இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கபட்டதைத் தொடர்ந்து இரண்டு பேரினவாதக் கட்சிகளும் கடைவிரிக்க ஆரம்பித்துள்ளன. சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட, இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு 9ம் திகதி ஓகஸ்ட் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலிலிருந்து தப்பிய மைத்திரிபால சேனாநாயக்க அவ்வேளையில் விவசாய அமைச்சராகப் மகிந்த அரசைல் பதவி வகித்தார். பொரலஸ்கமுகவில் நடைபெற்ற இக் குண்டுத் தாக்குதலில் தற்கொலைக் குண்டுதாரி மரணித்ததுடன் சிலர் படுகாயமடைந்தனர். தாக்குதலின் பின்னர் கருத்து வெளியிட்ட சிறிசேன புலிகளையும் பிரிவினை வாதத்தையும் கூண்ட்டோடு அழிப்பேன் எனச் சபதமிட்டார்.
போர் நிறைவடைந்ததும் வன்னியில் விவசாய அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் இராணுவக் குடியேற்றங்கள நடத்த முன்நின்ற்வர்களில் மைத்திரிபால சிறிசேன.
ஹம்பாந்தோட்டையில் செல்வாக்கு மிக்க ரவுடியாகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக, பொலநறுவை அரசியல் குண்டர்படையைத் தலைமைதாங்கும் மத்திரிபால சேனநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் மைத்திரிபால சேனாநாயக்கவின் ஒரே மகனும் அவருடன் இணைந்த 13 குண்டர்களும் பொலநறுவை மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரியின் மகனைத் தாக்கியமை தொடர்பாகக் கைதான போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்தார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற நீண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக முச்சுக்கூட விடவில்லை. அதே மாநாட்டில் பேசிய சந்திரிக்கா குமாரணதுங்க, நாட்டில் ஒரு பகுதி மக்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பது குறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. மாறாக புலிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிய சரத் பொன்சேகாவை மகிந்த சிறையிலடைத்தார் எனத் துயரடைந்தார்.
வறுமையும் பட்டினியும் நாளாந்த வாழ்க்கையாகிவிட்ட சிங்கள உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் சிறுபான்மத் தேசிய இனங்களும் மகிந்த பாசிச அரசிற்கு எதிரான வெறுப்புணர்வைக் கொண்டிருப்பதால் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அதே வேளை புலிகள் இன்னும் முழுமையாக அழிக்கப்படாத சூழலில் எதிரணியால் நாட்டைப் பாதுகாக்க முடியாது என்ற பிரச்சாரம் ஏற்கனவே மகிந்த ஆதரவுக் கும்பல்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
வெற்று உணர்ச்சிகள் ஊடாகப் புலிகளின் அடையாளத்தைப் புலம்பெயர் நாடுகளில் பேணும் பலர் மகிந்த அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். நேரடியான நிதி முதலீடுகள், தமது முகவர்கள் ஊடான தொடர்புகள், பல்தேசிய வியாபர நிறுவனங்கள் ஊடான தலையீடுகள் போன்றவற்றால் மகிந்த அரசுடனன தொடர்புகள் பேணப்படுகின்றன.
புலிகள் வாழ்வதாகவும், மீண்டும் தமிழீழம் பிடிக்கத் தயார் என்றும் இவர்கள் எழுப்பும் வெற்று முழக்கங்கள் ராஜபக்ச அரசின் இருப்பிற்குப் பயன்படுகிறது.
புலம்பெயர் நாடுகளில் அரசியல் வியாபாரத்திற்கு இந்த அடையாளங்கள் பயன்படுவதால் அரசியல் தலைமைகள் அவற்றைச் சமரசம் செய்து விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மேலும் குறைந்தபட்ச அரசியல் வேலைத் திட்டம் இல்லாத இவர்களின் ஒரே மூலதனம் புலி அடையாளம் மட்டுமே.
