Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மட்டக்களப்பு வரலாறு : மட்டக்களப்பு பூர்விகக் குடிகளின் குமார தெய்வமும் முருகனும் : விஜய்

இனியொரு... by இனியொரு...
03/01/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
8
Home பிரதான பதிவுகள் | Principle posts

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளில் பிரதானமானவர்கள் வேடர்கள் எனவும் அவர்களுடைய பிரதான தெய்வம் குமார தெய்வம் எனவும் ஆய்வாளர்களால் விபரிக்கப்பட்டுள்ளதனை முன்னய கட்டுரையில் விபரித்திருந்தேன். இக்குமார தெய்வம் முருகனையே குறிக்கும் என்பது ஆய்வாளர்களினதும் மக்களினதும் கருத்தாகும்.

எனவே குமார தெய்வத்திற்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிய வேண்டியது அவசியமாகிறது. அதற்கு, முதலில் மட்டக்களப்பில் நிலவிவந்த-நிலவி வருகிற குமார தெய்வ வழிபாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய வேண்டும்.

குமார தெய்வம் மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட வழிபாட்டு முறைகள் தொடர்பாக, கலாநிதி சி.மௌனகுரு அவர்கள் “மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்” என்ற நூலில் விபரித்திருந்தவற்றை முன்னய கட்டுரையில் சுருக்கித் தந்திருந்தேன்.

க.மகேஸ்வரலிங்கத்தின் மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும் (2008) எனும் நூலில், குமார தெய்வ வழிபாட்டு முறைகள் பற்றிய பல தகவல்களை; காணப்படுகின்றன. அந்நூலில், மட்டக்களப்பின் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் பற்றி விபரிப்பில், “இவ் ஆதிக் குடிகளிடம் பொது வழிபாட்டுடன் தனித்துவமான வீட்டு வழிபாட்டு முறைகளும் இருந்து வந்துள்ளன. குறித்த இடத்தில் ஆண்டுக்கொருமுறை தற்காலிக பந்தல்கள் அமைத்து வழிபாடு செய்வதே இவர்களின் பொது வழிபாடாகும்”(பக்62) எனக்குறிப்பிடுகிறார். குமார தெய்வம் தொர்பான தகவல்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் கவனத்திற்குரியவை,

• இவ்வேட வழிபாடுகளில் முக்கியமான அம்சம் பல தெய்வ வழிபாடு. இவர்களால் வழிபடப்படும் பல தெய்வங்களுள் முக்கியம் பெறுவது குமார தெய்வம்.

• வேடர் குமார தெய்வம் என்பதுவும் சிங்களவர் கதிர்காம தெய்வம் என்பதுவும் தமிழர் போற்றும் முருகனையே.

• குமார தெய்வம் காட்டுத் தெய்வமாகவும், வேட்டைத் தெய்வமாகவும், தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாகவும் மதிக்கப்படுகிறது.

• குமார தெய்வத்திற்கு அடுத்ததாக இவர்கள் வழிபாட்டில் முக்கியம் பெறும் தெய்வம் பெரியசாமி. இத்தெய்வத்திற்கு செய்யும் சடங்கு கதிரவெளி பாற்சேனையில் ஆண்டு தோறும் சிறப்பாகச் செய்யப்பட்டு வந்தமையை பலரும் அறிவர்.

• இவற்றைவிட கடல் தெய்வங்கள், மாறத் தெய்வங்கள், தெவுத்தன் தெய்வம், நாச்சிமார் தெய்வம், கன்னிமார், மொட்டாக்குத் தெய்வம், பட்டாணி முதலிய பல்வேறு தெய்வங்களும் வேடரின் வழிபாட்டுக்குரியனவாக இருந்து வந்துள்ளன.

