மகிந்த வெற்றிபெறுவதற்குப் புலிகள் இல்லை: மேற்கு ஏகாதிபத்தியங்களும் இல்லை

Ranilமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராக வேண்டுமாயின் அவர் தேர்தலில் போட்டியிடட்டும். இருப்பினும், அவரை இம்முறை வெற்றியடையச் செய்ய புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இல்லை. அதனால், இம்முறை அவர் தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம்’ என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்கு மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும் தம்மாலான பங்களிப்பை வழங்கின. அவ்வேளையில் தென்கொரியாவின் வெளி நாட்டமைசரகப் பதவி வகித்த பன் கீ மூன் மகிந்த ராஜபக்ச உருவாக்கிய ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட என்ற தன்னார்வ நிறுவனத்திற்குப் பணம் வழங்கி மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதியை வழங்கினார். பன் கீ மூன் ஐ.நா இன் செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்படுவதற்கான பரிசோதனைக் களமாகவே இலங்கை அரசுடனான தொடர்பும் அமைந்திருந்தது.

தொடர்ச்சியாக இலங்கை அரசுடன் தொடர்புகளைப் பேணிய பன் கீ மூன் வன்னிப் படுகொலைகள் நடை பெற்ற காலப்பகுதியில் ஐ.நா வின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தினார். ராஜபக்சவைப் பயன்படுத்தி தமது தேவையை நிறைவேற்றிக்கொண்ட மேற்கு ஏகாதிபத்தியங்கள் இன்று அவருக்கு எதிரான அணியை ஆட்சியிலமர்த்தியிருக்கிறது.

அமெரிக்க அரசு எதிர்பார்த்தவாறு நிர்வாகத்தை நடத்தத் தவறிய மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஜனாதிபதி ஆட்சி முறையை எப்படி அகற்றுவது என்பது தொடர்பாக MIT இல் ரனில் பயிற்றுவிக்கப்பட்டார்.

இலங்கையின் உள்ளூர் நிலமைகளின் அடிப்படையில் மகிந்த ராஜபக்ச அரசியலில் தொடர்வதையும் யூ.என்.பி அணி வெற்றிபெறுவதையுமே மேற்கு அரசுகள் விரும்பும் சூழல் காணப்படுகின்றது.

ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்காவில் ரனில் பயிற்றப்பட்டதற்கான ஆதாரம்
ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்த பான் கீ மூன் நிதி வழங்கினார்