இனப்படுகொலை, போர்க்குற்றம், சிங்கள – பௌத்த மேலாதிக்க ஆணவம், சர்வாதிகாரம், இனச்சுத்திகரிப்பு, பேரினவாதம் அனைத்தையும் ஒருங்கு சேரப் பிரதிநித்துவம் செய்யும் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு வந்திறங்கிய வேளையில் புலம் பெயர் தமிழர்கள் தமது கோபத்தை வெளிப்படுத்த தம்மாலான அனைத்தையும் மேற்கொண்டனர். உறைய வைக்கும் குளிர்காற்று, பனி மழை, காலநிலையால் ஒழுங்கற்றிருந்த போக்குவரத்து என்ற எதுவுமே மகிந்தவிற்கு எதிரான மக்கள் எழுச்சியைத் தடைசெய்யவில்லை. யார் அழைப்புவிடுத்தார்கள், எங்கு போராட்டம் நடக்கிறது என்ற இன்னொரன்ன விபரங்களை எல்லாம் ஆர்ப்பாட்டங்களுக்கு வந்தவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. மக்கள் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்தார்கள்.
விமான நிலையத்தில் ஆரம்பித்து மகிந்த எங்கெல்லாம் செல்கிறார் என அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் மக்கள் அவரைப் பின் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
பயன்படுத்தப்பட்ட போராட்டம்
மக்களின் தன்னிச்சையான எழுச்சிக்குப் பின்னணியில் இலங்கை அரச அடக்குமுறை மீதான அவர்களின் தார்மீகக் கோபக்கனல் மட்டும்தான் எரிந்துகொண்டிருந்தது. இதுதான் இந்த ஆர்ப்பாட்டத்தின் கருத்தாடல்கள் குறித்த முக்கிய புள்ளி. மக்கள் எழுச்சியையும், அவர்களின் கோபத்தையும் பிரித்தானியாவில் ஏற்கனவே சிதைவுபடிருந்த புலி ஆதரவுச் சந்தர்ப்பவாதிகள் பயன்படுத்தி அதனைத் தமது எழுச்சியாக காட்ட முனைந்ததனர்.
தமது வியாபார அரசியலை மறு ஒழுங்கமைப்புச் செய்வதற்கான தந்திரோபயமாகப் புலிக் கொடியோடு வந்திறங்கிய சிலர் அவற்றை வினியோகிக்க ஆரம்பித்தனர்.
தாம் சார்ந்தவர்களைப் புலி கொடிகளோடு ஆர்பாட்டத்தின் முன்னணியில் நிறுத்தினர்.
மக்களின் அழிவைத் தமது வியாபார அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்ட அவமானகரமான ஒரு கூட்டம் இப்போது மக்களின் உணர்வுகளையும் அவர்களின் போராட்டங்களையும், தம்மை மறு ஒழுங்கமைப்புச் செய்வதற்காக தமது வியாபார அரசியலை மீள் கட்டமைப்பதற்காகவும் பயன்படுத்திக்கொள்கிறது.
சிதைந்திருந்த புலியாதரவு அமைப்ப்புக்கள்
புலம் பெயர் நாடுகளில் புலி ஆதரவு அமைப்புகளாகக் கருத்தப்பட்ட பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் பல உட் கூறுகளாகச் சிதைந்திருந்தன.
1. கே.பி யை மையமாகக் கொண்டிருந்த இலங்கை அரச உளவாளிகளின் வலைப்பின்னல் சார்ந்த கூறுகள்.
2. கே.பி குறித்த மெதுமையான போக்குடைய நாடுகடந்த தமிழீழம் சார்ந்தவர்கள்.
3. நெடியவன் சார்ந்த அல்லது முன்னைய புலிகளின் வழிமுறையை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் புலி சார் அடிப்படை வாதிகள்.
4. ஏற்கனவே மக்கள் பெருந்தொகையான பணத்தைத் தமதாக்கிக் கொண்டு அரசியலிலிருந்து விலகிச் சென்றவர்கள்.
5. கடந்த காலத்தை விமர்சன அடிப்படையில் நோக்குகின்ற நேர்மைமிக்க தூய தேசியவாதிகள்.
இக்கூறுகள் அனைத்துமே வன்னியிலிருந்த புலிகளின் தலமையின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்த “கட்டமைப்பு” என்ற அழைக்க்ப்பட்ட பிரிவினரையும், அவர்களின் ஆதரவுக் குழுவாகச் செயற்பட்ட “அரசியல்” பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்த இரு பிரிவுகளிடையேயும் ஒருவகையான நிர்வாகச் சமரசமும் முரண்பாடுகளும் நிலவிவந்தன.
இந்த ஐந்து கூறுகளிலும் முதல் மூன்று பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற பெரும்பாலானோரிடமும் புலம் பெயர் நிதி திரட்டலோடும் அதன் கையாள்கையோடும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகள் இருந்தன. பணம் குறித்த முரண்பாடுகளும் மகிந்த வருகையின் முன்னர் உச்ச நிலையை அடைந்திருந்தன. மாவீரர் தின நிகழ்வில் சேகரிக்கப்படுகின்ற பணத்தைப் பயன்படுத்தும் முறை குறித்தும் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருந்தன.
மகிந்த வருகைக்கு முன்னர் நேர்மைமிக்க தூய தேசிய வாதப் போக்கைக் கொண்டிருந்தவர்களின் கைகள் ஒங்கியிருந்தன. பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் போக்கு அல்லது அதன் ஆரம்ப நிலை இவர்களிடம் உருவாகியிருந்தது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட புலிகளின் போராட்டதை விமர்சன அடிப்படையில் நோக்கும் மனோபாவம் உருவாகியிருந்தது. இன்னமும் குறுந்தேசிய வாதப் போக்கினையே கொண்டிருந்த இவர்களின் சிந்தனை மாற்றத்திற்கு எதிரான ஏனைய பிரிவினரின் நேரடியான போராட்டங்கள் பி.ரி.எப் போன்ற புலி சார் அமைப்புக்களில் ஆரம்பித்திருந்தது.
சரியானது தவறானது என்ற விவாதங்களுக்கு அப்பால் நூற்றுக்கணக்கான தூய தேசியவாத உணர்வுகொண்ட புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதியினராக இவர்கள் மாற்றமடைந்திருந்தனர். குறுந்தேசிய வாதத்தை எதிர்கொள்ளும் அரசியலின் நுளைவாயிலாக இவர்கள் அமையக்கூடிய நிலை காணப்பட்டது.
முள்ளிவாய்க்காலின் முன்பு, செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையிலிருந்த இவர்கள் சிறுபான்மையினரே எனினும், தோல்வியின் பின்னர் இவர்களின் ஆளுமை அதிகரித்திருந்தது.
மகிந்த ராஜபக்ச வருகையின் போதான ஆர்ப்பாட்டங்களைப் பயன்படுத்திக்கொண்ட முதல் நான்கு பிரிவினரும், தன்னிச்சையான மக்கள் எழுச்சியை புலிகளின் ஆதரவாளர்களின் எழுச்சியாக திசை திருப்பினர். மக்கள் பற்றற்ற இவர்கள் இதன் எதிர்விளைவுகள் குறித்துச் சிந்திப்பவர்கள் அல்ல. தமது ஆதிக்கத்தையும் அதனூடான அரசியல் வியாபார நலன்களையும் நிலை நிறுத்த இவர்கள் புலிக் கொடிக்கும் பின்னிருந்த அரசியலை அக்கொடியினூடாக முன்னிறுத்தினர்.
இவ்வாறு மக்களின் தன்னிழுச்சியை ஒழுங்கமைப்பதில் ஐந்தாவது வைகையான தேசியவாத சக்திகளின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்தது.
முதல் நான்கு வகையினரும் போராட்டத்தைத் தமது வியாபர அரசியலுக்குப் பயன்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஒழுங்கமைக்கும் வேலைமுறைகளிலிருந்து அவர்கள் விலகியே இருந்தனர் என்பது பரவலாக அறியப்பட்டதாகும்.
போராட்டத்தைப் பயனபடுத்திக்கொண்ட இலங்கைப் பாசிச அரசு
மறு புறத்தில் இந்தப் போராட்டங்களைப் புலிகளின் போராட்டங்களாகக் வெளிக்காட்ட வேண்டிய தேவை மகிந்த ராஜபக்ச அரசிற்கு தேவையாக அமைந்தது.தவிர, இந்தப் போராட்டத்தைப் புலிகளின் போராட்டமாகச் சித்தரித்த இலங்கை அரசின் நோக்கத்திற்கு வலுச் சேர்த்த புலிசார் அரசியல் வியாபாரிகள் மகிந்த அரச பாசிசத்தின் வேர்களை ஆழப்பதிபதற்கு இன்னொரு வழியைத் திறந்துள்ளனர்.
புலிக் கொடி என்பது இங்கு ஒரு குறியீடு என்பதைத் தவிர அதன் பின்னணியிலிருந்த அபாயகரமான அரசியல் ஏற்படுத்திய அழிவுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக உலகின் அனைத்துப் பாசிச அரசுகளும் அதிகாரவர்க்கங்களும் மக்கள் எழுச்சிகளை குறுங்குழு வாதிகளின் போராட்டங்களாகச் சித்தரித்து மக்களின் பெரும்பகுதியினர் தமது பக்கம் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்து வழமையான ஒன்று.
அதிலும்கூட புலிகள் என்ற அமைப்பின் மனித உரிமை மீறல்களையும், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அவர்கள் சார்ந்த உறுப்பினர்கள் பலரே ஏற்றுக்கொள்ளும் நிலையில் இப்போராட்டத்தை புலிகளின் போராட்டமாகச் வெளிக்காட்டுவதனூடாக தம்மைப் பலப்படுத்திக்கொள்கிறது இலங்கை அரசு.
இவ்வாறு அரசியல் வியாபாரத்தை நோக்காகக் கொண்ட புலம் பெயர் புலி ஆதரவாளர்களதும் இலங்கை அரசினதும் நோக்கங்கள் ஒரு புள்ளியில் இணைகின்றன.
வலுப்பெறும் பேரினவாதிகள்
இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள மக்கள் மத்தியில் இந்தப் போராட்டத்தைப் புலிகளின் போராட்டமாகச் நம்ப வைப்பதில் அரச தரப்பு வெற்றி கண்டுள்ளது. போர்க்குற்றங்களையும், இனப்படுகொலையையும், பாசிசத்தையும் எதிர்த்த சந்தர்ப்ப வாதிகளும், வாக்குக் கட்சிகளும் பேரினவாததின் பக்கதில் ஒரே நேர்கோட்டில் பயணம்செய்ய ஆரம்பித்துள்ளனர். அரச பாசிசத்திற்கு எதிரான குரல் வலுவிழந்துள்ளது.
