தமிழகம் என்றால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வை.கோ சீமான் போன்ற இன்னோரன இனவாதிகளும் மட்டுமே ஈழத் தமிழர்களின் கண் முன்னால் தோன்றுவார்கள். 80 களில் ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு இந்திய அரசும் அதன் உளவுத்துறையான RAW உம் ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கிச் சீரழித்த வேளையில் உட் புகுந்த இனவாதிகளுள் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாசும் ஒருவர். ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மற்றொரு முகமும் உண்டு. ஆதிக்க சாதி வெறி என்பது தான் அது.
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இளம் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டமைக்காக இளவரசன் என்ற இளைஞனைக் கொலை செய்து வன்முறையைத் துண்டிவிட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக வினவு என்ற இணையச் சஞ்சிகை நடத்திய ஆய்வு ஒன்றின் ஆரம்பப் பகுதிகள் கீழே:கீழ்வருமாறு ஆரம்பிகிறது:
“தர்மபுரி – சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விடிவெள்ளியாய் முளைத்த நக்சல்பாரி இயக்கம் தீவிரமாய்ச் செயல்பட்டு வந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் நாயக்கன் கொட்டாய் தான் அந்த எழுச்சியின் குவிமையமாய் இருந்தது. நக்சல்பாரிகளின் தலைமையில் திரண்டெழுந்த உழைக்கும் மக்கள் சாதித் தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர்.
1980களுக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளால் நக்சல்பாரி இயக்கங்கள் பின்னடைவுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சாதி அமைப்புகள் திட்டமிட்ட ரீதியில் வளர்த்து விடப்பட்டன. பல்வேறு சாதி அமைப்புகள் தமது சாதி மக்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் செல்வாக்கை வளர்க்க முயற்சித்தன.
இந்நிலையில் தான் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று நாயக்கன் கொட்டாய் பகுதியிலிருக்கும் மூன்று கிராமங்களின் தலித் குடியிருப்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்னும் தாழ்த்தப்பட்ட இளைஞருக்கும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணம்தான் இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்று சொல்லப்பட்டாலும், ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தின் திட்டமிடல் தான் முக்கியக் காரணம்.
தர்மபுரி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் அரங்கில் சாதி மீண்டும் முன்னணிக்கு வந்து விட்டதைப் போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராமதாசின் முயற்சியால் 42 ஆதிக்க சாதிச் சங்கங்கள் ஒன்றிணைந்தன. ‘காதல் நாடகத் திருமணங்களை’ எதிர்ப்பதாகவும், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்” தவறாகப் பயன்படுத்தப்படுவதால் அதைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கைகளை நிறைவேற்றினர். தலித் அல்லாதோர் இயக்கம் ஒன்றும் துவங்கப்பட்டது.”
பாட்டாளி மக்கள் கட்சியின் தன்னார்வ நிறுவனமே பசுமைத் தாயகம் என்ற அமைப்பு. தன்னார்வ நிறுவனங்கள் தொடர்பான இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் வெளி நாட்டு நிதியில் இயங்கும் அமைப்புக்களில் ஒன்றாக பசுமைத் தாயகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 75901175 என்ற இலக்கத்தின் கீழ் பசுமைத் தாயகம் அன்னிய நிதியில் இயங்கும் நிறுவனமாக இந்திய அரச ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பசுமைத் தாயகம் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் தன்னார்வ நிறுவன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உலக சுகாதார நிறுவனத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மனித நேயமுள்ளவர்களும், ஜனநாயக வாதிகளும், மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் அஞ்சும் போராட்ட அமைப்புக்களும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து அன்னிய நிதியில் இயங்கும் அமைப்புக்களை அழிக்கும் நிறுவனங்களாகவே காண்கின்றனர். ஈழப் போராட்ட அமைப்புக்களோ இவ்வாறான அமைப்புக்களின் வால்களாக தொங்குகின்றன. இதனால் தான் ஈழப் போராட்டத்தை ஏகாதிபத்திய நாடுகளால் தூண்டிவிடப்பட்ட நாசகார நடவடிக்க்கையாக உலக மக்களில் பெரும்பாலனவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு திட்டமிட்டு அன்னியப்படுத்தப்பட்ட போராட்டம் சீமான், வைகோ, ராமதாஸ் போன்ற இனவாதிகளதும் சாதி வெறியர்களதும் பிடிக்குள் முடங்கிப்போனது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தும் நோக்கத்துடன் உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக மையம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்காவால் தொடர்க்கி வைக்கப்பட்டது.
சாதி வெறியைத் தூண்டி அழிவை ஏற்படுத்தும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், பசுமைத் தாயகம் அமைப்பிற்கும் எந்த அன்னிய சக்திகள் நிதி வழங்கி வருகின்றன என்பது அதன் நடவடிக்கைகள் ஊடாகவே அனுமானிக்க முடியும்.
