பிரித்தானிய ஆளும் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் இப்போது பாதுகாப்புச் செயலருமான கலாநிதி லியாம் போக்ஸ் மற்றும் அவரது நண்பரான அடம் வெரிட்டி ஆகியோரிடயேயான அரசியல் உறவு இப்போது சர்ச்சைக்கு உரியதாக மாறியுள்ளது. குறிப்பாக பொக்சின் இலங்கைப் பயணத்தின் போது வெரிட்டியின் பிரசன்னம் போன்றன பொக்சை கேள்விக்கு உள்ளாக்குவதற்கு ஆரம்பமாக அமைந்தது. லியாம் பொக்ஸ் மற்றும் வெரிட்டி ஆகியோர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வந்த போது அவரைச் சந்திதமைக்கான ஆதாரங்கள் இப்போது வெளியாகியுள்ளன.
இதே வேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர் ரவி கருணாரத்னவையும் இவர்கல் இருவரும் சந்தமைக்கான ஆதரங்களும் வெளியாகியுள்ளன.
இன்று வரை பிரித்தானிய பிரதமர் கலாநிதி பொக்ஸை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார் என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது. எது எவ்வாறாயினும் இவர்கள் இலங்கை அரசுடனான சரவதேச வியாபாரம் ஒன்றில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.