மகிந்தவின் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது?

mahindaRஇலங்கையில் வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளது. நாடு முழுவதும் 70 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்துள்ளனர். தெற்கில் வாக்களிப்பு வீதம் அதிகமாகக் காணப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பல தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து 33 பேரை மைத்திரிபால சிரிசேன நீக்கியுள்ளார்.

33 பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆசனங்கள் குறைவடையும் என்பதே தற்போதைய கணிப்பு.

மகிந்தவிற்கு எதிராக மக்களை ஆளுமை செய்யக்கூடிய ஒருவரின் இல்லாமையே மகிந்தவின் மீள் வரவிற்குப் பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. தவிர, வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்கு மகிந்த பேரினவாதக் கருத்துக்களைப் பரப்பிவந்தார். போர் வெற்றியை வெற்றியையும் புலிகளின் மீட்சி தொடர்பான அச்சத்தையும் மக்களைத் திசைதிருப்பும் கருவியாகப் பயன்படுத்தினார்.

வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களை வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்குக் கிழக்கில் 40 வீதமானவர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.