உலகின் மிகக் கொடுமையான சர்வாதிகாரிகளில் ஒருவருக்குப் தனது பாசிசக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தல் என்பதைக் கருத்துச் சுதந்திரத்தின் தலையங்கத்தில் நியாயப்படுத்தலாமா? கொல்லப்படுபவனும் கொலையாளியும் சமமான உரிமை கொண்டவர்களாக கருதமுடியுமா?? முதலாளித்துவம் வழங்கும் குறைந்தபட்ச ஜனநாயகங்களின் அடிப்படையிலேயே சிறைக்குள் வாழவேண்டிய குற்றவாளி, சமூகவிரோதி, மக்களின் பெயரால் உலாவர முடியுமா???
ஆம் என்கிறார் யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் முக்கிய பொறுப்பிற்கு தன்னை நியமிக்கக் கோரும் ரட்ணஜீவன் ஹூல். ஒக்ஸ்போர்ட் யூனியனின் மகிந்த ராஜபக்சவைப் பேச அனுமதி மறுத்தமை கருத்துச் சுதந்திர மறுப்பாகும் என்கிறார். ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்தை நிறுவத் தவறிவிட்டது என்கிறார். முன்னதாக கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவில் சார்சியமளித்த பேராசிரியர் ஹூல், டக்களஸ் தேவானந்தா ஜனாதிபதி ஆகியோரைப் பாராட்டியிருந்தார்.
வடகிழக்கு இலங்கைப் புலனாய்வுத்துறையின் ஆட்சிக்குள் இருக்கிறது என்கிறது ஜே.வி,பி. மகிந்த ராஜபக்ச அப்படி இருப்பதெல்லாம் நியாயமானது தான் என்கிறார். இனச்சுத்திகரிப்பையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் பெயரால் நியாயப்படுத்துகிறது இலங்கை அரசு. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் சாட்சியின்றிக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் இரத்தவாடையை இன்னமும் சுவாசிக்க முடிகிறது.
இவை அனைத்தையும் மீறி பாழாய்ப்போன தனது துணைவேந்தர் பதவிக்காக மகிந்த ராஜபக்சவிற்கு கருத்துச் சுதந்திரம் கோருகிறார் ரட்ணஜீவன் ஹூல்.
ஒக்ஸ்போர்ட் உரை நிறுத்தப்பட்டதான சிங்கள் தமிழ் இனவாதச் சக்திகளை வலிமைபெறச் செய்யும் என்று மேலும் சிலாகிக்கிறார் அவர். திட்டமிட்ட குடியேற்றங்கள், திடீரென முளைக்கும் பௌத்த விகாரைகள், காணாமல் போகும் மனித உரிமையாளர்கள் – பத்திரிகையாளர்கள், கொல்லபடும் கைதிகள், பௌத்த சிங்கள் இனவெறி உரைகள் இப்படி அனைத்தும் இனவாதத்தைத் தூண்டுவது பேராசிரியர் ஹூலுக்குத் தெரியாமல் போனது அவமானம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராவதற்காக இலங்கையின் ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் நலன்களை அடகுவைத்திருக்கிறார்.
ஏற்கனவே ஊழல் சகதிக்குள் அமிழ்ந்திருக்கும் பல்கலைக்கழத்தின் எதிர்காலம் துயர்படிந்தாகவே காணப்படுகிறது. மறுபடி மறுபடி வியாபாரிகள் தமது சொந்த நலன்களுக்காக மக்களின் நலன்களை விற்பனைசெய்கிறார்கள்.
சட்ட பூர்வமான ஒரு அரசும் அதன் இராணுவமும் சரணடைந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் செய்தவற்றை பார்க்க உலகமே தைரியமற்று இருக்க அத்தகைய கொடுங்கோலனுக்கு வக்காலத்து வாங்குவதில் இருந்து தான் யார் என கூல் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு புலி வேறு. அரசு வேறு.
Where is this guy from? OK OK,He is aiming that Post.
