மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் 95 அதிகபடியான வாக்குகளால் வெற்றியடைந்துள்ளது. இலங்கை மகிந்த குடும்ப அரசின் தரப்பிலிருந்து பெரும்தொகையான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
57 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டதிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன.
மகிந்தவிற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மத்திரிபால் சிறிசேன உட்பட ஆளும் கட்சியிலிருந்து கட்சி தாவிய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூடவே அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஜாதிக ஹெல உறுமைய கட்சியும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
முன்னதாக வாக்களிப்பில் மகிந்த குடும்ப ஆட்சி தோல்வியடைந்தால், பாராளுமன்றம் கலைக்கபடலாம் என்று எதிர்வுகூறப்பட்டது. இந்த நிலையிலும் வாக்கெடுப்பில் எதிரணியில் இணைந்துகொண்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் எவரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
எதிரணியில் இணைந்து கொண்ட மகிந்த ராஜபக்சவிற்கு இணையான பேரினவாதிகள் இதுவரை மகிந்தவிற்கு எதிரான வலுவான குற்றச்சாட்டுக்கள் எதனையும் முன்வைக்கவில்லை. மேலோட்டமான சில தகவல்களை மட்டுமே முன்வைத்துள்ளனர். அதே வேளை ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலிருந்து உரிமைகள் தொடர்பாக எதிர்க்கட்சியிடம் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு வலுவான அரசியல் தலைமைகள் எதுவும் காணப்படவில்லை. புலம்பெயர் நாடுகளிலிருக்கும் அரசியல் பிழைப்புவாதிகள் தலைமைக்கான வெற்றிடம்ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக இன்றும் காணப்படுகின்றனர்.
இலங்கையில் மகிந்தவை மையப்படுத்தி பேரினவாதிகளுக்கு எதிரான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை மேலும் பின்னடையச் செய்யும் இன்றைய அரசியல் தலைமைகள் வாழும் வரை அழிவுகளே எஞ்சும்.
தனதும் ஓரளவில் மகிந்தவினதும் நண்பன் லசந்த விக்கிரமசிங்கவை பட்டப்பகலில் ரத்மலானையில் பலரும் பார்த்துக் கொண்டிருக்க குரூரமான முறையில் சாகடித்த குழு இராணுவத் தளபதி பொன்சேகா-இனால் இயக்கப்பட்டது எனவும்- மேலும் அக்குழு பாதுகாப்புச் செயலாளன் கோத்தபாயா-வின் உத்தரவினடிப்படையிலேயே செயற்பட்டது எனவும் ரணில் விக்கிரமசிங்க 2009 ஜனவரி 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிசுபிசுத்தான். அது தான் கடைசித் தடவை. அன்றிலிருந்து (பொய்த்) தேசிய அரசியல்வாதிகளும் ஊடகவியலாளன்களும் மகிந்த ராஜபக்சவை நேரே எதிர் கொள்வதில்லை. அதுவும் முகங்கொடுத்து குற்றச்சாட்டுக்களை வைப்பது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாததொன்றாகி விட்டது.
போர்க்கோலத்தையே வைத்து பயப்படுத்தப்பட்ட பல அமைச்சன்களும் ஊடகவியலாளன்களும் கைப்பொம்மைகள் போல் வாராவாரம் அருகே அழைக்கப்பட்டு ராஜபக்சவினால் மறைமுகமாக கண்கட்டு வித்தை போல ஒரு யுக்தியினாலும் அடக்கப்படுவது தான் நிலைமை. குழப்பம் விளைவிக்க முயன்ற சிலர் பக்கத்திலுள்ள அறைக்கு அழைக்கப்பட்டு மகிந்த ராஜபக்சவினால் அடி வாங்கப்படுவதும் பலர் தெரிந்த உண்மை. ராஜபக்ச-உடனான கடைசி அமைச்சரவை கூட்டத்தில் சந்திரிகா எசமாட்டியை தன் மனக்கண் முன்னிறுத்தி மைத்திரிபால ஒருவாறு தப்பித்து ஓடியது பெருங் காரியம். பின்னர் வெளிப்படையாகவே கண்ணீர் வடித்து அழுது கொண்டிருக்கும் மைத்திரிபால சிரிசேன ஒரு மண்ணாங்கட்டியையும் தானாக செய்யப்போவதில்லை. சந்திரிகா, மங்கள சமரவீர மற்றும் ஒருவிதத்தில் ரணில் என்பவர்கள் ஊடாக அவர்கள் அனைவரையும் இயக்கும் சக்தி தரும் அறிவுரைகளையே மைத்திரிபால-இனால் செய்யமுடியும்.
அதெ டிரைமறைவில் இயங்கும் சக்தியின் ஒரு கூறு சர்வதேச நாணய நிதியம். இந்த வரவுசெலவு திட்டதிற்கு மகிந்தா உரிமை கொண்டாடுவதும் ஒரு ஏமாற்று வித்தையே.
மைத்திரிபால தவிர்க்க நேரிட்டடது முன்னெப்பொழுதுமில்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் வரவுசெலவு திட்டத்தையே.
கொழும்பு பங்குசந்தை கடந்த சில நாட்களாக படும் அந்திரம் தற்போதைய திட்டமிடப்பட்ட அரசியல் ஆட்டத்தைப் பாவித்து முதலீடுகளை ஆரம்பிக்கும் தந்திரம். கொழும்பு பங்குசந்தை வரலாறு காணாத வீழ்ச்சியில் என்ற கண்கட்டு வித்தையும் உலகம் பூராக உண்மையான முதலாலித்துவ மையப்புள்ளிகளுக்கு ஒரு ரகசிய சமிக்ஞையாக ரொய்டர் அமைப்பினூடு நேற்று அனுப்பப்பட்டுள்ளது.
திருத்தம்:-
அதெ டிரைமறைவில் இயங்கும் சக்தி => அத்திரைமறைவில் இயங்கும் சக்தி
மைத்திரிபால தவிர்க்க நேரிட்டடது முன்னெப்பொழுதுமில்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் வரவுசெலவு திட்டத்தையே => மைத்திரிபால தவிர்க்க நேரிட்டடது முன்னெப்பொழுதுமில்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டாலான வரவுசெலவு திட்டத்தையே
Ok, is it true premises of KKS Cement factory’s 104 acres of land. &!buildings acquired by the Defence Ministry…?