சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடியுள்ளார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அங்கிருந்து அலரி மாளிகைக்குச் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து பங்கேற்றார்.
இதன்போது பொங்கல் பானையில் அரிசியிட்ட எஸ்.எம்.கிருஸ்ணா அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்வுகளையும் கண்டு ரசித்தார்.
அதன் பின்னர் அவர் சிறிலங்கா அதிபருடன் பேச்சுக்களை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன பக்தி என்ன விசுவாசம் !!! மனிதர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் !!!இவர்களா மக்களை கொல்பவர்கள்? இவ்வளு பயமும் பக்தியுள்ளவர்கள் கொலை செய்வார்களா?
இப்படி எல்லோரும் இருந்தால நாடு அன்பில் திளைக்கும் அல்லவா?
இதைத்தானே கிருஷ்ணா நீ உலகத்துக்கு சொல்லப்போகிறாய்.?!!!