இலங்கையில் ஆட்சி நடத்தும் ராஜபக்ச சமூகவிரோதக் கும்பலுக்கு எதிராக மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். இராணுவ சர்வாதிகாரங்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்றால் வியட்னாமில் ஆரம்பித்து நிகரகுவாவில் முடித்துவைக்கும் நீண்ட கதைகளைக் கேட்டிருக்கிறோம். இப்போது ஈழத்தில் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். மரணத்துள் வாழ்ந்தவர்கள் அதனை வெற்றிகொள்ளப் போராடத் துணிந்து விட்டார்கள்.
“எம்மோடு பேச்ச்சுவார்த்தை நடத்தாமல் கத்திகளோடும் பொல்லுகளோடு வந்து இராணுவ முகாமை சூழ்ந்துகொண்டவர்களை மன்னிக்க முடியாது” என்கிறார் ராஜபக்ச இராணுவ சர்வாதிகாரத்தின் யாழ்ப்பாண பிரதிநிதி இராணுவத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க.
கற்களும் பெற்றோலும் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்,
இதனால் இராணுவ முகாமைச் சூழ்ந்து கொண்டவர்கள் பயங்கரவாதிகள் என்று வேறு கர்ஜித்திருக்கிறார். போராடும் மக்கள் முள்ளிவாய்க்கல் மூலையிலிருந்து அமரிக்கா கப்பல் அனுப்புமா என காத்திருந்தவர்கள் அல்ல. அரச அலுவலகங்களின் முன்னால் மகஜர் சமர்ப்பிப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் இராணுவ முகாம்களைச் சூழ்ந்து போராட ஆரம்பித்திருக்கிறார்கள்.
நாவாந்துறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் கோரத்தாகுதல்களை நடத்தியிருக்கிறது. பலர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி முனையில் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். கொலைப்ப்யமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
அத்தனை அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அடிபணியாத மக்கள் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தின் முன்னால் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். வாழைச்சேனையில், திருகோணமலையில், மலையகத்தில், வரணியில், நாவந்துறையில் என்று மக்கள் தெருவிற்கு இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஐம்பதாயிரம் மக்களை மூன்று நாட்களுள் கொன்று குவித்த இனப்படுகொலை இராணுவத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராடங்கள் வீரம் செறிந்தவை. அரபு நாடுகளில் மக்கள் போராடும் சூழலைவிட கோரமான சூழலில் மக்களின் போராட்டம் இன்று முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும்.
கிழக்கில் போராட்டங்கள் நடந்தபோது முஸ்லீம் மக்களும் இணைந்திருக்கிறார்கள். மலையக மக்கள் போராடியிருகிறார்கள். ஹம்பாந் தோட்டையில் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நாமல் ராஜபக்சவை சிங்கள மக்கள் கல்லெறிந்து துரத்தியிருக்கிறார்கள். செய்தியை வெளியிட முயன்ற ஊடகங்கள் மிரட்டப்பட்டிருக்கின்றன. ஆக, இலங்கையில் மகிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச அரசின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதாகக் கூறும் புலம் பெயர் அமைப்புக்கள் எங்கே? நாடுகடந்த தமிழீழம், தமிழர் பேரவை என்ற இன்னோரன்ன அமைப்புக்கள் மக்கள் போராடும் வேளையில் தமது வீடுகளின் கொல்லைப் புறங்களில் பதுங்கிக்கொண்டார்களா?
போராடும் மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஏனைய போராடும் அமைப்புக்களை இணைத்துகொண்டு இவர்கள் போராடத் தயாரா? மகிந்த ராஜபக்சவைப் பலவீனப்படுத்துவது இவர்களின் நோக்கம் இல்லையா?? இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகம் ஏற்படுவதை இவர்கள் விரும்பவில்லையா??? இப் போராட்டங்கள் குறித்து குறைந்த பட்சம் ஒரு பத்திரிகை அறிக்கையாவது எழுதுவதற்குத் துணியாத இவர்களின் நோக்கம் என்ன????