He is not simple guy, he is professor, and from Peradeniya engineering faculty, when his life was threatned by the late Tigers , he was offerd a post at Princeton university in the USA, a true tamil who had the guts to oppose ltts tyrany
Chandro, even a child would know that ltte could not reach Peradeniya/Kandy. His life was not threatened by Tigers; That was Rajan Hoole, his brother who used to hide in 5 start hotels in Colombo; Obviously LTTTE’s tentacles could reach Colombo.
How did they reach Kandy and bombed talada maligawa
இங்கு நாம் கதைப்பது பல்கலைக்கழகம் பற்றி.
I seriously doubt if there was any threat or risk of one to the life of life academics in Peradeniya at the time.
But a vice chancellor of the Eastern University went missing in Colombo and is feared dead, and the LTTE (although capable of worse deeds) are not the suspects.
He is politically very biased and he represents an arrogant- elite community in Jaffna(Uduvil)
தங்கள் கருத்து தீர்ப்பிடுகிறது.நான் இதை வரவேற்கவில்லை.
பேராசிரியர் கூல் அவர்களே!
கருத்திற்காக ஓங்கி குரல் கொடுக்கும் உங்கள் உணர்வு என்னைப் புல்லரிக்க வைத்தது. இப்பாங்குடன் நான் உடன்படுகின்றேன். அதே வேளை மதிப்பிற்குரிய ராஜபக்சேயின் அரவு அல்ஜசீரா தொலைக்காட்சியை இலங்கையில் தடைசெய்த போது அதையும் எதிர்த்து குரல்கொடுத்திருந்தால் (அல்ஜசீரா ஏகாதிபத்தியங்களின் கைக்கூலியல்ல) உங்கள் கருத்து சுதந்திரத்திற்கான உணர்வு மிகுந்த போர்க் குணாம்சத்தை வரறே;றிருப்பேன் .
ஆனால் நீங்கள் தேர்வு செய்தல்லவா கருத்திற்காக குரல் கொடுக்கிறீர்கள். புலிகளின் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக நீங்களும் உங்கள் படித்த வெள்ளாள தென்னிந்திய திருச்சபையினரும் குரல் கொடுத்த போது புல்லரித்த என்க்கு தோழர் மகிந்தவின் ராணுவம் ஆடிய கொலைவெறியாட்டம் தொடர்பான ஆதாரங்கள்; படங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அதுபற்றி கம்மென்று மூச்சு விடாமல் இருப்பது நல்லதல்ல பேராசிரியரே!!
பேராசிரியரே! நீங்கள் ஒரு விஞ்ஞானி. எங்களைப் போல் பாடமாக்கி படித்தவர் அல்ல என நம்பியவன். அதில் இப்போது சந்தேகம் வருகிறது. பிரபாகரனும் அவரது நாற்பது திருடர்களும் அழிந்து போனதில் கவலையில்லை. என்னைப் போல் உணர்வு மிகுதியால் இயக்கத்தில் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் பெண்களையும் இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது உங்களுக்கு கிஞ்சித்தும் கோபம் தரவில்லையா?
அமெரிக்காவில் சிறு கல்லூரியில் பேராசிரியராக இருந்து கொண்டு என்ன கருத்தைக் கூறியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் யாழ் பல்கலைக்கழத்திற்கு துணைவேந்தராவதற்கு இப்படியெல்லாம் கூறுவது வருந்தத் தக்கது.
உங்களுக்கு அதிக வாக்கு கிடையாததற்காக கோபம் அடைந்திருந்த எனக்கு வாக்கு போடதவர்கள் மிக அனுபவசாலிகள் என தோன்றுகிறது. புலிகளின் கொடூரமும் கொடுமைதான். இலங்கை இராணுவத்தின் கொடூரமும் கொடுமைதான். புலிகளின் கொடுமைகளுக்கு எவ்வாறு பிரபாகரன் பதில் சொல்ல வேண்டியது கட்டாயமோ அவ்வாறே இலங்கை இராணுவத்தின் கொடுமைகளுக்கும் மகிந்த பொறுப்புச் சொல்ல வேண்டியவர்.
பேராசானே! தயவு செய்து தெரிந்தெடுத்து கருத்து கூறாதீர்கள். இதை சொன்னதால் நான் ஒரு நாள் இலங்கை வரும்போது இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தால் எனது இந்தக் கருத்திற்காக நீங்கள் போராடுவீர்களோ??
