Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பௌத்தத்தின் பெயரால் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாகும் முஸ்லீம்கள் : மியான்மார் கொலைக்களம்

இனியொரு... by இனியொரு...
07/19/2012
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

ஆசியாவின் பலஸ்தீனம் என ஐக்கியநாடுகள் நிறுவனத்தால் வர்ணிக்கப்பட்ட மியான்மாரில் இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்புக்கு ஒப்பான இனச்சுத்திகரிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மியான்மாரில் ரோகின்ன் ஜியா முஸ்லீம் இனக்குழுவே இந்த இனச்சுத்திக்க்ரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பௌத்த அடிப்படைவாதிகள் பௌத்த மத்தின் பெயரால் இந்த இனச்சுத்திகரிப்பை நடத்திவருகின்றனர். அமரிக்க ஐரோப்பிய அரசுகளின் மியான்மார் அடியாளும் அந்த நாடுககளால் ஜனநாயகவாதி எனப் போற்றப்படும் ஆன் சங் சூ கி தனது ஜனநாயக வரை முறைக்குள் இந்த இனச் சுத்திகரிப்புக் குறித்து வாய்திறப்ப்பதில்லை. பௌத்த மதவாதிகளால் நிகழ்த்தப்படும் இனச்சுத்திகரிப்பிற்கு அஞ்சி தொண்ணுறாயிரம் முஸ்லீம்கள் தமது சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த ஜூன்மாத அறிக்கைகளின் படி 1200 முஸ்லீம்கள் காணாமல் போயுள்ளனர். 650 முஸ்லீம்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். மனித உரிமைக் கூச்சல் போடும் மேற்கின் சர்வாதிகார அரசுகளும், அவர்களால் வழிநடத்தப்படும் தன்னார்வ நிறுவனங்களும் பௌத்த மதத்தின் பெயரால் நடத்தப்படும் அப்பாவி மக்களுக்கு எதிரான இந்த யுத்தத்தம் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

காஷ்மீரில் நிலநடுக்கம்

Comments 4

  1. Dr/ Sri S. Sriskanda says:
    13 years ago

    Myanmar that gave U Thant as the Secretary General of the UNO and to the world will get completely free from the their own army. Sri Lanka is pulling itself into the UNO everyday.

  2. S.Anpu says:
    13 years ago

    மியான்மர்: கலவரமும் நிலவரமும்

    அண்மையில் செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டவைகளில் மியான்மரின் வங்காள முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் நண்பர் இக்பால் செல்வன் தன்னுடைய கோடங்கி தளத்தில் எழுதிய இந்தக் கட்டுரை வரலாற்றுத் தகவல்களுடன் கிடைத்தது. அந்தக் கட்டுரையை செங்கொடி வாசகர்களுக்கும் தருவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த மீள் பதிவு.
    உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் நடத்தும் கலவரங்கள், உழைக்கும் மக்களே இரண்டு பிரிவாக பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்த்து புரியும் கலவரங்கள், தேசிய இனப் பிரச்சனைகள் போன்றவை எல்லாம் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உருவாக்கப்படுபவைகளே. கலவரம் என்றதும் இழப்புகளை மையப்படுத்திப் பார்க்காமல் அதில் ஒழிந்திருக்கும் ஆளும் வர்க்கங்களின் நலன், உழைக்கும் மக்களுக்கு எதிரான தன்மைகள் போன்றவற்றை சரியாக அடையாளம் கண்டு அம்பலப்படுத்துவதே சரியான, அவசியமான பணி.

    ***************************************

    பர்மா என அறியப்படும் மியன்மார் நாடு மிக அண்மையில் தான் மக்களாட்சி முறைக்குத் திரும்பியுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக இராணுவ ஆட்சியில் சிக்கித் தவித்த மியன்மார் கொஞ்சம் கொஞ்சமாக மக்களாட்சிக்கு திரும்பி வந்தது. இதற்காகப் பெரிதும் போராடியவர் ஆங்க் சாங்க் சூ கி ஆவார். உலக நாடுகளில் எழுந்துள்ள சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான ஒரு சூழலும், அழுத்தமும் கூட இதற்கு ஒரு காரணமாகும். இந்த நிலையில் உலகமே கூர்மையாக மியன்மாரை அவதானித்து வந்த நிலையில் ஏற்பட்ட சோகமே ரொகிங்கியா கலவரம்.

