இலங்கையில் போது பால சேனா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பு அரச படைகளின் துணையோடு முஸ்லிம் தமிழர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை மேடைப் பேச்சுக்களிலும், தெருமுனை ஒன்று கூடல்களிலும், சுவரொட்டிகளிலும், துண்டுப்பிரசுரங்களிலும் தெரிவித்து வன்முறையைத் தூண்டி வருகிறது. அப்பாவி முஸ்லீம்களை தமது பிழைப்பு வாத நோக்கங்களுக்காகவும் வாக்குப் பொறுக்கும் அரசியலுக்காகவும் பயன்படுத்தி வரும் கொழும்பு சார் அரசியல் தலைமைகள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.
இந்த நிலையில் அரச படைகளின் துணையோடு நடத்தப்படும் இத்தாக்குதல்களைக் கண்டுகொள்ளாத மகிந்த ராஜபக்சவை முஸ்லீம் பிரமுகர்கள் சந்திது இது குறித்து முறையிட்டனர். அதற்கு பதிலளித்த மகிந்த போது பால சேனாவிடமே இதனை முறையிடுமாறு திமிரோடு தெரிவித்துள்ளார்.
,இந்த விடயங்கள் குறித்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அந்த அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்ததாக அந்த சந்திப்பில் கலந்துகொண்ட துணை அமைச்சரான எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக இனிமேல் நடக்கக்கூடிய பாதக நடவடிக்கைகளை தடுப்பதற்காக தான் பொலிஸாருக்கு உத்தாவிடுவதாகவும் ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார்.
அப்படியான நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுப்பதற்காக அவை குறித்து ஆராய ஒரு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதுடன், மாவட்ட மட்டத்தில் பல் சமூக பிரமுகர்கள் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார
கொழும்பு தலைமையை ஒழிக்கும் வரைக்கும் விடுவே இல்லை.