Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மத்தியகிழக்கில் பணியாளர்கள் தொடர்பான தகவல்கள் : தங்கம்

இனியொரு... by இனியொரு...
01/12/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

‘அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்’ பட்டியலில் இருக்கும் பல ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இருந்து பெண்கள் வீட்டுப்பணிப்பெண்களாக உலகின் பல பாகங்களுக்கும் செல்கின்றனர், இவற்றில் மத்திய கிழக்கு நாடுகள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. இலங்கையிலிருந்து சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெரும்பான்மையினர் பெண்களாவர். ஏறத்தாள 90 வீதமானவர்கள் குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் பணிபுரிகின்றனர். ஆசியா கண்டத்திலேயே அதிகளவு பெண் பணியாளர்களை மத்திய கிழக்கில் கொண்ட நாடு இலங்கையாகும்.

மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் முகவர்கள் மூலமே வேலைவாய்ப்புக்களைப் பெறுகின்றனர். சுமார் 24 வீதமானவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் வேலைவாய்ப்புக்களைப் பெறுகின்றனர்.வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத்தரும் முகவர்கள் கட்டணமாக பெருமளவு தொகையைக் கோருகின்றனர். முகவர்களுக்குரிய கட்டணம், பயணச்சீட்டு மற்றும் ஏனைய செலவுகளுக்குரிய பணத்தை இவர்கள் 15 – 30 வீத வட்டிக்குப் பெறுகின்றனர்.

இலங்கைப் பெண்பணியாளர் ஒருவருக்கு தற்போதைய நிலைமையின்படி சுமார் 100 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றது, 71 வீதமானவர்கள் இதை விட குறைந்தளவு அதாவது 95 டொலர்களை மாதச்சம்பளமாகப் பெறுகின்றனர்.

ஒப்பந்தப்பணியாளர்களில் 57.3 வீதமானவர்கள் ஒப்பந்தம் முடிவு காரணமாகவும், நோய் மற்றும் காயங்கள் போன்ற காரணங்களால் 6.8 வீதமானவர்களும், மிக கடுமையான வேலை காரணமாக 5.8 வீதமானவர்களும் நாடு திரும்புகின்றனர்.
வீடுகளில் வேலைக்கமர்த்தப்படுபவர்களின் நாளாந்த வாழ்க்கை மிகவும் மோசமாக அமைந்துள்ளதாக Human world Watch இன் அறிக்கையொன்று சுட்டிக்காட்டுகிறது. இவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கூட ஓய்வு வழங்கப்படுவதில்லை எனவும் வரையறுக்கப்பட்ட வேலை நேரம் இல்லாத நிலையும், போதுமான சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளற்றவர்களாகவும் இவர்கள் இங்கு பணிபுரிகிறார்கள் எனவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது,

லெபானில் தொழில் புரியும் பெண்கள் பற்றிக் குறிப்பிடும் போது நீண்டநேர வேலையும் குறைந்தளவு ஊதியத்திற்கும் பணிப்பெண்கள் வேலை செய்கின்றனர் எனவும் சில இடங்களில் பணிப்பெண்கள் முகவர்களாலும் மற்றும் தாம் பணிபுரியும் வீடுகளில் இருப்பவர்களாலும் உடல் மற்றும் மனரீதியான துன்பங்களுக்குள்ளாக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிடுகிறது. வெளிநாடுகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் ஒன்றும் இரகசியமானதல்ல, உள்ளூர் ஊடகங்கள் மிகவும் துயரமான துஷ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன, சுவையின்றிய உணவை சமைத்தமைக்காக இலங்கைப் பெண் எரிகாயங்களுக்குள்ளாக்கப்பட்டார், பணிப்பெண் “சோம்பேறி”யாக இருந்தமையால் கொல்லப்பட்டார், இலங்கைப் பெண் பணியாளர் “பூனைக்குரிய உணவை” உண்ணும் படி வற்புறுத்தப்பட்டார் என்ற செய்திகளை வெளியிடுகின்றன.

இலங்கைக்கு ஆதாயம் வழங்கும் வழிகளில் வெளிநாடுகளில் உழைப்புசக்தியை விற்பது முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இலங்கையர் தமது உழைப்பை விற்றதன் விளைவாக இலங்கைக்கு 2.33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது. இது தேசியவருமானத்தில் 9 சதவீதம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான முகவர் அமைப்பு ஒன்றை 1985 இல் அமைத்தது (SLBFE). வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் போட்டியும் ஊழலும் நிறைந்த இந்த தொழிற்துறை தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை உத்தரவாதப்படும் கட்டுப்பாட்டுகள் மற்றும் மேற்பார்வை அமைப்புக்களையோ கொண்டிருக்காததுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் முறைப்பாடு செய்வதற்கான வசதி வாய்ப்புக்கள் எதையும் கொண்டிருக்கவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நஷ்டஈடு வழங்கும் வழி முறைகளையோ ஏற்படுத்தவில்லை.

சவுதி அரேபியா, குவைத், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புச்சட்டங்களை போதியளவு இன்னமும் உருவாக்கவில்லை.
பெருமளவு அந்நியசெலாவணியை ஈட்டித் தரும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொழிற்பயிற்சிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்துள்ளது. இவர்களுக்கு குறுகிய காலப்பயிற்சியும், 12 நாட்களுக்கான மொழிப்பயிற்சியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பாடசாலையில் பல வருடங்களாக கற்பிக்கப்படும் ஆங்கிலமொழியையே எம்மால் ஒழுங்காக பேசமுடியாம்ல கஸ்டப்படுகிறோம், 12 நாட்களில் படித்து முடிக்கும் அரபுமொழி நாளொன்றுக்குப் பல மணித்தியாலங்களில் வேலையில் ஈடுபடுவதற்கு போதும் என்று முடிவு செய்திருப்பது இன்னும் பல மரணதண்டனைகளுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கைக்கு பெரும் வாயை ஈட்டித்தரும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலனின் இலங்கை அரசு அக்கறை காட்டுவதுடன் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களது ஊழைப்புக்குத் தகுந்த ஊதியம், ஓய்வு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதற்குமான உத்தரவாத த்தை உறுதி செய்ய வேண்டும்

சவுதி அரேபியா, குவைத், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியங்களில் பணிபுரியும் இலங்கைத் தூதரகங்கள் தமது நாட்டுப் பிரஜைகளின் நலன் தொடர்பாக மேலதிக கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாத இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு அந்நிய நாட்டுச்சட்டின் மதச்சட்டங்களுக்குள் மறைந்து கொள்ளத் தேவையில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சிறீதரன் எம்.பி மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் மகிந்த பாசிசம்

சிறீதரன் எம்.பி மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் மகிந்த பாசிசம்

Comments 1

  1. thevan says:
    13 years ago

    தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாத இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு அந்நிய நாட்டுச்சட்டின் மதச்சட்டங்களுக்குள் மறைந்து கொள்ளத் தேவையில்லை.// exactly
    .yes Saudi is wrong, why don’t we all ask GOSL and other non developed countires(developed countries are imune from these sort of punishments)…(i heard??)to bring back all the servants from middle east?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...