லசந்த விக்கிரமசிங்க படுகொலை செய்யப்பட்டதனால் அனைத்தையும் மூடிமறைக்கலாம் என்று எண்ணுபவர்கள் தாராக்கி சிவராம் கொல்லப்பட்டபோதும் அவ்வாறே நினைத்தார்கள். இலங்கை ஊடகத்துறை போலவே இலங்கைக்கு வெளியேயும் வாழ்பவர்கள் ஊடகம் நடத்துவதும் மிகவும் சிக்கலானது.
சிவராம் படுகொலை தொடர்பான கண்டனக்கூட்டம் ஒன்று கனடாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோது ‘பத்திரிகையாளர்கள் பணி மிகவும் சிக்கலானது. அதிலும் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பணியாற்றுவது மிகவும் துணிச்சல்மிக்க செயல். அந்த வகையில் பத்திரிகையாளராக தொடர்ந்தும் இலங்கையில் இருந்து செயற்பட்டதே மக்களுக்காக சிவராம் (TARAKI – Siavaram) வாழ்ந்தார் என்பதற்கு அறிகுறி” என;று குறிப்பிட்டிருந்தேன். கருமையம் அமைப்பினர் ஒழுங்கு செய்த கூட்டத்தில் இந்தக் கருத்து கூறப்பட்டது. ஆனால் அது வேறு ஒருவரின் பெயரில் எழுத்தில் தவறாக மாறிப் பதிவாகியிருந்தது வேறுவிடயம்.
அதைப்போன்றதே அதற்குச் சமமமானதே சண்டே லீடர் பத்திரிகையின் லசந்த விக்கிரமசிங்கவுடைய (Lasantha Wickrematunga)கொலையும் அது சுட்டியிருக்கும் அவரது பணி குறித்த வெளிப்பாடு;ம.
லசந்த விக்கிரமசிங்க தராக்கி சிவராம் போன்றவர்கள் மக்களுக்காக வாழந்து மறைந்தவர்கள். அவர்களைக் கொன்றவர்கள் மக்களின் எதிரிகள். மக்கள் நலனை சிறுதும் விருமபாதவர்கள். நாங்கள் நுணுகிய அரசியலை எப்போதும் நூல் பிடித்துப் பேசிக்கொண்டிருக்கையில் பெரிய தவறுகள் நடந்து முடிந்து வரலாறு நம்மையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஊசிபோவதைப் பார்த்துக் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறோம். உலக்கைகள் எழுந்து நின்று தாண்டவமாடுகின்றன.
சுயநலம் மிக்க படைப்பாளிகள் எழுத்தாளர்கள் தங்கள் பிழைப்புக்காக மட்டும் கோஸ்டி சேர்ந்து செய்யும் சிறுபிள்ளைத்தனங்கள்தான் உண்மையில் மக்களின் பிணங்களைக் குவிக்கின்றன. உண்மையில் சிங்களத்தரப்பிலும் தமிழர் தரப்பிலும் பிணங்கள் குவிவதற்கு போர் நடத்துபவர்களைவிடவும அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரப்பவர்களதான் காரணம். இந்தியக் குற்றவியல் சடட்டத்தில் ஓர் கொலையைச் செய்தவரைக் காட்டிலும் அதை ஊக்குவித்தவரை அதைத் திட்டமிட்டவரை அதிகமாகத் தண்டிக்க வழியிருக்கிறது.
அதையே இங்கும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கையில் மகிந்தவுக்காக துதிபாடும் கும்பல்களை என்னவென்பது.
ஓர் பத்திரிகையாளருக்கான மறைவில்கூட இரக்கம் வராமல் கல்நெஞ்சர்களாக இருக்கும் சில ஊடகங்கள் மக்களை நேசிப்பதாகப் பாசாங்கு செய்வதும் புழுகுவதும் அதிகமாகியிருக்கிறது.
