மட்டக்கள்ப்பில் கடத்தப்பட்ட யுவதி கொழும்பில்

மட்டக்களப்பில் கடந்த 05.08.2008 அன்று இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்தப்பட்ட 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொழும்பில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்தாக சொல்லப்படுகிறது.
மட்டக்களப்பில் நூல் நிலையம் ஒன்றிற்கு அருகில் வைத்து ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டபோது அந்த வானில் மேலும் நான்கு பெண்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மீண்டும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு பஸ்ஸில் கொண்டுவரப்பட்டதாகவும் கொழும்பு கறுவாத்தோட்டத்திற்கு அருகில் தான் தப்பி வெள்ளவத்தையிலுள்ள உறவினர் வீட்டிற்கு ஓட்டோ ஒன்றில் வந்ததாகவும் வரும் வழியில் வெள்ளவத்தைப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் மேலதிக விசாரணைக்குப் பின்னரே இவர் விடுவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

One thought on “மட்டக்கள்ப்பில் கடத்தப்பட்ட யுவதி கொழும்பில்”

  1. அடுத்த கட்டம், மட்டக்களப்பில் கடத்தப்பட்ட யுவதி சார்சலில் விடுதலை.

Comments are closed.