17ம் சார்க் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் மகிந்த ராஜபக்ச இன்று மாலைதீவிற்குச் செல்கிறார்.
எதிர்வரும் 10,11ம் திகதிகளில் சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாலைதீவின் அடு தீவில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சார்க் மாநாட்டின் பாதுகாப்பை இலங்கை அதிரடிப்படைகள் கவனித்துக் கொள்கின்றன. இலங்கை மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப் படுகின்றன. 2009ம் ஆண்டு ஆப்கானிலும் இலங்கைப் படைகளை கூலிக்கு அமர்த்துவதற்கு அமரிக்க உதவி ராஜங்கச் செயலர் கோதபாய ராஅஜபக்சவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த தகவல் வெளியானமை தெரிந்ததே.







