போர் நிறுத்தம்: ஐ.நா. முயற்சி தோல்வி ரஷ்யா-ஜார்ஜியா மோதல் தொடர்கிறது!

1108.2008.

ரஷ்யா – ஜார்ஜியா போர்நிறுத்தம் மேற் கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இன்னுமொரு முயற்சி தோல்வியடைந்தது.

ரஷ்யா – ஜார்ஜியா இடையே நடைபெற்று வரும், போர் உச்சகட்ட நிலையை அடைந்துள்ள தால், 15 உறுப்பினர் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 36 மணி நேரத்தில் 3-வது முறையாக சனிக்கிழமையன்று கூடி ஆலோசனை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே முரண்பாடான கருத்துக் கள் உலா வந்தன. இந்த நிலையில் எந்த நடவ டிக்கை எடுப்பதற்கோ அல் லது போர் நிறுத்தம் மேற் கொள்ளவோ அழைப்பு விடுக்க முடியாது என தெரி விக்கப்பட்டது.

போர்நிறுத்தம் மேற் கொள்வதற்கான தலைமைத் துவ அறிக்கையை வரைவு செய்ய உறுப்பினர்கள் முயன்றனர். ஆனால் அந்த முயற்சி சனிக்கிழமை இர வும் பலன் அளிக்காமல் போனது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன் சில் கூட்டத்தில் அமெ ரிக்கா பேசுகையில், தாங்கள் ராணுவ பலத்துடன் மோதல் பகுதிக்கு செல்ல முடியாது. அயல்நாட்டு படைகள் வருவதை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என மாஸ்கோ உறுதியாக எச்சரிக்கை விடுத்துள்ளது என தெரி வித்தது.

சோவியத் யூனியன் பிளவுபட்டதற்கு பின்னர், முதன்முறையாக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை இறுதி முடிவாக எடுத்துள் ளது. ஒசாட்டியா மாகா ணம் ரஷ்யா வசமே உள் ளது. அதனை ஆக்கிரமிப்பு செய்யும் ஜார்ஜியா நடவ டிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரஷ்யா தனது தாக்குதலை துவங்கி யுள்ளது.

ரஷ்யா – ஜார்ஜியா மோதலில் நூற்றுக்கணக்கா னவர்கள் உயிரிழந்துள்ள னர். தெற்கு ஒசாட்டியாவில் உள்ள சிகின்வலி நகரம் பெரும் சேதம் அடைந் துள்ளது.

இங்குள்ள மக்களில் ஆயிரக்கணக்கானோர் அருகாமையில் உள்ள வடக்கு ஒசாட்டியாவுக்கும், ஜார்ஜியாவின் இதர பகுதி களுக்கும் இடம் பெயர்ந் துள்ளனர்.