மாற்றுக்கருத்துக்களை உள்ள பல்வேறு தரப்புக்களின் பக்கங்களை உள்ளடக்கிய ஓர் செலவ குறைந்த ஊடகத்தை; திட்டமிட்ட சில நண்பர்கள் தங்களளவில் பயந்துகொண்டி தாமதிப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களின் பயம் எந்த அரசுக்கும் அதன் உளவுப் பிரிவுக்கும் அல்ல. ஏனெனில் அவர்கள் முன்வைக்கப்போவது பலதரைப்பையும்தான்.
ஆனால் இன்று மாற்றுக் கருத்து முகாமுக்குள் முகாமிட்டிருக்கும் ‘மற்றக்’கருத்தாளர்கள் தங்களை முத்திரை குத்தி காட்டிக்கொடுப்பார்களோ என்ற பயத்தில் புலம்பெயர்தந்த இடத்தில பயம் தரும் நிலையை எமது அறிவு சீவி பல்தரப்புக் கருத்துரையாடல் தளம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
லண்டனில் ஊடகத்தை உடைத்தால் அது செய்தி. ஓர் ஊடகம் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கே அதை தொடர்ந்து பயன்படுத்தி வரமுடிகிறது. ஆனால் கொழும்பில் அரசுக்கு புறம்பாக மறுத்தோடிக்கொண்டிருந்த ஓர் ஊடகம் சின்னாபின்னமாக்கப்பட்டதைப்பற்றி எவ்வித சுரணையான கருத்துரையாடல்களும் நமது ஊடகங்களில் நடைபெறவில்லை என்பதையும காணக்கூடியதாக இருந்தது.
லசந்தவின் கொலை நடந்து முடிந்ததும் வந்த செய்தி கண்ணில்டுவதற்கு முன்னரே அத மறைக்கும் வகையில் மகிந்த அந்தக் கொலையை கண்டித்த செய்தியை வெயியிடும் ஓர் ஊடகத்தை என்னவென்று சொல்வது.
எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு (Reporters Without Borders) – பிரான்சில் மையமாகக் கொண்டு செயற்படுவது இந்த ஆண்டின் முதற் கொலையாக அறிவித்திருப்பது மதிப்பிற்குரிய மகிந்த அரசாங்கத்தின் தலைநகரின் உலகறியப்பட்ட பத்திரிகையின் ஆசிரியரான லசந்த கொல்லப்பட்டதைத்தான் என்பதை எமது சுயநலப் பத்திரிக்கையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
யாருடைய மறுப்பையும் வெளியிடலாம். ஆனால் அதற்கான நோக்கம் குறுகியதாக இருக்கையில் சிறுபிள்ளைத்தனமாக பத்திரிகையியல் என்ற பெயரில் விளையாடும் போக்கிரித்தனம் தெரிகிறது.
முடிவாக ஒரு மேற்கோளைச் சொல்லாம்.
கொழும்பில் மனித உரிமைகளுக்கான அமைப்பாளராகவும் சனநாயக மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் மனோ கணேசன் (Mano Ganesan)தெரிவித்த கருத்து ஒன்று. இதற்கு ஏன் முதன்மை தரமுடிகிறது என்றால் இவரும் மக்களுக்காக கொழும்பில் தனது தொகுதி மக்களிடையே வாழ்கிறார்.
‘எதாவது தாக்குதல் ஆட்கடத்தல் கொலை நடந்துவிட்டால் சிறிலங்கா அரசு விழுந்தடித்துக்கொண்டு தன்னைத் தவிர மற்ற அனைவரையும குற்றம் சுமத்துகிறது. இது எவ்வளவு வேடிக்கையானது பாருங்கள். கொழும்பில் ஒவ்வொரு 300 மீற்றருக்கும் ஒவ்வொரு சந்தியிலும் பாதுகாப்பு அதிமாக உள்ள இடங்களில் ஒவ்வொரு 100 மீற்றருக்கும் சென்றிகள் இராணுவ காவல்துறைத் தடுப்புகள் உள்ளன. இதை அனைவரும் அறிவர். அப்படியிருக்கையில் இந்தக் கொழும்புக்குள் நுழைந்து அரசுக்கு தெரியாத அல்லது அரச படைகளுக்கு தெரியாத இந்தக் கொலைகள் ஆட்கடத்தல்கள் மக்கள் காணாமல்போதல்கள் எவ்வாறு நடைபெறக்கூடும்.
முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டிய அராசங்கத்தின் தலைவர் வலுக்கட்டயாமாக செய்தி ஊடகத்துறையை தன் கைக்கு எடுத்துக்கொண்ட சிறிலங்காவின் அதிபர் மறுப்புரையும் கண்டனமும் வெளியிடுகிறார்.
இறந்த பத்திரிகையாளனின் குருதி காய்வதற்குள் அந்தச் செய்தியை மறைக்கும் வண்ணம் இந்தப் பிதற்றலை வெளியிடுகிறது ஓர் ஊடகம். அதை நாங்கள் நம்ப வேண்டும்.
லசந்த, தாராக்கி மட்டுமல்ல இலங்கையில் இறந்த இறக்கின்ற இறக்கப்போகும் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் ஊடகக்காரர்களையும் அவர்களின் குடும்பத்தி;னர் வாழ்வையும் இந்த நிலைக்குக் கொண்டுவருவது பொறுப்பற்ற ஊடகம் நடத்தும் அறிவுசீவிகள்தான் என்பதே உண்மை.
— — — — — —
சில அரசியல் உள்நோக்கங்களை வைத்து இந்தியாவின் முதன்மையை இலங்கையில் விலயுறுத்த நினைத்து செய்றபடும் கவிஞர் செயபாலன் இந்தியாவின் மக்களாட்சியின் வெற்றி என்பது அதன் நீதித்துறையும் ஊடகமும் சுதந்திரமாகச் செயற்படுவதுதான் என்று தனது அண்மைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கருத்தின் நோக்கத்தையும் தேவையையும் இலங்கைத் தமிழர் சார்ந்து மறுப்பதற்கில்லை.
அந்தச் செய்தியின் அச்சு மை காய்வதற்குள் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவின் மீதான தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இது ஒன்று மட்டுமேயல்ல.
அதே போலவே இந்தியாவில் சட்டமும் அல்லது நீதித்துறையும் ஊடகமுமம் சுதந்திரமாகச் செயற்படுவது என்பது வெளிக்குத்தான்.
உள்ளுக்குள்ளாக அவற்றுக்கான மட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமாக இருக்கின்றன.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஊடகத்துக்கும் இருக்கும் அதன் நிர்வாகிகிள் இந்தியாவின் கட்டுப்பாடுகள் என்னவோ அதன் தேவை அறிந்து குறிப்பாகச் செயற்படுகிறார்க்ள.
நீதியும் அவ்வாறே. பல இடங்களில் தொடர்ந்தும் நீதி மறுக்கப்படுதல் ஆவணப்படுத்தப்படுகிறது. பட்டுள்ளது.
பிரான்சிஸ் கிருபாக்கள் தவிர்க்க இந்தியாவில் முடியாதவர்கள். திருமங்கலம் இடைத்தேர்தல் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரையே (சட்டத்தை உருவாக்கும் மையத்தின் உறுப்பினர்) காவல்துறை புடைத்துத் காயப்போட்டிருக்கிறது.
ஆக இந்தியாவிலும் அது கண்துடைப்பு என்ற அளவில் தான் சுதந்திரமாக உள்ளது.
——-
2002 இல் எல்லைகளற்ற பத்திரிகையளார் அமைப்பின் அறிக்கை அரசு நிர்மலராஜனின் கொலையாளிகளைக் கண்டு பிடிப்பதற்கு முனைப்பு காட்டவில்லை என்று சுட்டுகின்றது.