புரிந்து கொள்ளூதல் உள்ள மனிதன் எப்பொழுதும் அடுத்தவர் கருத்துக்களயே பார்க்கிறான்.தன்னை மையப்படுத்திப் பார்ப்பதில்லை- ஓசோ—-
நான் உங்கள் அண்ணன் ராஜன் கூலின் மாணவன். அவர் மிகுந்த மனிதாபிமானி. இப்படி உங்களைப் போல் சோரம் போகமட்டார். மனித உரிமை வேலை செய்வதற்காக பதவி துறந்தவர். அவருக்கு இருந்த நற் பெயரையும் உங்கள் கருத்துகள் கெடுத்துவிடும் போல இருக்கிறது.
அவர் தம்பி என்று நினைக்கிறேன்.
தம்பி என்றால் அண்ணன் செய்வதெல்லாம் சரியா?
ராஜன் ஹ+ள் மூத்தவர் (1971, பேராதனை)
ரத்னஜீவன் (1975, கட்டுபத்த).
Writer try to develop an image what he wants…. Hoole opined about Oxford free speech. …. he is not a politician to release a statement for every incident in SL. By releasing statement he or our people not going to benefitted. If he appointed as a VC Jaffna university and society will get benefit. Before lesson and learnt commission he pointed out the atrocities of both parties. I believe UTHR is the only organization in Sri lanka well documented the human rights violation of all parties. He and his brother Rajan hoole served our community better than the keyboard heroes. So we people in Jaffna expecting more from hoole brothers
So, if he is not ” a politician to release a statement for every incident in SL”, then why the hell is he worrying about the right of a war criminal? Did he worry when thousands of innocent people were killed by GOSL? Did he worry when hundreds of reporters were killed ny GOSL? Did he worry when DOuglas arranged to kill hundreds of Tamils? Oh you have answered “HE does not have to release a plotical statement” for every incident..What a wonderful argument !!
….. you just click off the parts what you want and hided what you don’t want to hear. … feel free from preconceived ideas. Why don’t you include these questions…..Did he worry when hundred thousans of innocent people were used as human shield in last ditch of war by LTTE? Did he worry when fleeing people were shot by LTTE? Did he worry when Muslim community was chased away over the night? Did he worry when other movements were banned and wiped out? Did he worry when surrendered police were killed by LTTE? Did he worry when youngsters were forcefully recruited by LTTE? Did he worry when moderate leaders and journalists were killed by LTTE?……….. there’re so many questions…….. Don’t be selective. If we really worrying about the people who affected by war criminals Mahinda and Praba & co…… should be open to discuss the atrocities of all parties. Before blaming we do our best.
it is generally understood
that when someone is kidnapped or killed by government forces, Tamil media ready to issue statements; when the
same thing is done by the LTTE, there is too often only silence. This
becomes a barometer for predicting who the community thinks is the
culprit.
கருத்துச்சுதந்திரத்திற்கு முன்பு ஒரு நாட்டின் பாதுகாப்பு ஒழுங்குகளை நிலைநாட்டவேண்டியது அந்த நாட்டு அரசின் பாதுகாப்புப்படைகளின் பொறுப்பு அதனால்தான் இங்கிலாந்து அரசு இந்த முடிவிற்கு வந்தது அதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அதனால் ஏற்படும் சிக்கல்கள், செலவுகள் என்பவற்றை ஒரு யுத்தகுற்றவாளிக்காக ஏற்க அவா்கள் தயாராக இருக்கவில்லை அத்தோடு அதை செய்வதற்கு அவா்கள் மடயா்களும் அல்லா்.
இலங்கையில் யாருக்குமே கருத்துச்சுதந்திரம் கிடையாது அதை கேட்க வக்கில்லை இங்கிலாந்தைப்பார்த்து இவா்கள் கேட்பது பெரிய கோமாளித்தனம்.
