Thursday, May 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மக்களை மிரட்டும் சம்பந்தனும் அழிக்கும் புலிப் பினாமிகளும்

இனியொரு... by இனியொரு...
01/26/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

tnaandltte‘இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் எண்ணம் என்னவென்பதை கால் நூற்றாண்டுக்குப் பின்னர் நடைபெற்ற மகாண சபைத் தேர்தலில் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.எம் மக்களின் இன்றைய தேவை இன்னொரு போரோ, போராட்டமோ அல்ல.’

இந்துப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சம்பந்தன் இப்படித் தெரிவிக்கிறார். விடுதலைப் புலிகள் தொடர்பான விமர்சனத்தை இன்று அதிகாரவர்க்கமும் உளவாளிகளும் தமது கையிலெடுத்துக்கொண்டமைக்கு இது சிறந்த உதாரணம். அழித்துச் சிதைக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் நியாய அனியாயங்களைப் பேசுவதற்கு இந்துப் பத்திரிகையும் சம்பந்தனும் மட்டும்தேன் கிடைத்திருப்பது தமிழ்ப் பேசும் மக்களின் சாபக்கேடு.

ஒரு புறத்தில் உலகத்தைக் குதறும் அதிகாரவர்க்கமும் அதன் அடிவருடிகளும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையைச் சிதைத்துச் சின்னபின்னமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மறு புறத்தில் நாளை பிரபாகரன் வந்துவிடுவார் என்று மக்களை எதிராகப் போராடவிடாமல் தடுக்கிறார்கள்.

இந்துவில் சம்பந்தன் தொடர்கிறார்; தமிழ் மக்கள் வன்முறையை விரும்பவில்லை. சுயாட்சி வேண்டாம் ஆனால் அதற்குச் சமனான ஒன்று வேண்டும்.. இப்படியெல்லாம் சம்பந்தன் தனது அரசியல் வெளியை விரிவுபடுத்தி சரணடைவு அரசியலை மக்கள் முன்வைக்கிறார். இதுவரை ஈழப்போராட்டத்தைச் சிறுகச் சிறுக அழித்து முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்திய இந்திய அரசையே மீண்டும் அழைத்துவருகிறார்,

தொடரும் சம்பந்தன் “புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் அஸ்திவாரம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியில், அக்கிரமங்களில் இருந்தது; அவர்களுடைய போராட்டம் நியாயப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் முழுமையாக அதே நியாயத்துடன்தான் அவர்கள் செயல்பட்டார்கள் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் புலிகள் தடைசெய்யப்பட்டார்கள். முடக்கப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாகவே இலங்கை அரசால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. தமிழர் பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்த யதார்த்தத்தை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”என்று மிரட்டுகிறார்.

சம்பந்தனின் மிரட்டல் இனிமேல் போராட்டம் என்று எதையும் ஆரம்பித்துவிடாதீர்கள் என்கிறது. ராஜபக்ச அரசுடன் உறவு வைத்துக்கொண்டு தனது கட்சிக்காரர்களை மிரட்டி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதே சம்பந்தனின் ஜனநாயகம்.

தமிழ்பேசும் மக்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் சிதைத்து அழிக்கப்படும் போதும், சாரி சாரியாகக் கொல்லப்படும் போதும், நிறுவனமயப்படுத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பு நடத்தப்படும் போதும் ஒரு கல்லைத்தானும் இனவெறி இராணுவத்தின் மீது வீசியெறியாமல் செத்துப் போக வேண்டும் என்கிறார் சம்பந்தன்.

அவ்வாறு செத்துப் போதலை சம்பந்தனும் புலம்பெயர் புலி ஆதரவாளர்களும் சாணக்கியம், ராஜதந்திரம், காய்நகர்த்தல் என்று இன்னோரன்ன வார்த்தைகளால் அழைத்துக்கொள்கிறார்கள்.
விமானப்படையையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் வைத்திருந்த புலிகளின் போராட்டம் சரியானது என்றும்; அவ்வாறான புலிகளே அழிக்கப்பட்டால் இனிமேல் போராட்டம் சரிவராதுவ என்றும்; செத்துப் போதலை நியாயாப்படுத்தும் ராஜதந்திரம் என்ற முறையே சரியானது என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு கூறும் பிழைப்பு வாதிகள் தான் சம்பந்தன் போன்ற அதிகாரவர்க்க அடிவருடிகளின் தத்துவார்த்த கர்த்தாக்கள்.