உலகில் மக்கள் போராடங்களை சிதைத்து அதிகாரவர்க்கத்தின் அரசியலை நிறுவும் நோக்கத்துடன் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஏகாதிபத்தியக் கூறுகளே தன்னார்வ நிறுவனங்கள். .
அந்தப் பட்டியலில் பசுமைத் தாயகம் முதலாவது இடத்திலுள்ளது. ராமதாசின் மகனும் இந்திய காங்கிரஸ் அரசில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியவருமான அன்புமணி ராமதாஸ் இந்த நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தார். ஈழப் போராட்டத்தை அழித்துச் சிதைத்ததில் அன்னிய நிதியில் இயங்கிய தன்னார்வ நிறுவனங்களுக்கும் பெரிம் பங்குண்டு.
வன்னி இனப்படுகொலை முடிந்த பின்னரான காலப்பகுதி முழுவதும் என்.ஜீ.ஓ களிம் ஆதிக்கத்திற்கான காலப்பகுதியாகும்.
ஐ.நா பார்த்துக்கொண்டிருக்க, அமெரிக்கா சட்டலைட்டில் வேடிக்கை பார்க்க லட்சக் கணக்கில் மக்கள் அழிகப்பட்டு வன்னிப் படுகொலைகள் முடித்துவைக்கப்பட்டன. அதன் பின்னர் போராட்டத்தின் எச்சங்களையும், போராட்ட உணர்வுள்ளவர்களையும் அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் போராட்ட சக்திகளை உள்வாங்கி அழிக்க ஆரம்பித்தன.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களைத் தண்டிக்குமாறு எழுந்த மக்கள் போராட்டங்களை காலதாமத்தப்படுத்தி ஆறு வருடங்களை நகர்த்தி இன்று மக்களின் உணர்வுகளைத் திசை திருப்பியுள்ளது.
ஐ.நாவில் விசாரணை நடத்துகிறோம் என்ற பெயரில் மக்கள் பற்றுள்ளவர்களை உள்வாங்கி அமெரிக்கா தனது பிடிக்குள் வைத்துக்கொண்டது. புலம்பெயர் அமைப்புக்களையும் அதன் செயற்பாட்டாளர்களில் சிலரையும் அமெரிக்கா தனது நலன்களுக்காகச் செயலாற்ற வைத்தது.
அவர்கள் தமிழ் மக்களை அழிக்கும் அன்னிய ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டனர். இவற்றுள் ஒன்று தான் அமெரிக்க சார்பு அமைப்பான பசுமைத் தாயகம்.
போர்க்குற்ற விசாரணை என்ற பூச்சாண்டியை இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது. மாற்றப்பட்ட மைத்திரிபாலவின் ஆட்சி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ‘இலங்கை ஜனநாயகத்தை மீட்டுள்ளது, நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஊழல் ஒழிக்கப்படுகிறது’ என்றெல்லாம் புகழ்பாடியுள்ளார். இவ்வாறான சூழலில் போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு தனது நாட்டின் உள்ளேயே நடத்தினாலே போதுமானது என அமெரிக்கா குறிப்பிடுகிறது.
வடக்கும் கிழக்கும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளமை, திட்டமிட்ட குடியேற்றங்கள் உட்பட சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை, அதற்கான இழந்து போன மக்கள் போன்ற எதைப் பற்றியும் குறிப்பிடாது, இலங்கை அரசு அமெரிக்காவின் நண்பன் என அவர் கூறுகிறார்.
ஆக, போரை நடத்தி மக்களை அழித்துவிட்டு, தமதுக்குச் சார்பான ஆட்சி ஒன்றை அமைத்தாலே அமெரிக்க அரசிற்குப் போதுமானது.
இந்த இலங்கை அரசின் எதிரிகளாகக் கருதப்பட்டவர்களும் அமெரிக்க அடியாட்படைகளே. இரண்டு எதிரிகளையும் தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு தேவையான போது அமெரிக்க அரசு பயன்படுத்திக்கொள்கிறது. இவ்வாறு பயன்படும் அடிமைகளாக மாறிப்போன புலம்பெயர் அமைப்புக்கள் சாதி வெறியர்களோடும், கொலையாளிகளோடும் திருடர்களோடும் கூட்டுவைத்துக்கொள்கின்றனர்.
கடந்த ஆறு வருடங்களில் ஈழப் போராட்டம் உலக மக்கள் மத்தியிலிருந்தும், ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்தும் திட்டமிட்டு அன்னியப்படுத்தப்பட்டு இப்போது சேடமிழுத்துக்கொண்டிருக்கிறது.