ஆறாயிரம் மைல்களுக்கப்பால் வாழும், சிங்களத்தினால் எந்த ஒரு அல்லலுக்கும் உட்படாத இந்த பிரித்தானியாவில் வாழும் வெள்ளையருக்குப் புரியும் வெட்ட வெளிச்சமான ஒரு விடயம், யுத்தம் என்ற போர்வையில் தமிழர்களுக்கு என்ன அங்கே நடந்திருக்கின்றது என்ற விடயம் புரியும் பொழுது ஒரு தமிழன் என்ற பெயரில் வாழும் இந்த மனிதனுக்குப் புரியவில்லை என்றால் இவர் எப்படி ஒரு பேராசிரியராக இருக்க முடியும். அந்த பதவிக்கு இவருக்கு என்ன அருகதை இருக்கு. ஒரு சின்ன தமிழ்க் குழந்தைக்கு தெரிந்த விடயமே இந்த பழுத்த மனிதனுக்கு தெரியவில்லை. இவரெல்லாம் என்னத்தப் படிச்சு என்னத்தக் கிழிச்சு…சின்ன வயதிலேயே மரத்தில் கட்டிப் போட்டு ஏதோ ஒரு விலங்குக்கு எலும்பு துண்டு போடுற மாதிரி போட்டிருக்கலாம். இவ்வளவுகாலமும் படிப்பிற்கென்று செலவழித்திருக்க வேணாமே. ஏனென்றால் படிப்பின் பின்பும் இந்த விலங்கு அதைத்தானே செய்கின்றது. எலும்பு பொறுக்குது
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் எனும் பக்குவம் தெரிந்தவர்கள் காசை கடவுளாகப் பார்ப்பர்,கருத்துச் சுதந்திரம்,மனிதாபிமானம் எனும் லேபிள்களால் என்ன நன்மை நமக்கு எனும் வட்டம் போட்டு வாழும் வெள்ள மனம் கொண்டோருக்கு தமிழன் கொல்லப்படும் போது தடுக்க முடியவில்லை இப்போது புளீயமரத்தில் பேய் என்றூ நடிக்க முடிகிறதா?கருத்துச் சுதந்திரம்,பேச்சு சுதந்திரம் வெள்ளக்கு மறூக்கப்பட்டால் மட்டுமே வெள்ளக்கு துடிக்கும்,வேற்றூ மனிதனெனில் அது தார்மீக ஆவேசத்துடன் அடங்கிக் கொள்ளூம்.-தமிழ்மாறன்
University here is entirely messed up ! Vasanthi is the only person who doesn’t have any political affiliation. However Mahintha and co will like their tail Hool who is also a Christian fundamentalists.
DEAR JEYABHARATHI,
YOU JUST LOOKING THINGS AT YOUR OWN WAY NOT HIS WAY THATS WHY YOUR COMMENT OUT OF CONTEXT.
அவர் கற்றது கை மண் அளவிலும் மிக மிக சிறிதென்று காட்டிவிட்டார்
Gowrie wrote:
இந்த மனிதனுக்குப் புரியவில்லை என்றால் இவர் எப்படி ஒரு பேராசிரியராக இருக்க முடியும்.
very good question…
War criminal Douglas and thesamnet want mr.Hool to this Post. Now Hool is hell bent to get it..
எஜாமான் ( மகிந்த) எங்கையோ.. அவனது அடிமைநாய்களும் ( ரட்ணம்ஜீவன் போன்றோர் ) அங்கேயே. இதில் என்ன ஆர்ச்சரியம். போட்ட எலும்புத்துண்டுக்காவது அவெர் குலைக்கக்கூடாதா. சும்மாவ..செஞ்சோற்றுக்கடன் அல்லவா.நாய் தனது எஜமானின் வீட்டு வளவில் இருந்து குலைப்பதே நாய்க்கு நல்லது. அதை விடுத்து எஜமானுக்கு விசுவாசம் காட்ட , வீதிக்கு வந்து குலைக்க வெளிக்கிட்டால் 🙂 அப்புறம் அடி , உதை , வெட்டு , குத்து வேண்டுவது தவிர்க்க முடியாதாகிவிடும். ஏற்கனவே லண்டன் தமிழர்களிடம் ஒரு பேய் போன கிழமை பட்டபாடு தெரியும்தானே….
I studied under him at University of Peradeniya. He is the worst lecturer I have seen. He was teching engineering, but his understanding of Mathematics is very weak. He survived because of his remarkably good English (spoken/written) and equally good memory power.
