ஜே.வி.பிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி, மக்கள் போராட்ட அமைப்பு என்ற பெயரில் இயங்கி அணியினர் இன்று முதல், முன்னிலை சோசலிஸக் கட்சி என்ற பெயரில், இயங்க தீர்மானித்துள்ளனர். கொழும்பு தேசிய நூலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முன்னிலை சோசலிஸக் கட்சி ஏப்ரல் மாதம், 9 ஆம் திகதி கட்சியின் மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் மாநாட்டின் போது, கட்சியின் புதிய அதிகாரிகள் சபை தெரிவுசெய்யப்படும் எனவும் அதன் பின்னர், கட்சியை பதிவுசெய்வதற்காக தேர்தல் திணைக்களத்தில் விண்ணப்பிக்க உள்ளதாகவும் அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில், அந்த கட்சியின் முன்னணி தலைவராக குமார் குணரட்னம் கலந்துக்கொள்ள உள்ளதாகவும் அந்த பேச்சாளர் கூறினார்.









Staring in 1970 JVP is still the third voice of the Sinhala majority that never addressed the Tamil issue properly. Dr. Navaratna Bandara is right in that CP and LSSP got de-radicalized after 1956.