• இத் தெய்வங்களில் பல உட்பிரிவுகள் இருப்பதாக இவர்கள் நம்பகிறார்கள். உதாரணமாக குமார தெய்வக்கலைகளாகிய ஆதிக்குமாரர், கொழும்புக் குமாரன், அழகுக் குமாரன், கண்டிக் குமாரன், புள்ளிக் குமாரர், காலிக்குமாரர் என்பன உள்ளதாகக் கூறுகின்றனர். (பக். 62) மேலும், இத்
தெய்வங்களின் வழிபாட்டு முறைகள்; பற்றி தகவல்களையும் அவர் முன்வைத்திருக்கிறார். அவற்றில் கவனத்திற்குரியவை,

• இவ்வேடர்கள் தங்களது இத் தெய்வங்களையெல்லாம் குமார தெய்வச் சடங்கினால் வழிபடுகின்றனர்.

• வழிபாடுகள் எல்லா வளம், உடல் நலம், நிம்மதி, நிவாரணம் முதலியன வேண்டிச் செய்யப்படுகின்றன.

• இச்சடங்கின் போது குமார தெய்வத்திற்குப் பெரிய பந்தலும் ஏனைய தெய்வங்களுக்குச் சிறுசிறு பந்தலும் அமைக்கப்படும்.

• இச்சடங்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஏழு அல்லது ஐந்து நாட்கள் நடைபெறும். இது பெரும்பாலும் ஆடி, ஆவணி மாதங்களில் நிகழ்த்தப்படுகிறது.

• இச்சடங்கு முறைகள் ஏனைய வழிபாடுகளில் இருந்து வேறுபட்டதாக உள்ளது.

• குமார தெய்வம் தவிர ஏனைய தெய்வங்களுக்கு விக்கிரகம் வைக்கப்படுவதில்லை. இத்தோடு கும்பங்களையும் காணமுடியாது. மடைகள் மட்டும் வைத்துத் தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன.

• இச்சடங்கை நடத்தும் பூசகர் கப்புகன் என்று அழைக்கப்படுகின்றார். இவருக்கு உதவி புரிய இரண்டு மூன்று துணைக் கப்புகன்மார் இருப்பர்.

• ஏனைய சடங்குகள் போல மந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, உருக்கொடுத்தல், கட்டுதல், வெட்டுதல் என்னும் நிகழ்ச்சிகள் இச்சடங்குகளில் இடம் பெறுவதில்லை.

• சடங்குகள் தெய்வங்களை மன்றாடுகின்ற முறையில் அல்லது வேண்டுதல் செய்கின்ற முறையில் நடத்தப்படுகின்றது.

• இச்சடங்குகளில் சிறப்பம்சம் கப்புகனும் தெய்வமாக உருக்கொண்டு ஆடுபவனும் ஒருவராகவே இருத்தலாகும். இவ்வகையில் கப்புகனார் ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனி ஒவ்வொரு தெய்வத்தையும் வேண்டுதல் செய்து குறித்த தெய்வமாக அவரே மாறி உருக்கொண்டு ஆடிவருவார். இதனால் கப்புகனார் ஆண்தெய்வமாக வரும் பொழுது ஆணுக்குரிய ஆடையும், பெண்தெய்வமாக வரும் பொழுது பெண்ணுக்குரிய ஆடையும் பழைய பாணியில் அணிந்து கொள்வார்.

• ஏனைய சடங்கு முறைகளைக் காட்டிலும் இச்சடங்கில் ஆட்டத்திற்கே முக்கியம் கொடுக்கப்படுகிறது. இதனால் கப்புகனார் சிலம்பு சலங்கைகளை அணிந்து கொள்ளுவார். இவ் ஆட்டத்தின் போது கொட்டு எனும் மேளம் அடிக்கப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி கொட்டடி முறையும் ஆட்டமுறையும் காணப்படுகின்றன.

• குறித்த தெய்வங்களுக்குரிய ஆயுதங்களை கையிலேந்தி நடித்தும், அபிநயித்தும் கப்புகானர் பக்தர்களை கவருவார்.

• ஏனைய சடங்குகள் போல ஒவ்வொரு ஆட்டத்தின் பொதும் கட்டுச்சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
என்பனவாகும்.