முரண்பாடுகள் தணிந்துள்ளன. எதிர்க்கட்சியின் முக்கிய பிரமுகர் சஜித் பிரேமதாச பெரும்பான்மைச் சிங்கள மக்களின் அபிப்பிராயம் புலியெதிர்ப்பு நிலையிலிருந்து மகிந்த ராஜபக்சவின் ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தியுள்ளது என்பதை உணர்ந்துகொண்டுள்ளார். அரசு போர்க்குற்றங்கள் புரியவில்லை என்கிறார்.
போராட்டம் என்பது வெறுமனே புலிகளின் ஆயுதக் கிளர்ச்சி அல்ல, தமிழ்ப் பேசும் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என உணர ஆரம்பித்த சிங்கள மக்கள் மத்தியிலிருந்த ஜனநாயக சக்திகள் இந்தப் போராட்டங்கள் புலிகளின் போராட்டங்கள் என்றதும் பின்வாங்க ஆரம்பிக்கின்றனர். புலிகளால் அப்பாவிச் சிங்கள மக்கள் கொன்றுபோடப்பட்ட வேஎளையில் எதிர்ப்புக்குரல் கொடுத்த ஆயிரக்கணக்கான மனிதாபிமானிகள், ஜனநாயக சக்திகள், லசந்த விக்கிரமதுங்க, போத்தல ஜெயந்த, ஜெயதேவ உயாங்கொட போன்ற ஊடகவியலாளர்கள் போன்றோரின் குரல்கள் மக்கள் ஆதரவுடன் மேலும் நசுக்கப்படுவதற்கு மகிந்த அரசின் “புலம்பெயர் புலிகள்” பிரசாரம் உதவிபுரிந்துள்ளது. மறு புறத்தில் புலிக் கொடியின் பின்னணியிலிருந்த அரசியல் உதவிபுரிந்துள்ளது.
இதுவரைக்கும் ஜே.வி.பியின் போராட்டங்களிலிருந்து ஆங்காங்கே நடைபெறும் ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் சிங்கள மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தது. அவர்களின் அரசிற்கு எதிரான சிறிய வெற்றிகள் நம்பிக்கை தருவனவாக அமைந்தன. தவறாகப் பயன்படுத்தப்பட்ட போராட்டத்தின் பின்னான இலங்கைச் சூழல் பேரினவாதிகளைப் பலப்படுத்தியுள்ளது.
சிங்கள அரசியல் தரப்பிடமிருந்து வெளியான காணொளிகள் பிரித்தானியாவின் மக்கள் மட்டத்தில் பொது அபிப்பிராயத்தை மாற்றுவதாக அமைந்திருந்தது என்பதையும் போராட்டங்களின் வெற்றிக்கு அது பிரதான பாத்திரம் வகித்தது என்பதையும் இங்கு குறித்தக்காட்டலாம்.
வெற்றிகள்:
ஆக, பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்கள் சில வெற்றிகளை பெற்றெடுத்திருக்கின்றன.
1. சர்வாதிகாரி மகிந்தவின் அரசிற்கு எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த பய உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
2. போராட்டங்களில் நம்பிக்கையற்றிருந்த மக்களுக்கு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளது.
3. அரச ஆதரவு புலம்பெயர் வலைப்பின்னலைப் பலவீனமாக்கியுள்ளது.
இப்போராட்டத்தில் முன்னைய தோல்வியுற்ற அரசியல் புகுத்தப்பட்டதன் தோல்விகள் எதிர்கொள்ளப்படவேண்டும்.
தோல்விகள்:
1. “புலிகள்” அடையாளம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அர்ச எதிர்ப்பாளர்களைப் பலவீனப்படுத்தியுள்ளது.
2. பேரினவாத சக்திகள் ஒரணியில் திரள வாய்ப்பளித்துள்ளது.
3. புலிகளின் அரசியல் மக்கள் போராட்டத்தில் புகுத்தப்பட்டதானது அவர்கள் மத்தியிலிருந்த அடிப்படைவாதிகளைப் பலப்படுத்தியுள்ளது.
4. மக்கள் போராட்டங்கள் புலிகளின் போராட்டங்களாக தொடரும் அபாயம் தோன்றியுள்ளது.
5. உலகம் முழுவதும் போராடும் மக்கள் பகுதியினரிடமிருந்து தொடர்ந்தும் குறுகிய குழுவாகி அன்னியமாகும் நிலை காணப்படுகிறது.
6. புலிகள் சாராத மக்களிடமிருந்து போராட்டங்கள் அன்னியமாகும் சூழல் உருவாகியுள்ளது.
7. புலிசார் அரசியல் வியாபாரிகளின் கரங்கள் ஓங்கியுள்ளன.
ஆக, இவ்வாறான போராட்டங்களும் அவை சார்ந்த நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கப்படும் போதெல்லாம் போராட்டங்களுக்கான சரியான அரசியல் வழிமுறை தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஜனநாயக சக்திகளதும், முற்போக்குத் தேசியவாதிகளதும், இடதுசாரிகளதும் ஒருங்கிணைவும் செயற்பாட்டுத்தளத்தில் அவர்கள் சரியான அரசியலை முன்வைத்தலும் தோல்விகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் சமூக அரசியல் நெறிகளாக அமையும்.
தேவையான நேரத்தில் எழுதப்பட்ட யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கட்டுரை. புலம்பெயர் நாடுகள் அனைத்துக்கும் பொருந்தக் கூடியது இக்கருத்துக்கள். இப்படியான கட்டுரைகள் வேறு இணையத்தளங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும். அதன்மூலமாக வேறுபலரும் பார்த்துத் தமது கருத்துக்களை மீள்பரிசீலனை செய்வதற்கேதுவான உந்துசக்தியைப் பெற்றுக்கொள்ள முடியும். செய்வீர்களா?
Fine. thank you.
தமக்கு வேண்டிய சீவியம் நடத்த வெண்டிய தமிழர் மீது அரசு கோபத்தைக் காட்டலாம் அதன் அடக்குமுறக் கரங்கள் நீளலாம்.சிங்களம் தன்னைத் புலம்பெயர்ந்த தமிழர் இங்கிலாந்தில் அவமதித்து விட்டதாய் உணர்வதால் நம் மீதான அதன் கழுகுப் பார்வை விழிப்படையும்.இலங்கை அரசானது தன்னைத் திருத்தாதவரை அதன் மீதான் கோபம் புலத்தில் தொடரவே செய்யும்.
மிக அருமையான ஆய்வு. புலம் பெயர்நாடுகளில் நாற்காலிக்காகவும் காசுக்காகவும் அரசியல் கதைக்கும் கூட்டம் வளர்ச்சி பெறுகிறது என்றால் அதற்கு எதிராக செயற்பட வேண்டும்.
great article which is useful to understand the aspect of diaspora pro LTTE demos. obviously it has an affect on our politics, but as the author says we have to define the track.
நாங்கள் புலிக்கொபடி பிடிபம் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை. கொம்மிஸ்ட் கொடியை வேண்டுமென்றா நீங்கள் பிடிக்காதங்கோ.
புலிக்கொடி இனி புலிகளின் சொத்தல்ல. அது தமிழர்களின் சொத்து. இதை யாரும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. புலிக் கொடி தமிழர்களின் குறியீடு. மாவீரர்களின் குறியீடு. தமிழீழத்தின் குறியீடு என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்வார் என நம்புவோம்.
யாருடைய சொத்தாகவும் இருந்துவிட்ட்ப்போகட்டும். ஆனல் அது ஒரு அரசியலின் குறியீடு நண்பரே. அந்த அரசியல் அழிவும் அவலமும் கண்ட அரசியல். அதைவிடவும் புலிக்கொடியைப் பற்றி இங்கு சொல்லப்பட்டதை விடவும் அதன் அரசியல் பற்றித்தானே சொல்லபடுகிறது! உங்களுக்கு ஈகோ பிரச்சனை இருந்தால் கொடியை சாமியறைக்கே வைத்து கற்பூரமும், செத்தல் மிளகாய் போட்ட சம்பிராணிப் புகையும் காட்டுங்கோவன். தெருவில காட்டி எல்லத்தையுமெல்லே சாம்பாரக்கிறியள்.
அவலம் – அழிவு – துயரம் இல்லாத போராட்டம் உலகில் எங்காயினும்
உண்டா தோழரே? ” புரட்சி என்பது மாலைநேர விருந்தல்ல!” -சொன்னவர்
யார்? மாஓ சே துங் என்று நினைக்கிறேன.
ஒரு புடலங்காய் வளர்க்கிறதே லேசில்ல இதில போராட்டம்,
புலிக்கொடி இனி புலிகளின் சொத்தல்ல. அது தமிழர்களின் சூத்துஇதை யாரும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. .புலிக் கொடி தமிழர்களின் கொலை கருவிமாவீரர்களின் ஆன்குறிஎன்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்வார் என நம்புவோம்.
தமிழர்களின் கொடி என்றால் ஆதி தமிழன் இலங்கை வேந்தனின் கொடி சேவற்கொடி தானே!!!
நாங்கள் புலிக்கொபடி பிடிபம் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை. கொம்மிஸ்ட் கொடியை வேண்டுமென்றா நீங்கள் பிடிக்காதங்கோ
”
இந்த புலிக் கொடிக்குப் பின்னால் பல்லாயிரம் குற்றங்கள் உள்ளன. அதற்கு டேவிட் நீங்கள் பொறுப்பெடுப்பீர்களா? புலிக் கொடிக்குப்பின்னால் உள்ள அந்த குற்றங்கள் குறித்து இந்த உலகத்திற்கு என்ன நியாயம் சொல்வீர்கள்? உங்கள் மீதே குற்றங்களை வைத்துக் கொண்டு எப்படி மக்களின் ஆதரவை பெற முடியும்?