அன்றிலிருந்து இன்று 2009 வரை இவ்வாறான ‘பெருமதிப்பிற்குரிய” குறிப்புக்களை எல்லைகளற்ற பத்திரிகையளார் அமைப்பின் அறிக்கை அவ்வப்போது சிறிலங்காவுக்கு வழங்கி வருகிறது.
அந்தப் பட்டியலில் சிவராம் பற்றிய குறிப்பு இடம் பெற்றாயிற்று. தற்போது லசந்தவின் கொலையும் சேர்ந்து கொண்டது. இந்தக் கொலையிலும் கொலையாளிகள் கண்டுபடிக்கப்படமாட்டார்கள் என்பதன் முன்னோடிதான் மகிந்தவின் கண்டன அறிக்கை. அந்தப் பெருமையின் பங்கு அதை முனைப்புடன் வெளியிட்ட ஊடகத்துக்கும் கிடைக்கவேண்டும்.
இந்தியாவிலும் பார்க்க இலங்கை பத்திரிகையாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. லசந்தாவின் கொலைப் பழி எங்கே தன் மீது விழுந்து விடுமோ என்று பதறிப் போய் மகிந்த கொடுத்த அறிக்கையே அந்த கொலைக்கு மகிந்தாதான் கரணம் என்று காட்டிக் கொடுத்து விடுகிறது. அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் காலனி நாடுகளாக இருக்கும் தென்கிழக்கு நாடுகளிலும். அமெரிக்க யுத்த வெறியால் சிதைக்கப்பட்டிருக்கும் மத்திய கிழக்கும் கூட பத்திரிகையாளர்களுக்கு அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தித்துக்கு உகந்தது அல்ல. ஆனால் தமிழகத்தில் நிலை மோசம் இங்கே மூன்றாம் தரமான பத்திரிகையாளர்களே அதிகம் வார்த்தைகளின் அரசியல் தர்க்கத்தின் மீதும் மனம் மீதும் வார்த்தைகள் எவ்வாறு மோதுகின்றன என்பன போனற நுண்மைகளை அறியாத பத்திரிகையாளர்கள்தான் அதிகம். அரசியல் நீக்கம் செய்யப் பட்ட ஒரு நிலையில் இருந்து ஒன்றிலோ நிறுவனம் சார்ந்து அல்லது. யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சார்ந்து எழுதுவதுதான் இங்கே ரியல் ஜர்ணலிசம். அழகிரியும் தயநிதியின் மோதல் மூன்றூ உயிர்களை எரித்துக் கொல்கிறது. ஆனால் இவர்கள் இணைந்து விட்டார்கள் அப்படியானால் எரிக்கப்பட்ட பத்திர்கையாளர்களுக்கு என்ன நீதி. ஏனைய பத்திரிகையாளர்கள் இது பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்றால். எதுவுமே செய்ய முடியாத நிலை…
கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்..
சன் டிவி-மாறன் குடும்பம்
கலைஞர் டிவி- கருணாநிதி குடும்பம்.
ஜெயா டிவி- ஜெயலலிதா குடும்பம்
மக்கள் டிவி- ராமதாஸ் குடும்பம்( இது தொலைக்காட்சிகளின் நிலை)….பத்திரிகைகள் கூட சில குடும்பங்களின் கையில்தான் உள்ளது ஆகவே எங்களால் இங்கே ஒரு சுதந்திரமான ஒரு ஊடக அமைப்பைக் கூட துவங்கி நடத்த முடியாத நிலை..இந்தக் கேவலமான சூழல் இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை உலகத்திலும் வேரு எங்கும் இருக்குமா? என்று தெரியவில்லை. பத்திரிகையளர்ன் என்ற முறையில் இதை சாபக் கேடு என்கிறேன்.
படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் செல்ல முற்பட்ட பொதுமக்கள் மீது புலிகள் கண்மூடித்தனமாகவும் இரக்கமற்றும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை உலுக்கும் சோகச் செய்தியாகும். படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த முரசுமோட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிளைச் சேர்ந்த மக்கள் கூட்டத்தை வழிமறித்த புலிகளே இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 3 வயதான சிறுமியும்இ ஒரு சிறுவனும்இ இரு பெண்களும்இ மூன்று ஆண்களுமாக 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 49 பேர் காயங்களுடன் தப்பி வந்து பரந்தனில் உள்ள 58 படையணியிடம் தஞ்சமடைந்துமுள்ளனர்.
காயமடைந்த பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ முதலுதவிச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களது சடலங்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஏனைய பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் சிவில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- ஊ
நண்பர் ரபேல் கட்டுரை நன்றாக உள்ளது. கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழிய பேசிய எழுதிய எங்கட ஆட்கள்தான் இன்று மிகப்பெரிய வன்முறைகளை ஆராதிப்பவர்களாகவும் அரச எடுபிடிகளாகவும் மாறியுள்ளனர். புலிகள் பாசிட்டுக்கள் என்று ஒப்பாரி வைத்த நாங்கள் இன்னொரு அரச பாசிட்டுக்களுக்கு அவர்கள் தூக்கிவீசும் பணத்திற்கு விலைபோய்கொண்டிருக்கிறோம். என்னதான் நாங்கள் இந்த வன்முறைகளை கருத்துச் சுதந்திர மறுப்பு அராஐகங்களை சுட்டிக்காட்டினாலும் அதற்கெதிராக போராடினாலும் இந்த புலி தீவிர ஆதரவாளர்களும் இந்த தீவிர அரச ஆதரவாளர்களும் இருக்கும்வரை இலங்கையில் அமைதி என்பதற்கு இடமே இல்லை. அமைதியும் சமாதானமும் ஏற்பட்டால் இந்த மக்கள் விரோத இருபகுதியினரினதும் பிழைப்பில் மண் விழுந்துவிடும் அல்லவா? எனவே இந்த யுத்த பிழைப்புவாதிகளுக்கு இலங்கையில் யுத்தம் நடைபெறுதல் வேண்டும். புகலிட நாட்டில் அரச ஆதரவாளர்கள் புலி ஆதரவாளர்கள் இவர்களை ஆராய்ந்தால் நான் சொல்வதிலுள்ள உண்மை தெரியவரும்.
பின்னூட்டம எண் இரண்டுக்கு (2) இங்கு என்ன வேலை?
பின்னூட்டமிட்டால் ‘வெயிற்றிங் போர் மொடரேஸன்’ என்று வருகிறது.
ஊடகத்தினரின் பணி இங்கு என்ன?
In this land of the most compassionate Lord Buddha…..
Sinhala Buddhists who believe this land belongs to the most compassionate Lord Buddha and constitutionally calls it the “Democratic Socialist Republic of Sri Lanka”, sing with pride “In wisdom and strength renewed / Ill-will, hatred, strife all ended / In love enfolded, a mighty nation / Marching onward, all as one / Lead us, Mother, to fullest freedom.” as their National Anthem.
And….. in this compassionate, democratic Buddhist land enfolded with love, in wisdom and fullest freedom, media is forbidden to raise a dissenting voice. Media is forbidden to criticise the “law” of the ruling regime. The media is forbidden to speak for the people.
Many who thought they as the media have a right to freedom of expression, they have a right to information, that the people also have the same right and that it is a fundamental right in a modern civilised society, have been told very bluntly and at times most brutally, that it isn’t so in this land of the compassionate, democratic republic, run by a “patriotic” regime.
The Tamil media in the North were the first to have been told this bluntly and ruthlessly while the Colombo media did not want those dissenting voices in the North, heard elsewhere. They had to learn that lesson, first hand.
And….that was a lesson learnt by some, who are not with us to tell their story. That is a lesson learnt by some, who don’t have the right to say it, because they have a right to live some time more. For a lot, it was their station “Sirasa” that went ablaze with that lesson. It was their station that was smashed and set on fire to teach a lesson.