And his brother is the one who was making statements for the non-existing ‘Universiry teachers for Human rights, JAffna University”. His only job was writing article that looks superficially neutral but deeply shattering the basis of Tamil suffering.
இதனால்தான் “அறிவில்லாத” புலிகள் இவர் போன்ற “அறிவாளிகளை” அப்போது எதிர்த்தார்கள்.
This Pera grade is a lier, He taught at Princeton university in the USA, would they admit any one with lack of knowledge in Maths, Pera grade smells rotten tiger
Chandr, even you can call your Rajan and asked him it he taught at Pera University. Or you can ask your ‘paymasters’ if it is true.
Chandr, even you can call your Ratnajeevan and asked him it he taught at Pera University. Or you can ask your ‘paymasters’ if it is true.
Ratnajeevan Hoole spent a while in Singapore before returning to Sri Lanka around 1997. He served for relatively short spells in the IFS, the OU, Ruhuna and then arrived in Peradeniya.around year 2000. Following his appointment as VC Jaffna in 2005 he did not turn up at Peradeniya. He was discontinued from service by UoP only last year.
Holding positions can have little to do with one’s teaching skills and knowledge of certain subjects that are important to one’s discipline.
It is safe not to not take paper qualificatioins too seriously.
This is a general comment based on my first hand impression of the academia. that is not to say that most of the academics are no good either.
Rajan Hoole is a graduate of the University of Ceylon, Peradeniya.
Ratnajeevan Hoole graduated from the Kaubadde Campus of the University of Sri Lanka.
ரட்ணஜீவன் கட்டுப்பெத்தையில் படித்த காலத்தில் அது சாதாரண டெக்னிகல் கொலெஜ் தரத்திலிருந்து பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுவிட்டதா?
பெரதேனியா போன்ற ஒழுங்கான பல்கலைக்கழகங்களில் தகுதி காணாது இடம் கிடைக்காமல் போன சில அரைகுறைகள் கட்டுப்பெத்தையில்தான் வெட்டிக்கிழித்து வெளியே வந்தார்கள்.
எங் கே படித்தார் என்பதை விட இப்போது எப்படி இருக்கிறார் என்பதில்தான் அவரது வெற்றீ இருக்கிறது சூர்யா.யாழ்ப்பாண பல்கலைக் கழக துணவேந்தர் ஆவது பெருமைக்குரிய பதவி அத நீங்கள் சொல்லும் தொழில்நுட்ப கல்லூரியில் படித்தவர் பெறூவது பெருமைக்குரியது அல்லவா?
ஒன்றுமே படியாதவன் அல்லது படிக்க வழியில்லாதவன் தனது திறமை ஒன்றையே மூலதனமாக்கி ஒரு உயர்ந்த இடத்தைப் பிடிப்பானாகில் அது மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயம்தான். இங்கு விவாததிற்குரியவர் எப்படி சிங்கள அரசியல்வாதிகளுக்கு வால் பிடித்து அவர்களின்நிகழ்சிநிரலூக்கு ஆட்டம் போட்டு இப்படியான பதவிக்கு வருவது பெருமைப்பட வேண்டிய விடயமல்ல. இவரின் இமாய அறிவாற்றலைக் கருத்திற்கொண்டு யாழ் பல்கலைக் கழக மாணவர்களில் பெரும்பானோர் இவரின்நியமனத்திற்கெதிராக போராடினார்கள்.
தயவுசெய்து சொல்லிப்போட்டாதீர்கள், அவர்களெல்லாம் புலிகள் என்று.
பதின்ம வயதில் எங்கே படித்தார்கள் என்பதற்கும் அவர்களுடைய தற்போதைய அறிவாற்றலுக்கும் , கருத்துக்களுக்கும் என்ன சம்பந்தம் சூர்யா? அப்படியென்றால் மேதகு எந்த பல்கொலைகழகத்தில் படித்தார்.
சம்பத்தப்பட்டவரின் ‘அறிவாற்றலையும்’, அவரின் கருத்துக்களையும் பற்றித்தான் நாம் இப்போது விவாதிதுக்கொண்டு இருக்கிறோம்!