மௌனகுரு அவர்கள் தளவாய் குமார கோவில் கள ஆய்வில் கண்டறிந்து தந்துள்ள தகவல்களுடன் மகேஸ்வரலிங்கம் தரும் தகவல்களும் பெருமளவு ஒத்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. தெய்வங்களின் பெயர்களில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. சடங்கு கதிர்காமத்தில் தீர்த்தம் நடக்கும் அன்று தொடங்கும் என மௌனகுரு அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கொட்டு என்பதை மேளம் என மகேஸ்வரலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் மௌனகுரு அவர்கள் பறை எனக்குறிப்பிடுகிறார். மௌனகுரு அவர்கள் சடங்கில் வேடபாசையில் பாடல்கள் பாடப்படும் எனக்குறிப்பிடுகிறார். தளவாயில் நடைபெறுவது போன்ற இறுதிநாள் சடங்கு பற்றிய விபரிப்பினை மகேஸ்வரலிங்கம் குறிப்பிடவில்லை.
க.மகேஸ்வரலிங்கம் அவர்கள், இக்குமார வழிபாட்டு முறையானது(ஆதிக்குடிகள் வழிபாட்டு முறைகள்) பூசாரி முறை வழிபாட்டு முறை, கட்டாடிமார் வழிபாட்டு முறை, கப்புகனார் வழிபாட்டு முறை என்பவற்றிலிருந்து வேறுபட்டது எனக்குறிப்பிடுகிறார். ஆனால் அவருடய விபரிப்புக்களிலே குமார

வழிபாட்டில் இவ்வழிபாட்டு முறைகளும் கலந்திருப்பதனை அறியமுடிகிறது. குமார சடங்கினை நிகழ்த்தும் பூசாரி கப்புகன் என அழைக்கப்பட்டாலும், கப்புகன் வழிபாட்டு முறை என்பது மௌன வழிபாட்டு முறையாகும் என்பது கவனிப்பிற்குரியது. குமார தெய்வத்திற்கும், இவ்வழிபாட்டு முறைகளுக்கும் இடையே பிரதேச நிலையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கிராமிய மக்களிடையே வாய்மொழி மரபாக நீண்டகாலம் இம்மரபுகள் பின்பற்றப்பட்டு வந்தமையாலும், ஏனைய தெய்வ வழிபாடுகள் சில பாரம்பரிய முறையில் அமைந்திருப்பதனாலும் (அம்மன் வழிபாடு) இவ்வாறான ஒரு கலப்பு ஏற்பட்டிருக்கலாம்.

குமார தெய்வம், குமார தெய்வ வழிபாட்டு முறைகள் தொடர்பான தற்கால நிலைமைகளை அவதானிக்கிற போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரியும் விடயமாகும். முக்கியமான மாற்றங்கள்,

தற்காலிக வழிபாட்டிடங்கள் நிரந்தர கோயில்களாக மாற்றப்பட்டுள்ளமை.

தளவாய்க் கோவிலும், ஜெயந்தி புரம் கோவிலும் கிரான் குமார ஆலயமும் நிரந்தர கட்டடங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் ஏனைய தெய்வங்களிற்கும் கல்லினால் நிரந்தரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வருடாந்தச் சடங்கின் போது கொத்துப் பந்தல் போடுவதும் பின்பற்றப்படுகிறது.

குமாரர் ஆலயங்கள் முருகன் ஆலயங்களாக மாற்றப்பட்டுள்ளமை.

தளவாய்க் கோவிலும், ஜெயந்தி புரம் கோவிலும் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. ஜெயந்தி புரம் கோவிலில் முன்னர் குமாரர் இருந்து இடத்தில் தற்போது முருகன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் இருந்த குமாரர் மாற்றப்பட்டு பாலமுருகன் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளார். குமாரருக்கு தனிக்கோவில் அருகில் அமைக்கப்பட்டு, அதில் குமார் வைக்கப்பட்டுள்ளார்.

வருடாந்த சடங்கினை விட வேறு வழிபாட்டு முறைகளும் காணப்படுகின்றமை.

ஜெயந்தி புரம் கோவிலில் குமாரருக்கும் ஆகம முறைப்படி பூசை நடைபெறுகிறது. குமாரர் சுப்பிரமணியர் எனக் கருதப்படுகிறார். தளவாய்க் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் பூசாரியினால் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. கிரான் குமார ஆலயத்தில் விசேட வழிபாடுகள் பூசாரியினால் மேற்கொள்ளப்படுகிறது. (ஆயினும் இவ்வாறு வழிபாடு நடத்தப்படுவது குறித்து முரண்பாடுகள் நிலவுகிறது.) அயினும் வருடாந்த சடங்கு வழமை போல் முக்கியத்துமுடையன. அச்சடங்கில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதனை அறிய வேண்டும்.