For Lasantha Wickramatunge, an editor with a passion for uncompromising media professionalism, it was a challenge to face. A challenge he never minced words, in meeting. He had his own aggressive style in meeting the challenge. Admired and respected but left alone without political backing.
And….. he, therefore, could not surmount this challenge, all by himself.
A lesson learnt, that needs no repeats to learn. This compassionate Sinhala Buddhist land does not tolerate “dissent”. Those who would not want to learn that living, would have to learn that in death. We who live, would come back when “dissent” comes back as a democratic right, accepted and enjoyed in a modern land of compassion.
Till then, good bye!
Editorial Board
Lankadissent
http://www.lankadissent.com/
இங்க பாருங்க ரபேல்
இலங்கயில கொலையள் கனக்க நடக்குது. நெங்ச உருக்குது உங்கட கண்டனங்கள் ஞாயம்.
ஆனால் உங்களுக்கு உதாரணத்துக்கு நிமலராஜனும் சிவராமும் வந்துவிழுகிற பூடக அரசியல்தான் இடிக்குது.
சிவராசன்
இந்த புலி எதிரப்புப் பூதக்கண்ணாடியள விட்டு வெளியில வாங்கோ.
என்னைப்பொறுத்தவரை புலியை ஆதரிக்க தேவையில்லை. எதிர்க்கவும் தேவையில்லை. எனது கருத்தைச் சொல்லும் தேவைதான் இருக்கிறது.
சிவராமும் லசந்தவும் தான் எனது முதன்மை எடுத்துக்காட்டு. நிர்மலராசன் பற்றி எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு குறிப்பிட்டிருப்பதைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
உங்களைப் போன்றவர்களுக்கு எதனையும் வாசிப்பதற்கே உங்கள் புலி எதிர்ப்பிசம் தடையாக இருக்கிறது.
திரும்பவும்..
//ஊசிபோவதைப் பார்த்துக் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறோம். உலக்கைகள் எழுந்து நின்று தாண்டவமாடுகின்றன.//
முரசுமோட்டையில் துப்பாக்கிச் சூடு இரு சிறுவர் உட்பட ஏழு பொது மக்கள் பலி [11 – January – 2009] [Thinakkural]
கிளிநொச்சியில் கடுஞ்சமர் நடைபெற்று வரும் முரசுமோட்டைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த ஏழு பொதுமக்களும் கொல்லப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் முரசுமோட்டைப் பகுதியில் படையினரின் முன்னரங்கப் பகுதிக்கு நேற்றுக்காலை பொதுமக்கள் சென்ற போது அவர்களை நோக்கி படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியபோதே அவர்களில் சிறுவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளதாக “புதினம்’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் இவர்களுடன் வந்த 49 பொதுமக்கள் அங்கிருந்து தப்பி பரந்தனை வந்தடைந்ததாகவும் இதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் படையினரிடம் பிடிபட்டுள்ளதாகவும் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் படையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்ததாக “புதினம்’ தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் இருவர் சிறுவர்கள், இரு பெண்கள், மூன்று ஆண்களெனவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளதுடன் இறந்தவர்களின் உடல்கள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
The reason behind the murder !
//Today, District Judge Priyantha de Silva of the Mount Lavinia District Courts issued an enjoining order on a plaint filed by Defense Secretary Gotabaya Rajapaksa against Lasantha Wickramathunga, the Editor of Leader Publications (Pvt) Ltd and Leader Publications (Pvt) Ltd, preventing further publications carrying references defamatory of him. The enjoining order was sought regarding an article published on 9th November 2008 edition of the Sunday Leader, which was considered on the face of it defamatory. //
http://www.defence.lk/new.asp?fname=20081205_09
எங்களுக்கும் புலிய ஆதரிக்க தேவையில்லை. ஆனா எதிர்க்கத்தேவையிருக்கிறது. அரச ஆதரிக்கத்தேவையில்லை. ஆனால் எதிர்கத்தேவையிருக்கிறது.