இதயம்.. எல்லா தேசத்து எல்லாக்கொடிக்குப்பின்னலும் பல்லாயிரம் குற்றங்கள் உள்ளன, அது தெரியுமோ..அமெரிக்கக் கொடியாயினும், அவுஸ்த்திரேலியக்கொடியாயினும் ( அந்தநாட்டின் பூர்வீகக்குடிகளை அழித்தும் , துரத்தியும் விட்டு தங்கள் கொடியினை ஏற்றியவர்கள்- இன்று ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தானிலும் இவெர்கள் கொடியின் பின்னால் உள்ள துன்பம் தெரிந்ததே)சீனக்கொடியாயினும் ( திபெத் ஆக்கிரமிப்பு) சிங்கக்கொடியாயினும். எனவே தமிழர்கொடியாம் புலிக்கொடியினை பிடிப்பதில் பெருமையே ஒழிய , குற்றம் ஏதும் இல்லை.அன்றைய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் ஈடுபட்டபொழுது, ஒரு வெள்ளைக்கார மாது, பக்கத்தில் இருந்தவர்களிடம், யார் இவெர்கள்; யாருக்காக எதிர்ப்பைக்காட்டுகிறார்கள் என்று கேட்டபொழுது,பக்கத்தில் இருந்த்த்வர்கள் சொன்ன பதில் ,இவெர்கள் தான் தமிழ்ப் புலிகள். தமிழரை உலகுக்கு அடையாளம் காட்டியதே இந்தப் புலிக் கொடிதான். உங்களிமன் சொந்தப்பிரச்சனைகளுக்காகநாம் தமிழர் புலிக் கொடி பிடிப்பதை தவிர்க்க மாட்டோம். ஒரு வேளை அன்றைய ஆர்ப்பாட்டத்தில்நம்ம- பீக்- கட்சித் தலைவர் டக்கிளசின்( ஈ-பி-டி-பீ) வீணைக் கொடியை பிடித்து இருந்த்தால் என்ன சொல்லி இருப்பார்கள் தெரியுமோ.யாரோ கச்சேரி செய்ய வந்த கூட்டம் எண்டு- பலம் உள்ளவர்கள் குற்றம் செய்யலாம்- இதுவே இன்றையா உலகநியதி.
புலிக்கொடி ஒரு குண்டர் கும்பலின் கொடியே அன்றி தமிழர்களின் கொடி அல்லவே! அந்த ஒரு சிறு கும்பல்தான் தமிழர்களாயின் அந்த இனம் அடிமைகளாக வாழத்தான் லாயக்கு!! குரங்கின் கையில்ப் பூமாலையைக் கொடுப்பதில் யாருக்கு என்ன லாபம்???
35 இலட்சம் தமிழரில், 40 பது ஆயிரம் மாவீரரைத் தந்தவர்கள் உமக்கு ஒரு கும்பலோ ராசா. மாவீரர் தினத்தை கொலைகாரர் தினம் எண்டு சொன்ன “பீ” க் கட்சித் தலைவன் டக்கிளஸன் சீடனோ நீர். புலிகள் தவிர்ந்த மற்றைய போராட்டக்குழுக்கள் எத்தனை வீரர்களைநாட்டுக்காகக் கொடுத்து இருக்கினம் ராசா.நாட்டுக்கு எங்க கொடுத்தவை. தமிழர் போராட்டத்தை காட்டித்தானே கொடுத்தவை. மொத்தமாய் கூட்டினாலும் 3 ஆயிரம் தேருமோ தெரியாது. உண்மையிலியே குண்டர்கள் புலிகள் அல்ல,நீங்கள் தான் ராசா. குரங்கு கையில் பூமாலை கொடுக்கக்கூடாதுதான்,ஆனால் புலிகள் கையில் தாராளமாய்க் கொடுக்கலாம்.
மிகப் பெரும் அறிவாளியாரே உன் இனத்தில் எத்தனை பேரை நீ அழித்தாய் என்பதல்ல வரவேற்கத்தக்க சரித்திரம்!!!!! எத்தனைபேரை நீ காத்தாய் என்பதே என்றும் சரித்திரமாகும். உன்னுடைய அழிப்பின் உச்சக்கட்டம் தமிழ்ச்செல்வன். அவனின் மரணச் சடங்கின் படக்காட்சியை நன்கு உற்றுப்பார், உண்மை விளங்கும். நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக் காயம். எப்படி அது?????!!!!! விமானத்தில் இருந்து துப்பாக்கியால்ச் சுட்டானா ஆமி??!! உங்கள் மாலீரர்களில் ஒரு பகுதியினர் உங்களாளேயே கொல்லப்பட்டவர்கள். அப்போ அவர்கள் துரோகிகள். பாருங்களேன் உங்கள் துரோகி பட்டியலில் 99 வீதமானவர்கள் புலி அமைப்பினர் தான். துரோகிகளில் 99 வீதத்தை தனதாகக் கொண்ட ஒரு குழுவை நீங்கள் தமிழர்களின் மாவீரர்கள் என்பது தவறா??!!………………………………….இல்லை, நான் குண்டர்கள் என்பது தவறா???!!!………………………………..
A well balanced… analytical article
Navalan keep going…
பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல நானும் தமிழனென்று பிறந்து தமிழனையும் அறிந்திருந்தேன். இந்தத் தமிழர்களை ஒருங்கிணைத்து பிரபாகரன் என்ற தனிமனிதன் எப்படி பெரும் படையை உருவாக்கினான் என்று ஆச்சரியத்தோடு வியந்திருக்கிறேன். அதற்கான பதிலை முள்ளிவாய்க்கால் தந்துவிட்டது.
ஆயுதப்போராட்டம் தொடங்கியபோது நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன. அவை ஒருங்கிணைய முயன்றபோது இரத்தமும் சதையுமே மக்களை குளிப்பாட்டியது. மிஞ்சிப்பலம் பெற்றது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே. தமிழரல்லவா விட்டுவிடுவோமா உள்ளும் புறமும் இருந்து கருவறுத்து அந்த இயக்கத்தை, நந்திக்கடல்வரை கொண்டுசென்று வீழ்த்திவிட்டோம். அதைக் கொண்டாட வேண்டாமா? சபா நாவலன் போன்றோர் கட்டுரை எழுத, அதற்கு எத்தனை ஆனந்தமாக கருத்தெழுதி வக்கிரங்களையும் தீர்த்துக்கொள்கிறோம். எங்கேயும் தமிழினத்திற்கு ஒரு அடையாளமோ, தனித்துவமோ, தலைவனோ வந்துவிடக்கூடாது என்பதில் தமிழ் அறிஞர்களும் கூட மிகவும் அவதானமாகவே உள்ளனர்.
மகிந்தாவை எதிர்த்தாலென்ன, கட்டிப்பிடித்து கொஞ்சி மகிழ்ந்தாலென்ன. மகிந்தாமட்டுமல்ல எந்தச் சிங்களத் தலைவனோடும் கூடிக்குலவினாலும் இலங்கையில் மீதமாக இருக்கும் தமிழினமும் பூண்டோடு அழிக்கப்படுவது நிச்சயம். இது அனுபவத்தினால் காணப்படும் உண்மை. சபா நாவலன் போன்றோர் எழுதும் கட்டுரைகளும் கருத்தாக்கங்களும், முயல்கள் தங்களை தவணைமுறையில் சிங்கங்கள் உண்ணுவதற்கு ஒப்பந்தம் போட உதவலாம். என்முறை வரும்வரையில் நானும் சுதந்திரமாக உண்டு, உடுத்து, ஓடி, ஆடி வாழ வழிகிடைக்கலாம்.
புலிக்கொடி என்பது சர்வதேச சமுகத்தால் எவ்வாறு பார்க்கப் படுகின்றது? தவறான குறியீடாக!, ஏன்? அது எவ்வாறு நிகழ்ந்தது?
புலிகளின் அரசியல் படுகொலைகள்
புலிகளின் பலவந்தமான நிதிப் பறிப்பு
புலம் பெயர்ந்த நாடுகளில் அவர்கள் மேற்கொண்ட சட்ட விரோதமான நடவடிக்கைகள்
சிறார் ஆள்சேர்ப்பு இப்படி பல விடயங்களை கூறமுடியும்
இவை யனநாயக விரோதமான விடயங்கள் என்பதை புலிகள் இன்றுவரை ஏற்று கொள்ளவுமில்லை இப்போக்கினை மாற்றவும் அவர்கள் விரும்பவில்லை. 1980 களின் பிற்கூற்றிலும் 1990 களின் முற்கூற்றிலும் லோரென்ஸ், திலகர் கிட்டு போன்றோர் வெளிப்படையாக தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தனர், ஆனால் அதன் பின்னர் புலிகள் அவ்வாறு செய்ய முடியாமல் போனது அல்லது அதற்கு முயற்சிகவில்லை, அவர்கள் திரை மறைவில் ஒளிந்து கொண்டு தமது அரசியலை செய்ய முற்பட்டனர் அல்லது அதற்கு அவர்கள் பழக்கப் பட்டனர். ஒரு விடுதலை இயக்கம் திரை மறைவு வேலைகளை செய்வது ஒன்றும் புதினமானது அல்ல, ஆனால் அனைத்து விடயங்களிலும் திரை மறைவு வேலைகளை புலிகள் செய்து வருவதன் விளைவுகள் இன்றுவரை அனுபவித்து வருகின்றோம்.
புலிகள் என்ன செய்யவேண்டும்?
மறைமுக அரசியல் முறைமையை கைவிடவேண்டும், தங்களை அரசியல் இயக்கமாக சர்வதேச நாடுகளில் வளர்க்க வேண்டும் LTTE என்ற அடையாளம் அவர்களை சர்வதேச அங்கீகாரத்தை பெற தடையாக அமையுமானால் விடுதலை புலிகள் மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளை முன்னிறுத்தி சர்வதேச நாடுகளில் கிளைகளை பரப்பி தமிழ் மக்களின் விடுதலைக் குரலாக ஒலிக்க முடியும். முரட்டுத்தனமானதும், மொக்குத்தனமானதும், விவேகமற்ற உணர்ச்சிக்கு உட்பட்டதுமான வேலைத்திட்டங்கள் விடுதலை புலிகளுக்கு வெற்றியை தரவில்லை என்பதை உணரவேண்டும்.
நாம் புலிககொடியைத்தான் பிடிப்போம் நீங்கள் தேவையானால் கோமினிஸ்ட் கொடியை பிடிக்காமல் விடுங்கள் என்பதிலேயே அவர்களின் விளக்கமும், விளக்கம் இன்மையும் இருக்குமானால், தமிழின விடுதலை என்பது விடுதலை புலிகள், ஈழநாதம் பத்திரிக்கை மற்றும் இணையங்களின் வாயாடல்களில் மாத்திரம் முடியும். புலிகளின் கொடி தீண்டத்தகாதது அல்ல, ஆனால் புலிகள் தாங்களாகவே அது தீண்டத்தகாதது என்ற சூழலை சர்வதேச அளவில் ஏற்படுத்தி உள்ளார்கள். அதனை நீக்க வேண்டிய பணியினை புலிகள் விவேகமாக சிந்தித்தால் தான் முடியும் மாறாக வில்லங்கமாக சிந்தித்தால் முடியவே முடியாது.
