தமிழர்களின் தாயக பூமியாகிய வடக்கில் பௌத்த கோயில்களை அமைப்பதும் பௌத்த சின்னங்களை நிறுவுவ தும் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத் தும் ஒரு செயலாகும்.
இவ்வாறு தெரிவித்து ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி.
அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ள முழுவிவரமும் வருமாறு:
மேதகு மஹிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.
04.03.2010
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர் களே,
தங்களின் கவனத்திற்கு சில விடயங் களைக் கொண்டு வர விரும்புகின்றேன். மகிந்த சிந்தனை வேறு பலரின் சிந்தனை யுடன் கலந்து மாசடைந்து அதன் தனித்து வத்தை இழந்துள்ளது என வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன். யுத்தம் முடிந்ததும் மக் கள் பல மாற்றங்களை எதிர்பார்த்தனர். துர திஸ்டவசமாக அவர்கள் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை முறை கூட மாறவில்லை. அவர்கள் எதிர் பார்த்த நாட்டைக் காணவில்லை. அதற்கு மாறாக நம்பிக்கையையும் இழந்த நிலை யில்தான் இருக்கின்றார்கள்.
தாம் இழந்த அத்தனையையும் மீளப் பெற்றுத்தருவதாக நீங்கள் கூறினீர்கள் என சொல்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் தம் உடைமைகள் அத்தனையையும் இழந்து தம் அன்புமிக்க உறவுகள் பலரையும் இழந்துள் ளனர். ஆனால் இன்றுவரை அரசு அவர்க ளின் சொத்து விவரங்கள் அதாவது அவர் களிடம் இருந்தவை, அவர்கள் இழந்தவை போன்ற விவரங்களை திரட்டுவதில் அக் கறையோ ஆர்வமோ காட்டவில்லை. இது வரை அரசு வன்னியில் இறந்தவர்களின் விவ ரங்களையோ எப்படி இறந்தார்கள் என்றோ அவர்கள் என்னென்னவற்றை விட்டுச் சென் றார்கள் என்ற விவரங்களையோ தயாரிக்க வில்லை. தடுப்பு முகாம்களில் விடுதலைப் புலிகளிடம் ஒரு நாளேனும் பயிற்சி பெற்ற வர்களைத் தெரிவிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்து விரைவில் அவர்கள் விடு விக்கப்படுவார்களெனவும் தெரிவித்தாலும் அவர்கள் அனைவரும் நீண்ட நாள்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களு டைய பெற்றோர் அரசு தனது வாக்குறுதியை காப்பாற்றத் தவறிவிட்டதாக விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். விடுதலைப் புலி உறுப்பினர் என தடுத்து வைக்கப்பட் டுள்ள சிலரிலேயே அவர்களின் குடும்பங் கள் தங்கியுள்ளன. சிலர் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்ற குறையில் உள்ளனர். சிலர் குடும்பத்தில் ஒரே பிள்ளையாவர். ஆனால் வசதியுடன் வாழ்ந்த வர்கள் இன்று நாடோடிகள் போலும் பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் புறாக்கூடு போன்ற கூடாரங்க ளில் கொதிக்கும் வெயிலில் பல மாதங்க ளாத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிகாரத்தில் உள்ள சிலர் பல்வேறு பொது தாபனங்களின் தலைவர்களையும் கோயில் தர்மகர்த்தாக்களையும் வரவழைத்து பெரும் தொகையான பண உதவியை வெளிப் படையாகச் செய்கின்றனர். வரவு செலவுத் திட் டத்தில் எந்த ஒதுக்கீட்டில் இதை செய்ய முடிகிறது என அறிய மக்கள் ஆவலாக உள் ளனர். இத்தகைய நிகழ்வுகள் தங்கள் ஆட் சியில் ஏற்படலாமா?
அடிக்கடி அமைச்சர்களும் அதிகாரிக ளும் வடக்கே வந்து போகின்றார்களே தவிர வடக்கில் என்ன அபிவிருத்தி வேலை நடக் கிறது. பிரதானமாகப் புளுகக்கூடிய அபி விருத்தி எதுவும் என் கண்களுக்குத் தெரி யவில்லை. வன்னிப் பகுதியில் ஒன்றரை லட்சம் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள் ளன. ஆனால் இதுவரை மீளக்கட்டப்பட்டுள் ளனவா? நீண்டநாள்களுக்கு முன் அகதி களுக்கு சொற்ப பணமேனும் உதவியாக வழங்குமாறு கேட்டிருந்தேன், உப்பு, புளி, மிளகாய் போன்ற பொருள்கள் வாங்கவென அவ்வாறு செய்யத் தவறினால் அகதிகள் தமக்குக் கிடைக்கும் உலர் உணவுப் பொருள் களில் ஒரு பகுதியை விற்றே இவற்றை வாங்க முடிகிறது. விளைவு அவர்கள் சில நேர உணவுகளை தியாகம் செய்ய வேண் டிய நிலை துரதிஸ்டவசமாக இவைகள் தங் களின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு வரவில்லை. ஆனால் சில அதிகாரிகளும் சில தொண்டர்களும் பல்வேறு வகையில் நிறைய சம்பாதிக்கின்றனர்.