கவனிக்க வேண்டிய விடயம், ஜெயந்தி புரம் கோவில் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதுவாகும். இக்கோவில் மட்டக்களப்பு நகரில் இருப்பதுவும் கவனிப்பிற்குரியது. இக்கோவில் (குமாரர்) என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைக்காலம் வரை இக்கோவில் வருடாந்த திருவிழா, குமார சடங்குடனேயே ஆரம்பிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ள. அச்சடங்கினை வேடர்கள் வழிவந்தேர் பாரம்பரிய முறையில் செய்துவருகின்றனர். கடந்த வருடம் ‘வெளியிடத்திலிருந்து வேடர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பாரம்பரிய முறையில் சடங்கினை செய்வதற்கு பல தடைகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சித்தாண்டி குமாரர் ஆலயம், சித்தாண்டி முருகன் கோவிலின் பின் வீதியில் தனியாக அமைந்திருக்கிறது. அதற்கென தனிப்பட வேடர்கள் வழிவந்தோரால் பாரம்பரிய முறையிலமைந்த சடங்கு நடைபெற்று வருகிறது. கிரான் குமார ஆலய சடங்கும் பெருமளவு பாரம்பரிய முறையில் நிகழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை விட கிரான், சித்தாண்டி குமாரர் தெய்வம் லாவானை எனும் இடத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. லாவானை எனுமிடத்தில் தற்போது மேடு ஒன்றில் குமார தெய்வச் சடங்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனைவிட மேலும் சில இடங்கள் குமார தெயவச் சடங்கு நடைபெறும் இடங்காக இனங்காட்டப்படுகின்றன.

மற்றொரு முக்கியமான விடயம், முறுத்தானை, கானந்தனை, அக்குறாணி ஆகிய இடங்களில் அண்மைக்காலத்தில் குடியேறி ஒரு சமூகமாக வாழும் “தமிழர்களாகி” விட்ட வேடர்கள் மத்தியில் குமார தெய்வச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது எனினும், அது அவர்கள் மத்தியில் முக்கியமானதொன்றாக இல்லை. அவர்களுடைய தெய்வங்கள் வேறு.

மட்டக்களப்பு நகரிலிருந்து அதன் வடபகுதி வாகரை-கதிரவெளி வரையான பிரதேசத்தில் இவ்வாறு குமார தெய்வத்திற்கான வழிபாட்டு முறைகள் மாற்றமுற்றும், பாரம்பரியங்களின் எச்சங்களைக் கொண்டும் தற்காலத்திலும் நிலவுகிறது. ஆனால் இவ்வழிபாட்டு முறை மட்டக்களப்பின் ஏனைய பிரதேசங்களிலும் தற்போதும் நிலவுகிறது என்பதனை அறிய முடிகிறது. இவ்வகையில் கெளரி புண்ணியமூர்த்தி, “கிழக்கிலங்கை திருப்படை கோயில்கள்” (www. Battinews.com) எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்களும் கவனத்திற்குரியன. அவர்,

