மகிந்த ராஜபக்ச மரணிக்கும் வரை ஜனாதிபதியாகவிருக்க வழி செய்யும் 18 வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் இன்னமும்நடைபெறுகின்றன. சிங்கள் மக்கள் தம் மீதான அடக்கு முறைகளை உணர ஆரம்பித்துள்ளனர். ஜே.வி.பி அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து நடத்திவரும் அதே வேளை ஏனைய பல அமைப்புக்களும் ஆர்பாட்டங்களில் இணைந்த்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க எந்தப் போராட்டங்களையும் நடத்தவில்லை. எதிர்க்கட்சி என்.பிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர்.