களது நிலைப்பாடு என்ன? .வாவாறான விமர்சங்கள் பிற்போக்குவதத்திற்கே சேவை செய்கிறது என்பதை மட்டும மறந்துவிடாதீர்கள்.