    ரொகிங்கியா : ரொகிங்கியா எனப்படும் இஸ்லாமிய வங்காளி மொழி பேசும் மக்கள் சுமார் 800, 000 பேர் வரை மியன்மாரின் மேற்கு மாநிலமான அரக்கான் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். ரொகிங்கியாக்கள் ஏனைய நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களிடம் இருந்து தனித்துவமானவர்கள். பல நிலைகளில் ரொகிங்கியாக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருவதாகக் கூறினாலும். 1950-களுக்கு முன்னர் ரொகிங்கியாக்கள் மிகவும் சிறிய இனமாகவே இருந்தனர். பெரும்பாலானோர் வங்கதேசத்தில் இருந்து கூலிகளாக மியன்மாரில் வேலை செய்தவர்களே ஆவார்கள்.

    மியன்மாரின் இதரப் பகுதிகளில் இந்திய முஸ்லிம்கள், மலாய் முஸ்லிம்கள், சீன முஸ்லிம்கள் ரங்கூன் போன்ற நகரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்கள் யாவரும் ஆங்கிலேயேர் காலத்தில் இங்குக் குடியேறியவர்கள். அத்தோடு மட்டுமில்லாமல் ரங்கூன், மண்டலாய் போன்ற பகுதிகளில் சில பர்மிய முஸ்லிம்கள் சில நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களையும் ரொகிங்கியாக்களையும் பெரிதும் குழப்பிக் கொள்பவர்களும் உண்டு. ரங்கூன் பகுதிகளில் முஸ்லிம்களைப் போலவே தமிழர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களே. ஆனால் பெரும்பாலானோர் மியன்மாரிய விடுதலைக்குப் பின்னர் வெளியேற்றப் பட்டு விட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே மியன்மார் குடியுரிமை வழங்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

    ரொகிங்கியாக்கள் பெரிதும் வியாபாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுவதில்லை. பலர் நினைப்பது போல முகாலய மன்னர் காலத்தில் குடியேறிய வியாபாரிகளின் வழி வந்தவர்களும் அல்ல இவர்கள். வங்கதேசத்தின் சித்தங்காங்க எல்லைப் பிரதேச வழியாகக் கூலி வேலைக்குச் சென்றவர்களே ரொகிங்கியாக்கள். 1950-களுக்குப் பின் பல ஆயிரம் வங்காளி முஸ்லிம்கள் கள்ளத் தனமாக மியன்மாரில் குடியேறத் தொடங்கினார்கள். வங்கதேச விடுதலைப் போர் காலங்களில் மேலும் ஆயிரம் ஆயிரம் வங்காளி முஸ்லிம்கள் மியன்மாருக்குள் நுழைந்து அங்கேயே குடியேறி விட்டனர்.

    ரொகிங்கியாவின் வரலாறு : ரொகிங்கியா என்ற வார்த்தை பெரும்பாலும் 1990-களிலேயே பத்திரிக்கைகளில் இடம் பெறத் தொடங்கின. ரொகிங்கியாக்களைப் பற்றி ஆய்வில் ஈடுபடத் தொடங்கிய கின் மாங்க சா என்பவர் பல அதிர்ச்சித் தகவல்களையும், ஆச்சர்யமான விடயங்களையும் கண்டறிந்தார். ரொகிங்கியா என்ற வார்த்தை மியன்மாரின் அராக்கன் மொழி வார்த்தையே அல்ல. அராக்கன் மாநிலத்தில் பேசப்படும் எந்தவொரு மொழியிலும் ரொகிங்கியா என்ற வார்த்தை இடம்பெற்றதே இல்லை. அதனால் வங்காள மொழியில் இந்தச் சொல்லை தேடிய போதும் அப்படி ஒரு சொல் இடம்பெறவே இல்லை. ஆகவே அவர் பல இலக்கியங்கள், ஆவணங்களில் தேடிய போதும் ஏமாற்றமே மிஞ்சியது. பிரித்தானிய ஆட்சியின் போது மியன்மார் குறித்துப் பல நூல்களை எழுதிய மோரிஸ் காலிஸ் ரொகிங்கியா என்ற சொல்லை எங்கும் குறிப்பிடவே இல்லை.

    பர்மாவில் 1921-ம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள் தொகைக் கணிப்பின் போது பர்மாவில் வாழ்ந்த இனங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றில் கூட ரொகிங்கியா என்ற சொல் இடம்பெறவே இல்லை. ஆர்.பி. ஸ்மார்ட் என்பவரால் கொகுக்கப் பட்ட பர்மா கெஸ்ட்டிலும் இவர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

    முஜாஹித்கள் :

