மகாராஜா ஊடக வலையமைப்பின் பிரதான அலுவலகம் மீது திட்டமிட்ட வன்முறைக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை மிகவும் அறுவருக்கத்தக்கதெனக் கருதி வன்மையாகக் கண்டிப்பதாகவும், தற்போதைய மகிந்த ராஜபக்ச நிர்வாகத்தினர் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல் தொடர்ந்தும் அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளதெனவும் ஒடுக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
விசேடமாக சிரச ஊடக வலையமைப்பை சீர்குலைப்பதற்காக பல சூழ்ச்சிகள் செயற்பட்டுவருவதை நாம் காண்கிறோம். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் தெபானவிலுள்ள அந்த ஊடகத்தின் கலையகக் கட்டிடத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் சிலர் அதனைத் தீயிட்டனர்.
அத்துடன், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் அரசாங்கத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிரச நிறுவனத்திற்கு பெறும் அழுத்தங்களை ஏற்படுத்தினர் என்பதும் இரகசியமானதல்ல. எனினும், இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மையான குற்றவாளிகளுக்கெதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. குற்றவாளிகள் தொடர்ந்தும் சுதந்திரமாக திரிகின்றனர். இம்முறை பட்டப்பகலில் பகிரங்கமாக சிரச ஊடக வலையமைப்பின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்துவதை புறக்கணித்துள்ளதன் காரணமாக வன்முறையாளர்கள் தாம் விரும்பியதைப் போல் சுதந்திரமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாணந்துறை மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் அண்மையில் இரண்டு ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை சமர்ப்பித்து தமது பணியில் ஈடுபட முயற்சித்தனர்.
காவல்துறையினரும் வன்முறையாளர்களும் ஏற்படுத்திய தடை காரணமாக அவர்களினால் பணியில் ஈடுபட முடியாது போனது. சட்டம் ஒழுங்காக அமுல்படுத்தப்படாததன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் இந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.
சட்டத்தைக் கவனத்தில் கொள்ளாது எப்படியான வன்முறையிலும் ஈடுபடும் சுதந்திரத்தை ராஜபக்ச நிர்வாகம் சமுகமயப்படுத்தியுள்ளது. சிரச மீது மேற்கொள்ளப்பட்ட தற்போதைய தாக்குதல் அரசாங்கத்தின் தேவைக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் கூறுவதற்கு நியாயமான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தச் சென்ற வன்முறையாளர்கள் சிரச ஒளிப்பதிவாளர்களினால் படம்பிடிக்கப்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்~ அரசாங்கம் தாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க சிறந்த சந்தரப்பம் கிடைத்துள்ளது. சட்டத்தை சரியாக அமுல்படுத்தி உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கி அரசாங்கம் தான் நிரபராதி என்பதை நிருபிக்க வேண்டும் என ராஜபக்ச அரசாங்கத்திற்கு சாவல் விடுப்பதாகவும் ஒடுக்குமுறைகளுக்கெதிரான ஊடகவியலாளர் அமைப்பின் ஏற்பாட்டாளர் சந்தன சிறிமல்வத்த தெரிவித்துள்ளார்.
EXCLUSIVE அமைச்சர் பேரியல் அஷ்ரபின் ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என அம்பாறையிலிருந்து முக்கிய பிரமுகரொருவர் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.
இன்று இரவு 9.00மணியளவில் இச்சம்பவம் அம்பாறை நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள வீரக்கொட என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆட்டோவொன்றில் மேற்படி மூன்று பேரும் செல்லும்போடு ஊர்காவல் படையினரின் சோதனைச்சாவடியில் வைத்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அம்பாறை மத்திய முகாம் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இறந்தவர் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் அமைச்சர் பேரியல் அஷ்ரப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்மிரர் இணையதளம் உடனடியாக அம்பாறை மத்திய முகாம் பொலீஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டது.
பிரதிப்பொலீஸ் மா அதிபர் வருகை தந்துள்ளதால் கதைக்க முடியவில்லை என பொலீஸ் அதிகாரியொருவர் எமக்குத்தெரிவித்தார்.
எனினும் மேலதிக விவரங்களைப்பெற தமிழ்மிரர் இணையதளம் முயற்சித்துக்கொண்டிரு
க்கின்றது.