மதிமுக, பாஜக ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளர் பி ஏ சங்மாவை ஆதரிக்கும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவது தொடர்பாக, மதிமுக சார்பில் நடந்த எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய வைகோ, இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மதிமுக பாஜகவின் ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளர் பி.ஏ சங்மாவை ஆதரிக்கும். இந்த முடிவை மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கேட்டுக் கொண்டதின் பேரில் மதிமுக எடுத்திருக்கிறது.
ராம்ஜெத் மலானி எனது இனிய நண்பர் மட்டுமல்ல, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரையும் காப்பாற்ற போராடி வருபவர். தமிழர்கள் நலனில் உண்மையான அக்கறைக் கொண்டவர். ஊழல் அற்ற ஜனநாயகம் அமைக்க பாடுபடுபவர். அவர், பி ஏ சங்மாவிற்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், மதிமுக சங்மாவை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறது. மதிமுகவின் கணேச மூர்த்தி சங்மாவிற்கு வாக்களிப்பார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அது என்ன பாஜக ஆதரிக்கும்
In Sri Lanka political pluralism was created in 1952. It took a longer time in India for BJP to come up at National Level. In Tamil Nadu there are four DMK parties. Let us look with hope at the fture.