சுய திருப்தி,சுய அடையாளம், வியாபாரம், புகழ் போன்ற அனைத்தும் கலந்த நச்சுப் பதார்த்தமான புலம்பெயர் தலைமைகள் புலம்பெயர் நாடுகளில் புரட்சிகரமான சூழல் ஏற்படாமல் தடுப்பது போன்று இலங்கையில் ராஜபக்சவிற்கும் துணை செல்கின்றன.
இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் ராஜபக்ச பாசிஸ்டுக்கள், புலிகளின் பேரால் இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அவற்றிலிருந்து இலங்கையைப் பாதுகாக்க தாம் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள். தேவையேற்பட்டால் ஆங்காங்கு சில இராணுவத் தாக்குதல்களை நடத்திவிட்டு புலிகள் மீள்வதாகப் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மகிந்தவின் ஆதரவுத் தளம் மேர்லும் விரிவடையும்.
இதற்கும் மேல் யாருக்குத் தமிழர்கள் வாக்களிக்கலாம் என்ற தடல்புடலான விவாதங்கள் இணைய அரசியல் தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
தேர்தலால் எந்த மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் வாழ்கின்ற உணர்ச்சி வியாபாரிகள் இலங்கையில் மக்களை அணிதிரட்டிப் போராட முடியாது என்பதால் தேர்தலை நடத்துவது, மேல் தட்டு அரசியல் வாதிகளைச் சந்தப்பது போன்றவையே அவர்களால் முடிந்தது. ஆக, இவ்வாறான விடையங்களில் மூக்கை நுளைத்து ரிமோட் போராட்டம் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
இலங்கையில் ஒடுக்குமுறைக்குள் வாழ்பவர்கள் குறுகிய அடையாளங்களுக்காகவும் உணர்ச்சிகளுக்காகவும் தம்மை அரசு படைகளிடம் அடையாளப்படுத்தாமல் மக்களை அணிதிரட்டும் நோக்கோடு இணைந்துகொள்ளவேண்டும். தேர்தல் காலத்தில் கிடைக்கும் குறைந்தபட்ச ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி போராட்டங்களைத் திட்டமிட வேண்டும். அழிவுகளை மட்டுப்படுத்துவதும், அமைப்பைதாலுமே இன்றைய உடனடித் தேவை. தேர்தல் அல்ல.
இனப்பிரச்சனைத்தீர்வு பற்றி மைத்திரி பேசியிருந்தால் அதுவே மகிந்தவிற்கு பேரினவாதத்தினை தூண்டி மீண்டும் ஆட்சிக்கு வரஉதவியிரக்கும். மக்கள் முன் உள்ள வினா மகிந்தவா அல்லது மைத்திரியா என்பதுதான். இந்த வகையில் மைத்திரி எவளவோ மேல். நீண்டகால நோக்கில் வேண்டுமானால் வேறு தெரிவுகள் இருக்கலாம். ஆனால் தை8 ம் திகதியினைப்பொறுத்தவரை வினா மகிந்தவா அல்லது மைத்திரியா என்பதுதான். இந்தவகையில் எப்பாடுபட்டாவது மகிந்த கொட்டத்தினை அடக்கினால்தான் தமிழர் மட்டுமல்ல முழுநாடுமே மூச்சுவிடமுடியும்.
சனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் முன்வைக்கப்படும் உண்மையான வினா வேறொன்று.
அதிகாரபூர்வமிக்க வாழ்நாள் ஜனாதிபதி , அதுவும் அதிகாரத்தை குடும்பக்கட்டுப்பாட்டுக்குள் உள்வாங்கிய சர்வாதிகாரத்துவத்க்கு மக்கள் அங்கீகாரம் பெற்றுக்கொள்வது ஒரு பக்கம். மறுபக்கதில் பத்து மாதங்களில் அதிகாரபூர்வமிக்க ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தை பெருமளவு அப்புறப்படுத்துவது எனும் தேர்தல் பிரச்சாரம்.
