மஹிந்த ராஜபக்~ அரசாங்கத்தின் வெளிவிகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவிற்கு மேற்கொண்ட உத்தியோகபுர்வ விஜயத்தின்போது அவரது மகளின் பிறந்த தினத்திற்காக 44 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்கு சென்றபோது, அவர் மகளின் பிறந்ததினம் அமெரிக்காவில் ப்பட்டுள்ளது. இதன்போது கேக் உள்ளிட்ட சிற்றுண்டிகளுக்காக 19 ஆயிரம் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் பிறந்ததின வைபவத்தை படம்பிடிப்பதற்கு அமெரிக்காவிலுள்ள சிறந்த படப்பிடிப்பாளர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மகளின் பிறந்தநாள் வைபவத்தின் மொத்த செலவின் இலங்கை மதிப்பில் 4.5 மில்லியன் ரூபாவாகும்.
அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவரிடம் இந்தப் பணத்தை செலுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து செலவீனத்திற்கான பற்றுச்சீட்டுகள், வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்ட போதிலும், அமைச்சும் அதனைச் செலுத்த மறுத்துள்ளதாக தெரியவருகின்றது.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, தமது அனைத்து உத்தியோகபுர்வ வெளிநாட்டுப் பயணங்களின் போதும் தமது குடும்பத்தினரையும், உறவினர்களையும் அழைத்துச் செல்வதை வழமையாகக் கொண்டுள்ளார்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆறு மாத காலத்திற்குள் தீர்ந்துவிட்டதை அடுத்து, நாடாளுமன்றத்திலிருந்து அமைச்சிற்கு மேலும் நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம பல முனைப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன், 2008ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த மே மாதம் வரையிலான காலப்பகுதியில் 25 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாகவும் இதற்கான செலவீனம் 10 மில்லியன் ரூபா எனவும் வெளிவிவகார அமைச்சர் கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதன்போது எதிர்க்கட்சியினர் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்திருந்த ரோஹித்த போகொல்லாகம, போர் தொடர்பாக சர்வதேச நாடுகளில் கொண்டிருந்த பிழையான எண்ணக்கருக்களை இந்த பயணங்களின் மூலம் சரிசெய்ய முடிந்ததாகவும், விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின்போது சர்வதேசத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட சரிவர சந்தித்திராத நிலையில், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள், மக்களின் பணத்தைப் பயன்படுத்தி இவ்வாறான அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போரினால் அங்கவீனர்களாகியுள்ள அப்பாவி சிங்கள இளைஞர்களைக் கவனிக்கத் தவறியிருக்கும் மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் குடும்பத்துடன், மக்களின் பணத்தில் இவ்வாறு களியாட்டங்களில் ஈடுபட்டு வருவதன் மூலம் அவர்களது நாட்டுப்பற்றை எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.