தமிழ் மக்கள் ஏனய சிறுபான்மை இனங்களோடு மட்டுமல்ல, பெரும்பான்மை இனத்தில் அரச பாசிசத்திற்கு எதிரானவர்களையும் ஒருங்கிணைத்து ஐரோப்பிய நாடுகளின் போராடும் அமைப்புக்களோடு இணைந்து போராட்டங்களை நடத்துவதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பதை நாம் சந்திக்க முடியாது. உயர்தர விடுதிகளில் ஐரோபியப் பாராளிமன்ற உறுப்பினர்களோடு போதை ஏற்றிக்கொள்வதால் விடுதலை வராது. பூதம் தான் வரும்.
மகிந்தவின் சிங்கள அரசின் “கிறீஸ்” மர்ம மனிதர்கள் ஈழத் தமிழர்களைத் கதிகலங்கச் செய்யும் இந்தச் சமயத்தில் அதனைத் தடுத்துநிறுத்த யாருமில்லை என்றநிலைமை தாயகத்தில் உருவாகியுள்ளது. தமிழ் அமைச்சர்களும், அவர்களின் ஒட்டுக் குழுக்களும் கண்டும் காணாமல் இருப்பதால், மக்கள் போராட வேண்டியநிலை உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் அருமை இப்போதுதான் மக்களுக்குப் புரிய ஆரம்பித்துள்ளது. இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் அவசரப்பட்டு அறிக்கை விடுவதினாலோ, வெளிநாட்டில் இருந்து கோஷம் போடுவதினாலேயோ எதுவும்நடந்து விடாது. போராடும் இந்த அப்பாவி மக்களைப் பலிக்கடாவாக்கநேரிடும்.நன்றி!
இதுவரைக்கும் புலி சார் அமைப்புக்ளின் போராட்டங்கள் எல்லாம் பயங்கரவாட்கப் போராட்டங்களாகத் தான் இருந்தது என்பதற்கு உங்கள் வாக்குமூலமே ஆதாரம். மனித உரிமை அமைப்புக்கள், பலஸ்தீன அமைப்பு, இந்திய மாவோயிஸ்டுக்கள்,நேபாள போராட்ட அமைப்பு, இந்தியன் வேர்கர் யூனியன் போன்ற நூறு அமைப்புக்கள் உள்ளன. அவர்களோடு தொடர்பு கொண்டு பிரச்சாரம் செய்யுங்கள். அவர்களோடு தெருவிற்கு வாருங்கள்… வரமாட்டீர்களே! உங்கள் யாவரம் படுதுடுமே. விளையாட்டு போட்டியில் தேசியக் கொடி – புலிக் கொடி- தவறாகப் ஏற்றபட்டது என அடிபட்டுக் கொள்கிறார்கள் புலி வியாபாரிகள். கோட்டாபாயவின் நண்பர்கள்.
மக்கள் தன் எழுச்சியாக போரடட்டும் இதற்க்குள் அமைப்புகள் மூக்கை நுழைத்து மீண்டும் பயங்கர வாத முத்திரை குத்தி அவற்றை நசுக்க நீங்கள் வழி சொல்ல வேண்டாம்… வேண்டுமானால் சரியான ஊடக ஆதரவை கொடுத்து மக்கள் போராட்டத்தை உலகுக்கு வெளிப்படுத்துங்கள். பாலஸ்தீன மக்கள் கல் எறிவதை மணிக்கணக்கில் காட்டும் மேற்கு ஊடகங்கள் நம்மையும் திரும்பிப்பாக்க வழிசெய்ய வேண்டும் (அவை நலன் சார்ந்து இயங்கலாம் ஆனால் நமக்கு வேண்டியது Exposure ) இல்லாவிடில் மக்கள் போராட்டங்கள் மவ்வுனிக்கப்படும்.
இந்த கருத்தில் நான் கிறுக்கனுடன் உடன்படுகிறேன்.