தன்னால் தன்து கட்சியின் தலைமையையே ஒழுங்காக கைப்பட்ட முடியாமல் தவிக்கும் ரணில் விக்கிரமசிங்க நரி தான் மைத்திரிபால சிரிசேன -வை முன் நகர்த்துவதில் மும்முரமான சூத்திரதாரி.
இரண்டு மாதங்கள் கழித்தால் ஜெனீவாவில் ஐ.நா மனிதவுரிமை சபையில் அமெரிக்க எசமானால் மொழியில் பிரம்படி வாங்க நேரிடும் அவமானத்தை முந்துவதே அவசரத் தேர்தலின் அவசியம்.
It’s like a family split…
(with the influence someone living far)
Now differnt families joined…
May be it’ll going to be like Visu’s movie…
Anyhow in the ground situation…
For Upcountry Tamils, Eastern Tamils & for Muslims, who ever comes all are same…
(but in different way… Muslims whatever they want they’ll get & survive… poor eastern & upcountry Tamils have to live in same condition…)
For Colombo & Jaffna upper class Tamils, they’ll like the regime change…
For Vanni Tamils (former LTTE controlled area), now their children freely going to school, freely going, playing around… without any siren, war plane sound, bombing they sleep well well…
For Sinhalese only a regime change…
If take the whole country prices gone up…
This if any government comes they can’t change it…
In big picture more US & allies influences will come…
China will back the present government strongly…
(their investments…)
India will watch… They need a strong powerfull government, for their investments…
But for TNA, all must be same…
Whoever they support, as usual on the road they know how to fool the voters & go to the parliament…
SLFP Tamil Vice President & The Traditional Minister will wait for the result… & as usual they’ll… (Traditinal Minister was in previous governments, including Chandrika’s… TMVP leader spilit from LTTE in UNP time…)
But, if anyone ask their stand, they’ll tell, ” we’ll do good for the people”
( if they say something ‘idukku muddakka’ then before the election both are ‘ampo’… But they’ll wait for the election result & will survive… Mahinda must know this… what to do… All are politics…)
For now… It’s…
மகிந்தவினை ஆதரிக்குமாறு தமிழர்களையோ அல்லது முஸ்லீம்களையோ யாரும் கேட்டாலும் அவ்வாறுபெரும்பாலும் யாரும் வாக்களிக்கப்போவதில்லை. எனவே மகிந்த ஆதரவாளர்களின் இம்முறை கோசம் பகிஸ்கரிப்பு , மற்றும் யார் வென்றாலும் ஒன்றுதான் என்பனவே. 18ம்சட்ட திருத்தமே ஆகக்குறைந்ததுபோதும் மகிந்தவினை வீட்டிற்கு அனுப்புவது.
For US & allies, they need someone who listen to them…
And here Maithiribala wants to put an end for the family politics only…
If take Chandrika’s stand it’s like a revenge…
For UNP, if they missed this opportunity they don’t have anything…
&!if Ranil comes as a Prime Minister…?
Only, everyone wants a regime change… that’s it…
Except regime change nothing will happen for Tamils…
But if Mahinda wants to come back… this is not too late for get Tamils votes…
He can get the votes more than what TNA got in NPC election…
He has to open his widely for the whole nation’s benefit…
But if he trust his Jaffna political alliance… hmm…
Maybe his Jaffna political alliance can show the local people, that their International coordinator is there… International VIP is there… But we know their International Cordinator’s credentials & their International network..(before &!after 2009)…
Now the war came for an end…!
No one wants war…!
Each &!every citizen like to live Peace…!