    1950களில் வங்கதேச எல்லைப் புறக் காடுகளில் முஜாஹித்கள் எனப்படும் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வந்தது. இவர்களின் தலைவனாக மிர் காசிம் என்னும் வங்காள மொழி பேசுபவன் செயல்பட்டு வந்தான். அராக்கான் மாநிலத்தின் வடப் பகுதிகளைக் கைப்பற்றிக் கிழக்குப் பாகிஸ்தானில் இணைக்க வேண்டும் எனச் செயல் பட்டு வந்தான். இந்த இயக்கத்தில் இருந்த உறுப்பினர்கள் அனைவருமே வங்காளத்தில் இருந்து சட்ட விரோதமாக அராக்கான் மாநிலத்தில் இடம் பெயர்ந்து வந்தவர்களே. காஸிமின் குழுவில் இருந்தவர்கள் பலர் பாகிஸ்தானில் சென்று பயிற்சியும் பெற்று வந்தார்கள். இந்த நிலையில் காஸிமை பிடிக்க மியன்மாரிய அரசு பரிசு அறிவித்தது. இருந்த போதும் அவன் பிடிப்படவில்லை. இந்த நிலையில் மியன்மாரிய இராணுவம் முஜாஹிதுகளைத் தோற்கடித்தது. இதனால் காஸிம் கிழக்கு பாகிஸ்தானாக அறியப்பட்ட வங்கதேசத்துக்கு ஓடிப் போனான். அங்கு அவன் ஆள் தெரியாத நபரால் காக்ஸ் பஜாரில் வைத்துக் கொல்லப்பட்டான். பல முஜாஹித்கள் அரசுப் படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களை ரொகிங்கியாக்கள் என அறிவித்துக் கொண்டனர்.

    1960-களில் யு நூ அதிபராகத் தேர்தலில் வெற்றிப் பெற்றதும் மியன்மாரிய இனங்களுக்குத் தனிமாநிலங்களை உருவாக்கத் திட்டமிட்டார். இதன் அடிப்படையில் மியன்மாரின் ராக்கின் இன மக்கள் வாழும் அராக்கன் மாநிலம் உருவானது. இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளிகள் தமக்கும் தனி மாநிலம் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஆனால் அவர்கள் யாவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    போலி வரலாறு :

    இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளி முஸ்லிம்கள் போலி வரலாற்றுத் தகவல்களை வெளியிடத் தொடங்கினார்கள். அதன் படி அரபு வணிகர்கள் வந்த கப்பல் அராக்கனில் மூழ்கிவிட அங்கிருந்து தப்பி வந்து அவர்கள் அராக்கானில் குடியேறி பர்மிய பெண்களை மணந்தத்தாகவும், அவர்களே ரொகிங்கியாக்கள் எனக் கதைக் கட்டி விட ஆரம்பித்தார்கள். பல வரலாற்று ஆய்வாளர்கள் முஸ்லிம்களின் இந்தக் கூற்றை மறுத்தும் வந்தனர்.

    ஆனால் ம்ராக் யூ அரசர்களின் படையில் சில முஸ்லிம் போர்வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் பர்மிய பெண்களை மணந்து வாழ்ந்தார்கள். அவர்களின் வாரிசுகள் சிலர் இன்றளவும் அராக்கன் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் எண்ணிக்கை சில நூறே ஆகும். இவர்களின் தோற்றமும், மொழியும் அராக்கானில் வாழும் ரக்கீங்களை ஒத்து இருக்கும். ஆனால் மியன்மாருக்கு வெளியே இருப்பவர்கள் இவர்களையும் ரொகிங்கியாக்களையும் குழப்பிக் கொள்பவர்கள் மிக அதிகம்.

    வங்காளிகளின் வருகை :

    இரண்டாம் உலக யுத்த காலங்களில் ஜப்பானை படைகள் பொழிந்த குண்டு மழைகளுக்கு அஞ்சிய பர்மிய ராக்கீன் இன மக்கள் வங்கதேசத்துக்கு அருகே உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறி அராக்கான் மாநிலத்தில் உள்ள நகரப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளாக இக்கிராமங்கள் மாறிப் போனது. இதனால் இப்பகுதிகள் ருவாகாங்க் என்றழைக்கப்பட்டன. ருவாகாங்க் என்றால் பழைய கிராமங்கள் அல்லது ஆள் இல்லாத கிராமங்கள் என்று அர்த்தப்படும். இந்த நிலையில் வங்காளத்தில் இருந்து குடியேறிய கூலித் தொழிலாளர்களும், சட்ட விரோத குடியேறிகளும் இந்தக் கிராமங்களில் குடியேறி வாழத் தொடங்கினார்கள். இந்த நிலையில் அராக்கான் பகுதிகளில் உள்ள நகரங்களுக்குக் கூலி வேலை செய்யப் போகும் வங்காளிகள் தாம் எங்கிருந்து வருகின்றனர் எனக் கேட்கும் கேள்விகளுக்குத் தாம் ருவாகாங்க காஜா எனச் சொல்வார்களாம். அதாவது ருவாகாங்கில் இருந்து வருகின்றோம் என, அவர்களுக்குத் தெரியாது ருவாகாங்க் என்றாலே பழைய கிராமங்கள் என்று அர்த்தமாகும். இதுவே காலப் போக்கில் ரொகிங்கியாக்கள் என்ற சொல்லாக மருவியது.

