தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி என்ற இடத்திற்கு அருகில் உள்ள மைக்கேல் பட்டியில் 180 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தூய இருதய மேல் நிலைப்பள்ளியில் கடந்த 15-ஆம் தேதி விஷமருந்தி லாவண்யா என்ற மாணவி சிகிச்சை பலனின்றி இறந்து போகிறார்.
மரணிப்பதற்கு முன்னர் மாணவி லாவண்யா அங்கு பணி செய்த வார்டன் சகாயமேரி மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். எங்கும் மதமாற்றம் என்று கூறவில்லை. ஆனால் அந்த மாணவியை பாஜகவைச் சேர்ந்த ரௌடிகள் சிலர் விடியோ எடுத்து மதமாற்றம் எனச் சொல்லவைத்து அதில் ஒரு சிறுபகுதியையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இது தமிழ்நாட்டில் பெரும் பதட்டத்தை உருவாக்கியது.தமிழ்நாடு முழுக்க பாஜக பொய்யான பிரச்சாரம் செய்தது. இந்நிலையில் இன்று வெளியாக புதிய விடியோக்கள் மூலம் அந்த மாணவி மதக் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது வெளியாகி உள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் அரெஸ்ட் அண்ணாமலை என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. மதக்கலவரங்களை தூண்டும் பாஜக தலைவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக உருவாகி வருகிறது.