மக்கள் போராடுகிறார்கள்-புலம்பெயர் அமைப்புக்கள் எங்கே
இதோ இங்கே நாடுகடந்த ஈழ்கா அரசகதில் தேர்தல் களத்தில் போட்டி இட்ட நிமலன் சீவரத்தினம் அவர்களை கேளுங்கள்
மகிந்த ராஜபக்ச அரசின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதாகக் கூறும் புலம் பெயர் அமைப்புக்கள் எங்கே? நாடுகடந்த தமிழீழம், தமிழர் பேரவை என்ற இன்னோரன்ன அமைப்புக்கள் மக்கள் போராடும் வேளையில் தமது வீடுகளின் கொல்லைப் புறங்களில் பதுங்கிக்கொண்டார்களா?…………………………………………………….அப்படிபோடு அரிவாள.
நீங்கள் சொல்லாமல், மக்கள் அடக்குமுறைக்கு எதிராகப் போராடினால்,உங்களுக்கு
பிடிக்கவில்லையா?. ‘பொட்டம்மான்’ தலைமையில் மீண்டும் ஆயுதப்போராட்டம்
ஆரம்பிக்குமென தலைமைக் கழகத்தினர் காசு சேர்ப்பதாக அறியப்படுகிறது.
மாவீரர் தினம் யார் நடத்துவது என்றுதான் சண்டை நடக்கிறது. மக்கள் போராட்டம் பற்றி இதுகளுக்கு கவலை இல்லை.
அது ‘கிலோ’ என்ன விலை என்றுதான் கேட்பார்கள்
தமிழ்ஈழத்திற்கு போராடினால் ……நாங்களும் உணவருந்தி >உண்ணாவிரதம் இருப்போம்! எங்களின் “தாளம்” தமிழ்ஈழத்தாயகம்!……….(பேஸ்புக் ஊடாக ஓர் நண்பர்)
அப்பாவி மக்களை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருப்போர் வக்கிரம் பிடித்த மனிதர்களாகத்தான் இருக்க முடியும். இந்த வக்கிரம் யார் மேலும் திரும்பும் அது சொந்தப் பிள்ளையானாலும் சரிதான். அன்றுதான் எல்லோரும் விழித்துக்கொள்வார்கள். அது காலம் கடந்தவிட்ட நிலையாகவே இருக்கும்.
மாமணி, கிறுக்கன்,
எமது பலவீனமே கருத்துக்களாக ப் பல தடவைகள் வெளிவருகின்றன. போராட்டங்களுக்கு புலி பிராண்ட் கொடுக்கச் சொல்லி யார் சொன்னது? மக்கள் இணைந்தது போல புலம் பெயர் நாடுகளில் இந்தப் போராட்டத்தை நடத்தவென இணைந்து கொள்ள பல அமைப்புக்கள் உண்டு. கஷ்மீரில் போராட்டம் நடக்கும் போது இந்தியத் தூதரகத்தின் முன்னால் நடைபெறும் போராட்டங்களை நீங்கள் பார்த்ததில்லையா?
எத்தனை போராட்ட அமைப்புக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கலாம்? இதெல்லம் புலி பிராண்டைக் கூட இல்லாமல் செய்துவிடும். சர்வதேச மக்கள் அழுத்தங்கள் வருமானால் போராடும் மக்கள் மீது ராஜபக்ச குடும்பம் கைவைக்காது.
நேற்று இரவு வடமராட்சியின் பல பகுதிகள் கிறீஸ் மனிதனால் அல்லோலகல்லோலம் .பல வீடுகளில் கிறீஸ் மனிதனை வரவேற்க மிளகாய் தூள் கரைத்த வாளியுடன் பெண்கள் காத்திருக்கிறார்கள். தேனி இணையமோ கிறீஸ் மனிதனை சப்பைக்கட்டு கட்டி கட்டுரை வெளியிடுகிறது. பிரபாகரனின் வீடும் சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது. அந்த காணியில் புத்தர் கோயில் வர இருப்பதாக மக்கள் விசனம். மொத்தத்தில் தமிழ் மக்களை அழித்து முடிக்கும் வேலையை -புலி விட்ட குறையை அரசு முழு மூச்சாக முன்னெடுப்பதாக மக்கள் மனங்குமுறுகிறார்கள்.