சமாதான காலத்தில் புலம் பெயர் நாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய மக்களிடம் வலுக்கட்டாயமாக புலிகள் நிதி திரட்டினார்கள் இதனை சில மக்கள் ஆதாரங்களுடன் அந்தஅந்த நாடுகளின் தூதுவர் ஆலயங்களிலும், நாடுகளிலும் முறையிட்டுருக்கிறாகள், மற்றும் புலம் பெயர் நாடுகளில் புலிகள் பலவந்த நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் இவை அந்த நாடுகளுக்கு தெரியும் இதனை புலிகள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை ஏதொ தமிழர் தாயகத்தில் இரண்டு பவுன் நகை சேர்ப்பது போன்று நினைத்தார்கள். ஒரு நாடு தனது நாட்டின் பணம் சும்மா வேறு இடங்களுக்கு செல்வதை ஒரு போதும் அனுமதிக்காது, ஆனால் புலிகளோ பலவந்தமாக நிதிப் பறிப்பில் ஈடுபட்டால் அந்நாடுகள் எவ்வளவு கடுமையான விடயமாக அதனை பார்க்கும்? விரும்பி உதவி செய்வது கூட அபத்தமாகவே அந்நாடுகள் பார்க்கும். அதற்க்காக ஒரு விடுதலை இயக்கம் நிதி சேகரிப்பில் ஈடுபடாது இருக்க வேண்டும் என்பது அல்ல அதற்கான வழி முறைகளில் புலிகள் ஈடுபட்ட முறைகளில் மிகுந்த அடாவடித்தனம் இருந்தது உண்மையே. தமிழ் மக்களை முன்னுக்கு தள்ளி புலிக்கொடியை புலிகள் பிடிப்பதை விட்டு, புலிக்கொடிக்கு உரிய அரசியல் அந்தஸ்த்தை புலிகள் தமது சாணக்கியம் மூலமாக பெறுவதும்.சர்வதேச நாடுகளில் ஒளிவு மறைவற்ற முறையில் தமது அரசியல் இயக்கத்தையும் அலுவலகங்களையும் அரசியல் துறை முகவலர்களையும் நியமித்து அங்கீகாரத்துடன் இயங்குவதே சாலப் பொருத்தமாகும். இல்லையேல், (பலருக்கு சற்று கசப் பானாலும் கூட!) மக்களை முள்ளிவாய்க்கால் வரை கூட்டிச் சென்ற நிலைமையே ஏற்படும்.
அன்னையர் முன்னணி, சில டெலோ உறுப்பினர்களால் மற்றும் பொது அமைப்புகாளால் கருவூலம் செய்யப்பட்ட போங்கு தமிழ் எப்படி புலிகளால் குத்தகைக்கு எடுக்கப் பட்டு நாசமாக்கப் பட்டதோ அதே நிலைமை மீண்டும் வராமல் இருக்கவும் நாம் பார்க்க வேண்டும். புலிகள் வெளிப்படையான அரசியலை செய்வதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலையை விரைவு படுத்த உண்மையாக உழைக்கவேண்டும். ஆனால் புலிகளிடம் விரிந்த பார்வை வராத வரை இது சாத்தியமா?
ராகவன் அவர்களே, என் தொழில் நிமித்தமாக நான் வாழும் நாட்டில் நாடு பூராக கடந்த 30 வருடங்கள் பிரயாணம் செய்துள்ளேன். அப்போது தமிழ் மக்கள் சொன்னதையும் நான் அவதானித்ததையும் அடிப்படையாக வைத்துச் சொல்கிறேன்,
சண்டை, குத்துவெட்டு, அடிபிடி, பணப்பிரச்சனை, சீட்டுப்பிடித்து பணம் கொடுக்காதுவிடல், இப்படிப் பல பிரச்சினைகளில் குற்றவாளி தான் தப்புவதற்காக பொலிசாரிடம் சொல்லும் காரணம், எதிராளி புலி என்று.
அரசியல் அடைக்கல விண்ணப்பம் கொடுக்கும்போது, இராணுவத்தாலும் பிரச்சினை, புலிகளாலும் பிரச்சினை என்று கொடுப்பார்கள், ஏன் அப்படி என்று கேட்டால், அப்பதானே எம்மை இந்த அரசாங்கம் திருப்பி அனுப்பாது என்பர். உண்மையில் பலர் புலிகளுக்கு ஊரில் உதவிசெய்துவிட்டு வந்தவர்களாக இருப்பார்கள்.
புலிகள் பணம் சேர்க்கப் போகும் போது பங்களிப்புச் செய்ய விருப்பமில்லாதோர் பின்பு பொலிசில் முறைப்பாடு செய்யும்போது புலிகள் தம்மை மிரட்டினார்கள், அடித்தார்கள் என்றுதான் சொல்ல்வது வழக்கம்.
இப்படியாக தமிழரே புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கு ஆதாரம் நிறைவாக அளித்துள்ளார்கள். அதனால் புலிகள் பிழை விடவில்லையென்றோ அல்லது புலிகளுக்குப் பணம் சேர்த்தவர்கள் வெறும் அப்பாவிகள் என்றோ நான் சொல்லவில்லை. பணம் சேர்த்தவர்கள், பிரச்சாரம் செய்தவர்கள் பலர் எந்த முன் அனுபவமுமற்றோர். என்னைப் பிரதிநிதியாக்கினால் நான் நன்றாய்ப் பணம் சேர்பேன் என்றவர்கள் பலபேர். இவர்கள் பணம் கொடுத்த, கொடாத என்ற பாகுபாடின்றி சகல தமிழரின் முழுவிபரங்களையும் திரட்டி புலிகளின் தலைமைப் பீடத்திற்கு அனுப்பி பாரிய தகவல்ச் சேகரிப்பிற்கு வழிவகுத்தார்கள்.
இப்படியான பல காரணங்களால்தான் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அடையாளப்படுத்தி பின்பு தட்டைசெய்ய வழிகோலியது.
எந்த இளைஞர் இயக்கம் வன்முறையில் ஈடுபடாமல் இருந்தது? :
எல்லாம்தான் ஈடுபட்டது! றாகவன் ஸார் முதலில் புலியெதிர்ப்பு
மனநோயிலிருந்து விடுபடுங்கள் :பிறகு மக்களைப் புரட்சிக்குத்
தயார்ப்படுத்துங்கள் – யார் வேண்டாம் என்றார்கள?
அப்படின்னா தமிழர்கள் தங்களின் உண்மையான எதிரியை எதிர்க்கக்கூடாது! உங்களைப் போன்ற பேமாணிச் செக்கு மாடுகளின் கால்களில் மிதிபட்டுச் சாகவேண்டும். அப்படீன்னாத்தான் தப்பிப் பிழைத்த கொஞச இலங்கைத்தமிழனையும் உலகத்தை விட்டே அனுப்பலாம் என்ற நினைப்போ???!!!
Muttaal thanamaa sinthikirinka parthiparaasaran
புலிக்கொடி என்ற சின்னத்தை விட்டால் அவர்களிடம் வேறு என்ன இருக்கிறது வெளிக்கொணர அதை எப்போதாவது புலித்தலைமை கற்றுகொடுத்திருக்கிறதா?
யாருக்கெதிராக என்ன வகையில் போராட வேண்டும் அல்லது யாரிடம் மென்போக்கையும் யாரிடம் வன்போக்கை கடைபிடிக்க வேண்டுமென்ற திட்டமிடலாவது இருக்குமா? எல்லாத்திற்கும் ஒரே பதில் புலிக்கொடி. தற்போதைய போராட்டங்களை ஒழுங்குபடுத்தும் – – – தா போன்றோரை கேட்டால் தெரியும் அனுமதி பெற என்ன பாடுபடுகிறார்களென்று . இந்த புலிகொடியினால் போராட்டங்கள் தடைபடுமானால் அதைபற்றி கவலைப்படமாட்டாது இந்த கூட்டம் அப்படி கவலைப்படும் கூட்டமாக இருந்தால் புலிகளை யுகேயில் தடைசெய்யும் போது 2 லட்சம் பேரை கூட்டி உண்மையான மக்கள் சக்தி என்று காட்டியிருக்குமே தடையை நீக்க பாடுபடிருக்குமே. இதே சானல் 4 இல் புலித்தலைவன் ஒரு அவமான சின்னம் என்ற உண்மை காண்பிக்கபடும்போதாவது உண்மை உறைக்கட்டும்.
..நீங்கள் எந்த ராகவன்…? அங்கால கொழும்புப்பக்கம் ஒரு ராகவன் மகிந்த பின்னாடி வாலாட்டிக்கொண்டு முன்னும் பின்னும் திரிந்து அறிக்கை விடுறார். அந்த ராகவனாநீங்கள் ஜயா..?இல்லாத ஊருக்கு ஏனய்யாநீங்கள் எல்லாரும் தமிழருக்கு பாதை காட்ட முயல்கிறீர்கள். உபதேசம் சொல்ல்வது சுலபம், ஆனால் கடைப்பிடிப்பது…..கஸ்ரம் ஜயா.புலிகளை எதிர்ப்பவர்கள் எல்லாரும், புலிகள் முட்டாள்கள்; தாங்கள் அதிபுத்திசாலிகள் என்று சொல்கிறீர்கள்; அட முட்டாள்களே இவ்வளவு செய்யும் போது ,நீங்கள் புத்திசாலிகள் எங்கு போனீர்கள் இத்தனைநாளும்.இவ்வளவு பெரிய போராட்டத்தை காப்பதற்கு வழி அற்றுவிட்டு, இன்று இங்கு வந்து கதை, கதையாம், காரணமாம் சொல்லுறீர்கள்:
இவ்வளவு நாளூம் பதுங்கு குழிக்குள் வாழ்ந்து விட்டொம் இனிவரும் நாளீலாவது வெளீ உலகைப் தெரிந்து கொள்வது ஒன்றூம் தவறூ இல்லையே.
ராகவனின் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடுண்டு. ஆனால் நாங்கள் புலிக்கொடியைத்தான் பிடிப்போம் நீங்கள் வேண்டுமானால் கம்யூனிசக் கொடியைப் பிடிக்காமல் விடுங்கோ என்று சொல்பவர்கள் மட்டும் விடுதலைப் புலிகள் அல்ல. மேதகு பிரபாகரன் அவர்களைத் தலைவராகக் கொண்டு அவர்மூலமாகத்தான் எமக்கு விடிவுகிடைக்கும் என நம்பிச் செயற்பட்டடதுடன் இன்றைய யதார்த்தத்தைப் புரிந்து சபா நாவலனின் கட்டுரையை அற்புதமான கட்டுரை எனக்கூறிய என்போன்றவர்களும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள்தான் என்பதனையும் ராகவன் போன்றவர்கள் மறக்கக்கூடாது.