இன்று வரைக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் சாதி வெறி அமைப்பான பசுமைத் தாயகத்தின் துணையுடனேயே ஐ.நாவிற்குச் சென்று வந்திருக்கின்றன என்பது இதற்குச் சிறந்த உதாரணம். உலகம் முழுவதும் ஐ.நாவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தன்னார்வ நிறுவனங்களின் பட்டியலில் பசுமைத் தாயகத்தின் பெயர் முதலாமிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் துணையோடு நடத்தப்பட்ட இனப்படுகொலைக்க்கும், அமெரிக்க சார்பு அரசிற்கும் எதிராக அமெரிக்க நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனம், அமெரிக்க அடியாள் படைகளான புலம்பெயர் அமைப்பான பீ.ரி.எப் உடன் இணைந்து நடத்தும் நாடகமே போர்க்குற்ற விசாரணை என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் தேவை?
இனிமேல் இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு முழுத் தமிழினமும் அழிக்கப்பட்டாலும், புலம் பெயர்கள் கைதட்டி விசிலடிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை. தாம் இழைத்த தவறுகளையும் தமிழ்ப் பேசும் மக்களை ஏகாதிபத்தியங்களின் அடிமைகளாக மாற்றி போராட்டத்தை அழித்துச் சிதைத்தமைக்காகவும் புலம்பெயர் அமைப்புக்கள் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.
ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம் படையாகச் செயற்பட்டு அழிக்கப்பட்ட போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டுமானால் புதிய அரசியல் மக்கள் மத்தியில் முன்வைக்கபட வேண்டும்., ஈழப் போராட்டம் காட்டிக்கொடுக்கும் ஏகாதிபத்திய அடியாட்படைகளால் முன்னெடுக்கப்படும் நாசகார நடவடிக்கை அல்ல என உலக மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். தவறினால், புலம்பெயர் அமைப்புக்களும் இலங்கை அரசும், அமெரிக்க இந்திய அரசுகளும் கூட்டிணைந்து எஞ்சியிருக்கும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழிக்கும்.
http://www.unis.unvienna.org/unis/en/about/about_unis.html
http://www.worldlungfoundation.org/ht/d/ContentDetails/i/6887/pid/7788
http://www.saynotogmos.org/ud2004/umar04a.html
http://sighbaboo.blogspot.co.uk/2014_06_01_archive.html
http://www.vinavu.com/2013/02/06/working-class-oppose-pmk-casteism/
பீ.ரி.எப் ஐ.னா மன்றத்துக்குள் போய் வர ஆர,பித்த நாளிலிரிந்தே பசுமைத் தாயகம் அல்லது அது போன்ற நிறுவனங்கள் ஊடாகவே செல்கின்றனர். அவர்களுக்கு வேறு வகையான அரசியல் தெரியாது. சரி, அவர்களை திட்டும் நீங்கள் என்ன செய்தீர்கள்.?
பாமக தான் கொலை செய்ததா ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுங்கள்..
சும்மா உங்க ஜாதி வெறிய காட்ட தேவை இல்லை..
ஈழத்தமிழர் அமைப்புகள் பசுமைத் தாயகம் மூலமாகவே ஐநா சபைக்கு சென்றன என்கிற ஒரே ஒரு உண்மையான தகவலை அளித்ததற்கு நன்றி
அமெரிக்காவின் துரோகம் இருக்கட்டும். கம்யூனிச நாடான கியூபா ஐநா சபையில் இலங்கைக்கு பாதுகாப்பாக இருப்பது குறித்தும் எழுதுங்களேன்.
//அமெரிக்காவின் துரோகம் இருக்கட்டும். கம்யூனிச நாடான கியூபா ஐநா சபையில் இலங்கைக்கு பாதுகாப்பாக இருப்பது குறித்தும் எழுதுங்களேன்.//
கியூபா சீனா போன்ற நாடுகள் கம்யூனிச நாடுகளில்லை. சீனா சோசலிச நாடாகவிருந்தது கடந்த காலம். கம்யூனிசத்திற்கான மக்களாட்சிப் பாதையிலிருந்து விலகி நெடு நாளாகிவிட்டது. மக்கள் மயப்படுத்தப்பட்டிருந்த உற்பத்தி மீண்டும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.கியூபா, வெனிசூலா போன்ற நாடுகளில் ஒருவகையான தேசிய வாதம் காணப்பட்டது. ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் உற்பத்தி உலகமயமாக்கப்படுவதற்கு எதிராகவும் அவை போராடின. குறிப்பாக வெனிசூலா தேசியவாத நாடாகவே இன்றும் தொடர்கிறது. இவ்வாறான தேசியவாதப் போக்குடைய நாடுகளும் போர்க்குற்ற விசாரணை அமெரிக்காவின் தலையீட்டில் நடைபெறுவதை எதிர்த்தன. காரணம் அமெரிக்கா போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக நிலமையைத் தனகுச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்வதையே விரும்பும் என்பதாகும்.