என்ன செய்வது ரபேல்! எங்கள் ஒவ்வோருவருக்கும் பின்னால் ஒவ்வோரு அரசியல் இருக்கத்தானே செய்கிறது. அதை நாங்கள் அறியமுற்படுவது வெறும் ஒப்புக்கான கண்டனங்களைவிட நல்லம்
வணக்கம் அய்யா சிவராசன்
முன்னர் இட்ட பின்னூட்டம் தங்களின் தொடர்பாகவே இந்தக் கருத்தையும் சொல்ல விருபம்புகின்றேன்.
முதலாவது தற்போது அய்ரோப்பாவில் எழுதுவது என்பது முன்னரைப்போல உடனே முடிந்துவிடுவதில்லை. பின்னூட்டங்களின் பதில்கள் வழியாக எழுத்து தொடர்கின்றது. ஒரு கட்டுரை பல நேரங்களில் தொடர்ந்து எழுதப்பெறுகிறது.
லசந்த பற்றிய பத்தியில் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் பற்றி நீங்கள் பிரஸ்தாபித்திருந்தீர்கள்.
அது ஓர் பெரிய கட்டுரையாக இருந்திருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும். இருந்திருக்கும்.
உண்மையில் எண்ணிப்பாருங்கள். ஓர் தொழிற்சங்கப் பிரச்சினையைக் கதைக்கும் போதேல்லாம், கையாழும் போதெல்லாம் நாங்கள் மார்க்சின் மூலதனத்திலிருந்து அல்லது கம்யூனிஸ்ற் கட்சியின் அறிக்கையிலிலருந்து மேற்கோள்களைச் சொல்லவேண்டுமா? அல்லது எங்கேனும் அப்படிச் சொல்லப்படுகிறதா?
அதைப்போலத்தான், லசந்த என்னும் பத்திரிகையாளர் பல தடவைகள் இலங்கையில் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். சிறிலங்காவின் ஊழல்களை வெளிப்படுத்தியவர். அவர் கொல்லப்பட்டபோது எழுதப்பெற்ற பத்தியில் செல்வி முதற்கொண்டு தொடர்ச்சியாக அனைத்துப் பத்திரிகையாளர் மீதும் நடைபெற்ற தாக்குதல்களை வன்முறையைக் கொலையை அறிக்கையிட்டுத்தான் கடந்து செல்லவேண்டும் என்பதல்ல. அது தேவையல்ல. அப்படி யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
இவை, முன்வரலாறு பேசாப் பொருட்களாக பிண்ணியி;ல வைத்து வாசிக்கப்படவேண்டும்.
சிறிய லசந்தவின் எடுத்துக்காட்டையே சொல்லாம். அவர் தனது ஆசிரியத் தலையங்கத்தில் ( இதன் மொழிபெயர்ப்பை இனியொருவில் பார்க்க) சுதந்திரம், வெளிப்படையான தன்மை மதச்சார்பின்மை மற்றும் மக்களாட்சி என்பன பற்றி சொல்ல முற்படுகிறார். அதன்போது மக்களாட்சி பற்றி சொல்லத் தொடங்கிவிட்டு… மக்களாட்சி ஏன் அவசியம் என்பது பற்றி நான் சொல்லவேண்டும் என நீங்கள் எதிர்;பார்த்தால் இந்தப் பத்திரிகையை வாங்குவதை நீங்கள் நிறுத்திவிடுங்கள் என்று வாசகர்களைக் கேட்கிறார்.
அதாவது ஓர் அடிப்படைத் தகுதிநிலை பற்றிய வெளிப்பாடு.
மற்றையது, மேற்படி மொழிபெயரப்பிலும் எனது நிலைப்பாடு பற்றிய தங்களது கருத்துக்களுக்கு உள்Nளூட்டமான பதில் இருக்கிறது.
உண்மையில், பின்னூட்டங்களுக்கு பதில்சொல்வதில் நல்ல உரையாடல் களம் ஒன்று பிறக்கிறதுதான்.