மகிந்த ஆசிரியர்களைப் பிரபாகரனுடன் ஒப்பீடு : கண்டனம்.

பிரபாகரன் வடக்கில் உள்ள மாணவர்களை பலிகொடுப்பது போன்று ஆசிரிய தொழிற்சங்கங்கள் பாடசாலை மாணவர்களை பலிகொடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஆசிரிய சம்பள முரண்பாடுகளை களைவதனைவிடுத்து மாணவ ஆசிரியர் உறவில் விரிசல் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டதன் மூலம் தேசிய ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்களை குறை கூறுவதனை விடுத்து பிரச்சினைக்கு நியாயமான தீர்வுத் திட்டமென்றை முன்வைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.