புலம்பெயர் அமைப்புகளைச் சேர்ந்தவ்ர்கள் எங்கே அவர்கள் இங்கே.
1) யாழ்நகரில் உல்லாசப்பயணம் செய்கின்றார்கள்.
2) வீடுகளை வாங்கவும் விற்கவும் முயற்சி எடுக்கின்றார்கள்.
3) திருமணப்பேச்சுக்காக பிள்ளைகழுடன் சென்றுள்ளார்கள்.
4) பூப்புனித விழா உறவினர்க்ழுடன் செய்கின்றார்கள்.
5) அரசுடன் வர்த்தக பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
6) ஏற்கனவே வர்தகங்களை ஆரம்பித்து நடத்துகின்றார்கள்.
எந்தப்போராட்டத்தை, எந்த அமைப்புகள்நடத்தினாலும் அதற்கு
பணம் தேவை. அதற்கு இப்போ மக்கள் கொடுப்பது தடைப்பட்டுள்ளது. வேறு வழிகளில் சிற்றுணவு வியாபாரம் செய்வதற்கும் இப்போ கோடை
விடுமுறை போட்ட முதலே கிடையாது.
எனவே புலம்பெயர் தமிழமைப்புகள் என்றால் அவைகள் யாவும்
பணத்தை சுற்ரியே வலம் வருபவை. பணம் இல்லாவிடால் அவர்களிற்கு
தமிழர் பிணமாவதையும் பெரிதாக கொள்ளமாட்டார்கள்.-துரை
மீண்டும் புதுமெருகோடு இனியொரு வந்தமைக்கு நன்றி…..புலத்து மக்கள் போராடுகின்றார்கள் புலம்பெயர் அமைப்புகள் எங்கே???? என்பது
ஒரு காட்டமான கேள்வி. காலில் பிணம் இடறத் தப்பித்து வந்த புலத்துத் தம்பிரான்கள் கோவில்கட்டியிருக்கிறார்கள்.சர்ச்சுகள் வைத்துப் பாதிரியாய் மாறியிருக்கிறார்கள்.காப்புறுதி முகவர்களாகி நட்டாற்றில் நம்பியவர்களை ம்கைவிடுகின்றார்கள். வீட்டுமுகவர்களாக, மற்றும் துரை அவர்கள் குறிப்பிட்ட திருமண,பூப்புனித அரங்கேற்ற அவைகளும் இல்லையென்றால் பத்திரிகை வானொலி,தொலைக்காட்சி,
ஆளுக்காள் சினிமாப்பிரபலங்களை அழைத்து கொண்டாட்டம்,திருவிழா
இவைதான் புலம் பெயர்நிலத்துப் புண்ணியவான்களும் புண்ணியவதிகளும் செய்கிற ஈழபுரட்சி. இவை அனைத்தும் தெரிந்தும் மறுபடி மறுபடி ஏனைய்யா புலம் பெயர் அமைப்பு எங்கே போனதென்று அழுகின்றீர்கள். இன்னும் அவர்களை நம்பினால் பூதம் மட்டுமல்ல பேயும் வரும்……………………………பிடுங்கி
அன்புள்ளவர்களே ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்! இது ஒரு சதி நடவடிக்கை. இதன் பின்னால் இருப்பவர்கள் ஒரு பகுதியும் அல்ல. மக்கள் போராட்டமும் அல்ல. மக்கள் தாங்களாகவே இராணுவத்தை எதிர்க்கவுமில்லை. மக்களை அடிக்க விரும்பியவர்களே அந்த மக்களை இராணுவ முகாமை நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.