President! It’s not too late…
இந்த தோ்தலில் சீனாவின் பணம் வெல்கிறதா அல்லது அமொிக்காவின் பணம் வெல்கிறதா என்பதே முக்கியமாகும்
மற்றும்படி இந்த தோ்தலும் எப்போதும்போல் அனாவசியமான எதிா்பா்ப்புகளை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இறுதியில் ஏமாளிகள் ஆக்கவே செய்யும்.இதையிட்டு தமிழா்கள் அலட்டிக்கொள்ளாதிருப்பதே நல்லது அதாவது வாக்களிக்காமல் இருந்துவிடுவதே மேல்.இலங்கை நாட்டில் ஒரு சிங்கள அரசியல் தலைவனால் தமிழா் பிரச்சனைக்கு தீா்வு முன்வைப்பதென்பது ஒருபோதும் சாத்தியப்படாது இதில் ராமனா, இராவணனா என்பது தேவையற்றது.
ஸ்ரீ லங்கா விடயங்களில் புலம்பெயர்த்தப்பட்ட தமிழர் தலையிட்டால் மகிந்தவுக்கு சாத்தியமாகும்.
விரும்பியோ விரும்பாமலோ ஸ்ரீ லங்காவின் பிடியில் அகப்பட்டுத் தவிக்கும் தமிழருக்கு இத் தேர்தலிலாவது புலத்தில் இருந்து தலையேடுகள் இல்லாமல் இருப்பது நல்லது.
இங்குள்ள முக்கிய சிக்கல் ஒன்று புலியெதிர்ப்பையே அரசியலாக எடுத்து ராஜபக்ச-உடன் உரசி கடந்த ஐந்து வருடங்களாக ரூபாயின் பணப்பரிமாறல் ஸ்திரமின்மையில் தின்று கொழுத்த, ஒரு வேலையையும் உருப்படியாக அணுக முடியாத சொறிக்கூட்டமொன்று இப்போ ராஜபக்ச எதிர்ப்பு தான் அரசியல், அடி, பிடி, இந்தியாவால் தான் தீர்வு, அமெரிக்காவால்தான் தீர்வு, டக்லஸ் கள்ளன், புலிப் பணம் எங்கே, வேறு எங்காவது தின்று கொழுக்க வழியுண்டா … என அந்திரப்படுவது.
இப்பொழுதும் ஏதோ வன்னியிலிருந்து கட்டளைகள் வருவது போல மூலைக்கோழாறால் பாதிக்கப் பட்டதை அறியாத சில மொக்கு புலி ஆதரவாளர்களும் தமது செயற்பாடுகளால் இத்தகைய ஒரு சிறு புலம்பெரத்தப்பட்ட சொறிக்கூட்டம் பிழையான வழியில் புலம்பெயர் தமிழர் என்ற காரணியை ஸ்ரீ லங்கா தேர்தலில் களமிறக்க துணை போகிறது.
முதலில் புலம்பெயர் தமிழர் இடையே ஒற்றுமை வேண்டும். அதற்கு விட்டுக்கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் புலத்திலாவது உருவாகியிருக்குமா என ஏங்க மட்டுமே முடியுமாயிற்று.
If we take TNA’s position most likely they’ll support the Common candidate…
But I think the most they’ll like Chandrika’s leadership…
All must be in neighbour’s advice…
Previous election LTTE guided TNA supported the Military leader Sarath Fun-seka…
PLOTE leader Tharmalingam Siththarthan supported Mahinda Rajapaksha…
TULF leader Veerasingham Anandasangaree kept silence…
Now in this ‘fool for vote’ TNA, they are again going to fool the voters…
(I don’t know they’ll discuss with Sangaree or not…)
EPDP waiting for TNA’s position…
If sometimes parliament dissolved in next week, it’s better for EPDP…
Until then, they are in critical position..
Anyhow later they’ll join in any government…
As I said earlier, we can expect more election violence…
May be in the name of LTTE, incidents will happen…
So, in the Election Day may be Northern voters will be in closed doors…
It’s a game of politics…
External forces playing in this…
India & China closely watching…
தமிழர் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்குகின்றதோ அவர் தோற்பது நிச்சயம். ஆகவே சம்பந்தன் ஒன்றும் கதையாமல் இருப்பது நல்லது. இதில் தாம் எடுக்க வேண்டிய தீர்மானம் பற்றி தமிழர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்