ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுவதற்கு முன்னர், அமெரிக்கா, மூன்று உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றது.
நாளையதினம், அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான தூதுவர் Steven Rapp இலங்கை வந்து, எதிர்வரும் 11 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான உதவிசெயலாளர் மரி ஒட்டேரோ ஆகியோர் இலங்கைக்கு வரவுள்ளனர்.
இனப்படுகொலைக்கு ஆதரவாக அமரிக்க செயற்பட்ட 2009ம் ஆண்டில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களைக் காரணம்காட்டி பேரம்பேசிக் கொண்டது. அமரிக்க அதிகாரிகள் இலங்கை அரசோடு புதிய பேரத்தை உறுதிசெய்துவிட்டுத் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் அமரிக்க ஆதரவில் இயங்கும் நிறுவனமான ஐக்கிய நாடுகள் நிறுவனம் இலங்கை மீதான் குற்றச்சாட்டுக்கள் குறித்து மூன்று ஆண்டுகள் நடந்து கொண்ட அதெ வழிமுறையைப் பின்பற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் போராட்டஙகளைத் திட்டமிடுவதன் வழியாகவே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த நாடுகள் மீண்டும் கூறுகின்றன.
சிறிரொலோவின் தலைவராக கஜேந்திரனும் செயலாளராக உதயனும் தெரிவு; மாவட்ட செயலாளர்களும் தலைமைக்குழுவும் நியமனம்.
Monday, February 6th, 2012 at 18:55
சிறிரொலோ கட்சியின் தலைவராக காத்தலிங்கம் கஜேந்திரனும் (சேனாதி), செயலாளர் நாயகமாக பரராஜசிங்கம் உதயராசாவும் (உதயன்), பொருளாளராக மகேந்திரனும் (சங்கர்) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சிறிரெலோ கட்சியின் மத்திய குழு, தலைமைக்குழு உட்பட்ட வருடாந்த கூட்டம் நேற்று வவுனியா வைரவப்புளியங்குளத்திலுள்ள கட்சியின் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்த கூட்டத்தில் சகல உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இங்கு தலைமைக்குழு உறுப்பினர்களும் மாவட்ட செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைமைக்குழு உறுப்பினர்களாக சத்தியகாந்தன், இந்திரதாஸ், நகுலேஸ்வரராசா,(keeran) நிர்மலன்(Nimo), ரகுபதி, இந்திரஜித், ஜெயானந்தன், திருமதி லோஜினி இந்திரஜித், தங்கராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். கட்சியின் அரசியல் தலைவரா க. நகுலேஸ்வரராசா தெரிவானார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளராக நிர்மலனும், வவுனியா மாவட்ட செயலாளராக இந்திரதாஸும் மன்னார் மாவட்ட செயலாளரா ஜெயக்குமாரும் , யாழ். மாவட்ட செயலாளராக செந்தூரனும் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக சுதனும் திருமலை மாவட்ட செயலாளராக ராம்குமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய சிறிரெலோவின் செயலாளர் ப. உதயராசா ஜனநாயகக் கொள்கைகளுக்கு அமைய தொலைநோக்கோடு எமது அரசியல் பாதையினை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : TELOnews —- take care of this news – new gov agents against TNA funded by NIB last week and new id given to Nmo to go anywhere in the vanni by NIB