இலங்கைக் கலைக் கலைச்சார திணைக்களம் மஹாவம்ச வரலாற்று நூலில் அத்தியாயம் ஒன்றை சேர்ப்பதற்காக நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. மஹாவம்சத்தின் ஆறாம் அலகை எழுதுவதற்காகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் அடியாட்கள் அடிக்கடி கூறுவது போன்று மகிந்த பௌத்தத்தை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த புதிய மன்னன் என்பதுவே இதன் சாராம்சமாக விளங்கும் என்பது வியப்புக்குரிய ஒன்றல்ல.
பேரினவாதத்தைத் தூண்டும் நோக்கோடு சிங்கள ஐதீகக் கதையான மகாவம்சம் பௌத்த சிங்கள அரசியல் தளத்திற்கு பிரித்தானிய காலனீய ஆக்கிரமிபாளர்களால் கொண்டுவரப்பட்டது. இன்று பேரினவாதம் இனச் சுத்திகரிப்பு என்ற நிலையை அடைந்துள்ளது. அதற்கான மகாவம்சத்தின் மீளமைப்பே இன்று நடைபெறுகிறது.
Sinhala Budhists are God – fearing people. What happened in East Pakistan in 1971 did not happen here,