அதனை இப்போது கண்கூடாகப் பார்க்கிறீர்கள். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் அமெரிக்க அரசும் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்திருக்கும். அவர்கள் இலங்கையில் ஜனநாயகம் மீட்கப்பட்டு நல்லாட்சி நடைபெறுவதாகவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இவர்களை நாங்கள் பயன்படுத்தும் அளவிற்கு அவர்கள் பலவீனமானவர்கள் அல்ல.
விடுதலைப் புலிகள் தமது நோக்கம் சோசலிசத் தமீழீழம் என்றே கூறியிருந்தனர். அது தொடர்பான நூல் ஒன்றையும் கூட வெளியிட்டிருந்தனர். ஏனைய எல்லா விடுதலை இயகங்களும் அப்படியே கூறினர். இப்போது நிலைமையைப் பாருங்கள், முற்றாக மாறிவிட்டது, அமெரிக்காவின் நலன்களுக்காக அதன் துணை அமைபான ஐ.நாவில் எந்த நிபந்தனையும் இன்றி சரணடைந்திருக்கிறோம்.
http://colombogazette.com/2015/06/24/us-says-sri-lanka-will-be-a-critical-partner/
## கியூபா சீனா போன்ற நாடுகள் கம்யூனிச நாடுகளில்லை. சீனா சோசலிச நாடாகவிருந்தது கடந்த காலம். கம்யூனிசத்திற்கான மக்களாட்சிப் பாதையிலிருந்து விலகி நெடு நாளாகிவிட்டது. ##
அது எமக்கும் தெரியும் . கேள்வி என்னவென்றால் அமெரிக்கா
தனது நலன் களுக்காவே இலங்கை அரசுக்கெதிரான தீமானத்தை கொண்டு வந்ததாக வைத்துக்கொண்டாலும் மேற்குறிப்பிட்ட நாடுகள் இனப்படுகொலை நாடான இலங்கைக்கு ஐநாவில் ஆதரவளித்ததன் காரணம் என்ன ? அமெரிக்கவுக்கு ஒரு அரசியல் இருந்தால் , இந்தநாடுகளுக்கும் ஒரு அரசியல் இருக்கின்றது என்பதுதானே அதன் அர்த்தம்.தனது நலன் களிற்காக இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்த மேற்குலகை மூச்சுக்கு முன்னூறு தரம் திட்டும் தாங்கள் , ஏன் ஒரு போதும் தமது அரசியலிற்காக இலங்கை இனப்படுகொலை அரசை ஐநாவில் வெளிப்படையாக பாதுகாக்க முனையும் மேற்படி நாடுகளைப்பற்றி எதுவுமே வாய் திறப்பதில்லை ???
## இவர்களை நாங்கள் பயன்படுத்தும் அளவிற்கு அவர்கள் பலவீனமானவர்கள் அல்ல. ##
அப்படியானால் இவர்களை இலங்கை அரசு மட்டும் இத்தனை ஆண்டு காலமும் எவ்வாறு கையாண்டு வந்தது ?
இலங்கை அரசுக்கு மட்டும் மேற்குலகநாடுகள் பலவீனமாக இருக்கின்றன என்று சொல்ல வருகிறீர்களா ?
## அமெரிக்காவின் நலன்களுக்காக அதன் துணை அமைபான ஐ.நாவில் எந்த நிபந்தனையும் இன்றி சரணடைந்திருக்கிறோம். ##
ஐநாவில் நியாயம் கேட்பதென்பது அமெரிக்காவிடம் சரணடைவதாகாது .
லாலா,
சீனா கியூபா போன்ற நாடுகள் இலங்கை அரசிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன என்பதை விட அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. அமெரிக்கா தனக்குச் சார்பான ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவும், இலங்கை அரசிற்கு எதிரான சக்திகளைத் தன்னுடைய கட்டுப்பாடிற்குள் உட்படுதவுமே போர்க்குற்ற விசாரணையைப் பயன்படுத்தும் என்பது புதிரான ஒன்றல்ல. தமது நாட்டின் அதிகாரவர்க்கத்தின் நலன்களுக்காகவே இவ்வாறான போட்டிகள் நடைபெறுகின்றன. சிலவேளைகளில் இவை முரண்பட்டும் சிலவேளைகளை உடன்பட்டும் செயற்படும். உதாரணமாக லிபியா மீதான ஆக்கிரமிப்பிற்கு சீனா அமெரிக்காவிற்குப் பச்சைக்கொடி காட்டியது. இலங்கையில் போர்ட் சிட்டி திட்டத்தை செயற்படுத்தும் நிறுவனம் ஆபிரிக்காவில் தாக்குதலுக்கு உள்ளான போது அமெரிக்கா அதனைப் பாதுகாத்தது. அமெரிக்க திறை சேரிக்கு சீனாவும் கடன் வழங்கியுள்ளது.