சரியாக சொன்னீர்கள் உமா எங்கு எப்போ எதை உயர்த்தி பிடிக்க வேண்டுமென தீர்மானிப்பதும் புத்திசாலித்தனம்தான். எப்போதும் ஒன்றையே எங்கும் தூக்கிபிடிப்பது எவ்வளவு பலவீனமென்பது முன்பு பலருக்கு புரியவில்லை இப்போ சிலருக்கு புரியவில்லை. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை இவர்கள் ஏன் போராட்டங்களை ஒழுங்கு படுத்துபவர்களின் வேண்டுகோள்களையும் ஏற்கிறார்கலில்லை.
ஏன்??
Well explanation S. G. Ragavan.
புலிக்கொடி இனி புலிகளின் சொத்தல்ல. அது தமிழர்களின் சூத்துஇதை யாரும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. புலிக் கொடி தமிழர்களின் குஞ்ஜு இதை யாரும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.
நண்பரே மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாமல் தங்கள் கருத்தை முன்வைத்தால் நன்று. மற்றவர்களில் பிழைகண்டு பிடிப்பவர்கள் தாங்களும் நல்லதோர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு எல்லா தளத்திலும் (அரசியல் , பொருளாதார , ராணுவ, ect) பலவீனமாக தமிழினம் இன்று இருப்பதற்கு ஸ்ரீ லங்கா அரசு, புலிகள், சர்வதேசம், மற்றும் மாற்றுக்குழுக்கள் உட்பட அனைவருமே காரணம்.
இவை யாவும் தம் தவறுகளை மூடி மறைக்க ,தம் பொறுப்புகளிலிருந்து தப்பிக்க, தம்மால் தமிழினத்திற்கு ஏற்பட்ட அழிவுகள் , அலைக்கழிவுகளை தமக்கு சார்பாக நியாயப்படுத்த, யதார்த்தத்தை தமிழினம் பார்க்க விடாமல் தடுக்க இன்னும்
வேறு பல காரணங்களிட்காக இன்று வரை பாவிக்கும் ஆயுதமே புலிக்கொடி.
புலிக்கொடி எல்லா முகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் தமிழின விரோதிகட்கு வசதியாகிவிட்டது. அதாவது புலிக்கொடி காவிய புலிகள் தேசியத்தையும், குருந்தேசியதையும் அவற்றிற்கு எதிரான கூறுகளையும் ஒரே சமயத்தில் கொண்டிருந்தது. அதேபோல் அரச பயங்கரவாதத்திட்கு எதிரான பயங்கரவாதத்தையும் புலிகளிற்கு எதிரான தமிழ் மக்கள், குழுக்கள் மீதான பயங்கரவாதத்தையும் ஒரே சமயத்தில் கொண்டிருந்தது.
ஆகவே புலிகள், பிரபாகரன் , 30 வருட போராட்டம் போன்ற புலிக்கொடி சார்பான அணைத்து பக்கங்களையும் ஆராய்ந்து பாராமல் கண்மூடித்தனமாக புலிக்கொடி காவுவது தமிழர்க்கு எதுவித பலன்களையும் தராது.
தவிற புலிக்கொடி தமிழின விரோதிகட்கு நன்றே உதவும்.
இனியொரு பல்வேறு கருத்துடையவர்களையும் – பல முரண் விமர்சனங்களைக் கொண்டவர்களையும் வாசகர்களாகக் கொண்டிருக்கிறது. ஆயினும் வீரன் போன்றவர்கள் இதற்கு அப்பாற்பட்டு செல்வதைக் காணமுடிகிறது. இது குறித்து இனியொரு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சபாநாவலனின் கட்டுரை கூறும் பொருள் – ராகவனின் பின்னூட்டங்கள் முக்கியமானவை. மேலும் மேலும் அழுத்திக் கூறப்பட வேண்டியவை. பரவலாக்கப்பட வேண்டிவை.
தமிழ்ச் சந்திரன் கூறுவது போல்>
புலிக்கொடி இனி புலிகளின் சொத்தல்ல. அது தமிழர்களின் சொத்து. இதை யாரும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. புலிக் கொடி தமிழர்களின் குறியீடு. மாவீரர்களின் குறியீடு. தமிழீழத்தின் குறியீடு என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்வார் என நம்புவோம்.
என்பது உண்மையாக வேண்டுமென்றால்>
1. கடந்த காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போரட்டத்தை ‘பயங்கரவாதப் போரட்டமாக” மாற்றிய சூழ்நிலைக்கான – அதற்கு ஏதுவான புலிகளின் செயற்படுகளுக்கான -காரணங்களை தமிழ் மக்கள் முன் வைக்க வேண்டும்.
2. சிங்களவர்கள் – முஸ்லிம்கள்> தமிழர்கள் எனத் தொடர்ந்த படுகொலைகளுக்கான காரணங்களை முன்வைக்க வேண்டும். படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பைக் கோரவேண்டும். படுகொலைகளால் விடுதலைப் போரட்டத்தை அழிவுப் போரட்டமாக மாற்றியமைக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பைக் கோர வேண்டும்.
3. இறுதி யுத்த்தின் போது தமிழ் மக்கள் மீது புரிந்த அடாவடித்தனங்களுக்கும் கொலைகளுக்கும் ஆன பழிபாவங்களுக்கு காரணங்களைக் கூறவேண்டும். அதற்கான மன்னிப்பையும் கோர வேண்டும்.
ஆக கடந்தகாலத்தைப் பற்றிய சுயவிமர்சன்றை வைக்க வேண்டும். இதனை விடுத்து மீண்டும் பழைய பாணியிலேயே அரசியலை – புலியிசத்தை – மீண்டும் நிலைநிறுத்த முனைந்தால் அது மக்களின் விடுதலைக்கெதிரானதாக அமையும் என்பதை மிகப்பெரும் துயர வரலாறு உணரத்தியிருக்pறது.
மகேந்திரா கூறுகிற>
மிஞ்சிப்பலம் பெற்றது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே. தமிழரல்லவா விட்டுவிடுவோமா உள்ளும் புறமும் இருந்து கருவறுத்து அந்த இயக்கத்தைஇ நந்திக்கடல்வரை கொண்டுசென்று வீழ்த்திவிட்டோம்
என்ற கருத்துக்கு எந்த நியாயங்களும் இல்லை.
புலிகள்தான் தங்கள் அழிவுக்கான பாதையையும் இட்டவர்கள். புலிகள் வளர்த்தெடுத்த கருணா – பிள்ளையான் – கே.பி மற்றும் இறுதிக்காலத்தில் புலிகளால் இனங்காணப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பலர் – என உள்ளுரிலும் சர்வதேசத்திலும் புலிகளின் அழிவுக்கு காரணமாக இருந்தவர்கள் புலிகளின் முக்கியதஸ்தர்களே.
எந்த அரசியலும் இல்லாத (- இராணுவ வாதத்தினையும்-பாசிச அரசியலைக் கொண்ட – ) புலிகளில் பலர் இறுதி நெருக்கடியில் – இராணுவ சுற்றி வளைப்பில் – நாங்கள் வெறும் கோழகைள் எனத் தம்மை இனங்காட்டி சரணடைந்திருக்கிறார்கள். ஒருநாள்-இரண்டு நாள் தங்களால் கடத்தி கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் இணைந்தவர்களையும் காடடிக் கொடுத்திருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் ஆயுதங்கள் மூலம் சரிக்கட்டிவிடலாம் என்ற மமதையில் போராட்டத்தினை ஆதரித்து நிற்க வேண்டியவர்களை எதிரிகளாக்கி> சுயநலமிக்க ஒரு கூட்டத்தை தங்கள் ஆதரவுத் தளமாக வளர்த்து அவர்களால் கைவிடப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டு> இறுதியில் மக்கள் அழியும் போது அதனையும் தடுக்க யாரும் அற்ற நிலையில் வைத்த ஒரு போராட்டம் நடத்திய பின்னர் – தனிமைப்பட்டுச் செல்வதை உணர்ந்த பின்பும் எந்த தந்திரோபய நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல் – மக்களை வைத்து தப்பி விடலாம் என போரட்டம் நடத்தி ….
அழிவுக்கு வேறு யாரையும் காரணம் காட்ட முடியாதது மட்டுமல்ல கூடவே மக்களையும் அழித்து – மக்கள் போரட்டத்தையும் அழித்து விட்டதற்கான காரணத்தைப் புலிகள்தான மக்களுக்கு கூறவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மக்கள் மீதான கொடுமைகளை வெளிப்படுத்தக்கூடிய – அதனை எதிர்க்கக்கூடிய ஒரு சுயாதீனமான எந்த சக்தியையும் ஒன்றில் தங்கள் உப உறுபபுபக்களாக்கியும் அல்லது அழித்தும் விட்டு> தற்போது மக்கள் அழிகிறார்கள். யாரும் ஏதுவும் செய்யவில்லையே எனக்கூறுவதிலும் நியாயமில்லை.
மக்கள் விடுதலையை நேசித்துப் போரடி> அதற்காக உயிரை அர்;ப்பணித்த – இன்றும் துயரங்களிற்கு உள்ளாகி வாழ்ந்து வருகிறவர்கள் மீது மக்கள் பற்றும் அன்பும் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் போன்றவர்களின் கேள்விகள் நீங்கள் கடந்து வந்த வரலாற்றில் சந்திக்காதவையாக இருக்கலாம். ஆனால்> புலிகளால் மக்கள் அனுபவித்த துயரங்களும் – துரோகத்தனங்களும் மிகக் கொடுமையானவை என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
இவற்றைப் பேசாமல் இருந்தமைதான் புலிகளுக்கு செய்த மிகப்பெரும் ஆதரவு. அதுதான் மக்கள் போரட்டத்தின் அழிவுக்கும் காரணமும்.
இனியொரு விதி செய்வோம் ….
கருத்துச் சுதந்திரத்;திற்கான உரிமைகளையாவது நிலை நிறுத்தப்பாடுபடுவோம்.
சரியான திசை வழியில் – சரியான திசை வழியை அறிவதற்கான பயணத்தை ஆரம்பிப்போம்.
நட்புடன்
விஜய்
வீரன் என்பவன் யார்? வென்றவன் வீரன். அவன் வெற்றிடைந்து விட்டால் அவனின் தவறுகள் பேசப்படுவதில்லை! அப்படியிருந்தும் பேசப்படுமாயின் அவன் மிகவும் நல்லவனாக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்!. புலிக்கொடியின் வெற்றிகளில் அதன் தவறுகளைப் பேசவே மக்கள் குலை நடுங்கினர். ஏனெனில் அது நலலவர்களின் வெற்றியல்ல. இப்போழுது அரசின் தவறுகளை மக்கள் கதைக்கிறார்கள். அப்படியாயின் அதன் அர்த்தம் என்ன??!! அது மட்டுமல்ல. இராணுவத்தைக் கொட்டனால் அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். கலைத்துக் கலைத்து விரட்டிப் பிடித்திருக்கிறார்கள். மக்கள் புலிக்கொடியிடம் அஞசி நடுங்கியது போண்று இந்த அரசிடம் அஞசவில்லை. விடுமுறைக்குச் சென்று திரும்பியவர்கள் எப்போ மீண்டும் போவோம் என ஆவலாய் உள்ளனர். இப்படியான சூழ்நிலைகளில் மக்களால் ஒரு நல்ல வீரன் ஆதரிக்கப் படுவானா??!! அல்லது ஒரு கெட்ட (விலைமாதர்க் கொப்பான)வீரன் ஆதரிக்கப்படுவானா??!! அப்படியிருக்க அந்த நரகாசுரக்கொடி எப்படித் தமிழர்களின் சொத்தாக முடியும்??
