நாவாந்துறையில் அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மர்ம மனிதர்கள் வீடு ஒன்றினுள் நுளைய முற்பட்ட வேளையில் மக்கள் அவரை பிடிக்க முற்பட்டனர். அவர் இராணுவ முகாமிற்குள் சென்று மறைந்துவிட்டார். பொதுமக்கள் ஒன்று திரண்டு முகாமைச் சுற்றிவளைத்துப் போராட ஆரம்பித்துள்ளனர். இராணுவம் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து பயமுறுத்தியுள்ளது.
வடமராட்சியின் வதிரி ஆலங்கட்டை மயானத்தையண்டிய பகுதியில் நபரொருவர் இரவு வேளை வீடொன்றினுள் உள் நுழைந்துள்ளார். பொதுமக்களிடம் அகப்பட்டுக்கொண்ட அவரை வெள்ளை வானில சென்ற படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
மக்கள் அவரைத் தம்மிடம் கையளிக்கக் கோரி முகாம்களுக்கு அருகில் போராட்டம் நடத்துகின்றனர். படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பொதுமக்களில் சிலர் காயமடைந்தாகக் கூறப்படுகிறது.
அரச படைகளின் அடாவடித்தனங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்கின்றன. இலங்கை அரச சமூக விரோதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது. இலங்கைக்கு வெளியில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களும், ஜனநாயக முற்போகு சக்திகளும் இப் போராட்டங்களுக்கு ஆதரவு வாழங்க வேண்டிய பொருத்தமான சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
The signal comming out from Eelam is a start of people revolution, like in arabs..
we diaspora should full effort to bring these people revolution heard by international community.
We all have work together without group politics/identities.
நாய்கள் அதிலும் சொரி நாய்கள் வீடுகளூக்குள் வந்து வம்பு செய்வதை நாகரிக சமுகம் அனுமதிக்க முடியாது.இதற்கு முடிவு கட்ட வேன்டிய கடமை நம் முன்னே
அரச , இராணுவ அடக்கு முறைக்கு எதிரான எழுச்சிதான் இது. இது வெல்ல வேண்டுமனால்
சிங்கள மக்களினதும் ஆதரவு வேண்டும். தமிழ் தேசிய சாயம் பூசினால் சிங்கள்வர்களிடயே ஒற்ருமையையும் வளர்ப்பது மட்டுமல்ல, தமிழர்கழும் அழிவிற்குள்
தள்ளப்படுவார்கள். புலம்பெயர் பணம் சுருட்டிகளின் எதிபார்ப்பும் இதுதானே.-துரை
தாயகத்தில் மக்களால் பேச முடியாது. அங்கு அரசியல் தளம் இல்லை களம் இல்லை என்று
புலம்பெயர் நாடுகளில் புருடா விட்டவர்கள், நாவாந்துறையில் நடந்ததை அறிவார்களா?
இராணுவத்திற்கெதிராக மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். சரியான தலைமை அங்கு தேவை.
இங்கு செத்த வீட்டிற்கும், பிறந்த நாளுக்கும் தினமும் அறிக்கைவிடுபவர்கள் பாடு படுதிண்டாட்டம்
கோத்தபாய அதிபர் பதவியை நோக்கி மிக சாதுரியமாக நகர்ந்து கொண்டிருக்கிறார் போல் தெரிகிறது. அவர் நினைத்தை அடையும் மனிதர்!
குடுகுடுப்பை, சரியாத்தான் விஷயத்தை பிடிச்சிருக்கு.