எதற்கெடுத்தாலும் பிரபாகரனை உங்கள் சப்பற்ற விவாதங்களுக்கு உப்புச் சேர்க்க நீங்கள் எப்போதும் முயல்வது எனக்கு மாத்திரமல்ல பலருக்கு வாந்தி வரப்பண்ணுகிறது.
soorya
அவர் தரப் படுத்தலால் பாதிக்கப் பட்டோருள் ஒருவர். அந்த ஆண்டு தான் கட்டுபெத்தையைப் பல்கலைக் கழக வளாகமாக்க முடிவெடுக்கப்பட்டது.
அங்கு கல்வித் தரம் உயரச் சில ஆண்டுகள் எடுத்தன. ஆனால் அரசாங்க அனுசரணை கூடுதலாக இருந்த்து.
உங்கள் தகவலுக்கு நன்றி சிவசேகரம் அவர்களே, தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டு பெரதேனியா அல்லது கொளும்பு பல்கலைகழகம் செல்லமுடியாது கட்டுப்பெத்தை போன்றவற்றை தேர்ந்தெடுக்கவேண்டிவந்தது உண்மையே.
சிங்களவர்களில் புத்திஜீவிகள், கல்விமான்கள் இனவெறி கக்குவதையிட்டு நான் பெரும் கவலை கொள்ளவில்லை. ஆனால் ஒரு தமிழறிவாளி இன்றிலிருந்தல்ல இப்படி அன்றிலிருந்தே நீதியின்றி பதவி பட்டங்களுக்காகவா நடக்கின்றார்?
இவர்போன்றோரை எப்படி ஒரு பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கலாம்?
மேலும் யாழ் பல்கலைக்கழகத்தில் பதவி ஏற்கமுடியாமல் போனதால் இவர் புலிகளுக்குப் பயந்து வெளிநாடு சென்று வேலைபார்க்க வேண்டிவந்தது என்பது எல்லாம் இவரினதும் சிங்கள அரசினதும் வெறும் பிரச்சாரமே. இவரால் இலங்கையில் வேறு எங்கும் தொடர்ந்து பணியாற்றி இருக்கமுடியும்.
சூர்யா
நான் சில தகவற் பிழைகளை மட்டுமே செம்மைப் ப்டுத்தினேன் அவ்வளவே.
இலங்கயில் பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் எவ்வாறு தெரியப்படுகிறர்கள் என்பதைப் பற்றிப் பேசுவதை விடப்
பயனுள்ள பொழுதுபோக்குக்கள் உள்ளன.
கொலைக் குற்றவாளீயும் தன் கடைசி ஆசையை சொல்லும் உரிமை உள்ளபோது ம்கிந்தவும் தன் கருத்தைச் சொல்ல உரிமையுடையவரே.இங்கிலாந்தில் அது பாதுகாப்புக் காரணங்களால் நிறூத்தப்படுகிறது என்றால் இங்கிலாந்தில் மகிந்தா தன் கருத்தைச் சொல்ல அனுமதிக்க்கப்படவில்லை என்பதாகவே அமைகிறது.அவர் வந்ததே ஒக்ஸ்போடில் பேசுவதற்கே அது மட்டுமல்ல இலங்கையை ஆண்ட ஜெயவர்த்தன ஒக்ஸ்போட் பழைய மாணவர்.இன்னும் பல் இலங்கை அரசியல் வாதிகளச் சொல்லலாம் நமது நீலன் திருச்செல்வமும் பழைய மாண்வரே ஆக பாரம்பரியம் கொண்ட பல்கலைக்கழகம் என்பதால் இலங்கையைச் செர்ந்தோர் இது குறீத்துப் பேசுவது கிரிமினல் குற்றமல்ல.
If you use the same argument, shoukd we have allowed Hitler to speak about ‘human rights’ at some University? Ye, he can use his freedom of speech rights to ask the the ‘slot’
well, good point.
Pera grad, strictly, I would.
But I will also demand unrestricted questions.
That is the only way in which the man gets exposed.
Poisonous weeds cannot be eliminated until you let them show their shoots.
