மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளார்.இரண்டாவது எலிசபெத் மகாராணி முடிசூடி 60 வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும்ஆடம்பர நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையிலேயே மகிந்த பிரித்தானியா சென்றுள்ளார். இலங்கை வானுர்தி நிலையத்திற்கு சொந்தமான விஷேட வானுர்தியிலே மஹிந்த ராஜபக்ஷவுடன் 35 பிரதிநிதிகளும் லண்டன் சென்றுள்ளனர். நேற்று ஹீத்ரோ விமான நிலையத்தில் மகிந்தவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.இன்று மாலை 1 மணியிலிருந்து 8 மணி வரை மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள விடுதியின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிய வருகிறது.
லண்டனில் உள்ள டோச்சஸ்டர் ஹோட்டல், மற்றும் அதற்கு அருகில் ஹில்டன் ஹோட்டல் ஆகிய இரண்டு இடங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளது.
1952. An important year locally and globally. D. A. Rajapakse.- 8 kids – 5 boys and 3 girls/ Late Mahendrarajah said, Direct Fight. I am sure the Sinhalese will be there, too.