இதனால் தான் புலிகளின் போராட்ட முறை தவறானது என்றும் அதன் அரசியல் வழிமுறை விமர்சிக்கப்பட்டு தமிழ்ப் பேசும் மக்கள் தற்காப்பு யுத்தம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கான நியாயத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றனர்.

மேலே செல்லும் சம்பந்தன் புலிகள் மனித உரிமைகளை மீறினார்கள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் கூறுகிறார்.

புலிகள் தொடர்பான நேர்மையான விமர்சனத்தை புதிய போராட்ட இயக்கம் இலங்கையிலிருந்தோ, புலம் பெயர் நாடுகளிலிருந்தோ முன்வைத்து, சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை ஆயுதமேந்திய மக்கள் யுத்தமாக முன்னெடுப்போம் என்று கூறியிருந்தால் சம்பந்தன் வாயைமூடிக்கொண்டிருந்திருப்பார். ஆனால் நடப்பதோ வேறு.

தமக்கு எதுவும் தெரியாதது போல, புலிகள் 1980 களிலிருந்து நடத்திய அழிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதும், அவர்களின் போராட்ட வழிமுறை சரியானது என்றும் அது தோற்றுப்போனதால் அமெரிக்கவையோ இந்தியாவையோ அழைத்து வருகிறோம் என்று சம்பந்தனின் குரலில் புலிகளை அழித்த புலிப் பினாமிகள் பேசுகிறார்கள்.

ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு மனிதனும் போராளிகளின் விலைமதிப்பற்ற சமூகப்பற்றையும் தியாகங்களையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அழித்துப்போட்ட சோசலிஸ்டுக்களையும், அறிவு சிவிகளையும், ஏனைய இயக்கப் போராளிகளையும், மக்களையும் கூட அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இதனைத் தெரியாது என்று யாராவது சொன்னால் அது அப்பட்டமான பொய்! இவர்கள் என்ன செய்ய முனைகிறார்கள் என்றால் ஆயிரம் சம்பந்தர்களை உருவாக்குகிறார்கள். உலகின் உளவு அமைப்புக்களால் கையாளப்பட்டு அவர்களாலேயே அழிக்கப்பட்ட பிரபாகரனைச் சுற்றி ஒளிவட்டம் கட்டி புதிய போராட்டம் மக்கள் யுத்தமாகத் தோன்றுவதை இன்னும் பல சந்ததிகளுக்குத் தடுக்கிறார்கள்.

இன்று புலிகளின் அரசியல் குறித்த நேர்மையான விமர்சனத்தை முன்வைத்து புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைக்கத் தவறுவோமாயின் சம்பந்தனும் இந்துவும் இந்திய அமெரிக்க அடிவருடிகளும் தமிழ் மக்களின் அரசியலைக் கையிலெடுத்துக்கொள்வார்கள்.

பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும். ராஜபக்ச இராணுவப் பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான மக்கள் யுத்தம் குறித்த தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டும். இதையெல்லாம் அமெரிக்கவையோ, இந்தியாவையோ, பிரித்தானியாவையோ கேட்டி ஆரம்பிக்க முடியாது.ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களிடம் இணைந்து யாசித்துப் பெற்றுக்கொள்ள இயலாது. இப் போராட்டத்தை தற்காப்பு யுத்தமாகத் தயார்படுதும் தந்திரோபாயங்களை வகுக்கத் தவறினால்,  நுல்களிலும் இணையத் தரவுகளிலும் மட்டுமே தமிழ்த் தேசிய இனம் இருந்ததற்கான அடையாளங்களைக் காணமுடியும்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
டெல்லியில் குடியரசு தின விழா : இராணுவ மயமாதலை வெளிப்படுத்தியது

டெல்லியில் குடியரசு தின விழா : இராணுவ மயமாதலை வெளிப்படுத்தியது

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    This is the first time that I am seeing a photo like this. Thanks guys and gals.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...