I agree with you
இனவெறியன் ஜெயவர்த்தனாவுடன் இலங்கையின் அறிவாளிகள் ஒக்ஸ்போட்டில் உரையாற்றிய காலம் மலையேறிவிட்டது. அதன்பின் இப்போது ஒழுங்காக ஆங்கிலமே பேசத்தெரியாத கொலைவெறியனுக்கு யாரோ எழுதிக்கொடுத்ததை அப்படியே ஒப்புவிக்க வேறு இடமா கிடைக்காமல் போயிற்று? இப்படியான ‘பெரும் அறிவாளிக்கு’ இன்னுமொரு ‘அறிவாளி’ வக்காலத்து வாங்குகிறார். இலங்கையில் இவரின் பேய்க்காட்டலை பொறுத்துக்கொள்வார்கள் ஆனால் வெளிநாடுகளில் எவ்வளவு காலம்? அதனால்தான் இவர் இலங்கையை நேசித்து திரும்பி மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார்.
சிறப்பான சிந்தனை.
ஒக்ஸ்போட்டில் பேசுமாறு மகிந்த அழைக்கப்பட்டது அவர் அரசியல் தலைவர் என்பதற்காகவே. இதற்கும் மகிந்தவின் அறிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் மகிந்தவின் ஆதரவாளன் அல்ல. ஆனால் உங்களது கருத்தில் ஒழுங்காக ஆங்கிலமே பேசத்தெரியாதவர்களெல்லாரும் முட்டாள்கள் என்ற கருத்துத் தொனிக்கிறது. அது சரியல்ல.
பிழையாக விளங்கிக்கொண்டீர்கள். ஆனால் மகிந்த ஒரு முட்டாள் மாத்திரமல்ல, பெரும்தொகையான மக்கள் கூட்டத்தை அவர்கள் புலிகளுடன் பலவருடங்கள் வாழ்ந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்றுகுவித்த ஒ ரு போர்க்குற்றவாளி.
போர்குற்றவாளி தான் செய்தது சரியென்று தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதலெல்லாம் ஏதோ சொல்லி வாதாடியுள்ளபடியால், பயங்கரவாதத்தை அழித்துப்போட்ட வீரன் என்று சப்புக்கட்டி வருவதால், திரும்பவும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கக் கூடாது என்பதால்தான் இவ்வளவு பெரும் பாடு. நீங்களோ வக்காலத்து வாங்கவில்லை, இதைநம்புங்கோ என்று சொல்ல்கிரீர்கள். நம்புவதுதான் கடினமாக இருக்கிறது.
யாரோ எழுதிக்கொடுத்ததை அப்படியே ஒப்புவிக்க வந்த ஒழுங்காக ஆங்கிலமே பேசத்தெரியாத கொலைவெறியனின் பேச்சை “பேய்க்காட்டலை” வெளிநாட்டு மக்கள் எவ்வளவு காலம் ஏற்றுக்கொள்வார்கள் ?
என்னதான் பச்சோந்தியாக இருந்தாலும் நீலன் திருச்செல்வத்தை மகிந்த என்ற முழு முட்டாளுடன் எப்படி ஒப்பிடலாம்?
மகிந்த வந்த விடயத்தை இரகசியமாக சாதித்துவிட்டு பெரும்போக்காக நம்மை ஏமாற்றிவிட்டானே யாருக்கு தெரியும். நாம்தான் சிறிய வெற்றிகளிலும் பெரு உவகை அடையும் குறும்புத்திகாரர் ஆயிற்றே.
ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது அதை அடைவதற்கு நாம் சாதகமான வழிகளை பயன்படுத்திக்கொள்ள முற்படுவதே நமது முக்கியமான குறிக்கோளாகும் அதை விட்டு சந்தா்ப்பவாத மேற்குலகையோ மேலாதிக்கவாத வழிவந்த மகிந்தவையோ அவா்களுக்கு முண்டு கொடுக்க முனையும் அற்ப மனிதா்களையோ இல்லை இவா்களது படிப்பு தகமைகளையோ யாருக்கு தேவை.
