தமிழ்ப் பேசும் மக்களின் இரத்தம் தோய்ந்த அவலங்களைத் தமத் சொந்தப் பயன்பாட்டுக்கு உட்படுத்திக்கொள்ளும் நூற்றுக்கணக்கான மக்கள் விரோதக் குழுக்கள் நமது சமூகத்தின் விச வேர்களாக முளைவிட ஆரம்பித்துள்ளன. மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு மைத்திரிபாலவினதும் மேற்கு ஏகபோக அரசுகளதும் அடியாட்படைகளாகச் செயலாற்றும் பல்வேறு தனி நபர்களும் அமைப்புக்களும் எமது சமூகத்தை ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே தலைகீழாகப் புரட்டிப் போட்ட அவலத்தை அனுபவிக்கிறோம்.
மைத்திரி அரசில் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஜனநாயகத்தை மக்களைத் தற்காத்துக்கொள்ளும் அரசியலுக்காகப் பயன்படுத்த நம் மத்தியில் அரசியல் தலைமைகள் இல்லை.
மகிந்த எதிர்ப்பு என்ற அரசியலை மற்றொரு பேரிவாத அரசை நிறுவுவதற்காகக் குறுக்கி, இதுவரைகால இழப்பையும் எரியும் உணர்வுகளையும் மைத்திரியின் காலடியில் ஒப்படைத்தவர்கள் சமூகப்பற்றற்ற பிழைப்புவாதிகள்.
இதன் மறுபக்கத்தில் மைத்திரி எதிர்ப்பு என்று மழைக்காலக் காளான்கள் போலப் புதிதாக முளைவிடும் மகிந்த ஆதரவுக் கும்பல்கள் அடையாளம் காணப்பட வேண்டும். இவர்களின் முதலைக் கண்ணீர் மக்களுக்கனதல்ல! மகிந்தவிற்கானது!!
இந்திய அரசின் அடியாள் படையான வரதராஜப்பெருமாளின் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, மகிந்த அரசோடும் அதன் அமைச்சர்களோடும் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்த பிரான்ஸ் தலித் முன்னணி போன்றவற்றின் உறுப்பினர்கள் இணைந்து சமவுரிமை இயக்கம் என்ற அமைப்பின் ஊடாக இலங்கை அரசிற்கு எதிராகப் போராட்டம் ஒன்றைப் பிரான்சில் நடத்தியுள்ளனர்.
சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்யுமாறு இவர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். இதே சிறைக்கைதிகள் மகிந்த அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்கிரவதை செய்யப்பட்ட காலத்தில் மகிந்த அரசோடு தேனிலவு சென்றுவந்தவர்களுக்கு இன்று கைதிகள் மீது திடீர் அக்கறை பிறந்த அருவருப்பைச் சமவுரிமை அரசியல் என்கிறார்கள்.
தாம் சார்ந்த சமூகத்திற்காகப் போராடவென தமது வாழ்கையை அர்ப்பணித்துச் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவிக்கும் போராளிகளைக் கூட இவர்கள் விட்டுவைக்கத் தயாரில்லை.
தனது தோற்றம் முதலே சுய நிர்ணைய உரிமையை என்ற அடிப்படை முதலாளித்துவ ஜனநாயகத்தையே மறுக்கும் சமவுரிமை இயக்கம் தன்னளவிலேயே ஜனநாயக மறுப்பையும் பாசிசத்தையும் உள்வாங்கியுள்ளது. இதனால் மகிந்த பாசிசத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது சம உரிமை இயக்கத்தின் அரசியல்.
ஈழத்திற்காகப் போராடுகிறோம் என்று இந்திய உளவு அமைப்புக்களோடும், மகிந்தவிற்கு எதிராகப் போராடுகிறோம் என்று மைத்திரியோடும், மைத்திரிக்கு எதிராகக் குரல்கொடுக்கிறோம் என்று மகிந்த பாசிஸ்டுக்களோடும் இணைந்துகொள்ளும் கும்பல்கள் எமது சமூகத்தின் சாபக்கேடுகள்.
“சுய நிர்ணைய உரிமையை என்ற அடிப்படை முதலாளித்துவ ஜனநாயகம்” …????
சுயநிர்ணய உரிமை என்பது முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முற்றிலும் தவறான விளக்கம்.
சுயநிர்ணய உரிமையினை முன் வைத்தது கமியூனிசமே. இது கம்யூனிச தீர்வாக தேசிய இனங்களின் இடையேயான சந்தேகங்களை தீர்ப்பதற்க்காக இ தேசிய இனங்களை ஒன்றிணைக்கும் ஜக்கியத்திற்க்காக மாபெரும் ஆசான்கள் லெனின், ஸ்டானின் அவர்களால் முன்வைக்கப்பட்டது.
சுயநிர்ணய உரிமை என்பது முதலாளித்துவ ஜனநாயகம் என்பது: முதலாளித்துவத்தின் சுரண்டல் நலன்களிற்க்காக தேவையேற்படின் பிரித்து கனிமங்களையும் செல்வங்களையும் கொள்ளையிடவே!