இலங்கை அரசு அமெரிக்காவைப் பயன்படுத்தவில்லை அமெரிக்காவே இலங்கை அரசைப் பயன்படுத்துகிறது, இதனையே ஏகாதிபத்தியம் என்கிறோம்.
கியூபா வெனிசூலா போன்ற நாடுகள் தேசிய வாதப் போக்கைக் கொண்டவை. ஆக, அவை ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகச் செயற்படுபவை. இந்த அதிகாரப் போட்டியில் அவரவருக்கு நியாயங்கள் உண்டு. எம்மைப் பொறுத்தவரை மக்களின் அவலங்களை தமது நலன்களுக்காகப் பயன்படுத்தும் அனைவரைக் குறித்தும் எழுதுவது எமது கடமை என எண்ணுகிறோம்.
நாம் ஆரம்பத்திலிருந்தே கூறியது போல ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இலங்கையில் எல்லாம் சரியாகிவிட்டது என அமெரிக்கா கூறுகிறது. சுய நிர்ணைய உரிமை கோரியவர்களுக்கு தன்னார்வ நிறுவனங்களுக்கு ஊடாக நிதி வழங்கி உதவி அமைப்புக்களாக மாறக் கோருகிறது.
இரண்டு தரப்பிலும் போர்க்குற்றங்கள் நடந்ததாக இப்போதும் அரசியலிலிருக்கும் செயற்பாட்டளர்களை மிரட்டுகிறது.
ஐ.நாவில் மட்டுமல்ல அதற்கு மேலும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையும் அதனை நிபந்தனையின்றி அதனை அழித்தவர்களிடமே ஒப்படைப்பது தவறு என்பதையும் தான் நாம் கூறி வருகிறோம்.
இவ்வாறான ஒரு நிபந்தனையை முன்வைக்குமாறு பீ.ரி.எப் போன்ற அமைப்புக்களுடன் நேரடியாகவே கூறியிருக்கிறோம். இந்த நிபந்தனையின் அடிப்படையில் இலங்கைக்கு வெளியில் பாதிக்கப்பட்டவர்களும் இணைந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணைக் குழுவில் பாதிக்கப்பட்டவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து கொள்ள வேண்டும் என்று, சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்ற அடிப்படையிலேயே விசாரணையின் சாராம்சம் அமைய வேண்டும் என்ற்ய்ம் நிபந்தனைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்து,
நிபந்தனை இன்று விசாரணையை அழித்தவர்களிடமே ஒப்படைத்ததன் பலனை இன்று அனுபவிக்கிறோம்.
கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, தமிழருக்கு எதிராக செயல்படுவது ஏன்? இதுகுறித்து எழுதுங்களேன்.
அருள்,
//கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, தமிழருக்கு எதிராக செயல்படுவது ஏன்? இதுகுறித்து எழுதுங்களேன்.//
கியூபா சீனா போன்ற நாடுகள் கம்யூனிச நாடுகளில்லை. சீனா சோசலிச நாடாகவிருந்தது கடந்த காலம். கம்யூனிசத்திற்கான மக்களாட்சிப் பாதையிலிருந்து விலகி நெடு நாளாகிவிட்டது. மக்கள் மயப்படுத்தப்பட்டிருந்த உற்பத்தி மீண்டும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.கியூபா, வெனிசூலா போன்ற நாடுகளில் ஒருவகையான தேசிய வாதம் காணப்பட்டது. ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் உற்பத்தி உலகமயமாக்கப்படுவதற்கு எதிராகவும் அவை போராடின. குறிப்பாக வெனிசூலா தேசியவாத நாடாகவே இன்றும் தொடர்கிறது. இவ்வாறான தேசியவாதப் போக்குடைய நாடுகளும் போர்க்குற்ற விசாரணை அமெரிக்காவின் தலையீட்டில் நடைபெறுவதை எதிர்த்தன. காரணம் அமெரிக்கா போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக நிலமையைத் தனகுச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்வதையே விரும்பும் என்பதாகும்.
அதனை இப்போது கண்கூடாகப் பார்க்கிறீர்கள். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் அமெரிக்க அரசும் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்திருக்கும். அவர்கள் இலங்கையில் ஜனநாயகம் மீட்கப்பட்டு நல்லாட்சி நடைபெறுவதாகவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இவர்களை நாங்கள் பயன்படுத்தும் அளவிற்கு அவர்கள் பலவீனமானவர்கள் அல்ல.