மண்டூர் முருகன் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வேடர் வணக்க முறைப்படி சிறிய குமாரத்தன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பூசை வேளையில் திரை மூடிப் பூசை நடைபெறும். துணியினால் வாய் மூடிஇ கப்புகனார் பூசை செய்வார். கதிர்காமம் போன்று வேடர் பூசையும் மரக்கறிஇ மான் இறைச்சி சேர்ந்த அவிபாகமும் குமாரத்தன் கோயிலில் வைக்கும் பூசையும் நடைபெறுகின்றது.
திருக்கோயில் சித்திரவேலாயுதர் சுவாமி கோயில் – ஆதியான முருக வழிபாட்டின் அம்சமான வேல் வழிபாட்டைக் கொண்ட இவ்வாலயம் ஆதிக்குடிகளான வேடுவரின் வழிபாட்டிலேயே தொடங்கப்பட்டது
வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி கோயில் ஆதி காலத்தில் இப்பகுதிகளில் வாழ்ந்த வேடுவர்களால் இவ்விடத்தில் வழிபாடு நிகழ்த்தப்பட்டதாக மரபு வழிக் கதைகள் கூறுகின்றன. போன்ற விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இதனால், மட்டக்களப்பின் வடபகுதியில் மட்டுமன்றி
தென் பகுதியிலும், பிற பிரதேசங்களிலும் திருப்படைக் கோவில்கள் எனப்படுகிற மட்டக்களப்பின் பண்டைய முருகன் கோவில்களிலும் குமார தெய்வத் தொடர்பும் வேடர் தொடர்பும் காணப்படுகின்றமையை அறிய முடிகிறது. எனவே வேடர் அவர்களுடைய குமார தெய்வம் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் மட்டக்களப்பில் பெரும்பாலான பிரதேசங்களில் பின்பற்றப்பட்டிருந்ததனை அறிய முடிகிறது.

மட்டக்களப்பில் காணப்படும் குமார தெயவம், அத்தெய்வத்திற்கான வழிபாட்டு முறைகள் தனித்துவமானவை. எனினும் இக்குமார தெய்வம் முருகனையே குறிக்கும் என்பது ஆய்வாளர்களினதும் மக்களினதும் கருத்தாகும். மேலே விபரிக்கப்பட்டவாறு மட்டக்களப்பிலுள்ள பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களுடன் வேடர்களுக்குத் தொடர்பு காணப்படுகின்றமையும், பல முருகன் ஆலயங்களில் பாரம்பரிய முறையிலான வழிபாட்டு முறைகள் நிகழ்ந்து வருகின்றமையும், குமார ஆலயங்கள் முருகன் ஆலயங்களாக மாற்றம் பெற்றுள்ளமையும், முருகன் ஆலயங்களுடன் குமாரர் தொடர்பு பட்டுள்ளமையும் இக்கருத்தினை மேலும் வலுவுடையதாக்குகிறது.

வேடர்-குமாரர்-முருகன் தொடர்பு குறித்து ஆராய்வதற்கு முருக வழிபாடு பற்றி அறிய வேண்டியுள்ளது. இந்நோக்கத்தில் முருக வழிபாடு குறித்து ஆராயும் போது,
தற்கால முருகன் மற்றும் முருக வழிபாடு
புராதான கால முருகன் மற்றும் முருக வழிபாடு
மட்டக்களப்பு முருகன் கோவில் மற்றும் முருக வழிபாடு
என்பன குறித்து கவனம் செலுத்த வேண்டியள்ளது. ஏனெனில் இம்மூன்று விடயங்களும் இக்கட்டுரையின் ஆய்வுப் பொருளில் வேறுபாடான தகவல்களைத் தரக்கூடியனவாக இருக்கின்றன.

தற்கால முருகன் மற்றும் முருக வழிபாடு எனும் போது, ஆகம முறையிலமைந்த முருகன் கோவில்களையும் ஆகம முறையிலமைந்த வழிபாட்டு முறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக தென்னிந்திய மற்றும் யாழ்ப்பாண முருகன் கோவில்களைக் குறிப்பிடலாம். இம்முறைகளிற்கும் மட்டக்களப்பிலுள்ள குமாரர் மற்றும் சடங்கு வழிபாட்டு முறைக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கருதமுடியவில்லை. எனினும் “ஜெயந்திபுரம் குமாரர்(முருகன்)முருகன்” கோவில் இவ்வாறு ஆகம முறைக்கமைய மாற்றப்பட்டுள்ளது. ஆயினும் அங்கு குமாரருக்கு தனிக்கோவில் உண்டு என்பதுவும், வருடாந்த திருவிழா குமாரர் ஆலயச் சடங்கின் பின்னரே நடைபெற்று வருகிறது என்பதுவும் குமார வழிபாட்டு முறை முருக வழிபாட்டு முறையினின்று வேறுபட்டது என்பதை தெளிவாக்குகிறது.

