மார்ச் மாதம் 2009 ஆண்டு ஆயிரமாயிராய் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிர்ந்த வேளையில், பிரித்தானியாவின் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் லியம் பொக்ஸின் Sri Lanka Development Trust என்ற நிறுவனம் மன்னாரில் முதலாவது எண்ணை வளப் பகுதியை கெயர்ன் எனேர்ஜி என்ற வியாபார நிறுவனத்திற்குப் பெற்றுக்கொடுக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருந்தது.
2011 ஆம் ஆண்டு டேவிட் கமரனின் உதவியுடன் கேயரின் இந்திய நிறுவனம் வேதாந்தாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மன்னார் கடற்படுக்கையில் எண்ணை அகழும் முதன்மை நிறுவனம் கேயரின் லங்கா. இந்த நிறுவனங்கள் லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட ஆங்கிலோ இந்தியன் நிறுவனமான வேதாந்தாவின் உப நிறுவனங்கள்.
இனக்கொலையாளி கோட்டாப்ய ராஜபக்சவின் தலைமையில் வட-கிழக்குக் கடற்பகுதி உட்பட இந்துசமுத்திரப் பிராந்தியம் முழுவதும் இராணுவ மயமாகிறது. எந்தக் கணத்திலும் அழித்து நிர்மூலமாக்கப்படக்கூடிய சமூகமாக ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களைச் சூழும் இக்கடல் அபாயத்தின் பின்னால் வேதாந்த நிறுவனம் செயற்படுகின்றது. வேதாந்தாவிற்கு எதிரான ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்றை அந்த நிறுவனத்தால் பாதிக்கப்படும் ஏனைய நாடுகளைச் சேர்ந்ததவர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
வேதாந்தாவிற்கு எதிரான போராட்டம் எதிர்வரும் வெள்ளியன்று லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் எண்ணைவளத்திற்காக அப்பாவிகளின் உயிர்பறிக்கும் இந்த நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்திற்குத் தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Friday 1st August. 14:00-16:00 ,The Lincoln Centre, 18 Lincoln’s Inn Fields, London WC2A 3ED
நாம் விழிப்புடனிருக்கிறோம் என்பதை வேதாந்தாவிற்கும் அதன் பின்புலத்தில் செயற்படும் உலகின் அதிகார வர்க்கத்திற்கும் கூறுவதற்கான இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘பறை சுதந்திரத்தின் குரல்’ இன் பறை முரசமும் இசைக்கப்படும்.
மக்கள் பற்றும் சமூக உணர்வுமுள்ள பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கான பிரத்தியோக அழைப்பு போராட்டக்குழுவினரால் விடுக்கப்பட்டுள்ளது. அதன் இணைப்பு கீழே:
http://www.foilvedanta.org/wp-content/uploads/Foil-Vedanta-leaflet-Tamil-generalist.pdf