கெட்ட வீரனை ஒப்பிட விலைமாதர்தானா கிடைத்தது. அழுகிப் புழுத்துப்போன எண்ணங்களுடன் இலட்சக்கணக்கான தமிழரைக் கொன்றுகுவித்த சிங்கள அரசிற்கு புகழ்மாலை சூடுபவன் எழுத்துக்கள் குப்பையில் கூடப் போட அருகதையற்றது. கூலிக்கு மாரடிக்கும் இப்படியான ஒரு கூட்டம் ஏதொ ஓர் நிகழ்சி நிரலுடன் நாயா பேயா அலையுதே.
” இராணுவத்தைக் கொட்டனால் அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். கலைத்துக் கலைத்து விரட்டிப் பிடித்திருக்கிறார்கள்.” என்னே அநியாயம்!
ஆயுதம், குண்டுகள் முடிந்துபோனால் என்ன செய்ய முடியும்?
தமிழ் பெண்களை விசாரிக்கவென அழைத்துப்போய் கதறக்கதற கற்பழித்து, சித்திரவதைசெய்து கொடூரமாக கொலைசெய்தபின் அவற்றை படம் பிடித்து பின்பார்த்து இன்பம் அனுபவிக்கும் அரக்கர் கூட்டத்தை யாருடன் ஒப்பிடுவது? உங்களுடனா?
இப்படி எல்லாம் நடக்கும் என்றா நாமெல்லாம் நினைத்தோம்,சமாதானம் வருகிறது என்றூ கனவு கண்டொம் விதி மாவிலாறூ வடிவில் வருமென யாருக்குத் தெரியும்.
சூர்யா நான் சொல்ல வந்ததை, சொல்ல மறந்ததை, சொல்லாமல் விட்டதை நீங்கள் சொல்லியுள்ளீர்கள் நன்றி. எனது நண்பர் ஒருவர் கூறினார் புலிகளை தடை செய்வதர்த்க்கு தானும் ஒரு காரணம் என்று, ஏன் என்று கேட்டேன்? அவர் சொன்னார், தான் EPDP ஆதரவாளர் அதனால் புலிகளால் தனக்கு ஆபத்து என்று அரசியல் தஞ்சம் கோரும் போது கூறினாராம். இப்படி பொய்யாகவும் உண்மையாகவும் பலர் புலம் பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி உள்ளனர். இவ்வாறான விடயங்களில் புலிகள் தமது நிலைப்பாடுகளை சர்வதேச நாடுகளில் சமயோசிதமாக விளக்கி இருக்கவேண்டும்.
நீங்கள் எந்த ராகவன் என்று கேட்கும் வன்னியான், என்னை மகிந்தவின் பின்னால் வாலாட்டும் ராகவனா எனக் கேட்பதில் இருந்தே அவரின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த அவதானிப்பும் புரிதல் இன்மை பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். மகிந்தவின் பின்னால் வாலாட்டி திரிவதற்கு நான் ஒன்றும் பிரபாகரனால் வளர்க்கப்பட்ட ராகவன் அல்ல என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். ராகவன் மேதகு பிரபாகரனின் ஆருயிர் நண்பர், முன்னாள் புலிகளின் மத்திய குழு உறுப்பினர்.
வன்னியான் இன்னும் தகவல் வேண்டுமானால் கேளுங்கள் தரலாம். 1990 களில் இருந்து புலிகளின் புகார் பெட்டி கருத்து பெட்டி என்பவற்றில் போட்ட பல கடிதங்கள் இன்றும் புலிகளிடம் எங்கேனும் இருப்பின் அதனை படித்து பார்த்தால் அது இன்றைய காலாத்திர்த்க்கும்
பொருந்தும். (எங்களை போன்றவர்களின் கருத்துக்களை கேட்குமளவில் விடுதலை புலிகள் ஒன்றும் அறிவில் குறைந்தவர்கள் இல்லையே!) 1990 களின் நடுக்கூற்றில் ஐ நாவின் சிறுவர் பெண்களுக்கான ஆய்வறிக்கையாளரும் சந்திரிக்காவின் நண்பியுமான ராதிகா குமாரசாமி புலிகளுக்கெதிரானதும் ஈழவிடுதலை போராட்டம் குறித்த தவறான புரிதலும் காரணமாக அரச படைகளினதும் அரசினதும் அடக்கு முறைகளையும் புலிகளின் ஆயுத போராட்டத்தின் விளைவுகளாக ஏற்பட்டவையாகவே கருதினார். அந்த கருத்தியலை நேரடியாகவும், பத்திரிக்கை வாயிலாகவும், இன்னும் பல அவரின் தொடர்பாளர்கள் மூலமாகவும் மாற்றி அமைத்தவன் நான் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் சொல்ல விரும்புகிறேன். இவைகளை இலங்கையில் மிகவும் ஆபத்தான கால கட்டங்கள் நிலவிய சூழலில் அதுவும் கொழும்பில் இருந்தே செய்தேன். அதன் பின்னரே கவுரவ ராதிகா குமாரசாமி தமிழ் மக்கள் மீது மேர்த்கொள்ளப் பட்ட மனித உரிமை மீறல்கள் பலவற்றை தேடி ஆவணப் படுத்தும் முயற்ச்சியில் இறங்கினார். ஐநாவில் அதனை ஆவணமாகவும் சமர்ப்பித்தார்.
தோழரே சகோதரரே அன்புடன் எனதருமை வன்னியானே நான் வேலையில்லாமல் வெங்காயம் உடைக்கவில்லை. பல பத்திரிகைகளில் பத்து பைசா பணமும் இல்லாமல் என் இனத்தின் மேல் கொண்டிருந்த பற்று காரணமாக பலவற்றை எழுதி தீர்த்தேன். இந்த நேரத்தில் புலம் பெயர் நாடுகளின் பினாமி பத்திரிகைகளில் குப்பைகளை எழுதி இருந்தாலும் ஈரோ வையும், டொலரையும் பவுன்சையும் சம்பாதிக்க முடியும்.
மாமணி சொன்ன புலிக்கொடி என்ற சின்னத்தை விட்டால் அவர்களிடம் வேறு என்ன இருக்கிறது வெளிக்கொணர அதை எப்போதாவது புலித்தலைமை கற்றுகொடுத்திருக்கிறதா? யாருக்கெதிராக என்ன வகையில் போராட வேண்டும் அல்லது யாரிடம் மென்போக்கையும் யாரிடம் வன்போக்கை கடைபிடிக்க வேண்டுமென்ற திட்டமிடலாவது இருக்குமா? எல்லாத்திற்கும் ஒரே பதில் புலிக்கொடி…… எங்கு எப்போ எதை உயர்த்தி பிடிக்க வேண்டுமென தீர்மானிப்பதும் புத்திசாலித்தனம்தான். எப்போதும் ஒன்றையே எங்கும் தூக்கிபிடிப்பது எவ்வளவு பலவீனமென்பது முன்பு பலருக்கு புரியவில்லை இப்போ சிலருக்கு புரியவில்லை. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை இவர்கள் ஏன் போராட்டங்களை ஒழுங்கு படுத்துபவர்களின் வேண்டுகோள்களையும் ஏற்கிறார்கலில்லை…… இதனை புலிகள்
வசை பாடலாக எடுக்காது இதன் உள்ளர்த்தம் புரிதலுக்கும் விவாதத்துக்கும் செயல் பாட்டுக்கும் உரியதாக எடுத்து கொள்ளவேண்டும். மகேந்திரா வின் அச்சத்தில் எனக்கு உடன்பாடும் உண்டு எதிர்ப்பும் உண்டு. விடுதலைப் போராட்டம் வெறும் நம்பிக்கை விசுவாசம் என்பவற்றை சுற்றியே போராட்ட தலைமை கட்டி எழுப்பப் பட்டதும் முள்ளி வாய்க்காலில் முற்றுப் பெற்றதுக்கு காரணம்.
அடிமட்ட வேலைத் திட்டங்கள் மூலம் புரட்சிகர சக்திகள் ஒன்றிணைக்கப் படுதலை செய்யாததும் போராட்டத்தில் விசுவாசமற்று தீவிர விடுதலை புலிகளாக இருந்தோர் எதிர் புரட்சி ஆலர்கலாகவும் காடி கொடுப்போராகவும் மாறக் காரணமாக இருக்கலாம். சபா நாவலன் இன்றைய நெருக்கடிகளுக்கு தீர்வு என்ன தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதை என்ன அவற்றை முன்னெடுத்து செல்லும் வழிமுறை என்ன என்பதை கூறுவதை விடுத்து, புலிக்கொடியை சுற்றி உழல்வதன் மூலம், புலிகள், புலிக்கொடி தவிர்ந்த புலிகளோடு விரோதமற்ற மாற்று அரசியலை முன்னெடுக்கும் பாதையை தடுக்கும் முறைமைக்குள் தானாக விழுவது போன்று இருக்கின்றது. அல்லது புலிக்கொடியை தவிர்த்த மாற்று அரசியல் தம்மிடமும் மற்றும் பிறரிடமும் இல்லை என்ற வறுமையை காட்டுகின்றது.
எல்லாவற்றையும் ஆயுதங்கள் மூலம் சரிக்கட்டிவிடலாம் என்ற மமதையில் போராட்டத்தினை ஆதரித்து நிற்க வேண்டியவர்களை எதிரிகளாக்கி சுயநலமிக்க ஒரு கூட்டத்தை தங்கள் ஆதரவுத் தளமாக வளர்த்து அவர்களால் கைவிடப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டு இறுதியில் மக்கள் அழியும் போது அதனையும் தடுக்க யாரும் அற்ற நிலையில் வைத்த ஒரு போராட்டம் நடத்திய பின்னர் – தனிமைப்பட்டுச் செல்வதை உணர்ந்த பின்பும் எந்த தந்திரோபய நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல் – மக்களை வைத்து தப்பி விடலாம் என போரட்டம் நடத்தி …. அழிவுக்கு வேறு யாரையும் காரணம் காட்ட முடியாதது மட்டுமல்ல கூடவே மக்களையும் அழித்து – மக்கள் போரட்டத்தையும் அழித்து விட்டதற்கான காரணத்தைப் புலிகள்தான மக்களுக்கு கூறவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மக்கள் மீதான கொடுமைகளை வெளிப்படுத்தக்கூடிய – அதனை எதிர்க்கக்கூடிய ஒரு சுயாதீனமான எந்த சக்தியையும் ஒன்றில் தங்கள் உப உறுபபுபக்களாக்கியும் அல்லது அழித்தும் விட்டு தற்போது மக்கள் அழிகிறார்கள். யாரும் ஏதுவும் செய்யவில்லையே எனக்கூறுவதிலும் நியாயமில்லை. விஜேயின் இக்கூற்றில் அல்லது இந்த ஆதங்கத்தில் எந்த குறையையும் நான் காணவில்லை.