புராதான கால முருகன் மற்றும் முருக வழிபாடு எனும் போது, 2000 வருடங்களிற்கு தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய முருகன் மற்றும் முருக வழிபாட்டு முறைகளைக் குறிக்கிறது. இவ்விடயம் குறித்த தகவல்கள் தமிழப் பண்டைய இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளன. இவ்விடயமும், மட்டக்களப்பு முருகன் கோவில் மற்றும் முருக வழிபாடு எனும் விடயமும் ஓரளவு குமாரர் வழிபாட்டுன் தொடர்புபட்டுக் காணப்படுகின்றன. ஆனால், இதில் கவனித்திற்குரிய அம்சம், முருக தெய்வமும் முருக வழிபாடும் புராதான கால மக்களுடைய வழிபாடாக இருந்து பின் வளர்ச்சியடைந்தமையால் அவற்றிலும் பழமையான அம்சங்கள் பல காணப்படுகின்றமையேயாகும். இதனால் குமார தெய்வத்துடனும் குமார தெய்வ வழிபாட்டுடன் தொடர்பு உள்ளதாக கருதவேண்டியுள்ளது. ஆனால் அடிப்படையில் இரண்டும் வேறுபட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளன.

குமார தெய்வத்திற்கும் அத்தெய்வத்திற்கான வழிபாட்டு முறைகளும் பண்டைய தற்கால முருகன் முருக வழிபாட்டிலிருந்தும் வேறுபடுவது மட்டுமன்றி, தற்காலத்தில் சமூகமாக வாழந்து வரும் வேடர் தெய்வங்களிற்கும் அவர்கள் வழிபாட்டிற்கும் இடையில் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. எனவே, இவற்றிலிருந்து வேறுபட்டதொன்றாக தனித்ததுவமானதாக குமார தெய்வத்தினையும் குமார வழிபாட்டு முறைகளையும் கருதவேண்டியுள்ளது.

இவ்விடயம் விரிவாகவும் கவனமாகவும் ஆராயப்பட வேண்டியதாகும். ஏனெனில் மட்டக்களப்பு வரலாற்றின் தொல்குடியினர் பற்றியும், தொல் வரலாறு பற்றியதுமான பல தகவல்கள் இவ்விடயத்தினை மையமாகக் கொண்டுள்ளது போல் தெரிகிறது. அது மட்டுமன்றி மட்டக்களப்பு வரலாற்றில் முக்கியமாக பேசப்படுகின்ற சில விடயங்கள் இக்குமார வழிபாட்டு முறைகளை மேலும் ஆராய்வதினூடாகப் புரிந்து கொள்ளப்படலாம் போல் தெரிகிறது. இவ்விடயம் விரிவானது. எனவே அடுத்த கட்டுரையில், புராதான கால முருகன் மற்றும் முருக வழிபாடு பற்றியும் அவற்றுடன் மட்டக்களப்பின் குமார வழிபாடு வேறுபட்டும் ஒற்றுமைப்பட்டும் நிற்கும் தன்மை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்து கொள்ளமுனைவேன்.

முன்னைய பதிவுகள் :

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும் – தற்கால நிலை : விஜய்

மட்டக்களப்பு வரலாறு – மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் : விஜய்

மட்டக்களப்பு வரலாறு : வராலாற்று மூலங்களும் வரலாற்றின் பருமட்டான வரைபும் : விஜய்

மட்டக்களப்பு வரலாறு எழுதப்பட்ட முறையும் சிக்கல்களும் : விஜய்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஜெனீவா :  தென்னாபிரிகா இலங்கைக்குப் பாராட்டு

Comments 8

  1. வரதன் ( கஸ்ட்ரோ) says:
    14 years ago

    புராதான கால முருகன் யார்.?…சிவன் யார்….?…கன்னன் யார்..?…தமிழன் யார்?…பெரியார் யார்?…நான் யார்.?… நீங்கள் யார்.?.புராதான கதை இதோ…தமிழர் விழாவா?
    தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

    இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
    “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

    ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

    அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை – விரதம், நோன்பு – உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

    இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

    எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

    இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

    நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் – பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

    தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

    1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
    2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
    3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
    4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
    5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
    6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
    7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
    8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
    9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
    10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

    இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

    பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

    பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

    இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

    இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

    சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

    மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்

  2. Vijey says:
    14 years ago

    வரதன் காஸ்ட்ரோ>
    தமிழ்ச் சமூகத்தின் பிறபோக்குத் தனங்கள் குறித்து தங்களுக்கு இருக்கிற தார்மீகக் கோபத்தினை புரிந்து கொள்ள முடிகிறது.
    நீங்கள் குறிப்பிட்டிருக்கிறது ஒரு விடயத்தினை. இப்படிப் பல விடயங்கள் மிக நீண்ட காலமாகவே பலராலும் அறிவு பூர்வமாகவும்> கேபாமாகவும் பேசப்பட்டிருக்கிறது. சமூகத்தின் கருத்தமைவின் பொய்மைகளை உடைத்தெறிய நீண்டகாலமாக தனிநபர்களும்> சமூகஇயக்கங்களும் செயற்பட்டும் வந்திருக்கிறன. தற்போதும் பல்வேறு நபர்களும் குழுக்களும் – அமைப்புக்களும் செயற்பட்டு வருகின்றன.
    ஆயினும் மாற்றங்கள் என்னவே நடைபெறாதனவாக அல்லது மிகச்சிறிய மாற்றங்கேள நடப்பதனையே பார்க்கமுடிகிறது.
    மிக நீண்டகாலமாக – முப்பது வருடங்களிற்கு மேலாக – சமூக மாற்றம் குறித்து தீவிரமாக செயற்பட்டு வருகிற நண்பர் ஒருவரை அண்மையில் சந்தித்த போது> இவ்வளவு காலமும் செயற்பட்டும் சமூகத்தில் ஒரு சிறிய அசைவியக்கித்தனையும் காணவில்லை என்று கவலைப்பட்டுக் கூறினார். ஆனால் அவர் சோர்ந்து போகவில்லை.
    பெரும் அறிவாளிகளால் கட்டமைக்கப்பட்ட பொய்மைகளை உடைத்தெறிய> அதனூடாக ஒரு சமூக மாற்றத்தினை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வியும் தற்போது பலருக்கு ஏற்பட்டும் இருக்கிறது. எங்கள் மத்தியில்> ஐரொப்பாவில் ஏற்பட்டது போல> அறிவியல் புரட்சி – மறுமலர்ச்சியும் எற்படவில்லை. முதலாளித்து வளர்ச்சிகளும் அதன் நல்ல மாற்றங்களும் ஏற்படவில்லை. மிக நீண்டகாலமாகவே வளர்ச்சியற்ற ஒரு சமூகமாகவே தமிழச் சமூகம் இருந்து வந்திருக்கிறது என்ற கருத்து தற்போது வலுவடைகிறது. பெரும் மாற்றங்களை எற்படுத்த வல்ல மத்தியதர வர்க்க அறிவாளிகள் பற்றி மிகமிக மோசமான தகவல்களே வெளிவருகின்றன. நிலைமைகள் கவலைதருவன.
    ஆயினும் சமூக மாற்றங்கள் நடைபெறும் வழிமுறை அதுவும் 21ம் நூற்றாண்டில் நடைபெறும் வழிமுறை பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
    சில நல்ல அன்பர்கள் கூறுவது போல> பெரும் பண்பாட்டுப் புரட்சி ஒன்று ஏற்பட்டாக வேண்டும் போலிருக்கிறது.
    நட்படன்
    விஜய்

    • Pratap says:
      14 years ago

      You have tried respond this Mad Max in very polite way, don’t think he deserves it. 