விடுதலைப் புலிகள் தமது நோக்கம் சோசலிசத் தமீழீழம் என்றே கூறியிருந்தனர். அது தொடர்பான நூல் ஒன்றையும் கூட வெளியிட்டிருந்தனர். ஏனைய எல்லா விடுதலை இயகங்களும் அப்படியே கூறினர். இப்போது நிலைமையைப் பாருங்கள், முற்றாக மாறிவிட்டது, அமெரிக்காவின் நலன்களுக்காக அதன் துணை அமைபான ஐ.நாவில் எந்த நிபந்தனையும் இன்றி சரணடைந்திருக்கிறோம்.
http://colombogazette.com/2015/06/24/us-says-sri-lanka-will-be-a-critical-partner/
பசுமைத் தாயகம் 2009 முதல் ஐநா மனித உரிமை பேரவையில் செயல்படுகிறது. ஆனால், அமெரிக்கா 2011 இல் தான் UNHRC உறுப்பினராக சேர்ந்தது.
பசுமைத் தாயகத்துடன் இணைந்து UNHRC இல் வேலை செய்யும் USTPAC அமைப்பு அமெரிக்க வெளியுறவு துறையினை வற்புறுத்தி ஈடுபடச்செய்தது.
இந்த உண்மையை தலைகீழாக நீங்கள் எழுதியுள்ளார்கள்.
//பசுமைத் தாயகம் 2009 முதல் ஐநா மனித உரிமை பேரவையில் செயல்படுகிறது. ஆனால், அமெரிக்கா 2011 இல் தான் UNHRC உறுப்பினராக சேர்ந்தது.//
நீங்கள் ஒரு நிர்வாகப் பிரச்சனை பற்றி எழுதுகிறீர்கள், நாங்கள் ஒரு போராட்டம் எப்படி அழிக்கப்பட்டது என்பது தொடர்பாக எழுதுகிறோம். முள்ளிவாய்க்காலில் போராட்டம் அழிக்கப்படதிலும் விரைவாக அதன் நியயமே கடந்த ஆறு வருடங்களில் அழிக்கப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையைப் பயன்படுத்தி எப்படி இனவழிப்பை எதிர்க்கும் உலக பொதுப்புத்தியை ஏற்படுத்துவது என்பது தொடர்பாக இனியொருவில் முன்னதாக எழுதப்பட்டுள்ளது.
## நீங்கள் ஒரு நிர்வாகப் பிரச்சனை பற்றி எழுதுகிறீர்கள், நாங்கள் ஒரு போராட்டம் எப்படி அழிக்கப்பட்டது என்பது தொடர்பாக எழுதுகிறோம். ##
பசுமை தாயகத்தை பொறுத்தவரை இந்த பதிவில்
தெரிவிக்கப்பட்டிருக்கும் தமக்கெதிரான வசைபாடல்களிற்குத்தான்
பதிலளிக்க முடியும் . இந்த பதிவு ஐநாவில் அதன் செயற்பாடுகளை கொச்சை படுத்தியிருந்தது மாத்திரமல்லாமல் அவதூறுகளையும் எந்த ஆதாரமுமில்லாது அள்ளி வீசியிருந்தது . அதற்குத்தான் பசுமை தாயகம் தனது கருத்தை தெரிவித்திருந்தது .
நீங்கள் உடனேயே போராட்டம் , முள்ளிவாய்க்கால் அதற்கான காரணம் என விடயத்தை திசை திருப்ப பார்க்கிறீர்கள் .
சரி சுயநிர்ணய உரிமை போராட்டம் எப்படி அழிக்கப்பட்டது எனும் த்லைப்பில் இடம்பெற்ற பதிவில் தர்மபுரி கலவரம் , இளவரசன்
புகைப்படமெல்லாம் எங்கே வந்தது ?
லாலா,
உங்களதும் உங்களைப் போன்றவர்களதும் அவதூறுகளுக்குப் பதிலிறுக்க வேண்டிய தேவை இனியொருவிற்கு இல்லை. பசுமைத் தாயகம் அமைப்பின் சாதி வெறி தொடர்பாகவும் அதன் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆதரபூர்வமாக விடையங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இளவரசன் கொலை அதன் பின்னான அழிப்பு எல்லாம் ஏற்கனவே வெளிவந்தவையே. சில விடையங்களைத் தவிர்த்துள்ளோம். அவ்வளவுதான். இப்படி அறியப்பட்ட மக்கள் விரோதிகள் உலகின் மிகப்படும் படுகொலைகளில் ஒன்றான வன்னிப்படுகொலைகளைக் கொச்சைப்படுத்தி எந்த நிபந்தனையும் இல்லாமல் ஐ.நாவில் முடக்கி அழித்திருக்கிறது என்பதே எமது கருத்து. அது மட்டுமல்ல சாதி வெறியர்களோடு ஈழப் போராட்டத்தை அடையாளப்படுத்துவது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்து.ம்.
அருள்,
நீங்கள் பசுமைத் தாயக நண்பரா?
இயற்கை வளத்தில் அக்கறை உள்ளவர நீங்கள்?
காடு வெட்டிக் குரு என்பவர் யார்??