இறுதியாக உமா சொல்வதைப் போன்று நாம் புலிகளின் எதிரி அல்ல புலிகளாக எங்களை எதிரிகளாக பார்த்தாலும் (அவர்களுக்கு அந்த உரிமையில்லை) நாம் புலிகளின் எதிரிகளல்ல அவர்களின் ஆக்கங்களுக்கும் அவர்கள் மேற்கொண்ட அழிவுகளுக்கும் அவர்களின் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இச்சமூகத்தின் ஒரு அங்கமான நானும் பொறுப்பாவேன் அவர்களும் இந்த விடுதலைக்காக போராடிய அனைவரும் எனது எதிரிகளல்ல எமது எதிரிகளுமல்ல. நாம் கேட்பது எல்லாம் சரியான பாதையில் நாம் எல்லோரும் பயணிப்போம் என்பதை தான். ஆனால் நீங்களோ மீண்டும் நீ ரோ நீ CIA நீ டெலோ நீ EP நீ பிளாட் நீ மகிந்தவின் ஆள் நீ புலி என்று கூறு போட்டு நாறடிக்கும் வகுப்பு வாத அரசியல் வேண்டாம்.
கோபத்திலும் நிதானமாக மற்றவர்கள் மனம் புண்படாமல் எழுதும் ராகவனைப் போன்று மற்றவர்களும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தால் நன்றாக இருக்கும். ராகவனின் கருத்துக்கள் யதார்த்தமானவை. தம்மைவிடத் தகுதியானவர்களை உள்ளேவர விடாமலும் தாம் சொல்வதை எதுவித கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளாதவரைத் துரோகிகளாகவும் உருவகித்துத் தம்மை விடுதலைப்புலிகளாகக் காட்டியவர்கள் செய்த பிழைகளே விடுதலைப் புலிகள் செய்த தவறுகளிலும் அதிகம். அதனைக் கண்டும் காணாமல் இருந்த என் போன்றவர்களும் குற்றவாளிகளே. ஒத்துக் கொள்கின்றோம். அதேபோல் விடுதலைப் புலிகள் செய்தவை அனைத்தும் பிழையானவை எனக்கூறுவதும் பிழையானதே. இரண்டு பக்கத்துள்ளும் உள்ள நல்லவற்றை மட்டுமே பார்த்தால்தான் நாம் ஒருங்கிணைய முடியும். தவறுகள் பற்றிய விமர்சனங்கள் யாவும் செய்தவரைக் குத்திக்காட்டுவதற்காகவன்றி இனிமேல் அப்படியான தவறுகள் செய்யாமல் திருத்த வேண்டும் என்ற நோக்கில் அமைய வேண்டும். யார் எதனைக் கூறுகின்றனர் எனப் பார்ப்பதனை விட்டு அவர் என்ன சொல்கின்றார் எனப் பார்ப்பதே ஆரோக்யமானது
புலிகளின் கைத்தடிகள் எப்பொழுதும் எல்லோரும் தங்களுடன் ஒன்றினையுங்கள் என்று சொல்வார்களே ஒழியத் தாங்கள் யாருடனும் ஒன்றினைய மாட்டார்கள். எனவே ஒன்றினைவதைப் பற்றிக் கதைப்பதற்குப் புலிகளுக்கு அருகதையே இல்லை.
மிகவும் நிதானமாக விளங்கிக்கிகொள்ள இலகுவாக நல்ல கருத்துக்களை எழுதும் ராகவன் அவர்களே,
வன்னியனின் கருத்துகளால் சற்று எரிச்சலடைந்துவிட்டதுபோல் தெரிகிறது.
யார் யாரை வளர்த்தெடுத்தாலும் ஒரு மனிதனின் அடிப்படைக் குணாதிசயங்களை மாற்றுவது கடினம். ஒரு உன்னத இலட்சியத்தை அடைய ஒரு வழியைத்தேர்ந்தெடுத்து அதிலே சற்றும் மாறாமல் பணம், பதவி, பட்டங்களுக்கு விலைபோகாமல் அதேநேரத்தில் சகலரையும் ஆதரித்து, அரவணைத்து எந்த ஒரு அழிவுமில்லாமல் தெரிந்துகொண்ட இலக்கை அடைவது என்பது யாரால் முடியும்? இவ்வளவு காலமும் புலிகள் என்ன பிழைவிட்டார்கள் என்ற விவாதத்தில் காலத்தைக் கழித்துவிட்டோம். இனியாவது நாம் ஒற்றுமையுடன் போர்குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்த முயற்சிகளை மேற்கொள்வோம்.
இவர்கள் சிறைக்குள் தள்ளப்படும்போதுதான் இன்நடபடிக்கைகள் மிகுந்திருக்கும் இனவெறியரை சிந்திக்கத் தூண்டும்.
புலி,புளோட்,ரெலோ,ஈபிடிபி என்று பிரித்துப்பார்க்காது தமிழா் என்ற குடையின் கீழ் ஒன்றிணைவோம் புலி ஆதரவாளா்கள் இவ்வளவு காலமும் மாற்று இயக்கத்தினா்மேல் கொண்ட சந்தேகத்தையும் அா்த்தமற்ற முட்டாள்தனமான வெறுப்பையும் கைவிடவேண்டும்,அதற்கு இதுதான் தருணம் என நம்புவோம் ஒற்றுமை இல்லையேல் நாம் அழிந்துபோவதை யாராலும் தடுக்கமுடியாது.
புகையிலைச் செடி வளர்ந்திருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும் அதை ஒவ்வொரு இலையாக வெட்டும்போதும் மனது பாடுபடும் இந்த இலைகள் இப்படியே இருந்து விடக் கூடாதா மனம் பிரார்த்தனை செய்த சின்ன வயது கடந்து தமிழரும் செடியாய் இருந்தால் அது அழகு.
கோபாலன் ஸ்ரீ – எந்த இளைஞர் இயக்கம் வன்முறையில் ஈடுபடாமல் இருந்தது? எல்லாம்தான் ஈடுபட்டது! றாகவன் ஸார் முதலில் புலியெதிர்ப்பு மனநோயிலிருந்து விடுபடுங்கள் பிறகு மக்களைப் புரட்சிக்குத் தயார்ப்படுத்துங்கள் – யார் வேண்டாம் என்றார்கள்?
புலிஎதிர்ப்பு மனநோய், மாற்று குழுக்கள் மனநோய், தேசத்துரோகிகள் மனநோய், சமூகவிரோதிகள் மனநோய், எதிர் புரட்சிகர மனநோய் என்னிடம் இன்னும் வரவில்லை அது உமா சொல்லவதைப் போல் “தம்மைவிடத் தகுதியானவர்களை உள்ளேவர விடாமலும் தாம் சொல்வதை எதுவித கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளாதவரைத்” தமிழர்கள் சிலபேர் தூசிக்கும் வழிமுறைகள்.
“THAMILMARAN – இவ்வளவு நாளூம் பதுங்கு குழிக்குள் வாழ்ந்து விட்டோம் இனிவரும் நாளீலாவது வெளி உலகைப் தெரிந்து கொள்வது ஒன்றும் தவறு இல்லையே!.” கோபாலன் ஸ்ரீ! தமிழ்மாறன் ஆயுத போராட்டத்தை கொச்சை படுத்துவதற்காக சொன்ன விடயமல்ல இதன் அர்த்தம் மிகவும் ஆழமான அரசியல் அர்த்தம் கொண்டது. நீங்கள் அதை புரிந்து கொள்ளுங்கள்.
“tamilchildren@gmail.com – புலிக்கொடி இனி புலிகளின் சொத்தல்ல. அது தமிழர்களின் சொத்து. இதை யாரும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. புலிக் கொடி தமிழர்களின் குறியீடு. மாவீரர்களின் குறியீடு. தமிழீழத்தின் குறியீடு என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்வார் என நம்புவோம்”. நான் மறுக்கவில்லை ஏன் அது எம் ஆன்மாக்களிலும் நிறைந்தே உள்ளது. இருப்பினும், “புலிக்கொடி…… எங்கு எப்போ எதை உயர்த்தி பிடிக்க வேண்டுமென தீர்மானிப்பதும் புத்திசாலித்தனம்தான். எப்போதும் ஒன்றையே எங்கும் தூக்கிபிடிப்பது எவ்வளவு பலவீனமென்பது முன்பு பலருக்கு புரியவில்லை இப்போ சிலருக்கு புரியவில்லை என்ற மாமணியின் கருத்து tamilchildren@gmail.com இக்கு புரியவேண்டும்.
இறுதியாக யதார்த்தத்தை விளங்கி கொள்ள முடியாத புத்தியீவித்தனம் இறந்து போன பிணத்தின் மூளைக்கு சமமானது என்ற எனது விசனத்தை தான் என்னால் கொட்டமுடியும்.
இன்றைய நெருக்கடிகளுக்கு தீர்வு என்ன? தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதை என்ன? அவற்றை முன்னெடுத்து செல்லும் வழிமுறை என்ன? இதற்கான செயற்பாட்டை யாரும் முன்னெடுக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ்மக்களிடையே இன்று உள்ளது. ஆனால் நாடுகடந்த அரசை அமைக்க முன்வந்தவர்கள் அதனை எடுத்திருந்தனர். அவர்களால் நடாத்தப்பட்ட கருத்தரங்குகளில், தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, மாற்றுவழிதேடி புதியபாதையில் செயற்படலாம். இன்றைய உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் போராட்டத்தை நடாத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. உலக அரசுகளின் இயல்புகள் பற்றி தெளிவாக சுட்டிக்காட்டி விளக்கமும் கொடுக்கப்பட்டது.