நான் ஒரு பாரதூரமான விடயத்தை தங் கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும் புகின்றேன். நிச்சயமாக நீங்கள் அதை அறிந் திருக்கமாட்டீர்கள். ஆயுத முனையில் சமய நம்பிக்கை மக்கள் மீது திணிக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. 200 ஆண்டு இடை வெளிக்குப்பின் அந்த நிலை மீண்டும் நம் நாட்டில் வேண்டாம். பல்வேறு இடங்களில் பல்வேறு நிலையில் பல்வேறு மக்களின் சில மாறுபட்ட கருத்துக்கள் என் காதில் விழு கின்றன. அவற்றை உங்களுக்குத் தெரியப் படுத்த எனக்கு அனுமதி தரவும். பௌத்த சமயத்தில் எனக்குள்ள நம்பிக்கை விசுவா சம் பற்றி முழு உலகும் அறியும். இது நீங்கள் அறியாததும் அல்ல.
மகியங்கனை, நாகதீபன், களனி ஆகிய ஸ்தலங்களில் நான் எத்தனை தடவை விஜ யம் செய்திருப்பேன் என்ற எண்ணிக்கை எனக்குத் தெரியாது. நான் இந்து மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் பல தடவைகள் தலதா மாளிகைக்கு சென்று புத்த பெருமா னின் புனித சின்னத்தை வணங்கியுள்ளேன். மகாநாயக்கர்களின் ஆசியைப் பல தடவை பெற்றுள்ளேன்.
ஆகவே இங்குள்ள மக்கள் என்ன நினைக் கின்றனர்; என்ன பேசுகின்றனர் என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டிய தார் மீகக் கடமை எனக்குண்டு. இங்குள்ள மக் கள் பௌத்த சமயத்திற்கு எதிரானவர்கள் அல்லர். சங்கமித்த பிக்குகள் புனித அரச மரக்கிளையுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறையில் தான் வந்திறங்கினர் எனப் பெருமைகலந்த மகிழ்ச்சியுடன் மக் கள் சிலவேளை பேசிக்கொள்வார்கள் என் பதை நான் நன்கு அறிவேன். பெருமளவில் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டுள்ள பகுதி யில் மக்கள் துணிந்து பேச முடியாத நிலை யில் உள்ளனர். ஒரு பௌத்த மதத்தவர்கூட வசிக்காத சில இடங்களில் பௌத்தமதம் திணிக்கப்படும் முறையைப் பற்றியே மக் கள் பேசிக் கொள்கின்றனர். நான் ஒரு தட வையல்ல பல தடவைகள் இராணுவத்தின ரின் மனிதாபிமான செயற்பாடுகள் பற்றி மிகவும் பெருமையாகப் பாராட்டியுள்ளேன். அவர்களின் நடவடிக்கைகளை நானே நேரி லும் கண்டுள்ளேன்.
இராணுவத்தினரைப் பாராட்டும் மக்கள் வடக்கே பௌத்தம் திணிக் கப்படும் முறையை வெறுக்கின்றனர். இப் பணியை இராணுவத்திடம் விடாது மதகுரு மார்களிடம் விட்டு விடவும். தற்போதைய முறையானது அரசுக்கு எதிராகவே திரும் பும் என்பது மட்டுமல்ல எதிர்பார்த்திருக்கும் பலனையும் தரமாட்டாது. அதற்கு மாறாக அரசு பலாத்காரமாக பௌத்தத்தை திணிக்க முயற்சிக்குமானால் அது ஒரு புத்திசாலித் தனமான செயல் என நான் கருதமாட்டேன். பௌத்தர்கள் எவரும் இல்லாத இடங்களில் புத்தபெருமானின் சிலைகளை அமைப்பது புத்தபெருமானையும் அவரின் புனிதமான போதனைகளையும் அவமானப்படுத்தும் செயலாகவே எவரும் கணிப்பர். மேலும் இச் செயல்களினால் இனவாதிகள் பல சங்கட மான நிலைமைகள் உருவாக்க அவர்க ளுக்குக் கொடுக்கப்படுகின்ற வாய்ப்பாகவே அமையும்.
இது பற்றிய நன்மை தீமைகள் பற்றி கருத் துக் கூறும் மனநிலையில் நம்மக்கள் இன்று இல்லை. ஆனால் பொதுவான அபிப்பிராயம் என்னவெனில் பல கஷ்டத்தின் மத்தியில் பெற்ற சுகந்திரம் பறிபோய் மீண்டும் ஒரு சர் வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும். துர்நோக் கோடு இல்லாமல் ஒரு சில அப்பாவிகளின் செயலாக இது இருக்கலாம். இக்கட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் உடனடியாகத் தலை யிட்டு பௌத்த பெருமானை அவமதிக்கும் இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி இடுங்கள். நாட்டின் இப்பகுதியில் அமைதி இல்லாத நிலையில் ஏதாவது புது விடயங்கள் பற்றி ஆராய்வது சிந்தித்தால் சிறப்பு வாழ்க்கை திரும்பும் வரை பொறுத்திருப்பதே பொருத் தமானதாகும். என்று குறிப்பிட்டுள்ளார்.
தகவல் : அலெக்ஸ் இரவி
சைவக் கோவில்களையும் கிறிஸ்த்தவத் தேவாலயங்களையும் குண்டு போட்டு இடிக்கேக்கை தலைவருக்கு மனம் புண்படேல்லையோ?
அது கூட ஒரு வேளை “துர்நோக்கோடு இல்லாமல் ஒரு சில அப்பாவிகளின் செயலாக .. இருக்கலாம்”.