இனியொரு…
//கியூபா, வெனிசூலா…இவ்வாறான தேசியவாதப் போக்குடைய நாடுகளும் போர்க்குற்ற விசாரணை அமெரிக்காவின் தலையீட்டில் நடைபெறுவதை எதிர்த்தன. காரணம் அமெரிக்கா போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக நிலமையைத் தனகுச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்வதையே விரும்பும் என்பதாகும்.//
அமெரிக்கத் தலையீட்டின் காரணமாகவே இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையை கியூபா எடுத்துள்ளது என்பது அப்பட்டமான பொய் ஆகும்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்தை கியூபா, இந்தியா, எகிப்து ஆகிய நாடுகள் ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவது நிறைவேற்றின (அதாவது 2009 ல் உச்சக்கட்ட இன அழிப்பு நடந்த ஒரு வாரத்தில்!).
அப்போது அமெரிக்கா ஐநா மனித உரிமைப் பேரவையில் உறுப்பினராகக் கூட இல்லை (அமெரிக்கா 2011ல் தான் மனித உரிமைப் பேரவையில் இணைந்தது).
எனவே, கியூபாவின் இலங்கை ஆதரவு நிலைப்பாடு அமெரிக்கத் தலையீட்டுக்கு முன்பாகவே இருந்து வருகிறது. இதனை திசைதிருப்ப வேண்டாம்.
அருள்,
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா எப்போது அங்கம் வகித்தது என்பது இங்கு பிரச்சனை இல்லை. ஐ.நா, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக மையம், உலக வங்கி, ஐஎம் எப் போன்ற அமைப்புக்கள் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு நிதி முதலாளித்துவக் காலத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ள உருவாக்கப்பட்ட அமைப்புக்கள், உக்ரைனையும், ஈராகையும் ஆக்கிரமிக்க வேண்டுமென்றால் ஒரு இரவுக்குள் முடிவெடுத்துப் படைகளை அனுப்பும் வலிமை கொண்ட அமெரிக்கா, இலங்கையின் இறுதி ஆறு மாதங்கள் சட்டலைட்டில் படம் பிடித்துக்கொண்டிருந்தது. ஐ.நா போன்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட்டதன் பின்புலம், அகதிகளை உள்வாங்கியதன் பின்னணி போன்றவை தொடர்பாக பல்வேறு நூல்களும் ஆய்வுகளும் வெளிவந்து விட்டன. மேற்கு நாடுகளிலுள்ள ஆய்வாளர்களைப் பொறுத்தவரை இவற்றை நிராகரிப்பதில்லை. அமெரிக்கவின் ஆதிக்கமே நாகரீகமடைந்த மேற்கு நாடுகளைப் பாதுகாக்கும் என்பன போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றனவே தவிர இந்தியர்கள் பலர் இப் பொறிமுறை குறித்துத் தெளிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
##ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா எப்போது அங்கம் வகித்தது என்பது இங்கு பிரச்சனை இல்லை. ## இனியொரு…
சரி,
அது இப்போது பிரச்சனை இல்லை என்றே வைத்துக்கொள்வோம் . 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழும்போது அமெரிக்கா மட்டுமல்ல ரஷ்யா , சீனா , கியூபா கூட இனவெறி இலங்கை அரசுக்கு தமிழர்களை அழிப்பதற்கு உதவி வந்தது . அந்தநேரத்தில் நீங்கள் சொல்வது போல இருந்தால் இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரானநிலைப்பட்டை அல்லவா எடுத்திருக்க வேண்டும் ?
அப்படியில்லையே ! குறைந்த பட்சம் இனப்படுகொலைக்கு உதவுவதிலிருந்து ஒதுங்கியாவதல்லவா இருந்திருக்க வேண்டும் ?
அப்படியா செய்தார்கள் ? அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு இனப்படுகொலையல்லவா செய்து முடித்தார்கள் ?
அப்போது எங்கே போயிற்று இவர்களின் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு ?
2009 ஆம் ஆண்டு இனவழிப்பு போர் முடிவடைந்த பின் இலங்கை அரசை பாராட்டும் தீமானத்தை ஐநாவில் கொண்டு வந்து தீர்மானத்தையும் இந்தநாடுகள்தானே நிறைவேற்றின ?
தாங்கள் கூறியதுபோல் சட்டலைட் மூலம் ஆறு மாத காலம்
வேவு பார்த்து இனவழிப்பு போரை நடத்துவதற்கு உதவிய அமெரிக்காவின் நிலைப்பட்டை ஆதரித்தா மேற்படிநாடுகள் அந்த பாராட்டு தீர்மானத்தை நிறை வேற்றின ?
தற்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐநாவில் அமெரிக்க கொண்டு வந்தபோது மட்டும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே அந்த நாடுகள் இலங்கை அரசை பாதுக்கக்க முனைந்தன என தாங்கள் கூறுவது சொத்தை வாதம்.
