மட்டு. மாவட்டத்தில் படையினர் பெரும் எண்ணிக்கையில் குவிப்பு

மட்டு. மாவட்டத்தில் படையினர் பெரும் எண்ணிக்கையில் குவிப்பு
[26 – June – 2008] [Font Size – AAA]
 
*ரோந்து நடவடிக்கைகள் தீவிரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் படையினருக் கெதிராக இடம்பெற்றுவரும் தாக்குதல்களையடுத்தே மாவட்டத்தின் பாதுகாப்பு பெருமளவில் அதிகரிக்கப்பட்டு வருகிறது.மட்டக்களப்பு கல்முனை வீதியில் மட்டக்களப்பு முதல் கல்முனைவரை வீதியின் இரு மருங்கிலும் பெருமளவு படையினர் நிறுத்தப்பட்டு வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்களும் தீவிர சோதனைகளுக்குட்படுத்தப்படுகின்றன.மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிக்குடி, செட்டிபாளையம், குருக்கள் மடம், கிரான்குளம் உட்பட பலபகுதிகளிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.மாலை 5 மணிக்குப் பின் காத்தான்குடி, ஆரையம்பதி பகுதிகளூடாக தினமும் பெருமளவு படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் பல்வேறு வீதிகளிலும் வீதிச் சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 
Email this page Your Opinion Print this page