பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவினால் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தததனர்.
இதன்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதோடு ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி. ஹரின் பெர்னாண்டோ மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மீது புத்தகம் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினர் மீது தண்ணீர் போத்தல்களை வீசி எறிந்தனர்.
பின்னதாக எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்








NADAKAME ULAGAM NALAI NADAPATHAI YAR ARIVAR MAHANE. POHA POHA THERIYUM.