ஆனாலும் பாரியதொரு நம்பிக்கை தகர்ந்துபோனதன் விளைவாக, புதிய நம்பிக்கைகளை மக்கள் உள்வாங்கமுடியாத நிலையை பயன்படுத்திப் புலம்பெயர்நாடுகளில் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களாக இருந்து பதவிச்சுகம், பொருட்சுகம் அனுபவித்த சிலர் அதனை இழக்கவிரும்பாது தொடரவே விரும்பினர். இவர்கள் செயற்பாட்டை நன்றாகவே பயன்படுத்திக்கொண்ட, இலங்கை இந்திய அரசுகளும் அதன்வழியே தமிழர்களுக்கு ஒரு தலைமை தோன்றுவதை தடுப்பதற்கு முனைப்போடு செயற்பட்டன, விடுதலைப்புலிகளின் சின்னங்களின்றி, புலிக்கொடியின்றி, நாடுகடந்த அரசை அமைக்க முடியாத நிலை செயற்பாட்டாளர்களுக்கு ஏற்படவே, தமிழின விடுதலைப் போராட்டத்தை புதியபாதையில் பயனிக்க வைப்பதற்கு முயன்ற புதிய தலைமையும் முடங்கிப்போயுள்ளது.
புலிக்கொடி ஓர் இயக்கத்தின் கொடியல்ல அது தமிழினத்தின் அடையாளமாக இமயத்திலே ஏற்றப்பட்ட தமிழினத்தின் கொடி என்பது என் மனத்திலும் ஆழப்பதிந்துள்ளதை மறுக்கமுடியாது. ஆனாலும் எதை எப்படி எங்கே எப்போது செய்யவேண்டும் என்ற கருத்துக்கள் தெரிவிக்கப்படும்போது அதனை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு நாங்கள் முன்வருவதில்லை. வெற்றி தோல்விகளை வெளிப்படுத்தும் சபாநாவலன் அவர்கள் வீரர்களை உருவாக்கிய மக்களுக்கு போராட்ட நெறிகளை உணரவைப்பதை விட்டு விட்டுப் போராட்ட வீரர்களை குறைகாணும் முயற்சியே அதிகமாக தெரிகிறது
1. “புலிகள்” அடையாளம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அரச எதிர்ப்பாளர்களைப் பலவீனப்படுத்தியுள்ளது.
புலிகளின் தோற்றத்திற்கு முன்பாக சிங்கள மக்கள் எப்போழுதாவது தமிழர் நலன்கருதி அரசை எதிர்த்ததுண்டா?
2. பேரினவாத சக்திகள் ஒரணியில் திரள வாய்ப்பளித்துள்ளது.
தமிழர் விடுதலைக்கு ஆதரவாக என்றாவது பேரினவாத சக்திகள் ஒரணியில் திரண்ட சரித்திரம் உள்ளதா?
3. புலிகளின் அரசியல் மக்கள் போராட்டத்தில் புகுத்தப்பட்டதானது அவர்கள் மத்தியிலிருந்த அடிப்படைவாதிகளைப் பலப்படுத்தியுள்ளது.
மக்கள் போராட்டமே ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்புகளாக மாறியததுதான் வரலாறு.
4. மக்கள் போராட்டங்கள் புலிகளின் போராட்டங்களாக தொடரும் அபாயம் தோன்றியுள்ளது.
மக்களையும் புலிகளையும் வேறாகக்காட்டி இனவழிப்பை மேற்கொண்டுவரும் இலங்கை அரசிற்கும் அதற்கு துணைநிற்கும் இந்திய அரசிற்கும் ஆதரவு தேடும் முயற்சியா?
5. உலகம் முழுவதும் போராடும் மக்கள் பகுதியினரிடமிருந்து தொடர்ந்தும் குறுகிய குழுவாகி அன்னியமாகும் நிலை காணப்படுகிறது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கும்படி இதுவரை எந்த போராட்டக்குழுவும் தங்கள் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து போராடியதில்லை. அழுத்தம் கொடுப்பதாக காட்டிக்கொண்ட தமிழ்நாட்டு போராட்டக்குழு தலைவர்களும் அதன்மூலம் தங்கள் அரசியலை வளர்த்தெடுப்பதிலேயே குறியாகவுள்ளனர்.
6. புலிகள் சாராத மக்களிடமிருந்து போராட்டங்கள் அன்னியமாகும் சூழல் உருவாகியுள்ளது.
புலிகள் சாராத மக்கள் அரசுடன் சேர்ந்து செயற்படுவது வெளிப்படை
7. புலிசார் அரசியல் வியாபாரிகளின் கரங்கள் ஓங்கியுள்ளன.
புலிசார் அரசியலில் வியாபாரிகளும் உள்ளதை எற்றுக்கொண்டு அவர்களை இனம்காணச்செய்யும் முயற்சிகளுக்கு நன்றிகள்.
“எல்லாவற்றையுமே இழந்துவிட்ட தமிழினம் தன்னை ஓர் அதி உயர்தர அறிஞர்கள் வரிசையில் வைத்து எல்லாமே உள்ளதுபோன்ற ஒரு கற்பனை உலகில் வாழ்ந்துவருகிறது” என யாழ் இணையத்தில் கறுப்பி என்பவர் தெரிவித்த கருத்து மறுக்கமுடியாத உண்மை என்பதையே இன்றைய தமிழர்களின் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. “கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் அவ்வாறான தவறுகள் மீண்டும் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதற்காகவுமே விமர்சனங்கள் செய்யப்படுகின்றன” எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
நாங்கள் தமிழினம் ஒரு அடிமை நிலையில், எமது வாழ்வியலுக்கு வேண்டிய தீர்மானங்களை எடுக்கும் உரிமையை பிறரிடம் பறிகொடுத்துவிட்ட ஓர் இனமாகவே வாழுகின்றோம். அடிமைகளை அன்பினால் அரவணைத்து யாரும் வேலைவாங்குவதில்லை. ஆகையினால்தான் தமிழினத்தை உலகில் தன்மானத்தோடு வாழவைக்க முயலும் உண்மையான தமிழ்த் தலைவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் தமிழர்களை இம்சைப்படுத்துவதாகவே தோற்றம்பெறுகிறது.
தமிழ்மாறன் அவர்களின் கருத்துப்படி, இவ்வளவு நாளும் பதுங்கு குழிக்குள் வாழ்ந்து விட்ட தமிழினம் இனி வெளிஉலகைப் பார்க்க முன்வரட்டும். வரும் போதாவது தனது இனத்திற்குரிய வாழ்வியலை மேம்படுத்துவதோடு, சகல துறைகளிலும் தானே தீர்மானங்கள் எடுக்கும் உரிமைத் தடையை உடைத்தெறிந்து வெளியேவரட்டும். அந்தத் தடை பிறரிடம் இல்லை. அது எங்களிடமே உள்ளதை நாங்கள் எங்களையே உற்றுநோக்கினால் அறியலாம்.
சிந்தனைகளை அதிகம் தூண்டுவதாகவே ராகவன் அவர்களுடைய கருத்துக்கள் பல உள்ளன. நாங்கள் செல்லும் வழி சரியா? தவறா? என ஆராய்ந்து செல்லுமாறு அவர் எழுத்துக்கள் அறிவுறுத்துகின்றன. ஆனாலும் அவரை நிந்திப்பவர்களை நான் குறைகூறவில்லை. ஏனெனில் நாங்கள் அப்படித்தான் வளர்க்கப்பட்டோம். இனிமேலாவது மாறமுயலவேண்டும்.
“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்” – திருக்குறள்
அறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை (இயல்பு என்பதும் பொருந்தும்) அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
நாங்கள், எங்கள் தலைமுறையானது முதிர்ந்த மரங்கள், வளைப்பது கடினம். பாலர் வகுப்புகளிலிருந்தே தமிழருக்கான வாழ்வியல் முறைகளை தமிழ்ப் பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்கு வழிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
எல்லோரும் ஒன்றாக வெளீயேறீ கனடாவில் குடியேற வேஎண்டியதுதான்.
சிந்தனைகளை அதிகம் தூண்டுவதாகவே ராகவன் அவர்களுடைய கருத்துக்கள் பல உள்ளன. நாங்கள் செல்லும் வழி சரியா? தவறா? என ஆராய்ந்து செல்லுமாறு அவர் எழுத்துக்கள் அறிவுறுத்துகின்றன. ஆனாலும் அவரை நிந்திப்பவர்களை நான் குறைகூறவில்லை. (உண்மை அவர்களை நானும் நொந்து கொள்ளவில்லை) ஏனெனில் நாங்கள் அப்படித்தான் வளர்க்கப்பட்டோம். இனிமேலாவது மாறமுயலவேண்டும்.
நாங்கள், எங்கள் தலைமுறையானது முதிர்ந்த மரங்கள், வளைப்பது கடினம். பாலர் வகுப்புகளிலிருந்தே தமிழருக்கான வாழ்வியல் முறைகளை தமிழ்ப் பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்கு வழிகள் மேற்கொள்ளப்படவேண்டும். மகேந்திரா மிக யதார்த்தமானது உங்கள் கருத்துக்கள் .
THAMILMARAN – இவ்வளவு நாளூம் பதுங்கு குழிக்குள் வாழ்ந்து விட்டொம் இனிவரும் நாளீலாவது வெளீ உலகைப் தெரிந்து கொள்வது ஒன்றூம் தவறு இல்லையே.
மகேந்திரா – தமிழ்மாறன் அவர்களின் கருத்துப்படி, இவ்வளவு நாளும் பதுங்கு குழிக்குள் வாழ்ந்து விட்ட தமிழினம் இனி வெளிஉலகைப் பார்க்க முன்வரட்டும்.
THAMILMARAN – எல்லோரும் ஒன்றாக வெளியேறி கனடாவில் குடியேற வேண்டியதுதான். என்ன தமிழ் மாறன் திடீர் என சட்டியை கவிழ்த்து விட்டீர்கள்? எனக்கு விளங்குவதேல்லாம் புலம் பெயர்ந்த எம்மை குத்தி காட்டுவது போல் உள்ளது. யார் எங்கிருந்து சரியானதை சொன்னாலும் அதனை பரிகாசிக்காமல் ஏற்று கொள்ளுவோம்.
” நான் தமிழன் என்பதால் பல பாதிப்புக்களையும் அநீதிகளையும் சந்தித்துள்ளேன் – டாக்டர் முரளி வல்லிபுரநாதன்” – செய்தி.
ஆம் பதுங்கு குழிக்குள் இருந்து பழக்கப் பட்டும் தனது மெய் உணர்வை இழக்காத ஒரு மனிதர் அவரை போன்ற உணர்வும் துணிவும் சமுக கடமை உணர்வு உள்ளவர்களுமே எமக்கு தேவை. இவ்வாறான எண்ணங் கொண்ட சிலரே மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆயுத படைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர் அதுவே பின்னாளில் பொங்குதமிழ் நிகழ்வுக்கு கால் கோள் இட்டது.