மகிந்த ராஜபக்ச, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை, ஆயர் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்கள் குழு வத்திகான் சென்று புனித பாப்பரசர் பிரான்சிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஆயர்களின் இந்த விஜயத்தின் போது பாப்பரசர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் மத தீவிரவாதிகள், அச்சுறுத்தல், வன்முறை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஒரு மத அடையாளத்தின் அடிப்படையிலான தேசிய ஒற்றுமையை தவறான அர்த்தத்தில் ஊக்குவித்து வருவதாக பாப்பரசர், இலங்கை ஆயர்கள் குழுவிடம் கூறியிருந்தார்.
சிங்கள பௌத்த பேரினவாதமும், இனச்சுத்திகரிப்பும், இனப்படுகொலையும் இலங்கை அரசியலின் உள்ளகத்தே காணப்படுவன. ஆட்சி அதிகாரத்தைக் கையகப்படுத்துவதற்காகவே சிங்கள மக்களை நச்சூட்டும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் பயன்படுத்தப்படுகிறது என்பது வத்திக்கானுக்குத் தெரியாததல்ல,
இலங்கையில் ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பதவி வகித்த ஜூலியட் ரிச்சார்ட் ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச போன்றவர்களில் பிரேமதாச தவிர்ந்த அனைவருமே கத்தோலிக்க அல்லது கிறீஸ்தவ தொடர்புகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச கத்தோலிக்கர். இலங்கையில் கத்தோலிக்க பாடசாலைகளின் இணைப்புக்குழு ஒன்றினை நடத்தி வருபவர். நாமல் ராஜபக்ச உட்பட மகிந்தவின் புதல்வர்கள் ஞனஸ்னானம் பெற்றவர்கள். இலங்கையில் பிரதமர்களாகப் பதவிவகித்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரனாயக்க, டட்லி சேனாநாயக்க, டீ.எஸ்.சேனானாயக்க, ஜோன் கொத்தலாவல ஆகிய அனைவருமே கிறீஸ்தவர்கள்.
பிரித்தானியாவில் வசிக்கும் சந்திரிக்காவின் மகன் ஞானஸ்னானம் பெற்றவர்.
சிங்கள பௌத்தம் என்பது ஆட்சி அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்வதற்காக இத் தலைவர்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களே தவிர, தலைவர்கள் பௌத்தர்கள் அல்ல.
இத் தலைவர்கள் அனைவருமே சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது பல்வேறு அளவுகளில் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். 83 ஆம் ஆண்டு அப்பாவித் தமிழர்கள் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட ஜூலியட் ரிச்சார்ட் ஜெயவர்த்தனவிலிருந்து வன்னிப் படுகொலைகளைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச வரை கிறீஸ்தவ தேவாலயத்துடன் தொடர்புகளைக் கொண்டவர்கள். இலங்கையில் தமிழ் சிங்கள மேட்டுக்குடிகளுக்கும் மேற்கின் கிறீஸ்தவ அதிகார மையத்திற்கும் இடையேயான தொடர்பு இலங்கையின் அதிகார வர்க்கத்திற்கு இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்த உதவி புரிகிறது.
விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றின் அடிப்படையில் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித், மகிந்த ராஜபக்சவின் மனைவி கத்தோலிக்கர் என்பதால் ராஜபக்சவை முழுமையான இனவாதி அல்ல என குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச மட்டுமல்ல இலங்கையில் பேரினவாத ஆட்சித் தலைவர்கள் அனைவருமே கிறீஸ்தவ அடிப்படையக் கொண்டவர்கள்.