Lala,
இலங்கையில் போர் நடத்தப்படுவதை அனைத்து நாடுகளின் அதிகார வர்க்கங்களும் ஆதரித்தன. அவர்கள் பொதுவாகக் கூறுகின்ற ‘சந்தைக்குரிய பிரதேசமாக’ மாற்றுவதில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர். இதற்கு எதிராக தமிழர் தரப்பிடம் குறிப்பான மூலோபாயங்கள் இருக்கவில்லை. இதனால் போரை அனைத்து நாடுகளும் விரும்பியிருந்தன. இலங்கையில் தெற்காடிய முக்கியத்துவமும் இதற்கு ஒரு காரணம். போர் நடத்தப்பட்ட பின்னர் இலங்கையை யார் கட்டுப்படுத்துவது என்பதில் தான் போட்டிகள் தோன்றின. அதுவும் சிக்கலான பரிமாணங்களைக் கொண்டது. முரண்பாடும் உடன்பாடும் என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தன, இவ்வகையான சூழலே லிபியாவில் கூடக் காணப்பட்டது. லிபியாவை அழிப்பதற்கு அமெரிக்காவோடு உலகின் அனைத்து அதிகாரவர்க்கங்களும் ஒத்துழைத்தன. போரின் பின்னரான முரண்பாடுகள் வேறுபட்டவை. இதனைத் தவிர ஆயுதச்சந்தை என்பது குறித்த எல்லை வரைக்கும் வியாபார நோக்கங்களுடனேயே அணுகப்படுகின்றது. இன்று ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுத யுத்தம் ஒன்றை நடத்த வேண்டும் என்று அதற்கான நடவடிக்கைகளில் பிரித்தானிய அரசு முன் நிற்கிறது. அதே வேளை ரஷ்யாவிற்கு பிரித்தானிய அரசு ஆயுதங்களை விற்பனை செய்கிறது. இதன் வருடாந்தப் பெறுமானம் 86 மில்லியன் பவுண்ட்ஸ்கள். அவதூறுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான விவாதங்களுக்கு நீங்கள் வந்திருப்பதற்கு நன்றி!
Ramani
//அருள், நீங்கள் பசுமைத் தாயக நண்பரா?
இயற்கை வளத்தில் அக்கறை உள்ளவர நீங்கள்?
காடு வெட்டிக் குரு என்பவர் யார்??//
காடுவெட்டி என்பது காடுகளை வெட்டியவரின் பெயர் அல்ல. அது காடுவெட்டி என்கிற ஊர் பெயர். காடுவெட்டி என்கிற ஊரைச் சேர்ந்தவர் என்பதுதான் அந்தப் பெயர் பொருள்.
பல்லவ மன்னர்கள் கூட காடுவெட்டி என்றுதான் அழைக்கப்பட்டனர். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?
நாம் வாழ்கின்ற இந்த உலகில் யாரும் யாருக்கும் நிரந்தர நண்பா்களும் இல்லை நிரந்தர எதிாிகளும் இல்லை அவரவா் தேவைகளை பொறுத்து காலத்திற்குகாலம் காய்கள் நகா்த்தப்படும் அதில் பாதிக்கப்படுவோரும் உண்டு இலாபம் அடைவோரும் உண்டு.
ஒரு கொள்கையின்பால் இணைவதென்பது இனிமேல் கிடையாது. எாிகிறவீட்டில் யாா் யாருடன் இணைந்து எதைப்பிடுங்கலாம் என்பதே இன்றய நிலைமை.
கியூபாவில் அமொிக்க தூதுவராலயம் திறக்கப்பட்டுவிட்டதா இன்னும் இல்லையா?
Kumar,
சாமானிய மக்களும் விடுதலைக்காகப் போராடுபவர்களும் நாடுகளுடனும் அதிகரவர்க்கத்துடனும் இணைந்து வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை. அப்படி இணைந்து கொண்டவர்கள் அழிவுகளையே விளைபலன்களாக்கிக் கொண்டுள்ளனர். ஈழப் போராட்டம் என்பது மக்களோடு தொடர்பற்ற புலம்பெயர் அமைப்புக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பதால் அவர்களுக்கு இதனைத் தவிர வேறு எதுவும் தெரியாது. விமாங்களை வைத்திருந்தாகக் கூறப்படும் ஈழப் போராட்டம் அழிக்கப்பட்டுள்ள அதே வேளை பிலிப்பைன்சில் போராளிகளால் விடுதலை செய்யப்பட்டுள்ள் பிரதேசங்களில் அரசபடைகள் நுளைய முடிவதில்லை. இந்தியாவின் இதயத்திலிருந்தே பழங்குடி மக்கள் போராடுகிறார்கள்.