நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும், பௌத்த பிக்குகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு கண்டியில் நாளை மறுதினம் (18) நடைபெறவிருந்த பௌத்த தேரர்களின் சங்க சம்மேளன மாநாடு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கால வரையறையின்றி குறித்த சங்க சம்மேளன கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக கண்டி மல்வத்த, அஸ்கிரிய மற்றும் ராமன்ய பீடாதிபதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீ தலதா மாளிகையின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டுமென மாநாயக்கத் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நான்கு மாநாயக்க தேரர்களும் கையெழுத்திட்டு கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளனர்.
குறித்த பௌத்த தேரர்களின் சங்க சம்மேளன மாநாடு நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த ஜனாதிபதி தலைமையில் பாரியளவிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இவற்றுக்காக அரசாங்கத்தைச் சார்ந்திருக்கும் பௌத்த பிக்குகள் பயன்படுத்தப்பட்டனர்.
பிக்குகளூக்கே மொட்டை போட்டு நாமம் பூசியவர் என்றால் வரலாற்றீல் ராஜபக்ஸதான்.அப்படியானால் மற்ரையோர் மோட்டை பார்த்து மூச்சு விடவேண்டியதுதான்.
ஏதோ !சகோதரர்கள் நாமம் போட்டு விடப் போகிறார்கள்!ஜாக்கிரதை!!!!