    ஆனால் 1960-களில் தமக்கான வரலாறுகளாகப் பொய்களைப் புனைய தொடங்கிய பல இஸ்லாமியர்கள் தாம் 9-ம் நூற்றாண்டில் இருந்தே வாழ்ந்து வருவதாகக் கதைக் கட்ட ஆரம்பித்தனர்.

    முகாலயர்களின் வாரிசுகள் :

    ரொகிங்கியாக்களில் சிலர் தாம் முகாலயர்களின் வாரிசு என அறிவித்துக் கொண்டார்கள். ஆனாலும் அதுவும் உண்மை இல்லை என்பதைப் பர்மிய வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 16-ம் நூற்றாண்டில் ஷா சுஜா என்னும் இளவரசன் இருந்தான். ஔரங்கசீப்பின் இளைய தம்பியான இவன் அரசராக முயன்றான், ஆனால் அம்முயற்சி தோல்வி காணவே உயிருக்கு அஞ்சி அராக்கானில் ஆட்சி செய்த சண்ட துத்தம்மா என்னும் மன்னனிடம் அடைக்கலம் புகுந்தான். 1660-களில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மன்னன், பின்னர் அவனின் மகளை மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டுப் பெண் கேட்க போனான். ஆனால் இதனைச் சம்மதிக்க மறுத்துவிட்டான் ஷா சுஜா. இதனால் கோபமுற்ற மன்னன் சண்ட துத்தம்மா அனைத்து முகாலயர்களிலும் வெட்டிப் போடும் படி உத்தரவிட்டான். அதன் படி அனைவரும் கொல்லப்பட்டனர். இதனைக் கேள்வியுற்ற முகாலய மன்னர்கள் சண்ட துத்தம்மாவிடம் போர் தொடுத்து வந்தனர். இதனால் அராக்கான் மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தாங்கோங்க் பகுதியை முகாலயரிடம் இழந்துவிட்டான். இன்றளவும் சித்தாங்கோங்க் வங்கதேசத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. ஆனால் அங்கு வாழும் பெரும்பான்மையினர் பர்மிய மொழி பேசும் பௌத்தர்களாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஆகவே பாரசீக மொழி பேசிய முகாலயர்களின் வாரிசுகள் தான் ரொகிங்கியாக்கள் என விடப்பட்ட கதையும் ஒரு புனைவே என்பது உண்மையாகிவிட்டது. ஏனெனில் ரொகிங்கியாக்கள் உருவத்தால் கருப்பானவர்கள், வங்காள மொழி பேசக் கூடியவர்கள். ஆனால் முகாலயர்களோ துருக்கிய இனத்தைச் சார்ந்தவர்கள் வெள்ளை நிறமானவர்கள், பாரசீக மொழி பேசக் கூடியவர்கள். அத்தோடு அவர்கள் யாவரும் அராக்கான் மன்னனால் கொலை செய்யப்பட்டு விட்டதாகவே வரலாறு கூறுகின்றது.

    பர்மிய மொழிய தெரியாத ரொகிங்கியாக்கள் :

    பர்மாவில் குடியேறிய இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் பலர் ரங்கூனில் வாழ்கின்றார்கள். இவர்கள் சரளமாகப் பர்மிய மொழி பேசக் கூடியவர்கள். பர்மிய அரசவையில் போர் வீரர்களாக இருந்த சில முஸ்லிம்கள் பர்மியர்களோடு கலப்புற்று பர்மிய மொழி பேசி அராக்கன் உட்படச் சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய தமிழர்கள், தெலுங்கர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலாய் முஸ்லிம்கள் போன்றோரும் பர்மிய மொழியே பேசி வருகின்றார்கள். 17-ம் நூற்றாண்டில் பர்மாவில் குடியேறிய போர்த்துகேசிய கத்தோலிக்கர்களும் சிரியம் என்ற நகரில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களும் பர்மிய மொழியே பேசி வருகின்றார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்களாகக் கூறிக் கொள்ளும் ரொகிங்கியாக்கள் பலருக்கு சுத்தமாகப் பர்மிய மொழியோ, அராக்கனிய மொழியோ பேசத் தெரியாது. உடை, நடை, பாவனைகள், உணவு பழக்க வழக்கம், உருவ ஒற்றுமை எனப் பலவற்றிலும் ரொகிங்கியாக்கள் பர்மியர்களோடு ஒத்துப் போவதே இல்லை. சில நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த தமிழர்களே பர்மிய மொழி சரளமாகப் பேசும் போது ஏன் இவர்களால் பேச முடியவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும் ?

