மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்: சஜித் பிரேமதாச.

ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியின் காரணமாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த ஆட்சி கவிழ்த்து ஆக்கபூர்வமான ஓர் தலைவர் ஆட்சி பீடமேறும் வரையில் இந்த கொடுமைகளிலிருந்து மீள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். சபரகமுவ மாகாணசபை தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தேசிய ரூபவாஹினியிலும், சுயாதீனத் தொலைக்காட்சியிலும் அரசாங்கத்திற்கு சார்பான விடயங்கள் மாத்திரமே ஒளிபரப்புச் செய்யப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.