போர் நிறுத்த ஒப்பந்தம் : 8 பிணை கைதிகள் விடுதலை

இஸ்லாமாபாத், ஜூலை 25-

போர் நிறுத்த ஒப்பந் தத்தில் பாகிஸ்தான் தலி பான்கள் கையெழுத்திட்ட தும் 8 பிணை கைதிகளை யும் விடுவித்தனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 29 அரசு அதிகாரி கள், பாதுகாப்பு படையி னரை பாகிஸ்தான் வட மேற்கு மாகாண எல்லைப் பகுதியில் தலிபான்கள் பிணை கைதிகளாக கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் வியா ழனன்று தலிபான்களுக்கும் உள்ளூர் அரசு அதிகாரி களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது. இத னைத் தொடர்ந்து பிணை கைதிகளில் 8 பேர் வியா ழனன்று பழங்குடியினர் கவுன்சிலான ஜிக்ராவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதர பிணை கைதிகளை யும் விடுவிக்க பழங்குடியி ன தலைவர்கள் முயற்சி மேற் கொண்டுள்ளனர்.