  3. mojo says:
    14 years ago

      முருகன் தமிழனுமில்லை, சிங்களவனுமில்லை. வேடர் பழங்குடியின மக்களால் வழிபடப் பட்ட, தெய்வம்  
     
    எல்லாளனை வீழ்த்திய, “தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!”http://kalaiy.blogspot.in/2011/12/blog-post_24.html

    சிங்கள” மன்னர்களின் கதைகள், மகாவம்சத்தில் கூறப் பட்டுள்ளன. சோழத் தமிழ் மன்னனான எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு கதிர்காமக் கந்தனிடம் ஆசி பெற்றுள்ளான். போரில் தான் வென்றால், கதிர்காமத்தில் முருகனுக்கு பெரியதொரு கோயில் கட்டித் தருவதாக துட்டகைமுனு வாக்களித்துள்ளான். அதே போன்று, “கதிர்காமக் கந்ததனின் அருளால்” போரில் எல்லாளனை தோற்கடித்த துட்டகைமுனு, வாக்களித்த படியே கதிர்காமக் கந்தனுக்கு ஆலயம் கட்டிக் கொடுத்துள்ளான். (பார்க்கவும்:  http://kataragama.org/kalyanasundaram_1st%20ed-1980.pdf

    • Vijey says:
      14 years ago

      எல்லாளன் மற்றும் மகாவம்சம் குறித்து பின்னர் சில விடயங்களை எழுதுகிறேன். அப்போது அவை குறித்து விவாதிப்போம் – விஜய

  4. mojo says:
    14 years ago

    பல்லவர்கள் தான் திராவிட இனத்தவர்கள் இவர்கள் ஆளுமை செய்தபோழ்துதான் பல்லவர்கள் ஆரிய கொள்கைகளை பரப்பினர்  

    வரதன் ( கஸ்ட்ரோ)
    தமிழர் (திராவிடர்கள்) 

    பல்லவர்கள்  தமிழர்கள எனது பதில் இல்லை  பல்லவர்கள் ஈரான் நாட்டை சேர்த்தவர்கள் பல்லவர்களை தான் ஆரியர்கள் திரவிடர்கள் என்று அழதர்கள் 
      http://www.iranchamber.com/history/articles/india_parthian_colony1.php

  5. mojo says:
    14 years ago

    ஈரானிய ஆளும் வர்க்கமான வன்னியர்கள்

    தமிழ்நாட்டை ஆண்ட பல்லவர்கள் ஈரானைச் சார்ந்த பஹ்லவர்கள் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூறுவது. இது பற்றியதொரு கட்டுரை ஈரானிய பக்கத்தில் இருந்தது.
    ஹ்லவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தொண்டைமண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர். 
    பல்லவர்கள் ஈரானிலிருந்து வந்த பஹ்லவிகள் என்பதற்கான ஆதாராக பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன.

    அகழ்வாராய்வியலிருந்து 
    பல்லவர்களான வன்னியர்களது ஆட்சி மொழியாகவும் அரசாணை மொழியாகவும் இருந்தது பிராக்ருதமும் சமஸ்கிருதமுமே. 
    —————————————————-
    வன்னியர்கள் தமிழ்நாட்டை ஆண்டபோது பிராகிரத மொழியையும் சமஸ்கிருதத்தையுமே பயன்படுத்தினர். அப்போது அவர்கள் சமணர்களாக இருந்தனர். பின்னர் அவர்கள் சைவநெறியை மேற்கொண்டபோது தமிழை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். 
    —————————————————–
    ல்லவர்கள் வந்திறங்கி ஆண்ட தொண்டை மண்டலமே வன்னியர்களது பெரும்பான்மை பிரதேசமாக இருப்பது மட்டுமின்றி, அவர்கள் தங்களை பல்லவ குலமாகவே கூறிக்கொள்வதும் இங்கு பொறுத்தப்பாடு கொண்டது.

  6. கண்ணன் says:
    13 years ago

    அதென்ன வரதன் கஸ்ட்ரோ?  பிராமணன் ஆரியன் என்றால் கஸ்ட்ரோ யார்?
    பூர்வீகத் தமிழனா? திராவிடனா? அவர் மட்டும் யூத  வேடரைக் கொண்டாடுவார்.   முதலில் கஸ்ட்ரோ என்ற பெயரை தூக்கி எறிந்துவிட்டு திராவிடனைப் பற்றி பேசச் செல்லவும்.

    விஜய்! உங்களுக்கு ஆழமான வரலாற்று உணர்விருந்தால் கஸ்ட்ரோ வுக்கு சலாம் போடுவதை நிறுத்தவும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...