    ஏழாம் நூற்றாண்டில் கப்பலில் வந்த கதை :

    ஏழாம் நூற்றாண்டில் கப்பலில் வந்த அரபு வாணிகர்களின் கப்பல் உடைந்து, அவர்கள் தப்பி வந்து அராக்கானில் இருந்த ம்ராக் யூ மன்னராட்சிக் காலத்தில் குடியேறியவர்களே இந்த ரொகிங்கியாக்கள் எனக் கூறப்படுகின்றது. ஆனால் இதுவும் உண்மையல்ல ! ஏழாம் நூற்றாண்டில் ம்ராக் யூ மன்னர்களே ஆட்சி செய்யவில்லை ! மாறாகத் தன்யாவட்டி மன்னர்களே அப்போது ஆட்சியில் இருந்தனர். தன்யாவட்டி மன்னர் காலத்தில் பர்மாவில் முஸ்லிம்கள் இருந்தமைக்கான ஆதாரங்களோ, எந்தவிதக் குறிப்புகளுமோ இல்லவே இல்லை. அக்காலத்தில் வேறு மதம் இருந்தது எனில் அது இந்து மதம் மட்டுமே எனப் பர்மிய வரலாறுகள் கூறுகின்றன.

    கம்யூனிஸ்ட்களின் சதி வேலை :

    1950-களில் முஜாஹித்களோடு தொடர்பு வைத்திருந்த செஞ்சட்டை கம்யூனிஸ்ட் போராளிகளே ரொகிங்கியா என்ற வார்த்தையை முஜாஹித்களைக் குறிப்பிட பயன்படுத்தியதாக யு தாங்க் என்ற வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றார். ஆனால் அதன் சரியான அர்த்தம் என்னவெனத் தெரியாது என அவர் கூறுகின்றார். செஞ்சட்டை கம்யூனிஸ்ட்கள் முஜாஹித்களுக்குப் பர்மிய குடியுரிமையைக் கள்ளத் தனமாகப் பெற்றுக் கொடுக்கவும் முயன்றுள்ளனர் என அவர் கூறுகின்றார்.

    ரொகிங்கியாக்களின் எதிர்காலம் :

    இது போன்ற இனக்கலவரங்கள் பல முறை கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆனால் அப்போது எல்லாம் இவற்றை இவ்வளவு பெரிதாக ஊடகங்கள் கூறவில்லை. ஆனால் தற்போது ஜனநாயக ஆட்சியைத் தழுவ நினைக்கும் மியன்மாரில் பிரச்சனைகளை உண்டுப் பண்ணவும், சீனச் சார்பு நிலையில் இருந்து அமெரிக்கச் சார்பு நிலைக்கு மாறி வரும் மியன்மார் மீது அழுத்தங்களைக் கொடுக்கவே இப்படியான கலவரங்கள் தூண்டப்பட்டு, அவற்றைப் பற்றிய பல அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர். குறிப்பாகப் பாகிஸ்தானை மையமாக வைத்துச் செயல்படும் இணையத் தளங்கள், செய்தி ஊடகங்கள் பல தான் இந்தச் செய்திகள் பலவற்றை வெளியிட்டு பரப்பி வருகின்றனர். இதே போன்ற கலவரங்கள் நைஜீரியாவிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஊடகங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனெனில் அங்குப் பாதிக்கப்படுவது கறுப்பின கிருத்தவர்கள் என்பதால்.

    அதே போல ரொகிங்கியாக்களைப் பர்மிய முஸ்லிம்களோடு குழப்பிக் கொள்வதும், சட்ட விரோதமாகக் குடியேறி ரொகிங்கியாக்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பர்மாவில் புறக்கணிக்கப்படுவதாகச் செய்திப் பரப்பி வருவதும், அண்மையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் பர்மிய ராணுவம் 20,000 முஸ்லிம்களைக் கொன்று விட்டதாகவும் போலிச் செய்திகள் பலவற�

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      They will democraticize and normalise Myanmar. Did you see how angry is German Chancellor Angela Merkel is? She said, Military Junta.

  3. Malar says:
    12 years ago

    I cried all nite seeing that poor child!does anybody know wat happend to tht child!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...