நமக்குத்தேவை சந்தா்ப்பங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்தும் திறன் மற்றயபடி வல்லாதிக்கா்கள் எல்லோருமே தமது இலாபத்திற்காகவே காய்களை நகா்த்துவார்களே அன்றி மனித குலத்தின் கரிசனையில் யாரும் தங்கள் நேரத்தை செலவிடுவதில்லை.
தீா்ப்பு கூறுவதிலேயே யாவரும் இருப்பது வேதனைக்குரியது ஒரு மனிதரின் செயல்பாடுதான் நமக்கு முக்கியம் அவரின் தகமை நமக்கு வேண்டியதில்லை. பிறேசில் நாட்டை எட்டு வருடங்களாக சிறப்பான ஆட்சி செய்தவா் லூலா அவா் படித்தது ஆரம்பக்கல்வி மட்டுமே.
அம்புலிமாமா கதை படித்து வளர்ந்தது காரணமாக இருக்கலாம் குமார்.
மகிந்தவை பேச விட்டிருக்க வேண்டும் – முழுமையாகக் கேள்வி கேட்கும் உரிமை இருக்கும் பட்சத்தில். பேராசிரியர் இதனைத்தான் சொன்னதாக இலங்கை ஊடகங்கள் கூறின. துரதிஷ்ட வசமாக யாழ் பல்கலைக் கழகத்திற்குள் ஜேவிபி சார்பான பல்கலைக் கழக மாணவர் சம்மேளன மாணவர் தலைவர்கள் நுழைய விடாமல் தடுக்கப் பட்டது குறித்து இவர் எதுவும் சொல்லவேயில்லை.
இதன் பொருள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நான் கண்டிக்கிறேன் என்பதல்ல. மகிந்தவை அம்பலப் படுத்துவது எமது உரிமை. அவரைப்பேசவிட்டு அம்பலப்படுத்தியிருக்கலாம்.
இதுவரை காலமும் மகிந்த பேசி அம்பலப்படவில்லை. இனிப் பேசி யாருக்கு என்ன பலன்? இலங்கையில் பேச்சு சுதந்திரம் இல்லையே என்ற கேள்விக்கு பதிலே சொல்லாத பீரிசு மகிந்தவிடம் கேட்டிருந்தால் வெட்டிவிழுத்தித்தான் இருப்பார். மகிந்த ஏன் இங்கிலாந்திற்கு வந்தார், என்னத்தை சாதிக்க இருந்தார் என்பது தெரியாமலா இவ்வளவு கவலை கொள்கிறீர்கள்?
எனது கருத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அல்ல. மாறாக அதனூடாக எதனைச் சாதிக்க வேண்டும் என்பதையே குறிப்பிடுகிறேன். மகிந்தவை பேச விடாமல் தடுத்ததால் எதனைச் சாதித்துள்ளோம்? வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் மக்களை விரட்டி ஊர்வலங்களை மகிந்தவின் ஆட்கள் நடத்தியாயிற்று. “பாதுகாப்பு” காரணங்களிற்காகத்தான் மகிந்தவின் உரை ரத்து செய்யப்பட்டதாக ஒக்ஸ்போட் யூனியன் கூறியாயிற்று.
எனது கவலை மகிந்த பேசிக் கிழித்துவிடப் போவதை விட பேச்சு மறுக்கப்பட்டதால் அதிகம் சாதித்து விடப் போகிறானே என்பது தான்.
பிரபாகரன் கோடி கோடியாக பணம் வாங்கி ராஜபக்சேயை ஆட்சிக்கு கொண்டு வந்ததை விட இது ஒன்றும் கொலை குற்றமல்ல .சும்மா அலட்ட வேண்டாம் தம்பீபியா சூரியா .
‘பிரபாகரன் கோடி கோடியாக பணம் வாங்கி ராஜபக்சேயை ஆட்சிக்கு கொணடு் வந்தார்’ . பதவிக்கு வந்த ராஜபக்ச கொத்துக்கொத்தா மக்களைக் கொன்றுகுவித்தார், இப்படியான போர் குற்றவாளி தான் செய்தது சரி என்று உலகம் பூராகவும் பறையடிக்க உங்களைப் போன்ற மேளங்கள்தான் தேவை. சும்மா நான் அலட்டவில்லை அண்ணாமலை.